LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஐஞ்சிறு காப்பியங்கள்

உதயண குமார காவியம் பகுதி -2

 

மகத காண்டம்
வாசவதத்தையை நினைத்து உதயணன் வருந்துதல்
சயந்தியின் எல்லைவிட்டுச் சாலவு மகதநாட்டுக்கு
இயைந்துநன் கெழுந்துசென்றே இரவியின் உதய முற்றான்
நயந்தனன் தேவிகாதனன் மனத்தழுங்கிப் பின்னும்
வியந்து நல்லமைச்சர் தேற்றவெங்கடும் கானம் புக்கான். 151
செத்தநற்தேவி தன்னைத் திருப்பவு மீட்கலாமென்று
அத்திசை முன்னிநல்ல வருவழிப்பட்டுச் செல்ல
அத்தியும் பிணையுமேக வாண்மயிலாடக் கண்டு
வந்தவன் கவிழ்ந்துரைக்கு மனனமை மனையையோர்ந்தே. 152
உதயணன் மகதநாடு அடைதல்
கோட்டுப்பூ நிறைந்திலங்குங் கொடிவகைப் பூவுங்கோலம்
காட்டு நந்தேவியென்று கால்விசைநடவா மன்னன்
காட்டினன் குன்றமேறிக் கானகங்கழிந்து போந்து
சேட்டிளஞ் சிங்க மன்னான் திருநிறைமகதஞ் சேர்ந்தான். 153
அனைவரும் இராசகிரி நகர பூஞ்சோலையில் தங்குதல்
மருவிய திருவினானம் மகதவர்க் கிறைவனாமம்
தருசகனென்னு மன்னன்றானை வேற்றலைவன் மாரன்
இருந்தினி துறையுமிக்க விராசநற்கிரியந் தன்னிற்
பொருந்திச் சென்ன கர்ப்புறத்திற் பொலிவுடனிருந் தானன்றே. 154
காகதுண்ட முனிவனிடம் வயந்தகன் தங்கள் சூழ்ச்சி பற்றிக் கூறுதல்
காமநற்கோட்டஞ் சூழக் கனமதில் இலங்கும் வாயிற்
சோமநற்றாபதர்கள் சூழ்ந்தமர் பள்ளி தன்னில்
நாமநல் வயந்த கன்னு நன்றறி காக துண்ட
மாமறையாளற் கண்டு வஞ்சகஞ் செப்பினானே. 155
காகதுண்ட முனிவர் உதயணனிடம் உரைத்தல்
திருநிறை மன்னன் தன்னைச் சீர் மறையாளன் கண்டே
இருமதியெல்லை நீங்கியிப்பதியுருப்ப வென்றும்
தருவநீயிழந்த தேவி தரணியிங்கூட வென்ன
மருவியங்கிருக்குமோர் நாண் மகதவன் தங்கை தானும். 156
பதுமாவதியும் உதயணனும் காமுறுதல்
பருவமிக்கிலங்குங் கோதைப் பதுமை தேரேறிவந்து
பொருவில் காமனையே காணாப் புரவலற் கண்டுகந்து
மருவும் வாசவதத்தை தான் வந்தனளென்றுரைப்பத்
திருநகர் மாதுகண்டு திகைத்துளங் கவன்று நின்றாள். 157
உதயணனும் பதுமாவதியும் களவுமணம் செய்தல்
யாப்பியாயினியாளென்னும் அவளுடைத் தோழி சென்று
நாப்புகழ் மன்னற்கண்டு நலம்பிறவுரைத்துக் கூட்டக்
காப்புடைப் பதுமையோடுங் காவலன் கலந்து பொன்னின்
சீப்பிடக்கண் சிவக்குஞ் சீர் மங்கை நலமுண்டானே. 158
உதயணன் அமைச்சர்களிடம் வினவுதல்
எழில்பெறு காமக்கோட்டத் தியற்கையிற் புணர்ந்துவந்து
வழிபெறும மைச்சரோடு வத்தவனினிய கூறும்
மொழியமிர் தந்நலாளை மோகத்திற் பிரியேனென்னத்
தொழுதவர் பெறுக போகந் தோன்றனீயென்று சொன்னார். 159
பதுமாவதியுடன் உதயணன் கன்னிமாடம் புகல்
மாட்சிநற் சிவிகையேறி மடந்தை தன்னோடும் புக்குத்
தாழ்ச்சியின் மாளிகைக்குட் டக்கவண் மனங்குளிர்ப்பக்
காட்டினன் வீணை தன்னைக்காவலன் கரந்திருப்ப
ஓட்டிய சினத்தனாய வுருமண்ணுவிதனைச் செய்யும். 160
அமைச்சன் உருமண்ணுவாவின் உரை
ஆகியதறிந்து செய்யு மருளுடை மனத்தனான
யூகியங்குஞ்சை தன்னையுற்றருஞ் சிறை விடுக்கப்
போக நற்றேவியோடும் போந்ததுபோல நாமும்
போகுவமன்னன் மாதைப் புதுமணம் புணருவித்தே. 161
அமைச்சன் உருமண்ணுவாவின் செயல்
உருமண்ணுவா வனுப்ப வுற்றமுந்நூறு பேர்கள்
மருவியவிச்சை தன்னான் மன்னவன் கோயிறன்னுள்
மருவினர் மறைந்துசென்றார் மன்னவன்றாதை வைத்த
பெருநிதி காண்கிலாமற் பேர்க்குநர்த் தேடுகின்றான். 162
உதயணன் மகத மன்னன் தருசகனுடன் நட்பு கொள்ளல்
யானரிந் துரைப்பனென்றே யரசனைக்கண்டு மிக்க
மாநிதிகாட்டி நன்மை மகதவனோடுங் கூடி
ஊனமில் விச்சை தன்னாலுருமண்ணுப் பிரிதலின்றிப்
பானலங்கிளவி தன்னாற் பரிவுடனிருக்கு நாளில். 163
சங்க மன்னர்கள் ஏழுவரின் படையெடுப்பு
அடவியாமரசன் மிக்கவயோத்தியர்க் கிறைவன் றானைப்
படையுறு சாலியென்பான் பலமுறு சத்தியென்பான்
முடிவிரிசிகையன் மல்லன் முகட்டெலிச் செவியனென்பான்
உடன்வருமெழுவர் கூடியொளிர் மகதத்து வந்தார். 164
மகதத்தை அழிக்கத் துவங்குதல்
தருசகற் கினிதினாங்கடரு திறையிடுவ தில்லென
நெரியென வெகுண்டு வந்தேயினிய நாடழிக்கலுற்றார்
தருசகராசன் கேட்டுத் தளரவப் புறத்தகற்ற
உருமண்ணுவா மனத்திலு பாயத்திலுடைப்பனென்றான். 165
அமைச்சன் உருமண்ணுவாவின் சூழ்ச்சி
கள்ள நல்லுருவினோடுங் கடியகத்துள்ளே யுற்ற
வள்ளலை மதியிற் கூட்டி வாணிக வுருவினோடு
தெள்ளிய மணிதெரிந்து சிலமணி மாறப்போந்து
பள்ளிப்பாசறை புகுந்து பலமணி விற்றிருந்தார். 166
மன்னன் வீர மகதத்திற்குக் கேளாத்தம்
இன்னு ரைகளியல்பின் வரவரத்
துன்னு நாற்படை வீடு தோன்றிரவிடை
உன்னினர்கரந் துரைகள் பலவிதம் 167
பகைவர் ஐயுற்று ஓடுதல்
உரையு ணர்ந்தவ ருள்ளங் கலங்கிப்பின்
முரியும் சேனை முயன்றவ ரோடலிற்
றெருளினர் கூடிச் சேரவந் தத்தினம்
மருவி யையம் மனத்திடை நீங்கினார். 168
பகைவர் கூடி விவாதித்தல்
இரவு பாசறை யிருந்தவர் போனதும்
மருவிக் கூடியே வந்துடன் விட்டதும்
விரவி யொற்றர்கள் வேந்தற் குரைத்தலின்
அரசன் கேட்டுமிக் கார்செயலென்றனன். 169
அமைச்சன் உருமண்ணுவா மன்னன் தருசகனைக் கண்டு உண்மை உரைத்தல்
வார ணிக் கழல் வத்தவன் றன்செயல்
ஓரணி மார்பனுருமண்ணு வாவுமிக்
கேரணிய ரசருக் கியல் கூறலும்
தாரணி மன்னன் றன்னுண் மகிழ்ந்தனன். 170
தருசகன் உதயணனை எதிர்கொண்டு வரவேற்றல்
ஆரா வுவகையுள் ளாகி யரசனும்
பேரா மினியயாழ்ப் பெருமகன் தன்னையே
சேரா வெதிர்போய்ச் சிறந்து புல்லினன்
நேரா மாற்றரை நீக்குவனானென்றான். 171
படையெடுத்துச் சென்று உதயணன் பகைவரை வெல்லுதல்
உலம்பொருத தோளுடை யுதயண குமரனும்
நலம்பொருத நாற்படையு நன்குடனே சூழப்போய்ப்
புலம்பொருத போர்ப்படையுட் பொருதுதவத் தொலைத்துடன்
நலம்பெறத் திறையுடனரபதியு மீண்டனன். 172
உதயணன் பதுமாவதி மணம்
வருவவிசை யத்துடன் வத்தவற் கிறைவனைத்
தருசகன் எதிர்கொண்டு தன்மனை புகுந்துபின்
மருவநற் பதுமையாமங்கை தங்கை தன்னையே
திருநிறைநல் வேள்வியாற் செல்வற்கே அளித்தனன். 173
தருசகன் உதயணனுக்கு படை அளித்து உதவுதல்
புதுமணக் கோலமிவர் புனைந்தன ரியற்றிப்பின்
பதியுடையை யாயிரம் பருமதக் களிற்றுடன்
துதிமிகு புரவிகள் தொக்கவிரண் டாயிரம்
அதிர்மணி யாற்றுந்தோ ராயிரத் திருநூறே. 174
அறுபதினொண் ணாயிர மானபடை வீரரும்
நறுமலர்நற் கோதையர் நான்கிருநூற் றிருபதும்
பெறுகவென் றமைத்துடன் பேர் வருட நாரியும்
உறுவடிவேற் சததியு முயர் தரும தத்தனும். 175
சத்திய காயனுடன் சாலவு மமைச்சரை
வெற்றிநாற் படைத்துணை வேந்தவன்பிற் செல்கென்று
முற்றிழை யரிவைக்கு முகமலரச் சீதனம்
பற்றியன்பினால் அளித்துப் பாங்குடன் விடுத்தனன். 176
வெல்லுமண்ண லைமிக வேந்தனன்ன யஞ்சில
சொல்லிநண்பினாலுறைத்துத் தோன்றலை மிகப்புல்லிச்
செல்கென விடுத்தரச் செல்வனங்குப் போந்தனன்
எல்லைதன்னா டெய்திப்பினினியர் தம்பி வந்தனர். 177
பிங்கலனும் கடகனும் உதயணனை அடைதல்
பிங்கல கடகரெனப் பீடுடைக் குமரரும்
தங்குபன்னீ ராயிரந் தானையுடை வீரரும்
அங்குவந்தவ் வண்ணலை அடிவணங்கிக் கூடினர்
பொங்குபுரங் கௌசாம்பியிற் போர்க்களத்தில் விட்டனர். 178
வருடகாரனிடம் உதயணன் தன் சூழ்ச்சி உரைத்தல்
வருடகாரனை அழைத்து வத்தவனியம்புமிப்
பருமிதநற் சேனையுள்ள பாஞ்சால ராயனிடம்
திருமுடி யரசரைத் திறத்தினா லகற்றெனப்
பொருளினவன் போந்தபின்பு போர்வினை தொடங்கினர். 179
உதயணன் ஆருணி அரசன் போர்
அமைச்சனுஞ்சென் றவ்வண்ண மதிர்கழனல் வேந்தரைச்
சமத்தினி லகற்றினன் சாலவும்பாஞ் சாலனும்
அமைந்த நாற் படையுடனமர்ந்துவந் தெதிர்த்தனன்
அமைத்திருவர் விற்கணைக ளக்கதிர் மறைத்தவே. 180
போர்க் காட்சிகள்
விரிந்த வெண்குடை வீழவும் வேந்தர் விண்ணுவ வேறவும்
பரிந்து பேய்க்கண மாடவும் பல நரிபறைந் துண்ணவும்
முரிந்த முண்டங்க ளாடவும் முரிந்த மாக்களி றுருளவும்
வரிந்த வெண்சிலை மன்னவன் வத்த வன்கண்கள் சிவந்தவே. 181
உதயணன் ஆருணி மன்னனைக் கொல்லுதல்
மாற்ற வன்படை முறிந்தென மன்ன வன்படையார்த்திடத்
தோற்ற மன்னன்வந் தெதிர்த்தனன் றூய காளைதன் வாளினால்
மாற்ற லன்றனைக் கூற்றுண வண்மை யில்விருந் தார்கென
ஏற்ற வகையினி லிட்டனனிலங்கு வத்தவ ராசனே. 182
உதயணன் கோசம்பி நகருக்குள் புகுதல்
பகையறவேயெ றிந்துடன் பாங்கிற் போர்வினை தவிர்கென
வகையறவேபடுகளங்கண்டு நண்ணிய மற்றது
தொகையுறுந்தன தொல்படை சூழ வூர்முக நோக்கினன்
நகையு றுந்நல மார்பனு நகர வீதியில் வந்தனன். 183
உதயணன் அரண்மனை புகுதல்
மாடமா ளிகைமிசை மங்கையரு மேறிமீக்
கூடிநின் றிருமருங்குங் கொற்றவனை வாழ்த்தினார்
பாடலவர் படித்திடப் பலகொடி மிடைந்தநல்
ஆடகநன் மாளிகை யரசனும் புகுந்தனன். 184
உதயணன் திருமுடி சூடுதல்
படுகளத்தி னொந்தவர்க்குப் பலகிழிநெய் பற்றுடன்
இடுமருந்து பூசவு மினிப்பொரு ளளித்தபின்
தொடுகழ லரசர்கள் சூழ்ந்தடி பணிந்திட
முடிதரித் தரசியன் முகமலர்ந்து செல்லுநாள். 185 
வத்தவ காண்டம்
உதயணன் அரசு வீற்றிருத்தல்
மின்சொரி கதிர்வேற் றானை வீறடி பணிய வெம்மைப்
பொன்சொரி கவரி வீசப் பொங்கரி யாசனத்தில்
தண்சொரி கிரண முத்தத் தவளநற் குடையினீழல்
மின்சொரி தரள வேந்தன் வீற்றிருந்த போழ்தின் 186
உதயணனின் கொடை
மாற்றலர் தூதர் வந்து வருதிறை யளந்து நிற்ப
ஆற்றலர் வரவ வர்க்கே யானபொன் றுகில ளித்தே
ஏற்றநற் சனங்கட் கெல்லா மினிப்பொரு ளுவந்து வீசிக்
கோற்றொழினடத்தி மன்னன் குறைவின்றிச் செல்லுகின்றான். 187
உதயணன் பத்திராபதி என்னும் யானைக்கு மாடம் கட்டுதலும் உருவம் செய்தலும்
மதுரவண் டறாத மாலை மகதவன் றங்கை யாய
பதுமைதன் பணைமு லைமேற் பார்த்திபன் புணர்ந்து செல்லத்
துதிக்கைமா வீழ்ந்த கானந் தோன்றலு மாடம் பண்ணிப்
பதியினு மமைத்துப் பாங்கிற் படிமமு மமைத்தானன்றே. 188
உதயணன் கோடபதி யாழை மீண்டும் பெறுதல்
அருமறை யோதி நாம மருஞ்சனனந்த ணன்றான்
திருவுறை யுஞ்சை நின்று திகழ்கொடிக் கௌசாம் பிக்கு
வருநெறி வேயின் மீது வத்தவன் வீணை கண்டு
பொருந்தவே கொண்டு வந்து புரலலற் கீந்தானன்றே. 189
பதுமாவதி யாழ் கற்க விரும்புதல்
மதுமலர்க் குழலி விண்மின் மாலைவேல் விழிமென் றோளி
பதுமைவந் தரசற் கண்டு பன்னுரை யினிது கூறும்
மதியின்வா சவதத்தைதன் வண்கையினதனைப் போல
விதியினான் வீணை கற்க வேந்த நீ யருள்க வென்றாள். 190
உதயணன் வாசவதத்தையை நினைத்து வருந்துதல்
பொள்ளென வெகுண்டு நோக்கிப் பொருமனத் துருகி மன்னன்
ஒள்ளிதழ்த் தத்தை தன்னை யுள்ளியே துயிலல் செய்ய
வெள்ளையே றிருந்த வெண்டா மரையினைக் கொண்டு வந்து
கள்ளவிழ் மாலைத் தெய்வங் கனவிடைக் கொடுப்பக் கண்டான். 191
உதயணன் முனிவரிடம் கனவு பலன் கேட்டல்
கங்குலை நீங்கி மிக்கோர் கடவுளை வினவச் சொல்வார்
அங்கயற் கண்ணி தானு மாரழல் வீந்தா ளல்லள்
கொங்கைநற் பாவை தன்னைக் கொணர நீ பெறுவை யின்பம்
இங்குல கெங்கு மாளு மெழிற்சுதற் பெறுவ ளென்றார். 192
உதயணன் கனவுப் பயன் கேட்டு மகிழ்தல்
வெள்ளிய மலையின் மீதே விஞ்சைய ருலக மெல்லாம்
தெள்ளிய வாழி கொண்டு திக்கடிப் படுத்து மென்ன
ஒள்ளிய தலத்தின் மிக்கேர ருறுதவ ருரைத்த சொல்வை
வள்ளலு மகிழ்ந்து கேட்டு மாமுடி துளக்கினானே. 193
அமைச்சர் உருமண்ணுவா விடுதலை
என்றவ ருரைப்பக் கேட்டே யிறைஞ்சின் கடிபணிந்து
சென்றுதன் கோயில் புக்குச் சேயிழை பதுமை தன்னோடு
ஒன்றினன் மகிழ்ந்து சென்னா ளுருமண்ணு வாவு முன்பு
வென்றிவேன் மகதன் மாந்த ரால்விடு பட்டிருந்தான். 194
உருமண்ணுவா உதயணனை அடைதல்
மீண்டவன் வந்தூர் புக்கு வேந்தனை வணங்கி நிற்பக்
காண்டறி வாளனென்றே காவலன் புல்லிக் கொண்டு
மாண்டவன் வந்த தொய்ய வரிசையின் முகமன் கூறி
வேண்டவாந் தனிமை தீர்ந்தே விரசூடனின்புற்றானே. 195
வாசவதத்தையை யூகி கௌசாம்பிக்கு கொணர்தல்
வாரணி கொங்கை வேற்கண் வாசவ தத்தை தானும்
ஊரணி புகழினான யூகியு மற்றுள் ளாகும்
தாரணி கொடியி லங்குஞ் சயந்தியினின்றும் போந்து
பாரணி கோசம் பிப்பாற் பன்மலர்க் காவுள் வந்தார். 196
உதயணன் யூகி, வாசவதத்தை ஆகியோர் இணைதல்
நயந்தநற் கேண்மை யாளர் நன்கமைந் தமைச்சர் தம்முள்
வயந்தகனுரைப்பக் கேட்டு வத்தவன் காவு சேரப்
பயந்தவ ரடியில் வீழப் பண்புடன் தழுவிக் கொண்டு
வியந்தர சியம்பு நீங்கள் வேறுடன் மறைந்த தென்னை. 197
யூகியின் உரை
இருநில முழுதும் வானு மினிமையிற் கூடினாலும்
திருநில மன்னரன்றிச் செய்பொரு ளில்லை யென்று
மருவுநூல் நெறியினன்றி வன்மையாற் சூழ்ச்சி செய்தேன்
அருளுடன் பொறுக்க வென்றான் அரசனு மகிழ்வுற் றானே. 198
உதயணன் வாசவதத்தையுடன் இன்புற்றிருத்தல்
ஆர்வமிக் கூர்ந்து நல்ல வற்புதக் கிளவி செப்பிச்
சீர்மைநற் றேவி யோடுஞ் செல்வனு மனை புகுந்தே
ஏர்பெறும் வாசவெண்ணெ யெழிலுடன் பூசி வாச
நீர்மிக வாடி மன்னனேரிழை மாதர்க் கூட. 199
பதுமாவதியின் வேண்டுகோள்
யூகியு நீரினாடி யுற்றுடனடிசி லுண்டான்
நாகதேர் கால மன்னனன்குடனிருந்த போழ்தின்
பாகநேர் பிறையா நெற்றிப் பதுமையு மிதனைச் சொல்வாள்
ஏகுக செவ்வித் தத்தை யெழின் மனைக் கெழுக வென்றான். 200
வாசவதத்தையின் ஊடல்
என்றவள் சொல்ல நன்றென்றெழின்முடி மன்னன் போந்து
சென்றவண் மனைபு குந்து செல்வனு மிருந்த போழ்தில்
வென்றிவேற் கண்ணினாளும் வெகுண்டுரை செப்புகின்றாள்
கன்றிய காமம் வேண்டா காவல போக வென்றாள். 201
உதயணன் ஊடலைப் போக்குதல்
பாடக மிலங்கும் பாதப் பதுமையினோடு மன்னன்
கூடிய கூட்டந் தன் போற் குணந்தனை நாடி யென்ன
ஊடிய தேவி தன்னை யுணர்வினு மொளியினாலும்
நாடியுன் றனக்கன்னாடானந்திணை யல்ல ளென்றான். 202
இருவரும் ஊடல் தீர்ந்து கூடுதல்
நங்கைதன் மனங்கலங்கா நலம்புகழ்ந் தூடனீக்கி
வெங்களி யானை மற்றப் பிடியொடு மகிழ்வ வேபோற்
பொங்கிள முலையில் வாசப் பூசுசாந் தழியப் புல்லிச்
சிங்கவே றனைய காளை செல்வியைச் சேர்ந்தானன்றே. 203
உருவிலி மதன்கணைகளுற்றுடன் சொரியப் பாய
இருவரும் பவளச் செவ்வா யின்னமிர் துண்டு வேல்போல்
திரிநெடுங் கண்சி வப்ப வடிச்சிலம் போசை செய்ய
மருவிய வண்டு நீங்க மலர்க்குழல் சரிய வன்றே. 204
கோதையுஞ் சுண்ணத் தாதுங் குலைந்துடன் வீழ மிக்க
காதலிற் கழுமி யின்பக் கரையழிந் தினிதினோடப்
போதவும் விடாது புல்லிப் புரவலனினியனாகி
ஏதமொன் றின்றிச் செங்கோ லினிதுடன் செலுத்து நாளில். 205
உதயணன் உருமண்ணுவாவைச் சிறப்பித்தல்
ஆனதன்னாம மிட்ட வாழிமோ திரத்தை யீந்தே
ஊனுமிழ் கதிர்வேன் மன்னனுருமண்ணுவாவு தன்னைச்
சேனைநற்பதிநீ யென்று திருநிகர் பதுமை தோழி
ஈனமி விராசனைய யெழில்வேள்வி யாற்கொ டுத்தான் . 206
உருமண்ணுவாவிற்கும் இடபகனுக்கும் உதயணன் ஊர் வழங்குதல்
சயந்தியம் பதியுஞ் சால விலாவாண நகரு மீந்தே
இயைந்தநல் லிடபகற்கு மினியபுட் பகத்தைச் சூழ்ந்த
செயந்தரு வளநன்னாடு சிறந்தவைம் பதும் அளித்து
வயந்தகன் றனக்கு வாய்ந்த பதினெட்டூர் கொடுத்தானன்றே. 207
யூகிக்கு உதயணன் ஊர் வழங்குதல்
ஆதிநன் மாமன் வைத்த வருந்திறை யளக்கு நல்ல
சேதிநன்னாட்டை யூகிக் காக நற்றிறத்தினீந்து
சோதிநல்லரசன் மிக்க சூழ்ச்சியின் மற்றோர்க் கெல்லாம்
வீதி நன்னகர்கள் விட்டு வீறுடன் வீற்றிருந்தான். 208
உதயணனுக்கு பிரச்சோதனன் ஓலையனுப்புதல்
பேசரும் பெருமை சால்ப்ரச் சோதனன் தூதர் வந்து
வாசகம் தன்னைக் காட்ட வத்தவன் மனம் மகிழ்ந்து
வாசவ தத்தை யோடு மன்னிய வமைச்சர் கூட
வாசகஞ் சொல்க வென்று வரிசையிற் கேட்கின்றானே. 209
ஓலையில் வந்த செய்தி
பிரச்சோதன னன்றா னென்னும் பெருமகனோலை தன்னை
உரவுச்சேர் கழற்கான் மிக்க வுதயண குமரன் காண்க
வரவுச்சீர்க் குருகுலத்தின் வண்மையான் கோடல் வேண்டி
வரைவனச் சார றன்னில் வன்பொறி யானை விட்டேன். 210
கலந்தவை காண வந்த காவலர் நின்னைப் பற்றிச்
சிலந்திநூ றன்னா லார்த்த சிங்கம்போ லார்த்துக் கொண்டு
நலந்திகழ் தேரினேற்றி நன்குவுஞ் சயினி தன்னிற்
பெலந்திரி சிறையில் வைத்த பிழையது பொறுக்க வென்றும். 211
கோமானே யெனவே யென்னைக் கோடனீ வேண்டு மென்றும்
மாமனான் மருகனீ யென் மாமுறை யாயிற் றென்றும்
ஆமாகும் யூகி தன்னை யனுப்ப யான் காண்டல் வேண்டும்
பூமாலை மார்ப வென்றும் பொறித்தவா சகத்தைக் கேட்டான். 212
உஞ்சைக்குச் சென்ற யூகியை பிரச்சோதனன் வரவேற்றல்
மன்னவனனுப்ப யூகி மாநக ருஞ்சை புக்கு
மன்னர்மா வேந்தன் றன்னை வணங்கினன் கண்டிருப்ப
மன்னனு முடிய சைத்த மைச்சனை நெடிது நோக்கி
மன்னிய வுவகை தன்னான் மகிழ்வுரை விளம்பினானே. 213
பிரச்சோதனன் முரசறைவித்தல்
சீர்ப்பொழி லுஞ்சையுஞ் சீர்க்கெள சாம்பியும்
பார்தனில் வேற்றுமை பண்ணுதல் வேண்டோம்
ஆர்மிகு முரச மறைகென நகரில்
தார்மிகு வேந்தன் றரத்தினிற் செப்பினன். 214
யூகியின் சொற்போர் வெற்றியும், மன்னனின் பாராட்டும்
தருமநன்னூல்வகை சாலங் காயனோ
டருமதி யூகியு மன்பினுரைத்தான்
பெருவிறல் வேந்தனும் பெறுத லரிதெனத்
திருநிறை யூகியைச் செல்வன் மகிழ்ந்தான். 215
கல்விய தகலமுங் காட்சிக் கினிமையும்
சொல்லருஞ் சூட்சியுஞ் சொற் பொருட் டிண்மையும்
வல்லமை யிவனலான் மாந்த ரில்லையின்
றெல்லையில் குணத்தினன் என்றுரை செய்தனன். 216
இன்னவற் பெற்றவர்க் கேற்ற வரசியல்
இன்னவ ரின்றி யிலையர சென்றே
இன்னன நீடிய வியல் பிற் பிறவுரை
மன்னவனாடி மகிழ்வித் திருந்த பின் 217
யூகியின் திருமணம்
சாலங் காயன் சகோதர மானநன்
னீலங் காய்ந்த நெடுவேல் விழிநுதற்
பாலங் கோர்பிறை யாம்படா வெம்முலைக்
கோலங் காரன்ன கூரெயி றாப்பியும். 218
பரதகன்றங்கை பான்மொழி வேற்கணி
திருநிலம்புகழ் திலதமா சேனையும்
பெருநில மறிய மணமிகப் பெற்றுடன்
அரிய யூகிக் கரசன் கொடுத்தளன். 219
சென்மதி நீயெனச் செல்ல விடுத்தனன்
நன்முது நகர்முன்னாடிப் போவெனப்
பன்மதி சனங்கள் பரவி வழிபட
வென்மதி யூகிபோய் வேந்தனைக் கண்டனன். 220
யூகி உதயணனை அடைதல்
வத்தவ குமரன் பாதம் வந்தனை செய்த மைச்சன்
இத்தல முழுது மாளுமினியநன் மாமன் சொன்ன
ஒத்தநன் மொழியைக் கேட்டே யுவந்துடனிருந்த போழ்தில்
சித்திரப் பாவை மார்கள் செல்வனை வணங்கிச் செல்வார். 221
உதயணன் மாந்தர்களின் பந்து விளையாட்டைக் காணல்
பந்தடி காண்க வென்னப் பார்த்திபனினியனாகிக்
கலந்துகப் பூசல் காணக் களிற்றின்மீதேறி வந்து
கொந்தலர் மாலை மாதர் குழுவுடன் சூழ நிற்ப
வந்தனன் பதுமை தோழி வனப்பிராசனையென் பாளாம். 222
மகளிரின் பந்துப் போர்
ஓரெழுபந்து கொண்டே யொன்றொன்றி நெற்றிச் செல்ல
பாரெழு துகளு மாடப் பலகலனொலிப்ப வாடிச்
சீரெழு மாயி ரங்கை சிறுந்தவ ளடித்துவிட்டாள்
காரெழு குழலி நல்ல காஞ்சன மாலை வந்தாள். 223
வேய்மிகு தடக்கை தன்னால் வியந்துபந் துடனே யேந்திக்
காய்பொனின் கலன்களார்ப்பக் கார்மயிலாட்டம் போல
ஆயிரத் தைஞ்நூறேற்றி யடித்தன ளகல வப்பால்
ஆய்புகழ்ப் பதுமை தாதி யயிராபதிபந்து கொண்டாள். 224
சீரேறும் இமில் போற் கொண்டைச் சில்வண்டுந் தேனும் பாடப்
பாரோர்கள் இனிது நோக்கும் பலகலஞ் சிலம்போடார்ப்ப
ஈராயிரங்கை யேற்றி யிருகரத் தடித்து விட்டாள்
தோராத வழகி தத்தை தோழிவிச்வ லேகை வந்தாள். 225
கருங்குழ நெடுவேற் கண்ணாள் காரிகை பந்தெடுத்துப்
பெருங்கலனினிதினார்ப்பப் பெய்வளை கலக லென்ன
ஒருங்குமுன் கையின் மீதி லோரைஞ் நூ றடிட்த்து விட்டாள்
கருங்கணி பதுமை தோழி காரிகை யொருத்தி வந்தாள். 226
ஆரியை யென்னு நாம வரிவைகைக் கொண்டு பந்தைச்
சேரமின் சிலம்பு மார்ப்பச் சிறுநுதன் முத்த ரும்பச்
சீரின்மூவாயிரங்கை சிறந்தவ ளடித்த பின்பு
பேரிசைத் தத்தை யாயம் பெருங்குழாத் தினிதினோக்கா. 227
உதயணன் விரிசிகை மணம்
தேவியர் மூவர் கூடத் தேர்மன்னன் சேர்ந்து சென்னாட்
காவின் முன் மாலை சூட்டிக் காரிகை கலந்துவிட்ட
பூவின் மஞ் சரியைப் போலும் பொற்புநல் விரிசி கையைத்
தாவில்சீர் வேள்வி தன்னாற் றரணீசன் மணந்தானன்றே. 240
உதயணனின் ஆட்சிச் சிறப்பு
நட்புடைக் கற்பு மாதர் நால்வரு மன்னனுள்ளத்
துட்புடை யிருப்ப நாளு மொருகுறை வின்றித் துய்த்துத்
திட்புடை மன்னர் வந்து திறையளந் தடிவ ணங்க
நட்புடை நாட்டை யெல்லா நரபதி யாண்டு சென்றான். 241
நரவாகன காண்டம்
வாசவதத்தை மசக்கை எய்துதல்
எத்திக்கு மடிப்படுத்தி யெழில் பெறச் செங்கோல் செல்லும்
பெற்றிசெய் வேந்தன் றன்னைப் பெருமைவேற்றானை மன்னை
வித்தைசெய் சனங்கண் மாந்தர் வியந்தடி வணங்க மின்னும்
முற்றிழை மாலைத் தத்தை முனிவில் சீர் மயற்கை யானாள் 242
வாசவதத்தையின் விருப்பம்
நிறைபுகழ் வனப்பு நங்கை நிலவிய வுதாந் தன்னுட்
பிறையென வளரச் செல்வன் பேதையும் விசும்பிற் செல்லும்
குறைபெறு வேட்கை கேட்ட கொற்றவன் மனத்தினெண்ணி
அறைபுக ழமைச்சர் தம்மை யழைத்தனன் வினவி னானே. 243
உருமண்ணுவாவின் உரை
உருமண்ணு விதனைச் செப்பு முன்னொரு தினத்தின் வேட்டைப்
பெருமலை வனத்தினீரின் வேட்கையாற் பிறந்த துன்பம்
மருவுறு வருத்தங் கண்டோ ர் வானவன் வந்து தோன்றிப்
பெருமநீ ருண்ணக் காட்டிப் பேரிடர் தீர்த்தானன்றே. 244
இன்னமோர் இடர் வந்தாலு மென்னை நீர் நினைக்க வென்று
மன்னுமோர் மந்தி ரந்தான் வண்மையினளித்துப் போந்தான்
சொன்னமா மந்திரத்தைச் சூழ்ச்சியினினைக்க வென்றான்
பின்னவன் நினைத்த போழ்தே பீடுடை யமரன் வந்தான். 245
தேவன் கூற்று
பலவுப சாரஞ் சொல்லிப் பார்மன்னற் கிதனைச் செப்பும்
நலிவுசெய் சிறையிற் பட்ட நாளிலுஞ் சவரர் சுற்றி
வலியலந் தலைத்த போதும் வாசவதத்தை நின்னைச்
சிலதினம் பிரிந்த போதுஞ் செற்றோரைச் செகுத்த போதும். 246
மித்திரனென்றே யென்னை வேண்டிமுன் நினைத்தாயில்லை
பொற்றிரு மார்ப விந்நாட் புதுமையினினைத்த தென்னை
உத்தரஞ் சொல்க வென்ன வொளியும் ழமரன் கேட்கச்
சித்திரப் பாவை வானிற் செலவினை வேட்டா ளென்றான். 247
உதயணன் உரை
எங்களிற் கரும மாக்கு மியல்புள தீர்த்துக் கொண்டோம்
திங்களின் முகத்திற் பாவை செலவு நின்னாலே யன்றி
எங்களி லாகா தென்றிப் பொழுதுனை நினைத்தேனென்ன
நன்கினி யமரன் கேட்டு நரபதி கேளி தென்றான். 248
தேவன் மந்திரம் செவியறிவுறுத்தல்
வெள்ளிய மலையிற் தேவன் விரைக்குழ லாள் வயிற்றின்
உள்ளவின் பத்தினாலே வுலவுவான் சிந்தை யானாள்
கள்ளவிழ் மாலை வேந்தன் கதிர்மணித் தேரினேறிப்
புள்ளெனப் பறக்க மந்த்ர மீதெனக் கொடுத்துப் போந்தான். 249
அனைவரும் தேரேறி வானத்தே செல்லல்
வெற்றித்தே ரேறி வென்வேல் வேந்தனுந் தேவி தானும்
மற்றுநற் றோழன் மாரும் வரிசையினேறி வானம்
உற்றந்த வழிய தேகி யுத்தர திக்கினின்ற
பெற்றிநல் லிமயங் கண்டு பேர்ந்துகீழ்த் திசையுஞ் சென்றார். 250
உதயநற் கிரியுங் கண்டே யுற்றுடன் றெற்கிற் சென்று
பொதியமா மலையுங் காணாப் பொருவில்சீர்க் குடபானின்ற
மதிகதி ரவியு மத்த வான்கிரி கண்டு மீண்டும்
இதமுள தேசம் பார்த்தே யினியதம் புரிய டைந்தார். 251
நரவாகனன் பிறப்பு
மாதுதன் வயாநோய் தீர்ந்து வளநகர் புக்க பின்பு
தீதின்றிக் கோள்களெல்லாஞ் சிறந்துநல் வழியை நோக்கப்
போதினற் குமரன் றோன்றப் புரவலனினியனாகிச்
சோதிப்பொன்னறைதி றந்து தூவினன் சனங்கட்கெல்லாம். 252
மக்கட்குப் பெயரிடுதல்
நரவாகனன்னே யென்று நரபதி நாமஞ் செய்தான்
விரிவாகு மதிய மைச்சர் மிக்க நாற் குமரர் பேர்தாம்
பரிவார்கோ முகனும் பாங்காந் தரிசகனாக தத்தன்
குரவம்பூ மேனியான குலமறி பூதியாமே. 253
நரவாகனன் கலைபயிலுதல்
நால்வருந் துணைவராகி நறுநெய்பாலுடன ருந்தி
பான்மரத் தொட்டிலிட்டுப் பரவியுந் தவழ்ந்து மூன்றாம்
மால்பிறை போல்வளர்ந்து வரிசையினிளமை நீங்கிப்
பான்மொழி வாணி தன்னைப் பாங்கினிற் சேர்த்தாரன்றே. 254
நரவாகனன் உலாப் போதல்
ஞானநற் குமரி தன்னை நலமுழுதுண்டு மாரன்
மானவிற் கணக்கி லக்கா மன்மதனென்னக் கண்டோர்
வானவக் குமரர் போல வாரண மேறித் தோழர்
சேனைமுன் பின்னுஞ் செல்லச் சீர்நகர் வீதி சென்றான். 255
நரவாகனன் மதனமஞ்சிகையைக் கண்டு காமுறுதல்
ஒளிர்குழற் கலிங்க சேனை யுதரத்தினுற்ப வித்த
வளிற்றும் பூஞ்சு கந்த மதனமஞ்சிகைதன் மேனி
குளிரிளந் தென்றல் வீசக் கோலமுற் றத்துப் பந்தைக்
களிகயற் கண்ணி யாடக் காவல குமரன் கண்டான். 256
நரவாகனன் மதனமஞ்சிகையை மணத்தல்
மட்டவிழ் கோதை தன்னை மன்னவ குமரன் கண்டு
இட்ட நன் மாரனம்பா லிறுவரு மயக்கமுற்று
மட்டவிழ் மலர்ச்சோ லைக்குள் மன்னவ குமரன் மின்னின்
இட்டிடை மாதைத் தந்தே யின்புறப் புணர்ந்தானன்றே. 257
மானசவேகன் மதனமஞ்சிகையைக் கொண்டுபோதல்
இருவரும் போகந் துய்த்தே இளைத் துயில் கொள்ளும் போழ்து
மருவிய விச்சை மன்னன் மானச வேகனென்பான்
திருநிற மாதைக் கண்டு திறத்தினிற் கொண்டு சென்று
பெருவரை வெள்ளி மீதிற் பீடுறு புரம்புக் கானே. 258
மானசவேகன் மதனமஞ்சிகையை வயப்படுத்த முயலுதல்
தன்னுடை நோயுரைக்கத் தையலு மோனங் கொண்டே
இன்னுயிர்க் கணவன் றன்னை யினிமையினினைத் திருப்ப
மின்னிடைத் தங்கை யான வேகநல் வதியை யேவி
மன்னிய நிறை யழிக்க வாஞ்சையின் விடுத்தானன்றே. 259
வேகவதி நரவாகனன் மீது காமுறுதல்
அன்புற வவளுஞ் சொல்ல வசலித மனத்த ளாகி
இன்புறுந் தன்னோர் நாதனிந்திரன் போலுமென்னப்
பண்புணர் மொழியைக் கேட்டுப் பரவச மனத்தளாகி
நண்பொடு விசும்பின் வந்து நரவாகனனைக்கண்டாளே. 260
வேகவதி மதனமஞ்சிகை வடிவம் பூணுதல்
கண்டபின் காமங் கூர்ந்து கார்விசும் பதனினிற்பப்
புண்டவழ் வேலிற் காளை பூங்குழ லாட்கி ரங்கி
வண்டலர் சோலை மாடம் வனமெங்குந் தேடு கின்றான்
தொண்டைவா யுடைய வேக வதியுஞ்சூதினிலே வந்தால். 261
மதனமஞ்சிகையென நினைத்து வேகவதியுடன் நரவாகனன் கூடுதல்
மதன மஞ்சிகை மான்விழிரூபம் போல்
வதன நன்மதி வஞ்சியங் கொம்பனாள்
இதநல் வேடத்தை யின்பிற் றரித்துடன்
புதரின் மண்டபம் புக்கங் கிருந்தனள். 262
தாது திர்ந்து தரணியிற் பம்பிட
மாத விப்பொதும் பின்மயிற் றோகைபோல்
பேதையைக் கண்டுபீடுடைக் களையும்
தீதறுந் திறந் தேர்ந்து புரைந்தனன். 263
மன்னவன் வேகவதி மீது ஐயுறுதல்
ஆங்கொர் நாளிலரிவை துயிலிடைத்
தேங்கொள் கண்ணியைச் செல்வனுங் கண்டுடன்
பூங்குழாஅல்நீ புதியைமற்றியாரெனப்
பாங்கில் வந்து பலவுரை செய்தனள். 264
நரவாகனன் வேகவதியுடன் கூடுதல்
கேட்ட வள்ளலுங் கேடினன் மாதரை
வேட்ட வேடம் விரும்பி நீ காட்டெனக்
காட்டவே கண்டு காளை கலந்தனன்
ஊட்ட வேகணை யுன்னத மாரனே. 265
மானசவேகன் இருவரையும் மயக்கி கொண்டு போதல்
மன்னு விஞ்சையின் மானச வேகனும்
துன்னு தங்கையாந் தோகையைக் காண்கிலன்
உன்னி வந்தவள் போன தறிந்துரை
பன்னி வந்திரு வோரையும் பற்றினன். 266
மானசவேகன் நரவாகனனை நிலத்தில் தள்ளி விடுதல்
வான கஞ்சென்று வள்ளலை விட்டபின்
ஈனகஞ் செல வேலக் குழலியும்
தான கம்விஞ்சை தானுடன் விட்டனள்
கான கத்திடைக் காளையும் வீழ்ந்தனன். 267
நரவாகனனைச் சதானிக முனிவர் காணுதல்
வெதிரி லையென வீழ்ந்தவன் றன்னிடைக்
கதிர்வேல் வத்தவன் காதனற் றந்தையாம்
எதிர்வரும்பிறப் பெறிகின்ற மாமுனி
கதிரி லங்குவேற் காளையைக் கண்டனன். 268
போதி தன்வலிப் போத வுணர்ந்து தன்
காதலிற்சென்று காளைதன்னாமமும்
ஏதமில் தந்தை யெய்திய நாமமும்
போதச் செப்பலும் போந்து பணிந்தனன். 269
நரவாகனன் முனிவரிடம் வேண்டுதல்
தந்தை யென்முதல் தாமறிந் திங்குரை
அந்த மில் குணத் தையநீ ராரென்
முந்து நன்முறை யாமுனி தாஞ்சொலச்
சிந்தை கூர்ந்து சிறந்தொன்றும் கேட்டனன். 270
விஞ்சை யம்பதி வெற்றி கொண்டாளுமென்
தஞ்ச மென்றநற் றக்கோ ருரையுண்டு
எஞ்சு லின்னிலை மையது வென்றென
விஞ்சு மாதவன் மெய்ம்மையிற் கூறுவான். 271
முனிவனின் கூற்று
வெள்ளி யம்மலை மேனின்ற ராச்சியம்
உள்ள தெல்லா மொருங்கே யடிப்படுத்
தெள்ளில் செல்வமு மீண்டுனக் காமென்றான்
கள்ள விழ் கண்ணிக் காளையுங் கேட்டபின் 272
நரவாகனன் தாய் தந்தையரிடம் நடந்தவை கூறல்
மாதவன் விட வள்ளனகர்ப்புக்குத்
தாதை தாய்முதற் றான்கண் டிருந்தபின்
தீது தீர்ந்ததுஞ் செல்வி பிரிந்ததும்
ஆதரித்தவர்க் கன்னோன் விளம்பினன். 273
மேனி கழ்வென மெய்த்தவர் கூறின்
தான வின்றுதன் றாய்துயர் தீர்த்தனன்
வானு ழைச்செல்லு மன்னிய தேர்மிசை
ஈன மில்கும் ரன்னினி தேறினான். 274
நரவாகனன் வித்தியாதர உலகஞ் செல்லுதல்
அன்பால் வான்வழியாய்மணித் தேர்செலத்
தென்பாற் சேடியிற் சீதர லோகத்தில்
இன்பாற் பொய்கை யெழிற்கரை வைகென
மின்பூண் மார்பனும் வேண்டித் திளைத்தனன். 275
நரவாகனனை வித்தியாதரன் காணுதல்
நெடுங்க ரைமிசை நீர்மையினின்றனன்
நடுங்க லின்றிவாய் நானநீர் பூசியே
கடிகமழ் கண்ணிக் காளை யிருந்தனன்
அடிகண் டோ ர்மகனன்பிற் றொழுதனன் 276
நரவாகனன் வினாவும் வித்தியாதரன் விடையும்
அண்ணல் கண்டுநீ யாருரை யென்றாலும்
தண்ணென் வாய்மொழித் தானவன் சொல்லுவான்
அண்ணல் கேட்க வரிய வரைமிசைக்
கண்ணொளிர்கொடிக் கந்தரு வப்புரம். 277
காவலன்னீல வேகற்குக் காரிகை
நாவி ளங்குஞ்சீர் நாகதத் தையெனும்
பூவிளங்கொடி புத்திரி நாமமும்
மேவி ளங்சூமநங்கவி லாசனை. 278
சுரும்பார் மாலையளித் துயிலிடைக்
கரும்பார் நன்மொழி காதற் கனவிடை
விரும்பு சிங்கமீன் வீரியச் சாபந்தான்
பரம்பு மண்ணின்று பாங்கினெழுந்ததே. 279
வரைமி சைவந்து மன்னிய தன்முலை
அரிய முத்தணி யாரத்தைக் கவ்வியே
விரைசெய் மாலையை வீறுடன் சூட்டவும்
அரிவை கண்டுதன்னையர்க் குரைத்தனள் 280
வெல்ல ரும்வேலின் வேந்தனுங் கேட்டுடன்
சொல்ல ருந்தவச் சுமித்திர நன்முனி
புல்ல ரும்பதம் பொற்பினிறைஞ்சினன்
நல்ல ருந்தவனற்கனாக் கேட்டனன். 281
அறிந்த ருள்செய் தனனம் முனிவனும்
செறிந்த பூமிவாழ் திருமரு கன்வரும்
அறைந்த நின்மகட் காகு மணவரன்
நிறைந்த நேமியிந் நிலமு மாளுவன். 282
அம்முனிவன்சொலரசன் கேட்டுடன்
தம்மி லெண்ணினன் சார்ந்து காண்கெனச்
செம்மை யெண்ணியே செப்பி விட்டனன்
உம்மைக் கண்டனன் செல்க வென்றனன். 283
நரவாகனனை நீலவேகன் வரவேற்றல்
போவதே பொருள் புண்ணியற்கொண்டு
தேவனேயெனச் செல்வனுஞ்செலும்
காவலன்னெதிர் கண்டு கண்மகிழ்
ஏவலாளரோடினிதினெய்தினான். 284
நீலவேகனின் ஆசை
கன்னல் விற்கணையில்லாக் காமனை
இன்னி லக்கண மேற்ற காளையை
மன்னனின்னுரை மகிழ்ந்து கூறினான்
பின்ன மைச்சரைப் பேணிக் கேட்டனன். 285
அநங்க விலாசனை சுயம்வரம்
தனித்தி வர்மணந் தரத்தி யற்றினால்
சினத்தொ டுமன்னர் சேர்வ ராலென
மனத்த மைச்சரு மகிழ்ந்து மன்னரை
இனத்தொர் மாவர மியம்பி விட்டனர். 286
அநங்கவிலாசனை நரவாகனனுக்கு மாலையிடல்
மன்ன ரீண்டியே வந்திருக்கையில்
அன்ன மென்னடை யமிர்த மன்னவள்
மின்னின் மாலையை விரகினேந்திமுன்
சொன்ன காளைமேற் சூட்டி நின்றனள். 287
மணமக்கள் மகிழ்ந்து இனிதே வாழ்தல்
அரசன் மிக்குநன் கமைத்த வேள்வியின் 
திருமணஞ் செய்து செல்வனின்புற
இருவரும்புணர்ந்தின்ப மார்ந்தனர்
வெருவு மானச வேகன் றன்மனம் 288
நரவாகனனின் திருவுலா
வேக யானைமே லேறி வீரனும்
நாக நீள்புர நடுவிற் றோன்றலும்
காமனேயெனக் கன்னி மங்கையர்
தாமரைக்கணாற் றான்ப ருகுநாள். 289
நரவாகனின் சிறப்புகள்
நேமி யாளவே நினைத்த தோன்றலும்
வாம நாகர் தம் மலையிற் சென்றனன்
தாம மார்பனைத் தரத்திற் கண்டவர்
நேமி தான்முதனிதிக ளொன்பதும் 290
நாம விந்திரனன்க ருள்செயக்
காமனுக்கீந்து கண்டு சேவித்துத்
தாம வந்தரர் தாம்ப ணிந்திடத்
தோமனாலிரண் டொன்ற வாயிரம். 291
நரவாகனனை சக்கரப் படை வணங்குதல்
சக்க ரம்வலஞ் சார்ந்தி றைஞ்சின
மிக்க புண்ணியன் மீட்டு வந்துடன்
தக்க விஞ்சையர் தம்ப தியெல்லாம்
அக்கணத்தினி லடிப்ப டுத்தினன். 292
நரவாகனனின் வெற்றி
விஞ்சை யர்திறை வெற்றி கொண்டவன்
தஞ்ச மென்றவர் தரத்தின் வீசியே
எஞ்ச லில்புரமிந்திரன்னென
மிஞ்சு மாளிகை வீரன் சென்றனன். 293
நரவாகனனின் மாட்சி
மதன மஞ்சிகை மனங்குளிர்ந்திட
விதன மின்றிநல்வேக வதியுடன்
அதிக போக வநங்க விலாசனை
அதிக வெண்ணா யிரமான தேவியர் 294
இனிய வேள்வியா லின்ப மார்ந்துபின்
இனிய புண்ணிய மீண்டி மேல்வரத்
தனிய ரசினைத் தானி யற்றியே
நனிய தொன்றினன்னாம வேலினான். 295
நரவாகனன் தந்தையைக் காண வருதல்
விஞ்சை யர்தொழ வீறுந் தேவியர்
பஞ்சின் மெல்லடிப் பாவை மாருடன்
மஞ்சு சூழ்மலை விட்டு வானவர்
தஞ்ச மானதன் தந்தை பாற்சென்றான். 296
புரம திக்கப்பூ மாலை தோரணம்
வரம்பினாற்றியே வான்கொ டிம்மிடை
அரும்பு மாலைவே லரசன் சென்றெதிர்
விரும்பிக் கொள்ளவே வியந்து கண்டனன். 297
நரவாகனன் தாய் தந்தையரை வணங்குதல்
தந்தை தாய்பதந் தான்ப ணிந்தபின்
இந்து வாணுத லெழின்ம டந்தையர்
வந்து மாமனை வணங்கி மாமியை
அந்த மில்வனத் தடியி றைஞ்சினார். 298
உதயணன் செயல்
மகிழ்ந்து புல்லியே மனைபு குந்தபின் 
நெகிழ்ந் தகாதலானேமிச் செல்வனும்
மிகுந்த சீருடன் வீற்றிருந்தனன்
மகிழ்ந்து மைந்தரை வரவ ழைத்தனன். 299
பதுமாவதியின் மைந்தன் கோமுகனுக்கு முடிசூட்டல்
பதுமை தான்மிகப் பயந்த நம்பியாம்
கொதிநுனைவேலின் கோமு கன்றனை
இதம ளித்திடு மிளவ ரைசென
அதுல நேமியனரசு நாட்டினான். 300
நரவாகனன் வித்தியாதர உலகம் செல்லல்
தந்தை மேன்மிகுந் தளர்வில் காதலாற்
றந்த தான்பிரி தலைக்க ருத்தெணி
வெந்து யர்கொடு விடுப்பச் செல்வனும்
இந்திரன்றானூ ரியல்பினேகினான். 301
செல்வநற் குமரன் சென்று தெய்வவிந் திரனைக் கண்டு
செல்வநல் வாமன் பூசைச் சீர்கண்டு வணக்கஞ் செய்து
செல்வவிந் திரனனுப்பத் திருமணித் தேரினேறிச்
செல்வமார் புரம்பு குந்து சிறப்பினோ டிருந்தானன்றே. 302
துறவுக் காண்டம்
உதயணனின் தவ எண்ணம்
வளங்கெழு வத்தவற்கு மன்னிய காதன் மிக்க
உளங்கெழு கற்பினார்களோதிமம் போலு நீரார்
இளங்கிளி மொழியினார்க ளினிமையினால்வரோடும்
துளங்கலி றிருமின் போர்மின் தூயசொன் மடந்தை தாமும். 303
மண்ணியன் மடந்தை யோடு மருவினார் மிக்க மன்னன்
புண்ணிய முன்னாட் செய்த போதந்தே யுதவி செய்ய
எண்ணிய கரும மெல்லா மியைபுடனாகப் பின்னும்
புண்ணிய நோன்பு நோற்கப் பொருந்திய மனத்தனானான். 304
உதயணன் தவத்தின் பெருமையை எண்ணுதல்
ஆசை யென்றனக் கருளும் தோழனா
ஓசை வண்புகழ் யூகி யானதும்
வாச வதத்தை மனைவி யானதும்
பேச ரும்மகப் பெற்றெடுத்ததும். 305
நரவாகனன்மக னாம மானதும்
வரைமிசைத் தானவர் வாழு நாட்டையங்
கரண நேமியா லடிப்ப டுத்ததும்
பொருவில் வேந்தர்கள் புகழ்ந்த டைந்ததும் 306
மிக்க விந்திரன் மேவி விட்டதும்
தக்க புத்திரன் றரத்திற் சென்றதும்
தொக்க வானவர் தொல்சி றப்புடன்
அக்கணம்விட வண்ணல் போந்ததும். 307
போந்து புண்ணியன் பொருவில் போகத்துச்
சேந்தி ருந்ததுஞ் செய்த வத்தெனா
வேந்தனெண்ணியை வெறுத்து மாதரைக்
காந்தி வாமனைக் கண்டடி தொழும் 308
உதயணனை மகளிர் மயக்குதல்
எண்ணம் வந்துநல் லெழிற்பெ ரும்மகன்
புண்ணி யநோன்பு போந்த வேளைவேற்
கண்ணின் மாதர்கள் காவ லன்மனம்
உண்ணக் காமத்தை யுருவு காட்டினார். 309
உதயணன் மீண்டும் காமத்தில் திளைத்தல்
மன்னு மன்பினீண் மாதர் மோகத்திற்
றுன்னு மால் கடற் றோன்றனீந்துநாட்
சொன்ன மும்மதந் தோன்ற வேழமும்
உன்னிக் காற்றளை யுதறி விட்டதே. 310
மதவெறி கொண்ட யானை
காய்ந்து வெம்மையிற் காலன் போலவே
பாய்ந்து பாகரைப் பலசனங்களைத்
தேய்த்துக் காலினேர் தீயுமிழ்வபோல்
ஆய்ந்த கண்களு மருவ ரையென. 311
வெடிப டும்முழக் கிடியெனவிடும்
கொடியு டைமதில் கிடுகி டென்றிடும்
விடுபற் கோட்டினில் வெட்டி விட்டிடப்
படப டென்னவே பயண மானதே. 312
நகர மாந்தர் செயல்
அடிய டிய்யென வாயு தர்செலப்
படுவ டுவ்வெனப் பறைகள் கொட்டிடத்
திடுதி டென்றொலி தெறித்த பேரிகை
நடுந டுங்கினார் நகர மாந்தரே. 313
களிற்றின் வெறிச்செயல்
பிடிசில் பாகரைப் பிளந்தெ றிந்திடக்
குடரின் மாலைகள் கோட்ட ணிந்துடன்
கடவுள் யானையைக் காலிற் றேய்த்திட
இடர்ப டுங்களி றெய்தி யோடுமே. 314
நகரமாந்தர் அரசனுக்கு செய்தி தெரிவித்தல்
நகர மாந்தர்க ணடுங்கிச் சென்றுநற்
சிகரம் போன்முடிச் சீர ரசற்குப்
பகர வாரணம் பலரைக் கொன்றதென்
சிகர மாடநீர் சேர்த்தி ருக்கென்றான். 315
யானை, சோலை முதலிய அனைத்தையும் அழித்தல்
நீல நற்கிரி நெடிய யானையும்
மாலை நற்போது மாய்ந்து பின்னுறக்
காலை நற்போதாற் கனன்று தோன்றின
சோலை நல்வய றுகைத்த ழித்ததே. 316
வழிவ ருவாரை மார்கி ழித்திடும்
எழில்வனம்பொய்கையீட ழித்திடும்
இழிவு றுந்தொழி லீண்டிச் செய்யுநாட்
பொழிலுண் மாதவர் பொருந்தினார்களே. 317
சாரணர் சார்ந்திருந்த பொழில்
வேத நான்கையும் விரித்த ருளுவர்
மாத வர்வினை மாயச் செய்குவார்
ஏதில யாத்திரைக் கெழுந்து வந்தந்தப்
போத விழ்பொழில் புகுந்தி ருந்தனர். 318
சாரணரின் பெருமை
இனமலர் மிசை யேகு வார்களும்
புனல லைமிசைப் போகு வார்களும்
கனிகள் காய்மிசை காணுஞ் சாரணர்
இனிய நூன்மிசை யிசைந்து செல்வரும் 319
மலைத்த லைமிசை வானிற் செல்வரும்
நிலத்தினால்விரனீங்கிச் செல்வரும்
தலத்தினன்முழந் தரத்திற் செல்வரும்
பெலத்தின் வானிடைப் பெயர்ந்து செல்வரும் 320
மலைமு ழஞ்சுண் மன்னினான்முடி
உலகெ லாமவ ரொருங்கி டம்விடும்
அலம தீரவே வறம ழைபெய்யும் 
மலமறுந்தர மாமுனிவரும். 321
பக்க நோன்புடைப் பரம மாமுனி
மிக்க பாணிமீ தடிசின் மேதினி
புக்கு முண்டிடப் போது வார்பகல்
தக்க வர்குணஞ் சாற்றரி தென்றே 322
தருமவீரர் அறம் கூறுதல்
தரும வீரரென்றவருட் டலைவன்பால்
வெருவ ருந்துன்ப விலங்கும் வாழ்க்கையை
மருவி யோதவே வந்த யாவரும்
திருமொழியினைத் திறத்திற் கேட்டனர் 323
யானையின் செயல்
வருந்த சைநசை வானிற் புள்ளுகள்
இரைந்து மேலுங்கீ ழினும்ப டர்ந்திடப்
பருந்து முன்னும்பின் பரந்து செல்லவும்
விருந்த வையுண விட்ட தியானையே. 324
யானை சாரணர் மூலம் பழம் பிறப்புணர்தல்
கூற்றெழுங்கரி கொதித்தெ ழுந்ததால்
ஆற்றலம்முனியறவு ரையுற
ஏற்ற ருஞ்செவி யிறைஞ்சித் தன்னுடை
மாற்ற ரும்பவ மறிந்து ணர்ந்ததே. 325
யானையின் வருத்தம்
குருதியாறிடக் கொன்ற தீவினை
வெருவு துக்கமும் விளங்கினுய்த்திடும்
அருந ரகினு ளாழ்ந்து விட்டிடும்
பெருந்து யரெனப் பேது றுக்குமே. 326
யானை மெய்யுணர்வு பெற்று அமைதியுறல்
நெஞ்சு நொந்தெழு நெடுங்க ணீருகும்
அஞ்சு மாவினுக் கறிவு தோன்றிடக்
குஞ்ச ரம்மினிக் கோன கருன்னி
இஞ்சி வாய்தலினெய்தி நின்றதே. 327
களிற்றினைக் காண உதயணன் வருதல்
கடையுடைக் காவலாளர் கதவினைத் திறக்கப் போந்தே
நடுநகர் வீதி சென்று நரபதி மனையைச் சேர்ந்து
நெடுவரை போல நின்ற நீர்மையை வாயி லாளர்
முடிமனற் குரைப்ப முன்னிப் பெருமகனெழுந்து வந்தான். 328
உதயணன் களிற்றின் மீது ஏறல்
திருமுடி மன்னனின்ற திருநிறை யானை கண்டு
மருவிய வமைச்சர் தம்மை மன்னவனினிதினோக்கப்
பெருவிறல் யூகி சொல்வான் பெருந்தவர் பால றத்தை
மருவியே கேட்ட தாகு மன்னநீ யேற வென்றான். 329
யானை உதயணனை முனிவரிடம் கொண்டு செல்லல்
வேந்தனுங் கேட்டு வந்து வெண்கோட்டினடிவைத் தேறிச்
சேந்தனனெருத்தின் மீதிற் றிரும்பிக்கொண்டேகி வேழம்
பூந்தளிர் நிறைந்தி லங்கும் பொழில் வலஞ் சுற்ற வந்து
காந்துநன் மணிப்பூண் மார்பன் கைம்மாவிட் டிழிந்தானன்றே. 330
உதயணன் துறவியிடம் அறங்கேட்டல்
விரைகமழ் பூவு நீரும் வேண்டிய பலமு மேந்திப்
பரிசனஞ் சூழச் சென்று பார்த்திபனினியனாகி
மருமலர் கொண்டு வாழ்த்தி மாதவ ரடியி றைஞ்ச
இருவென விருக்கை காட்ட விருந்துநல் லறத்தைக் கேட்டான். 331
முனிவர் கூறிய அறவுரைகள்
அறத்திற முனிவன் சொல்ல வரசனுங் கேட்க லுற்றான்
பெறற்கரு மருங்க லங்கள் பேணுதற் கரிய வாகும்
திறத்தறி பொருள்க ளாறுந் தேர்ந்துபஞ் சத்தி காயம்
மறித்தறி தத்து வங்கள் வரிசையினேழ தாமே. 332
சீரிய நவப தங்கள் செப்பிய காய மாறும்
வீரியப் பொறிக ளாறும் வேண்டிய வடக்க மாகும்
ஓரிய லறம்பத் தோடு மொருங்குபன்னிரண்டு சிந்தை
ஆரிய ரறிந்து நம்பி யதன்வழி றொமுக்க மாகும். 333
தலைமகார் சிறப்புச் செய்து தன்மைநல் வாய்மை யான
கலையினற் கரைறைக் கண்டு காதனூல் வழியைச் சென்று
மலைவில்சீர் மா தவர்க்கு வண்மையிற் றானஞ் செய்தார்
தொலைவிலாய் பிறவி நீங்கித் தொல்சுகக் கடலுளாழ்வார். 334
தரும வீரர் தரும முறைத்திடப்
பெருமை மன்னனும் பேர்ந்து வனங்கினன்
மருவு வல்வினை மாசினுதிர்த்திடத்
தெரிசனவ்விளக் கஞ்சிறப் பானதே. 335
முனிவர் களிற்றின் வரலாறு கூறல்
காது வேன்மன்னன் களிறு கதமெழற்
கேது வென்னென யெதிவ ரன்சொலும்
தாது பூம்பொழிற் சாலிநன்னாட்டிடை
வேதியர் குழு வாய்விளங் கும்புரம். 336
கடக மென்பதூர் காதற் பிராமணன்
விடப கன்னென்னும் பேரினன் மற்றவன்
இடைமின் றேவியுஞ் சானகி யென்பவள்
கடையில் காமங் கலந்துடன் செல்லுநாள். 337
அமரி யென்னு மணிமுலை வேசிதன்
அமையுங் காமத் தழுங்கி விழுந்தவன்
சமைய வேள்வியுஞ் சார்ந்த வொழுக்கமும்
அமைவி லன்பவ மஞ்சினனில்லையே. 338
காமங் கள்ளுண்டு கைவிட லின்றியே
தாம நற்குழ லாடுணை யாகவும்
யாம மும்பக லும்மறி யாதவன்
ஆமர ணத்தன்பினானைய தாயினன். 339
மன்னனின் செயல்
அந்நிலை யுணர்ந் தடங்கிய தென்றனர்
மன்னன் கேட்டுடன் வந்துநற் பாகர்க்குச்
சொன்ன யானையைத் தூயநீ ராட்டெனும்
அன்னம் பானெய்யினன்புடனூட்டெனும். 340
கவள நாடொறு மூட்டெனுங் காவலன்
பவள மாமெனும் பண்ணவர் தம்மடி
திவளு மாமுடி சேர்த்து வணங்கியே
உவள கத்துன்னி மற்றொன்று கேட்டனன். 341
உதயணன் முனிவரை வினவுதல்
மதக்க ளிற்றின்மேன் மன்னிய வன்பெனக்
குதவக் காரண மென்னெனக் கூறலும்
சிதைவில் காட்சிநற் சீரொழுக் கத்தவர்
மதமின் மாட்சியர் மன்னநீ கேளென்றார். 342
முனிவர் கூற்று
உள்ள நற்றவ ருற்றுரை செய்கின்றார்
கள்ள விழ்பொழிற் கார்முகில் சூடியே
வெள்ளி யம்மலை மேல்வட சேடியில்
வள்ளலார் பொய்கை மத்திம நாட்டினுள். 343
சுகந்தி யூர்க்கிறை சொற்புகழ் மாதவன்
அகந்தெ ளிந்த வயந்தன் மனைவியாம்
செகந் தனிப்புகழ் சீரார்கு லாங்கனை
உகந்து பெற்றன ளோர் புகழ்க் கோமுகன். 344
காமனென்னுமக் காளைகைத் தாய்பெயர்
சோமசுந்தரி யென்னுஞ் சுரிகுழல்
நாம வேன்மகனன்மை விசையனும்
சேம மித்திர ராகச் சிறந்தனர். 345
ஒழியாக் காதலுடன்விளை யாடியே
வழுவில் போகம் வரம்பின்றித் துய்த்தலும்
நழுவில் காட்சியனாமவேற் கோமுகன்
ஒழிய நல்லுயி ரோங்கிநீ யாயினை. 346
விசையின் றன்னுயிர் விட்டந் தணனாய்
வசையில் காம மயங்கிய மோகத்தின்
இசையினாலுயிர் நீங்கியே யிங்குவந்
தசையு ணாக்களி றாயின தாகுமே. 347
மித்திரன்முன்பு வீறுநற் காதலால்
அத்தி மேலுனக் கன்புமுன் டானதால்
வெற்றி வெண்குடை வேந்தேயிவ் வேழத்தின்
ஒத்த வாயுவு மோரெழு நாளென்றார். 348
உதயணன் வருந்திக் கூறுதல்
திருந்து ஞானத்திற்றோர்ந்த முனியுரை
பொருந்தக் கேட்ட புரவலன் றுக்கமாய்
வருந்திச் சென்றந்த வாரணந் தன்னிடைச்
சரிந்த காதலிற் றானுரை செய்கின்றான். 349
உதயணன் செயல்
வஞ்ச கத்தின் வரிந்துங் கயிற்றினால்
வெஞ்செம் முள்ளினை வீரிட வூன்றியும்
மிஞ்சிக் கால்விலங் கிற்சிறை செய்தனன்
குஞ்ச ரம்பொறை கொள்ளுதி யென்னவே. 350
காதல் யானையைக் கையின்மெய் தீண்டியே
போத வெங்கும் புரவலன் றைவரப்
போத கம்மிகப் பொற்பினிறைஞ்சலிற்
காத லிற்றிண் களிற்றியல் கூறெனா. 351
உதயணன் அரண்மனை புகுதல்
யானை யாளர்க் குரைத்தெழின் மன்னவன்
தேனெய் தோய்ந்த திருமொழி மாதவர்
ஆன வர்பத மன்பிற் றொழுதுபோய்ச்
சேனை சூழத் திருமனை சேர்ந்தனன். 352
உதயணனின் வழிபாடு
சீலமும் வளங்களுஞ் செறிந்தவேழத் தன்மையை
காலையவ்வு ழையர் வந்து கண்டுரைப்ப மன்னனும்
ஆலையம் வலமதா யருகனைவ ணங்கிப்பின்
பாலடிசினெய்யருந்திப் பாரரசன் செலுநாள். 353
உதயணனின் செயல்
சல்லகீணை கொண்டுடன் சமாதிவந்தே யெய்தலும்
நல்லவானிற் றேவனாய் நாகமுறை செய்யக்கேட்டுச்
சொல்லரிய வேந்தனுஞ் சூழ்ந்தவனி போகவும்
நல்லலவென் றுணர்ந்தனனேமியனைவா வென்றனன். 354
நரவாகனனிடம் உதயணன் கூறுதல்
அவனும் வந்து தந்தையை யடியிணைவ ணங்கினான்
அவனியுன தாகவா ளென்ன மன்னன் செப்பினன்
தவவனிதை யாளநான் றாங்குதற்குப் போவனே
உவமமிலா ராச்சிய முற்றதெதற் கென்றனன். 355
கோமுகனுக்கு முடிசூட்டுதல்
வத்தவன்னிறைவனாக மன்னுகோ முகனுக்கு
வெற்றிநன்ம ணிமுடியை வீறுடனே சூட்டியே
ஒத்துலக மாள்கவென் றுரைபல வுரைத்தபின்
சித்திரநேர் மாதரைச் செல்வனோக்கிக் கூறுவான். 356
உதயணனன் மனைவிகளிடத்து கூறலும் அவர்களின் பதில் உரையும்
தேவியீர் நீர் வேண்டியதென் றிருமனை துறந்துபின்
மேவுவனற் றவமென்ன மின்னிடைய மாதரும்
போவதுபொ ருளெமக்குப் புரவலனே நின்னுடன்
தாவில்சீர் விழுத்தவழுந் தாங்குதுமென் றிட்டனர். 357
உதயணனுடன் தேவியரும் செல்லல்
உருமண்ணு விடபகன் யூகிநல் வயந்தகன்
பொருவினா லமைச்சரும் பொற்பரசன் மாதரும்
மருவுநன் மலர்ப்பொழில் வண்மைவலங் கொண்டுமிக்
கருண்முனிவர் பாதத்தி லன்புடன் பணிந்தனர். 358
உதயணன் முனிவரிடம் வேண்டுதல்
நாத்தழும்ப மன்னனு நயமுறு மினிமையின்
தோத்திரங்கள் கொண்டுமீத் தொடுத்தொலியின் வாழ்த்தியே
ஏத்தற முரைத்திட வினிமை வைத்துக் கேட்டனன்
ஏத்தரிய நற்றவமு மெங்களுக் களிக்கென்றான். 359
உதயணன் முதலியோரின் தவக்கோலம்
காலமிது காட்சிதலை கண்டுணர்த்தக் கைக்கொண்டு
ஞாலநிகழ் ஞானமு நன்குமிகவே யுணர்த்திச்
சீலமாதி யாயொழுக்கஞ் சீருடனளித்துப்பின்
கோலமான குஞ்சிமுதல் வாங்கித்தவங் கொண்டனர். 360
அனைவரின் தவநிலை
அறுவகைய காயங்களை யருண்மிக்குற் றோம்பியும்
பொறிகளை மனத்தடக்கிப் புண்ணியமா நோன்புகள்
அறிகுறி யநசன மாற்றுதற் கரிதென 
மறுவறு தியானமு மதியகந் தெளிந்தவே. 361
புறத்தினும் மகத்தினும் போகத் தொடர்ப் பாடுவிட்
டறத்திடை யருளினா லாயிருரை யோம்பியும்
திறத்துடன் சமிதியுஞ் சிந்தையின்னடக்கமும்
திறத்திறத் துணர்ந்துபின் றியானமுற்றினார்களே. 362
ஒருவகை யெழின்மன மிருவகைத் துறவுடன்
மருவுகுத்தி மூன்றுமே மாற்றிநான்கு சன்னையும்
பொருவிலைம் புலம்மடக்கிப் பொருந்தியவா வச்சமூ
விருவகைச் செவிலியு மெழுவரையும் வைத்தனர். 363
சுத்திமீக வெட்டினோடுஞ் சூழ்ந்தயோகு வொன்பதாம்
பத்துவகை யூற்றடைத்துப் பயின்றவங்கம் பத்தொன்றும்
சித்தம்பனி ரெண்டுசீர்க் கிரியைபதின் மூன்றுடன்
ஒத்தபங்க மீரேழு மொருங்குடன் பயின்றனர். 364
உதயணன் கேவல ஞானம் எய்துதல்
உதயண முனிவனு மோங்குமாவரைதனில்
இதயமினி தாகவே யெழில்பெறநல் யோகமாய்
இதமுறு தியானத்தினிருவினை யெரித்துடன்
பதமினிது சித்தியெய்திப் பரமசுகத் திருந்தனன். 365
தேவியரும் அமைச்சரும் நோன்பிருந்து தேவராதல்
அமைச்சரா மநகரு மானவன்ன மாதரும்
சமைத்தநோன்பு நோற்றுயர்ந்து சமாதிறன் மரணத்தின்
இமைத்தலில் லமரரா நிறைந்தசோத மாதியாய்
அமைத்தவச் சுதம்மள வானபாடியின்புற்றார். 366
தேவியரும் அமைச்சரும் தேவலோகத்தில் இன்புற்றிருத்தல்
பொற்புடைநன் மாதரைப் புணர்ந்துமேனி தீண்டலும்
அற்புதமாய்க் காண்டலு மானவின்சொற் கேட்டலும்
கற்புடைமனத்திலெண்ணிக் காணற்கரி தாகவே
விற்பனநன் மாதவர் வேண்டுசுகந் துய்த்தனர். 367
காண்டங்களின் செய்யுட் தொகை
உஞ்சை நற் காண்டந் தன்னி லுயர்கவி நூற்றீரெட்டு
விஞ்சவே யிலாவா ணத்தின் வீறுயர் முப்பதாகும்
எஞ்சலின் மகத காண்ட மெழிலுடை முப்பத்தஞ்சாம்
அஞ்சுடனைம்பத் தொன்றா மரியவத் தவத்திலன்றே. 368
[நூற்றீரெட்டு - நூற்றுப்பதினாறு. கடவுள் வாழ்த்து, அவையடக்கம், பயன் கூறும் செய்யுள், உள்ளிட்ட நான்கு செய்யுள் நீங்கலாக உஞ்சைக் காண்ட செய்யுட்தொகை]
நறுமலர் மாலை மார்பனரவாக காண்டந் தன்னில்
அறுபது மொன்று மாகு மாகிய துறவுக் காண்டம்
அறுபது மஞ்சு மாகு மன்புவைத் தோது வோர்க்குந்
திறவதிற் கேட்ப வர்க்குஞ் சிவகதி யாகுமன்றே. 369
உதயண குமார காவியம் முற்றிற்று.

மகத காண்டம்
வாசவதத்தையை நினைத்து உதயணன் வருந்துதல்
சயந்தியின் எல்லைவிட்டுச் சாலவு மகதநாட்டுக்குஇயைந்துநன் கெழுந்துசென்றே இரவியின் உதய முற்றான்நயந்தனன் தேவிகாதனன் மனத்தழுங்கிப் பின்னும்வியந்து நல்லமைச்சர் தேற்றவெங்கடும் கானம் புக்கான். 151
செத்தநற்தேவி தன்னைத் திருப்பவு மீட்கலாமென்றுஅத்திசை முன்னிநல்ல வருவழிப்பட்டுச் செல்லஅத்தியும் பிணையுமேக வாண்மயிலாடக் கண்டுவந்தவன் கவிழ்ந்துரைக்கு மனனமை மனையையோர்ந்தே. 152
உதயணன் மகதநாடு அடைதல்
கோட்டுப்பூ நிறைந்திலங்குங் கொடிவகைப் பூவுங்கோலம்காட்டு நந்தேவியென்று கால்விசைநடவா மன்னன்காட்டினன் குன்றமேறிக் கானகங்கழிந்து போந்துசேட்டிளஞ் சிங்க மன்னான் திருநிறைமகதஞ் சேர்ந்தான். 153
அனைவரும் இராசகிரி நகர பூஞ்சோலையில் தங்குதல்
மருவிய திருவினானம் மகதவர்க் கிறைவனாமம்தருசகனென்னு மன்னன்றானை வேற்றலைவன் மாரன்இருந்தினி துறையுமிக்க விராசநற்கிரியந் தன்னிற்பொருந்திச் சென்ன கர்ப்புறத்திற் பொலிவுடனிருந் தானன்றே. 154
காகதுண்ட முனிவனிடம் வயந்தகன் தங்கள் சூழ்ச்சி பற்றிக் கூறுதல்
காமநற்கோட்டஞ் சூழக் கனமதில் இலங்கும் வாயிற்சோமநற்றாபதர்கள் சூழ்ந்தமர் பள்ளி தன்னில்நாமநல் வயந்த கன்னு நன்றறி காக துண்டமாமறையாளற் கண்டு வஞ்சகஞ் செப்பினானே. 155
காகதுண்ட முனிவர் உதயணனிடம் உரைத்தல்
திருநிறை மன்னன் தன்னைச் சீர் மறையாளன் கண்டேஇருமதியெல்லை நீங்கியிப்பதியுருப்ப வென்றும்தருவநீயிழந்த தேவி தரணியிங்கூட வென்னமருவியங்கிருக்குமோர் நாண் மகதவன் தங்கை தானும். 156
பதுமாவதியும் உதயணனும் காமுறுதல்
பருவமிக்கிலங்குங் கோதைப் பதுமை தேரேறிவந்துபொருவில் காமனையே காணாப் புரவலற் கண்டுகந்துமருவும் வாசவதத்தை தான் வந்தனளென்றுரைப்பத்திருநகர் மாதுகண்டு திகைத்துளங் கவன்று நின்றாள். 157
உதயணனும் பதுமாவதியும் களவுமணம் செய்தல்
யாப்பியாயினியாளென்னும் அவளுடைத் தோழி சென்றுநாப்புகழ் மன்னற்கண்டு நலம்பிறவுரைத்துக் கூட்டக்காப்புடைப் பதுமையோடுங் காவலன் கலந்து பொன்னின்சீப்பிடக்கண் சிவக்குஞ் சீர் மங்கை நலமுண்டானே. 158
உதயணன் அமைச்சர்களிடம் வினவுதல்
எழில்பெறு காமக்கோட்டத் தியற்கையிற் புணர்ந்துவந்துவழிபெறும மைச்சரோடு வத்தவனினிய கூறும்மொழியமிர் தந்நலாளை மோகத்திற் பிரியேனென்னத்தொழுதவர் பெறுக போகந் தோன்றனீயென்று சொன்னார். 159
பதுமாவதியுடன் உதயணன் கன்னிமாடம் புகல்
மாட்சிநற் சிவிகையேறி மடந்தை தன்னோடும் புக்குத்தாழ்ச்சியின் மாளிகைக்குட் டக்கவண் மனங்குளிர்ப்பக்காட்டினன் வீணை தன்னைக்காவலன் கரந்திருப்பஓட்டிய சினத்தனாய வுருமண்ணுவிதனைச் செய்யும். 160
அமைச்சன் உருமண்ணுவாவின் உரை
ஆகியதறிந்து செய்யு மருளுடை மனத்தனானயூகியங்குஞ்சை தன்னையுற்றருஞ் சிறை விடுக்கப்போக நற்றேவியோடும் போந்ததுபோல நாமும்போகுவமன்னன் மாதைப் புதுமணம் புணருவித்தே. 161
அமைச்சன் உருமண்ணுவாவின் செயல்
உருமண்ணுவா வனுப்ப வுற்றமுந்நூறு பேர்கள்மருவியவிச்சை தன்னான் மன்னவன் கோயிறன்னுள்மருவினர் மறைந்துசென்றார் மன்னவன்றாதை வைத்தபெருநிதி காண்கிலாமற் பேர்க்குநர்த் தேடுகின்றான். 162
உதயணன் மகத மன்னன் தருசகனுடன் நட்பு கொள்ளல்
யானரிந் துரைப்பனென்றே யரசனைக்கண்டு மிக்கமாநிதிகாட்டி நன்மை மகதவனோடுங் கூடிஊனமில் விச்சை தன்னாலுருமண்ணுப் பிரிதலின்றிப்பானலங்கிளவி தன்னாற் பரிவுடனிருக்கு நாளில். 163
சங்க மன்னர்கள் ஏழுவரின் படையெடுப்பு
அடவியாமரசன் மிக்கவயோத்தியர்க் கிறைவன் றானைப்படையுறு சாலியென்பான் பலமுறு சத்தியென்பான்முடிவிரிசிகையன் மல்லன் முகட்டெலிச் செவியனென்பான்உடன்வருமெழுவர் கூடியொளிர் மகதத்து வந்தார். 164
மகதத்தை அழிக்கத் துவங்குதல்
தருசகற் கினிதினாங்கடரு திறையிடுவ தில்லெனநெரியென வெகுண்டு வந்தேயினிய நாடழிக்கலுற்றார்தருசகராசன் கேட்டுத் தளரவப் புறத்தகற்றஉருமண்ணுவா மனத்திலு பாயத்திலுடைப்பனென்றான். 165
அமைச்சன் உருமண்ணுவாவின் சூழ்ச்சி
கள்ள நல்லுருவினோடுங் கடியகத்துள்ளே யுற்றவள்ளலை மதியிற் கூட்டி வாணிக வுருவினோடுதெள்ளிய மணிதெரிந்து சிலமணி மாறப்போந்துபள்ளிப்பாசறை புகுந்து பலமணி விற்றிருந்தார். 166
மன்னன் வீர மகதத்திற்குக் கேளாத்தம்இன்னு ரைகளியல்பின் வரவரத்துன்னு நாற்படை வீடு தோன்றிரவிடைஉன்னினர்கரந் துரைகள் பலவிதம் 167
பகைவர் ஐயுற்று ஓடுதல்
உரையு ணர்ந்தவ ருள்ளங் கலங்கிப்பின்முரியும் சேனை முயன்றவ ரோடலிற்றெருளினர் கூடிச் சேரவந் தத்தினம்மருவி யையம் மனத்திடை நீங்கினார். 168
பகைவர் கூடி விவாதித்தல்
இரவு பாசறை யிருந்தவர் போனதும்மருவிக் கூடியே வந்துடன் விட்டதும்விரவி யொற்றர்கள் வேந்தற் குரைத்தலின்அரசன் கேட்டுமிக் கார்செயலென்றனன். 169
அமைச்சன் உருமண்ணுவா மன்னன் தருசகனைக் கண்டு உண்மை உரைத்தல்
வார ணிக் கழல் வத்தவன் றன்செயல்ஓரணி மார்பனுருமண்ணு வாவுமிக்கேரணிய ரசருக் கியல் கூறலும்தாரணி மன்னன் றன்னுண் மகிழ்ந்தனன். 170
தருசகன் உதயணனை எதிர்கொண்டு வரவேற்றல்
ஆரா வுவகையுள் ளாகி யரசனும்பேரா மினியயாழ்ப் பெருமகன் தன்னையேசேரா வெதிர்போய்ச் சிறந்து புல்லினன்நேரா மாற்றரை நீக்குவனானென்றான். 171
படையெடுத்துச் சென்று உதயணன் பகைவரை வெல்லுதல்
உலம்பொருத தோளுடை யுதயண குமரனும்நலம்பொருத நாற்படையு நன்குடனே சூழப்போய்ப்புலம்பொருத போர்ப்படையுட் பொருதுதவத் தொலைத்துடன்நலம்பெறத் திறையுடனரபதியு மீண்டனன். 172
உதயணன் பதுமாவதி மணம்
வருவவிசை யத்துடன் வத்தவற் கிறைவனைத்தருசகன் எதிர்கொண்டு தன்மனை புகுந்துபின்மருவநற் பதுமையாமங்கை தங்கை தன்னையேதிருநிறைநல் வேள்வியாற் செல்வற்கே அளித்தனன். 173
தருசகன் உதயணனுக்கு படை அளித்து உதவுதல்
புதுமணக் கோலமிவர் புனைந்தன ரியற்றிப்பின்பதியுடையை யாயிரம் பருமதக் களிற்றுடன்துதிமிகு புரவிகள் தொக்கவிரண் டாயிரம்அதிர்மணி யாற்றுந்தோ ராயிரத் திருநூறே. 174
அறுபதினொண் ணாயிர மானபடை வீரரும்நறுமலர்நற் கோதையர் நான்கிருநூற் றிருபதும்பெறுகவென் றமைத்துடன் பேர் வருட நாரியும்உறுவடிவேற் சததியு முயர் தரும தத்தனும். 175
சத்திய காயனுடன் சாலவு மமைச்சரைவெற்றிநாற் படைத்துணை வேந்தவன்பிற் செல்கென்றுமுற்றிழை யரிவைக்கு முகமலரச் சீதனம்பற்றியன்பினால் அளித்துப் பாங்குடன் விடுத்தனன். 176
வெல்லுமண்ண லைமிக வேந்தனன்ன யஞ்சிலசொல்லிநண்பினாலுறைத்துத் தோன்றலை மிகப்புல்லிச்செல்கென விடுத்தரச் செல்வனங்குப் போந்தனன்எல்லைதன்னா டெய்திப்பினினியர் தம்பி வந்தனர். 177
பிங்கலனும் கடகனும் உதயணனை அடைதல்
பிங்கல கடகரெனப் பீடுடைக் குமரரும்தங்குபன்னீ ராயிரந் தானையுடை வீரரும்அங்குவந்தவ் வண்ணலை அடிவணங்கிக் கூடினர்பொங்குபுரங் கௌசாம்பியிற் போர்க்களத்தில் விட்டனர். 178
வருடகாரனிடம் உதயணன் தன் சூழ்ச்சி உரைத்தல்
வருடகாரனை அழைத்து வத்தவனியம்புமிப்பருமிதநற் சேனையுள்ள பாஞ்சால ராயனிடம்திருமுடி யரசரைத் திறத்தினா லகற்றெனப்பொருளினவன் போந்தபின்பு போர்வினை தொடங்கினர். 179
உதயணன் ஆருணி அரசன் போர்
அமைச்சனுஞ்சென் றவ்வண்ண மதிர்கழனல் வேந்தரைச்சமத்தினி லகற்றினன் சாலவும்பாஞ் சாலனும்அமைந்த நாற் படையுடனமர்ந்துவந் தெதிர்த்தனன்அமைத்திருவர் விற்கணைக ளக்கதிர் மறைத்தவே. 180
போர்க் காட்சிகள்
விரிந்த வெண்குடை வீழவும் வேந்தர் விண்ணுவ வேறவும்பரிந்து பேய்க்கண மாடவும் பல நரிபறைந் துண்ணவும்முரிந்த முண்டங்க ளாடவும் முரிந்த மாக்களி றுருளவும்வரிந்த வெண்சிலை மன்னவன் வத்த வன்கண்கள் சிவந்தவே. 181
உதயணன் ஆருணி மன்னனைக் கொல்லுதல்
மாற்ற வன்படை முறிந்தென மன்ன வன்படையார்த்திடத்தோற்ற மன்னன்வந் தெதிர்த்தனன் றூய காளைதன் வாளினால்மாற்ற லன்றனைக் கூற்றுண வண்மை யில்விருந் தார்கெனஏற்ற வகையினி லிட்டனனிலங்கு வத்தவ ராசனே. 182
உதயணன் கோசம்பி நகருக்குள் புகுதல்
பகையறவேயெ றிந்துடன் பாங்கிற் போர்வினை தவிர்கெனவகையறவேபடுகளங்கண்டு நண்ணிய மற்றதுதொகையுறுந்தன தொல்படை சூழ வூர்முக நோக்கினன்நகையு றுந்நல மார்பனு நகர வீதியில் வந்தனன். 183
உதயணன் அரண்மனை புகுதல்
மாடமா ளிகைமிசை மங்கையரு மேறிமீக்கூடிநின் றிருமருங்குங் கொற்றவனை வாழ்த்தினார்பாடலவர் படித்திடப் பலகொடி மிடைந்தநல்ஆடகநன் மாளிகை யரசனும் புகுந்தனன். 184
உதயணன் திருமுடி சூடுதல்
படுகளத்தி னொந்தவர்க்குப் பலகிழிநெய் பற்றுடன்இடுமருந்து பூசவு மினிப்பொரு ளளித்தபின்தொடுகழ லரசர்கள் சூழ்ந்தடி பணிந்திடமுடிதரித் தரசியன் முகமலர்ந்து செல்லுநாள். 185 

வத்தவ காண்டம்
உதயணன் அரசு வீற்றிருத்தல்
மின்சொரி கதிர்வேற் றானை வீறடி பணிய வெம்மைப்பொன்சொரி கவரி வீசப் பொங்கரி யாசனத்தில்தண்சொரி கிரண முத்தத் தவளநற் குடையினீழல்மின்சொரி தரள வேந்தன் வீற்றிருந்த போழ்தின் 186
உதயணனின் கொடை
மாற்றலர் தூதர் வந்து வருதிறை யளந்து நிற்பஆற்றலர் வரவ வர்க்கே யானபொன் றுகில ளித்தேஏற்றநற் சனங்கட் கெல்லா மினிப்பொரு ளுவந்து வீசிக்கோற்றொழினடத்தி மன்னன் குறைவின்றிச் செல்லுகின்றான். 187
உதயணன் பத்திராபதி என்னும் யானைக்கு மாடம் கட்டுதலும் உருவம் செய்தலும்
மதுரவண் டறாத மாலை மகதவன் றங்கை யாயபதுமைதன் பணைமு லைமேற் பார்த்திபன் புணர்ந்து செல்லத்துதிக்கைமா வீழ்ந்த கானந் தோன்றலு மாடம் பண்ணிப்பதியினு மமைத்துப் பாங்கிற் படிமமு மமைத்தானன்றே. 188
உதயணன் கோடபதி யாழை மீண்டும் பெறுதல்
அருமறை யோதி நாம மருஞ்சனனந்த ணன்றான்திருவுறை யுஞ்சை நின்று திகழ்கொடிக் கௌசாம் பிக்குவருநெறி வேயின் மீது வத்தவன் வீணை கண்டுபொருந்தவே கொண்டு வந்து புரலலற் கீந்தானன்றே. 189
பதுமாவதி யாழ் கற்க விரும்புதல்
மதுமலர்க் குழலி விண்மின் மாலைவேல் விழிமென் றோளிபதுமைவந் தரசற் கண்டு பன்னுரை யினிது கூறும்மதியின்வா சவதத்தைதன் வண்கையினதனைப் போலவிதியினான் வீணை கற்க வேந்த நீ யருள்க வென்றாள். 190
உதயணன் வாசவதத்தையை நினைத்து வருந்துதல்
பொள்ளென வெகுண்டு நோக்கிப் பொருமனத் துருகி மன்னன்ஒள்ளிதழ்த் தத்தை தன்னை யுள்ளியே துயிலல் செய்யவெள்ளையே றிருந்த வெண்டா மரையினைக் கொண்டு வந்துகள்ளவிழ் மாலைத் தெய்வங் கனவிடைக் கொடுப்பக் கண்டான். 191
உதயணன் முனிவரிடம் கனவு பலன் கேட்டல்
கங்குலை நீங்கி மிக்கோர் கடவுளை வினவச் சொல்வார்அங்கயற் கண்ணி தானு மாரழல் வீந்தா ளல்லள்கொங்கைநற் பாவை தன்னைக் கொணர நீ பெறுவை யின்பம்இங்குல கெங்கு மாளு மெழிற்சுதற் பெறுவ ளென்றார். 192
உதயணன் கனவுப் பயன் கேட்டு மகிழ்தல்
வெள்ளிய மலையின் மீதே விஞ்சைய ருலக மெல்லாம்தெள்ளிய வாழி கொண்டு திக்கடிப் படுத்து மென்னஒள்ளிய தலத்தின் மிக்கேர ருறுதவ ருரைத்த சொல்வைவள்ளலு மகிழ்ந்து கேட்டு மாமுடி துளக்கினானே. 193
அமைச்சர் உருமண்ணுவா விடுதலை
என்றவ ருரைப்பக் கேட்டே யிறைஞ்சின் கடிபணிந்துசென்றுதன் கோயில் புக்குச் சேயிழை பதுமை தன்னோடுஒன்றினன் மகிழ்ந்து சென்னா ளுருமண்ணு வாவு முன்புவென்றிவேன் மகதன் மாந்த ரால்விடு பட்டிருந்தான். 194
உருமண்ணுவா உதயணனை அடைதல்
மீண்டவன் வந்தூர் புக்கு வேந்தனை வணங்கி நிற்பக்காண்டறி வாளனென்றே காவலன் புல்லிக் கொண்டுமாண்டவன் வந்த தொய்ய வரிசையின் முகமன் கூறிவேண்டவாந் தனிமை தீர்ந்தே விரசூடனின்புற்றானே. 195
வாசவதத்தையை யூகி கௌசாம்பிக்கு கொணர்தல்
வாரணி கொங்கை வேற்கண் வாசவ தத்தை தானும்ஊரணி புகழினான யூகியு மற்றுள் ளாகும்தாரணி கொடியி லங்குஞ் சயந்தியினின்றும் போந்துபாரணி கோசம் பிப்பாற் பன்மலர்க் காவுள் வந்தார். 196
உதயணன் யூகி, வாசவதத்தை ஆகியோர் இணைதல்
நயந்தநற் கேண்மை யாளர் நன்கமைந் தமைச்சர் தம்முள்வயந்தகனுரைப்பக் கேட்டு வத்தவன் காவு சேரப்பயந்தவ ரடியில் வீழப் பண்புடன் தழுவிக் கொண்டுவியந்தர சியம்பு நீங்கள் வேறுடன் மறைந்த தென்னை. 197
யூகியின் உரை
இருநில முழுதும் வானு மினிமையிற் கூடினாலும்திருநில மன்னரன்றிச் செய்பொரு ளில்லை யென்றுமருவுநூல் நெறியினன்றி வன்மையாற் சூழ்ச்சி செய்தேன்அருளுடன் பொறுக்க வென்றான் அரசனு மகிழ்வுற் றானே. 198
உதயணன் வாசவதத்தையுடன் இன்புற்றிருத்தல்
ஆர்வமிக் கூர்ந்து நல்ல வற்புதக் கிளவி செப்பிச்சீர்மைநற் றேவி யோடுஞ் செல்வனு மனை புகுந்தேஏர்பெறும் வாசவெண்ணெ யெழிலுடன் பூசி வாசநீர்மிக வாடி மன்னனேரிழை மாதர்க் கூட. 199
பதுமாவதியின் வேண்டுகோள்
யூகியு நீரினாடி யுற்றுடனடிசி லுண்டான்நாகதேர் கால மன்னனன்குடனிருந்த போழ்தின்பாகநேர் பிறையா நெற்றிப் பதுமையு மிதனைச் சொல்வாள்ஏகுக செவ்வித் தத்தை யெழின் மனைக் கெழுக வென்றான். 200
வாசவதத்தையின் ஊடல்
என்றவள் சொல்ல நன்றென்றெழின்முடி மன்னன் போந்துசென்றவண் மனைபு குந்து செல்வனு மிருந்த போழ்தில்வென்றிவேற் கண்ணினாளும் வெகுண்டுரை செப்புகின்றாள்கன்றிய காமம் வேண்டா காவல போக வென்றாள். 201
உதயணன் ஊடலைப் போக்குதல்
பாடக மிலங்கும் பாதப் பதுமையினோடு மன்னன்கூடிய கூட்டந் தன் போற் குணந்தனை நாடி யென்னஊடிய தேவி தன்னை யுணர்வினு மொளியினாலும்நாடியுன் றனக்கன்னாடானந்திணை யல்ல ளென்றான். 202
இருவரும் ஊடல் தீர்ந்து கூடுதல்
நங்கைதன் மனங்கலங்கா நலம்புகழ்ந் தூடனீக்கிவெங்களி யானை மற்றப் பிடியொடு மகிழ்வ வேபோற்பொங்கிள முலையில் வாசப் பூசுசாந் தழியப் புல்லிச்சிங்கவே றனைய காளை செல்வியைச் சேர்ந்தானன்றே. 203
உருவிலி மதன்கணைகளுற்றுடன் சொரியப் பாயஇருவரும் பவளச் செவ்வா யின்னமிர் துண்டு வேல்போல்திரிநெடுங் கண்சி வப்ப வடிச்சிலம் போசை செய்யமருவிய வண்டு நீங்க மலர்க்குழல் சரிய வன்றே. 204
கோதையுஞ் சுண்ணத் தாதுங் குலைந்துடன் வீழ மிக்ககாதலிற் கழுமி யின்பக் கரையழிந் தினிதினோடப்போதவும் விடாது புல்லிப் புரவலனினியனாகிஏதமொன் றின்றிச் செங்கோ லினிதுடன் செலுத்து நாளில். 205
உதயணன் உருமண்ணுவாவைச் சிறப்பித்தல்
ஆனதன்னாம மிட்ட வாழிமோ திரத்தை யீந்தேஊனுமிழ் கதிர்வேன் மன்னனுருமண்ணுவாவு தன்னைச்சேனைநற்பதிநீ யென்று திருநிகர் பதுமை தோழிஈனமி விராசனைய யெழில்வேள்வி யாற்கொ டுத்தான் . 206
உருமண்ணுவாவிற்கும் இடபகனுக்கும் உதயணன் ஊர் வழங்குதல்
சயந்தியம் பதியுஞ் சால விலாவாண நகரு மீந்தேஇயைந்தநல் லிடபகற்கு மினியபுட் பகத்தைச் சூழ்ந்தசெயந்தரு வளநன்னாடு சிறந்தவைம் பதும் அளித்துவயந்தகன் றனக்கு வாய்ந்த பதினெட்டூர் கொடுத்தானன்றே. 207
யூகிக்கு உதயணன் ஊர் வழங்குதல்
ஆதிநன் மாமன் வைத்த வருந்திறை யளக்கு நல்லசேதிநன்னாட்டை யூகிக் காக நற்றிறத்தினீந்துசோதிநல்லரசன் மிக்க சூழ்ச்சியின் மற்றோர்க் கெல்லாம்வீதி நன்னகர்கள் விட்டு வீறுடன் வீற்றிருந்தான். 208
உதயணனுக்கு பிரச்சோதனன் ஓலையனுப்புதல்
பேசரும் பெருமை சால்ப்ரச் சோதனன் தூதர் வந்துவாசகம் தன்னைக் காட்ட வத்தவன் மனம் மகிழ்ந்துவாசவ தத்தை யோடு மன்னிய வமைச்சர் கூடவாசகஞ் சொல்க வென்று வரிசையிற் கேட்கின்றானே. 209
ஓலையில் வந்த செய்தி
பிரச்சோதன னன்றா னென்னும் பெருமகனோலை தன்னைஉரவுச்சேர் கழற்கான் மிக்க வுதயண குமரன் காண்கவரவுச்சீர்க் குருகுலத்தின் வண்மையான் கோடல் வேண்டிவரைவனச் சார றன்னில் வன்பொறி யானை விட்டேன். 210
கலந்தவை காண வந்த காவலர் நின்னைப் பற்றிச்சிலந்திநூ றன்னா லார்த்த சிங்கம்போ லார்த்துக் கொண்டுநலந்திகழ் தேரினேற்றி நன்குவுஞ் சயினி தன்னிற்பெலந்திரி சிறையில் வைத்த பிழையது பொறுக்க வென்றும். 211
கோமானே யெனவே யென்னைக் கோடனீ வேண்டு மென்றும்மாமனான் மருகனீ யென் மாமுறை யாயிற் றென்றும்ஆமாகும் யூகி தன்னை யனுப்ப யான் காண்டல் வேண்டும்பூமாலை மார்ப வென்றும் பொறித்தவா சகத்தைக் கேட்டான். 212
உஞ்சைக்குச் சென்ற யூகியை பிரச்சோதனன் வரவேற்றல்
மன்னவனனுப்ப யூகி மாநக ருஞ்சை புக்குமன்னர்மா வேந்தன் றன்னை வணங்கினன் கண்டிருப்பமன்னனு முடிய சைத்த மைச்சனை நெடிது நோக்கிமன்னிய வுவகை தன்னான் மகிழ்வுரை விளம்பினானே. 213
பிரச்சோதனன் முரசறைவித்தல்
சீர்ப்பொழி லுஞ்சையுஞ் சீர்க்கெள சாம்பியும்பார்தனில் வேற்றுமை பண்ணுதல் வேண்டோம்ஆர்மிகு முரச மறைகென நகரில்தார்மிகு வேந்தன் றரத்தினிற் செப்பினன். 214
யூகியின் சொற்போர் வெற்றியும், மன்னனின் பாராட்டும்
தருமநன்னூல்வகை சாலங் காயனோடருமதி யூகியு மன்பினுரைத்தான்பெருவிறல் வேந்தனும் பெறுத லரிதெனத்திருநிறை யூகியைச் செல்வன் மகிழ்ந்தான். 215
கல்விய தகலமுங் காட்சிக் கினிமையும்சொல்லருஞ் சூட்சியுஞ் சொற் பொருட் டிண்மையும்வல்லமை யிவனலான் மாந்த ரில்லையின்றெல்லையில் குணத்தினன் என்றுரை செய்தனன். 216
இன்னவற் பெற்றவர்க் கேற்ற வரசியல்இன்னவ ரின்றி யிலையர சென்றேஇன்னன நீடிய வியல் பிற் பிறவுரைமன்னவனாடி மகிழ்வித் திருந்த பின் 217
யூகியின் திருமணம்
சாலங் காயன் சகோதர மானநன்னீலங் காய்ந்த நெடுவேல் விழிநுதற்பாலங் கோர்பிறை யாம்படா வெம்முலைக்கோலங் காரன்ன கூரெயி றாப்பியும். 218
பரதகன்றங்கை பான்மொழி வேற்கணிதிருநிலம்புகழ் திலதமா சேனையும்பெருநில மறிய மணமிகப் பெற்றுடன்அரிய யூகிக் கரசன் கொடுத்தளன். 219
சென்மதி நீயெனச் செல்ல விடுத்தனன்நன்முது நகர்முன்னாடிப் போவெனப்பன்மதி சனங்கள் பரவி வழிபடவென்மதி யூகிபோய் வேந்தனைக் கண்டனன். 220
யூகி உதயணனை அடைதல்
வத்தவ குமரன் பாதம் வந்தனை செய்த மைச்சன்இத்தல முழுது மாளுமினியநன் மாமன் சொன்னஒத்தநன் மொழியைக் கேட்டே யுவந்துடனிருந்த போழ்தில்சித்திரப் பாவை மார்கள் செல்வனை வணங்கிச் செல்வார். 221
உதயணன் மாந்தர்களின் பந்து விளையாட்டைக் காணல்
பந்தடி காண்க வென்னப் பார்த்திபனினியனாகிக்கலந்துகப் பூசல் காணக் களிற்றின்மீதேறி வந்துகொந்தலர் மாலை மாதர் குழுவுடன் சூழ நிற்பவந்தனன் பதுமை தோழி வனப்பிராசனையென் பாளாம். 222
மகளிரின் பந்துப் போர்
ஓரெழுபந்து கொண்டே யொன்றொன்றி நெற்றிச் செல்லபாரெழு துகளு மாடப் பலகலனொலிப்ப வாடிச்சீரெழு மாயி ரங்கை சிறுந்தவ ளடித்துவிட்டாள்காரெழு குழலி நல்ல காஞ்சன மாலை வந்தாள். 223
வேய்மிகு தடக்கை தன்னால் வியந்துபந் துடனே யேந்திக்காய்பொனின் கலன்களார்ப்பக் கார்மயிலாட்டம் போலஆயிரத் தைஞ்நூறேற்றி யடித்தன ளகல வப்பால்ஆய்புகழ்ப் பதுமை தாதி யயிராபதிபந்து கொண்டாள். 224
சீரேறும் இமில் போற் கொண்டைச் சில்வண்டுந் தேனும் பாடப்பாரோர்கள் இனிது நோக்கும் பலகலஞ் சிலம்போடார்ப்பஈராயிரங்கை யேற்றி யிருகரத் தடித்து விட்டாள்தோராத வழகி தத்தை தோழிவிச்வ லேகை வந்தாள். 225
கருங்குழ நெடுவேற் கண்ணாள் காரிகை பந்தெடுத்துப்பெருங்கலனினிதினார்ப்பப் பெய்வளை கலக லென்னஒருங்குமுன் கையின் மீதி லோரைஞ் நூ றடிட்த்து விட்டாள்கருங்கணி பதுமை தோழி காரிகை யொருத்தி வந்தாள். 226
ஆரியை யென்னு நாம வரிவைகைக் கொண்டு பந்தைச்சேரமின் சிலம்பு மார்ப்பச் சிறுநுதன் முத்த ரும்பச்சீரின்மூவாயிரங்கை சிறந்தவ ளடித்த பின்புபேரிசைத் தத்தை யாயம் பெருங்குழாத் தினிதினோக்கா. 227
உதயணன் விரிசிகை மணம்
தேவியர் மூவர் கூடத் தேர்மன்னன் சேர்ந்து சென்னாட்காவின் முன் மாலை சூட்டிக் காரிகை கலந்துவிட்டபூவின் மஞ் சரியைப் போலும் பொற்புநல் விரிசி கையைத்தாவில்சீர் வேள்வி தன்னாற் றரணீசன் மணந்தானன்றே. 240
உதயணனின் ஆட்சிச் சிறப்பு
நட்புடைக் கற்பு மாதர் நால்வரு மன்னனுள்ளத்துட்புடை யிருப்ப நாளு மொருகுறை வின்றித் துய்த்துத்திட்புடை மன்னர் வந்து திறையளந் தடிவ ணங்கநட்புடை நாட்டை யெல்லா நரபதி யாண்டு சென்றான். 241

நரவாகன காண்டம்
வாசவதத்தை மசக்கை எய்துதல்
எத்திக்கு மடிப்படுத்தி யெழில் பெறச் செங்கோல் செல்லும்பெற்றிசெய் வேந்தன் றன்னைப் பெருமைவேற்றானை மன்னைவித்தைசெய் சனங்கண் மாந்தர் வியந்தடி வணங்க மின்னும்முற்றிழை மாலைத் தத்தை முனிவில் சீர் மயற்கை யானாள் 242
வாசவதத்தையின் விருப்பம்
நிறைபுகழ் வனப்பு நங்கை நிலவிய வுதாந் தன்னுட்பிறையென வளரச் செல்வன் பேதையும் விசும்பிற் செல்லும்குறைபெறு வேட்கை கேட்ட கொற்றவன் மனத்தினெண்ணிஅறைபுக ழமைச்சர் தம்மை யழைத்தனன் வினவி னானே. 243
உருமண்ணுவாவின் உரை
உருமண்ணு விதனைச் செப்பு முன்னொரு தினத்தின் வேட்டைப்பெருமலை வனத்தினீரின் வேட்கையாற் பிறந்த துன்பம்மருவுறு வருத்தங் கண்டோ ர் வானவன் வந்து தோன்றிப்பெருமநீ ருண்ணக் காட்டிப் பேரிடர் தீர்த்தானன்றே. 244
இன்னமோர் இடர் வந்தாலு மென்னை நீர் நினைக்க வென்றுமன்னுமோர் மந்தி ரந்தான் வண்மையினளித்துப் போந்தான்சொன்னமா மந்திரத்தைச் சூழ்ச்சியினினைக்க வென்றான்பின்னவன் நினைத்த போழ்தே பீடுடை யமரன் வந்தான். 245
தேவன் கூற்று
பலவுப சாரஞ் சொல்லிப் பார்மன்னற் கிதனைச் செப்பும்நலிவுசெய் சிறையிற் பட்ட நாளிலுஞ் சவரர் சுற்றிவலியலந் தலைத்த போதும் வாசவதத்தை நின்னைச்சிலதினம் பிரிந்த போதுஞ் செற்றோரைச் செகுத்த போதும். 246
மித்திரனென்றே யென்னை வேண்டிமுன் நினைத்தாயில்லைபொற்றிரு மார்ப விந்நாட் புதுமையினினைத்த தென்னைஉத்தரஞ் சொல்க வென்ன வொளியும் ழமரன் கேட்கச்சித்திரப் பாவை வானிற் செலவினை வேட்டா ளென்றான். 247
உதயணன் உரை
எங்களிற் கரும மாக்கு மியல்புள தீர்த்துக் கொண்டோம்திங்களின் முகத்திற் பாவை செலவு நின்னாலே யன்றிஎங்களி லாகா தென்றிப் பொழுதுனை நினைத்தேனென்னநன்கினி யமரன் கேட்டு நரபதி கேளி தென்றான். 248
தேவன் மந்திரம் செவியறிவுறுத்தல்
வெள்ளிய மலையிற் தேவன் விரைக்குழ லாள் வயிற்றின்உள்ளவின் பத்தினாலே வுலவுவான் சிந்தை யானாள்கள்ளவிழ் மாலை வேந்தன் கதிர்மணித் தேரினேறிப்புள்ளெனப் பறக்க மந்த்ர மீதெனக் கொடுத்துப் போந்தான். 249
அனைவரும் தேரேறி வானத்தே செல்லல்
வெற்றித்தே ரேறி வென்வேல் வேந்தனுந் தேவி தானும்மற்றுநற் றோழன் மாரும் வரிசையினேறி வானம்உற்றந்த வழிய தேகி யுத்தர திக்கினின்றபெற்றிநல் லிமயங் கண்டு பேர்ந்துகீழ்த் திசையுஞ் சென்றார். 250
உதயநற் கிரியுங் கண்டே யுற்றுடன் றெற்கிற் சென்றுபொதியமா மலையுங் காணாப் பொருவில்சீர்க் குடபானின்றமதிகதி ரவியு மத்த வான்கிரி கண்டு மீண்டும்இதமுள தேசம் பார்த்தே யினியதம் புரிய டைந்தார். 251
நரவாகனன் பிறப்பு
மாதுதன் வயாநோய் தீர்ந்து வளநகர் புக்க பின்புதீதின்றிக் கோள்களெல்லாஞ் சிறந்துநல் வழியை நோக்கப்போதினற் குமரன் றோன்றப் புரவலனினியனாகிச்சோதிப்பொன்னறைதி றந்து தூவினன் சனங்கட்கெல்லாம். 252
மக்கட்குப் பெயரிடுதல்
நரவாகனன்னே யென்று நரபதி நாமஞ் செய்தான்விரிவாகு மதிய மைச்சர் மிக்க நாற் குமரர் பேர்தாம்பரிவார்கோ முகனும் பாங்காந் தரிசகனாக தத்தன்குரவம்பூ மேனியான குலமறி பூதியாமே. 253
நரவாகனன் கலைபயிலுதல்
நால்வருந் துணைவராகி நறுநெய்பாலுடன ருந்திபான்மரத் தொட்டிலிட்டுப் பரவியுந் தவழ்ந்து மூன்றாம்மால்பிறை போல்வளர்ந்து வரிசையினிளமை நீங்கிப்பான்மொழி வாணி தன்னைப் பாங்கினிற் சேர்த்தாரன்றே. 254
நரவாகனன் உலாப் போதல்
ஞானநற் குமரி தன்னை நலமுழுதுண்டு மாரன்மானவிற் கணக்கி லக்கா மன்மதனென்னக் கண்டோர்வானவக் குமரர் போல வாரண மேறித் தோழர்சேனைமுன் பின்னுஞ் செல்லச் சீர்நகர் வீதி சென்றான். 255
நரவாகனன் மதனமஞ்சிகையைக் கண்டு காமுறுதல்
ஒளிர்குழற் கலிங்க சேனை யுதரத்தினுற்ப வித்தவளிற்றும் பூஞ்சு கந்த மதனமஞ்சிகைதன் மேனிகுளிரிளந் தென்றல் வீசக் கோலமுற் றத்துப் பந்தைக்களிகயற் கண்ணி யாடக் காவல குமரன் கண்டான். 256
நரவாகனன் மதனமஞ்சிகையை மணத்தல்
மட்டவிழ் கோதை தன்னை மன்னவ குமரன் கண்டுஇட்ட நன் மாரனம்பா லிறுவரு மயக்கமுற்றுமட்டவிழ் மலர்ச்சோ லைக்குள் மன்னவ குமரன் மின்னின்இட்டிடை மாதைத் தந்தே யின்புறப் புணர்ந்தானன்றே. 257
மானசவேகன் மதனமஞ்சிகையைக் கொண்டுபோதல்
இருவரும் போகந் துய்த்தே இளைத் துயில் கொள்ளும் போழ்துமருவிய விச்சை மன்னன் மானச வேகனென்பான்திருநிற மாதைக் கண்டு திறத்தினிற் கொண்டு சென்றுபெருவரை வெள்ளி மீதிற் பீடுறு புரம்புக் கானே. 258
மானசவேகன் மதனமஞ்சிகையை வயப்படுத்த முயலுதல்
தன்னுடை நோயுரைக்கத் தையலு மோனங் கொண்டேஇன்னுயிர்க் கணவன் றன்னை யினிமையினினைத் திருப்பமின்னிடைத் தங்கை யான வேகநல் வதியை யேவிமன்னிய நிறை யழிக்க வாஞ்சையின் விடுத்தானன்றே. 259
வேகவதி நரவாகனன் மீது காமுறுதல்
அன்புற வவளுஞ் சொல்ல வசலித மனத்த ளாகிஇன்புறுந் தன்னோர் நாதனிந்திரன் போலுமென்னப்பண்புணர் மொழியைக் கேட்டுப் பரவச மனத்தளாகிநண்பொடு விசும்பின் வந்து நரவாகனனைக்கண்டாளே. 260
வேகவதி மதனமஞ்சிகை வடிவம் பூணுதல்
கண்டபின் காமங் கூர்ந்து கார்விசும் பதனினிற்பப்புண்டவழ் வேலிற் காளை பூங்குழ லாட்கி ரங்கிவண்டலர் சோலை மாடம் வனமெங்குந் தேடு கின்றான்தொண்டைவா யுடைய வேக வதியுஞ்சூதினிலே வந்தால். 261
மதனமஞ்சிகையென நினைத்து வேகவதியுடன் நரவாகனன் கூடுதல்
மதன மஞ்சிகை மான்விழிரூபம் போல்வதன நன்மதி வஞ்சியங் கொம்பனாள்இதநல் வேடத்தை யின்பிற் றரித்துடன்புதரின் மண்டபம் புக்கங் கிருந்தனள். 262
தாது திர்ந்து தரணியிற் பம்பிடமாத விப்பொதும் பின்மயிற் றோகைபோல்பேதையைக் கண்டுபீடுடைக் களையும்தீதறுந் திறந் தேர்ந்து புரைந்தனன். 263
மன்னவன் வேகவதி மீது ஐயுறுதல்
ஆங்கொர் நாளிலரிவை துயிலிடைத்தேங்கொள் கண்ணியைச் செல்வனுங் கண்டுடன்பூங்குழாஅல்நீ புதியைமற்றியாரெனப்பாங்கில் வந்து பலவுரை செய்தனள். 264
நரவாகனன் வேகவதியுடன் கூடுதல்
கேட்ட வள்ளலுங் கேடினன் மாதரைவேட்ட வேடம் விரும்பி நீ காட்டெனக்காட்டவே கண்டு காளை கலந்தனன்ஊட்ட வேகணை யுன்னத மாரனே. 265
மானசவேகன் இருவரையும் மயக்கி கொண்டு போதல்
மன்னு விஞ்சையின் மானச வேகனும்துன்னு தங்கையாந் தோகையைக் காண்கிலன்உன்னி வந்தவள் போன தறிந்துரைபன்னி வந்திரு வோரையும் பற்றினன். 266
மானசவேகன் நரவாகனனை நிலத்தில் தள்ளி விடுதல்
வான கஞ்சென்று வள்ளலை விட்டபின்ஈனகஞ் செல வேலக் குழலியும்தான கம்விஞ்சை தானுடன் விட்டனள்கான கத்திடைக் காளையும் வீழ்ந்தனன். 267
நரவாகனனைச் சதானிக முனிவர் காணுதல்
வெதிரி லையென வீழ்ந்தவன் றன்னிடைக்கதிர்வேல் வத்தவன் காதனற் றந்தையாம்எதிர்வரும்பிறப் பெறிகின்ற மாமுனிகதிரி லங்குவேற் காளையைக் கண்டனன். 268
போதி தன்வலிப் போத வுணர்ந்து தன்காதலிற்சென்று காளைதன்னாமமும்ஏதமில் தந்தை யெய்திய நாமமும்போதச் செப்பலும் போந்து பணிந்தனன். 269
நரவாகனன் முனிவரிடம் வேண்டுதல்
தந்தை யென்முதல் தாமறிந் திங்குரைஅந்த மில் குணத் தையநீ ராரென்முந்து நன்முறை யாமுனி தாஞ்சொலச்சிந்தை கூர்ந்து சிறந்தொன்றும் கேட்டனன். 270
விஞ்சை யம்பதி வெற்றி கொண்டாளுமென்தஞ்ச மென்றநற் றக்கோ ருரையுண்டுஎஞ்சு லின்னிலை மையது வென்றெனவிஞ்சு மாதவன் மெய்ம்மையிற் கூறுவான். 271
முனிவனின் கூற்று
வெள்ளி யம்மலை மேனின்ற ராச்சியம்உள்ள தெல்லா மொருங்கே யடிப்படுத்தெள்ளில் செல்வமு மீண்டுனக் காமென்றான்கள்ள விழ் கண்ணிக் காளையுங் கேட்டபின் 272
நரவாகனன் தாய் தந்தையரிடம் நடந்தவை கூறல்
மாதவன் விட வள்ளனகர்ப்புக்குத்தாதை தாய்முதற் றான்கண் டிருந்தபின்தீது தீர்ந்ததுஞ் செல்வி பிரிந்ததும்ஆதரித்தவர்க் கன்னோன் விளம்பினன். 273
மேனி கழ்வென மெய்த்தவர் கூறின்தான வின்றுதன் றாய்துயர் தீர்த்தனன்வானு ழைச்செல்லு மன்னிய தேர்மிசைஈன மில்கும் ரன்னினி தேறினான். 274
நரவாகனன் வித்தியாதர உலகஞ் செல்லுதல்
அன்பால் வான்வழியாய்மணித் தேர்செலத்தென்பாற் சேடியிற் சீதர லோகத்தில்இன்பாற் பொய்கை யெழிற்கரை வைகெனமின்பூண் மார்பனும் வேண்டித் திளைத்தனன். 275
நரவாகனனை வித்தியாதரன் காணுதல்
நெடுங்க ரைமிசை நீர்மையினின்றனன்நடுங்க லின்றிவாய் நானநீர் பூசியேகடிகமழ் கண்ணிக் காளை யிருந்தனன்அடிகண் டோ ர்மகனன்பிற் றொழுதனன் 276
நரவாகனன் வினாவும் வித்தியாதரன் விடையும்
அண்ணல் கண்டுநீ யாருரை யென்றாலும்தண்ணென் வாய்மொழித் தானவன் சொல்லுவான்அண்ணல் கேட்க வரிய வரைமிசைக்கண்ணொளிர்கொடிக் கந்தரு வப்புரம். 277
காவலன்னீல வேகற்குக் காரிகைநாவி ளங்குஞ்சீர் நாகதத் தையெனும்பூவிளங்கொடி புத்திரி நாமமும்மேவி ளங்சூமநங்கவி லாசனை. 278
சுரும்பார் மாலையளித் துயிலிடைக்கரும்பார் நன்மொழி காதற் கனவிடைவிரும்பு சிங்கமீன் வீரியச் சாபந்தான்பரம்பு மண்ணின்று பாங்கினெழுந்ததே. 279
வரைமி சைவந்து மன்னிய தன்முலைஅரிய முத்தணி யாரத்தைக் கவ்வியேவிரைசெய் மாலையை வீறுடன் சூட்டவும்அரிவை கண்டுதன்னையர்க் குரைத்தனள் 280
வெல்ல ரும்வேலின் வேந்தனுங் கேட்டுடன்சொல்ல ருந்தவச் சுமித்திர நன்முனிபுல்ல ரும்பதம் பொற்பினிறைஞ்சினன்நல்ல ருந்தவனற்கனாக் கேட்டனன். 281
அறிந்த ருள்செய் தனனம் முனிவனும்செறிந்த பூமிவாழ் திருமரு கன்வரும்அறைந்த நின்மகட் காகு மணவரன்நிறைந்த நேமியிந் நிலமு மாளுவன். 282
அம்முனிவன்சொலரசன் கேட்டுடன்தம்மி லெண்ணினன் சார்ந்து காண்கெனச்செம்மை யெண்ணியே செப்பி விட்டனன்உம்மைக் கண்டனன் செல்க வென்றனன். 283
நரவாகனனை நீலவேகன் வரவேற்றல்
போவதே பொருள் புண்ணியற்கொண்டுதேவனேயெனச் செல்வனுஞ்செலும்காவலன்னெதிர் கண்டு கண்மகிழ்ஏவலாளரோடினிதினெய்தினான். 284
நீலவேகனின் ஆசை
கன்னல் விற்கணையில்லாக் காமனைஇன்னி லக்கண மேற்ற காளையைமன்னனின்னுரை மகிழ்ந்து கூறினான்பின்ன மைச்சரைப் பேணிக் கேட்டனன். 285
அநங்க விலாசனை சுயம்வரம்
தனித்தி வர்மணந் தரத்தி யற்றினால்சினத்தொ டுமன்னர் சேர்வ ராலெனமனத்த மைச்சரு மகிழ்ந்து மன்னரைஇனத்தொர் மாவர மியம்பி விட்டனர். 286
அநங்கவிலாசனை நரவாகனனுக்கு மாலையிடல்
மன்ன ரீண்டியே வந்திருக்கையில்அன்ன மென்னடை யமிர்த மன்னவள்மின்னின் மாலையை விரகினேந்திமுன்சொன்ன காளைமேற் சூட்டி நின்றனள். 287
மணமக்கள் மகிழ்ந்து இனிதே வாழ்தல்
அரசன் மிக்குநன் கமைத்த வேள்வியின் திருமணஞ் செய்து செல்வனின்புறஇருவரும்புணர்ந்தின்ப மார்ந்தனர்வெருவு மானச வேகன் றன்மனம் 288
நரவாகனனின் திருவுலா
வேக யானைமே லேறி வீரனும்நாக நீள்புர நடுவிற் றோன்றலும்காமனேயெனக் கன்னி மங்கையர்தாமரைக்கணாற் றான்ப ருகுநாள். 289
நரவாகனின் சிறப்புகள்
நேமி யாளவே நினைத்த தோன்றலும்வாம நாகர் தம் மலையிற் சென்றனன்தாம மார்பனைத் தரத்திற் கண்டவர்நேமி தான்முதனிதிக ளொன்பதும் 290
நாம விந்திரனன்க ருள்செயக்காமனுக்கீந்து கண்டு சேவித்துத்தாம வந்தரர் தாம்ப ணிந்திடத்தோமனாலிரண் டொன்ற வாயிரம். 291
நரவாகனனை சக்கரப் படை வணங்குதல்
சக்க ரம்வலஞ் சார்ந்தி றைஞ்சினமிக்க புண்ணியன் மீட்டு வந்துடன்தக்க விஞ்சையர் தம்ப தியெல்லாம்அக்கணத்தினி லடிப்ப டுத்தினன். 292
நரவாகனனின் வெற்றி
விஞ்சை யர்திறை வெற்றி கொண்டவன்தஞ்ச மென்றவர் தரத்தின் வீசியேஎஞ்ச லில்புரமிந்திரன்னெனமிஞ்சு மாளிகை வீரன் சென்றனன். 293
நரவாகனனின் மாட்சி
மதன மஞ்சிகை மனங்குளிர்ந்திடவிதன மின்றிநல்வேக வதியுடன்அதிக போக வநங்க விலாசனைஅதிக வெண்ணா யிரமான தேவியர் 294
இனிய வேள்வியா லின்ப மார்ந்துபின்இனிய புண்ணிய மீண்டி மேல்வரத்தனிய ரசினைத் தானி யற்றியேநனிய தொன்றினன்னாம வேலினான். 295
நரவாகனன் தந்தையைக் காண வருதல்
விஞ்சை யர்தொழ வீறுந் தேவியர்பஞ்சின் மெல்லடிப் பாவை மாருடன்மஞ்சு சூழ்மலை விட்டு வானவர்தஞ்ச மானதன் தந்தை பாற்சென்றான். 296
புரம திக்கப்பூ மாலை தோரணம்வரம்பினாற்றியே வான்கொ டிம்மிடைஅரும்பு மாலைவே லரசன் சென்றெதிர்விரும்பிக் கொள்ளவே வியந்து கண்டனன். 297
நரவாகனன் தாய் தந்தையரை வணங்குதல்
தந்தை தாய்பதந் தான்ப ணிந்தபின்இந்து வாணுத லெழின்ம டந்தையர்வந்து மாமனை வணங்கி மாமியைஅந்த மில்வனத் தடியி றைஞ்சினார். 298
உதயணன் செயல்
மகிழ்ந்து புல்லியே மனைபு குந்தபின் நெகிழ்ந் தகாதலானேமிச் செல்வனும்மிகுந்த சீருடன் வீற்றிருந்தனன்மகிழ்ந்து மைந்தரை வரவ ழைத்தனன். 299
பதுமாவதியின் மைந்தன் கோமுகனுக்கு முடிசூட்டல்
பதுமை தான்மிகப் பயந்த நம்பியாம்கொதிநுனைவேலின் கோமு கன்றனைஇதம ளித்திடு மிளவ ரைசெனஅதுல நேமியனரசு நாட்டினான். 300
நரவாகனன் வித்தியாதர உலகம் செல்லல்
தந்தை மேன்மிகுந் தளர்வில் காதலாற்றந்த தான்பிரி தலைக்க ருத்தெணிவெந்து யர்கொடு விடுப்பச் செல்வனும்இந்திரன்றானூ ரியல்பினேகினான். 301
செல்வநற் குமரன் சென்று தெய்வவிந் திரனைக் கண்டுசெல்வநல் வாமன் பூசைச் சீர்கண்டு வணக்கஞ் செய்துசெல்வவிந் திரனனுப்பத் திருமணித் தேரினேறிச்செல்வமார் புரம்பு குந்து சிறப்பினோ டிருந்தானன்றே. 302

துறவுக் காண்டம்
உதயணனின் தவ எண்ணம்
வளங்கெழு வத்தவற்கு மன்னிய காதன் மிக்கஉளங்கெழு கற்பினார்களோதிமம் போலு நீரார்இளங்கிளி மொழியினார்க ளினிமையினால்வரோடும்துளங்கலி றிருமின் போர்மின் தூயசொன் மடந்தை தாமும். 303
மண்ணியன் மடந்தை யோடு மருவினார் மிக்க மன்னன்புண்ணிய முன்னாட் செய்த போதந்தே யுதவி செய்யஎண்ணிய கரும மெல்லா மியைபுடனாகப் பின்னும்புண்ணிய நோன்பு நோற்கப் பொருந்திய மனத்தனானான். 304
உதயணன் தவத்தின் பெருமையை எண்ணுதல்
ஆசை யென்றனக் கருளும் தோழனாஓசை வண்புகழ் யூகி யானதும்வாச வதத்தை மனைவி யானதும்பேச ரும்மகப் பெற்றெடுத்ததும். 305
நரவாகனன்மக னாம மானதும்வரைமிசைத் தானவர் வாழு நாட்டையங்கரண நேமியா லடிப்ப டுத்ததும்பொருவில் வேந்தர்கள் புகழ்ந்த டைந்ததும் 306
மிக்க விந்திரன் மேவி விட்டதும்தக்க புத்திரன் றரத்திற் சென்றதும்தொக்க வானவர் தொல்சி றப்புடன்அக்கணம்விட வண்ணல் போந்ததும். 307
போந்து புண்ணியன் பொருவில் போகத்துச்சேந்தி ருந்ததுஞ் செய்த வத்தெனாவேந்தனெண்ணியை வெறுத்து மாதரைக்காந்தி வாமனைக் கண்டடி தொழும் 308
உதயணனை மகளிர் மயக்குதல்
எண்ணம் வந்துநல் லெழிற்பெ ரும்மகன்புண்ணி யநோன்பு போந்த வேளைவேற்கண்ணின் மாதர்கள் காவ லன்மனம்உண்ணக் காமத்தை யுருவு காட்டினார். 309
உதயணன் மீண்டும் காமத்தில் திளைத்தல்
மன்னு மன்பினீண் மாதர் மோகத்திற்றுன்னு மால் கடற் றோன்றனீந்துநாட்சொன்ன மும்மதந் தோன்ற வேழமும்உன்னிக் காற்றளை யுதறி விட்டதே. 310
மதவெறி கொண்ட யானை
காய்ந்து வெம்மையிற் காலன் போலவேபாய்ந்து பாகரைப் பலசனங்களைத்தேய்த்துக் காலினேர் தீயுமிழ்வபோல்ஆய்ந்த கண்களு மருவ ரையென. 311
வெடிப டும்முழக் கிடியெனவிடும்கொடியு டைமதில் கிடுகி டென்றிடும்விடுபற் கோட்டினில் வெட்டி விட்டிடப்படப டென்னவே பயண மானதே. 312
நகர மாந்தர் செயல்
அடிய டிய்யென வாயு தர்செலப்படுவ டுவ்வெனப் பறைகள் கொட்டிடத்திடுதி டென்றொலி தெறித்த பேரிகைநடுந டுங்கினார் நகர மாந்தரே. 313
களிற்றின் வெறிச்செயல்
பிடிசில் பாகரைப் பிளந்தெ றிந்திடக்குடரின் மாலைகள் கோட்ட ணிந்துடன்கடவுள் யானையைக் காலிற் றேய்த்திடஇடர்ப டுங்களி றெய்தி யோடுமே. 314
நகரமாந்தர் அரசனுக்கு செய்தி தெரிவித்தல்
நகர மாந்தர்க ணடுங்கிச் சென்றுநற்சிகரம் போன்முடிச் சீர ரசற்குப்பகர வாரணம் பலரைக் கொன்றதென்சிகர மாடநீர் சேர்த்தி ருக்கென்றான். 315
யானை, சோலை முதலிய அனைத்தையும் அழித்தல்
நீல நற்கிரி நெடிய யானையும்மாலை நற்போது மாய்ந்து பின்னுறக்காலை நற்போதாற் கனன்று தோன்றினசோலை நல்வய றுகைத்த ழித்ததே. 316
வழிவ ருவாரை மார்கி ழித்திடும்எழில்வனம்பொய்கையீட ழித்திடும்இழிவு றுந்தொழி லீண்டிச் செய்யுநாட்பொழிலுண் மாதவர் பொருந்தினார்களே. 317
சாரணர் சார்ந்திருந்த பொழில்
வேத நான்கையும் விரித்த ருளுவர்மாத வர்வினை மாயச் செய்குவார்ஏதில யாத்திரைக் கெழுந்து வந்தந்தப்போத விழ்பொழில் புகுந்தி ருந்தனர். 318
சாரணரின் பெருமை
இனமலர் மிசை யேகு வார்களும்புனல லைமிசைப் போகு வார்களும்கனிகள் காய்மிசை காணுஞ் சாரணர்இனிய நூன்மிசை யிசைந்து செல்வரும் 319
மலைத்த லைமிசை வானிற் செல்வரும்நிலத்தினால்விரனீங்கிச் செல்வரும்தலத்தினன்முழந் தரத்திற் செல்வரும்பெலத்தின் வானிடைப் பெயர்ந்து செல்வரும் 320
மலைமு ழஞ்சுண் மன்னினான்முடிஉலகெ லாமவ ரொருங்கி டம்விடும்அலம தீரவே வறம ழைபெய்யும் மலமறுந்தர மாமுனிவரும். 321
பக்க நோன்புடைப் பரம மாமுனிமிக்க பாணிமீ தடிசின் மேதினிபுக்கு முண்டிடப் போது வார்பகல்தக்க வர்குணஞ் சாற்றரி தென்றே 322
தருமவீரர் அறம் கூறுதல்
தரும வீரரென்றவருட் டலைவன்பால்வெருவ ருந்துன்ப விலங்கும் வாழ்க்கையைமருவி யோதவே வந்த யாவரும்திருமொழியினைத் திறத்திற் கேட்டனர் 323
யானையின் செயல்
வருந்த சைநசை வானிற் புள்ளுகள்இரைந்து மேலுங்கீ ழினும்ப டர்ந்திடப்பருந்து முன்னும்பின் பரந்து செல்லவும்விருந்த வையுண விட்ட தியானையே. 324
யானை சாரணர் மூலம் பழம் பிறப்புணர்தல்
கூற்றெழுங்கரி கொதித்தெ ழுந்ததால்ஆற்றலம்முனியறவு ரையுறஏற்ற ருஞ்செவி யிறைஞ்சித் தன்னுடைமாற்ற ரும்பவ மறிந்து ணர்ந்ததே. 325
யானையின் வருத்தம்
குருதியாறிடக் கொன்ற தீவினைவெருவு துக்கமும் விளங்கினுய்த்திடும்அருந ரகினு ளாழ்ந்து விட்டிடும்பெருந்து யரெனப் பேது றுக்குமே. 326
யானை மெய்யுணர்வு பெற்று அமைதியுறல்
நெஞ்சு நொந்தெழு நெடுங்க ணீருகும்அஞ்சு மாவினுக் கறிவு தோன்றிடக்குஞ்ச ரம்மினிக் கோன கருன்னிஇஞ்சி வாய்தலினெய்தி நின்றதே. 327
களிற்றினைக் காண உதயணன் வருதல்
கடையுடைக் காவலாளர் கதவினைத் திறக்கப் போந்தேநடுநகர் வீதி சென்று நரபதி மனையைச் சேர்ந்துநெடுவரை போல நின்ற நீர்மையை வாயி லாளர்முடிமனற் குரைப்ப முன்னிப் பெருமகனெழுந்து வந்தான். 328
உதயணன் களிற்றின் மீது ஏறல்
திருமுடி மன்னனின்ற திருநிறை யானை கண்டுமருவிய வமைச்சர் தம்மை மன்னவனினிதினோக்கப்பெருவிறல் யூகி சொல்வான் பெருந்தவர் பால றத்தைமருவியே கேட்ட தாகு மன்னநீ யேற வென்றான். 329
யானை உதயணனை முனிவரிடம் கொண்டு செல்லல்
வேந்தனுங் கேட்டு வந்து வெண்கோட்டினடிவைத் தேறிச்சேந்தனனெருத்தின் மீதிற் றிரும்பிக்கொண்டேகி வேழம்பூந்தளிர் நிறைந்தி லங்கும் பொழில் வலஞ் சுற்ற வந்துகாந்துநன் மணிப்பூண் மார்பன் கைம்மாவிட் டிழிந்தானன்றே. 330
உதயணன் துறவியிடம் அறங்கேட்டல்
விரைகமழ் பூவு நீரும் வேண்டிய பலமு மேந்திப்பரிசனஞ் சூழச் சென்று பார்த்திபனினியனாகிமருமலர் கொண்டு வாழ்த்தி மாதவ ரடியி றைஞ்சஇருவென விருக்கை காட்ட விருந்துநல் லறத்தைக் கேட்டான். 331
முனிவர் கூறிய அறவுரைகள்
அறத்திற முனிவன் சொல்ல வரசனுங் கேட்க லுற்றான்பெறற்கரு மருங்க லங்கள் பேணுதற் கரிய வாகும்திறத்தறி பொருள்க ளாறுந் தேர்ந்துபஞ் சத்தி காயம்மறித்தறி தத்து வங்கள் வரிசையினேழ தாமே. 332
சீரிய நவப தங்கள் செப்பிய காய மாறும்வீரியப் பொறிக ளாறும் வேண்டிய வடக்க மாகும்ஓரிய லறம்பத் தோடு மொருங்குபன்னிரண்டு சிந்தைஆரிய ரறிந்து நம்பி யதன்வழி றொமுக்க மாகும். 333
தலைமகார் சிறப்புச் செய்து தன்மைநல் வாய்மை யானகலையினற் கரைறைக் கண்டு காதனூல் வழியைச் சென்றுமலைவில்சீர் மா தவர்க்கு வண்மையிற் றானஞ் செய்தார்தொலைவிலாய் பிறவி நீங்கித் தொல்சுகக் கடலுளாழ்வார். 334
தரும வீரர் தரும முறைத்திடப்பெருமை மன்னனும் பேர்ந்து வனங்கினன்மருவு வல்வினை மாசினுதிர்த்திடத்தெரிசனவ்விளக் கஞ்சிறப் பானதே. 335
முனிவர் களிற்றின் வரலாறு கூறல்
காது வேன்மன்னன் களிறு கதமெழற்கேது வென்னென யெதிவ ரன்சொலும்தாது பூம்பொழிற் சாலிநன்னாட்டிடைவேதியர் குழு வாய்விளங் கும்புரம். 336
கடக மென்பதூர் காதற் பிராமணன்விடப கன்னென்னும் பேரினன் மற்றவன்இடைமின் றேவியுஞ் சானகி யென்பவள்கடையில் காமங் கலந்துடன் செல்லுநாள். 337
அமரி யென்னு மணிமுலை வேசிதன்அமையுங் காமத் தழுங்கி விழுந்தவன்சமைய வேள்வியுஞ் சார்ந்த வொழுக்கமும்அமைவி லன்பவ மஞ்சினனில்லையே. 338
காமங் கள்ளுண்டு கைவிட லின்றியேதாம நற்குழ லாடுணை யாகவும்யாம மும்பக லும்மறி யாதவன்ஆமர ணத்தன்பினானைய தாயினன். 339
மன்னனின் செயல்
அந்நிலை யுணர்ந் தடங்கிய தென்றனர்மன்னன் கேட்டுடன் வந்துநற் பாகர்க்குச்சொன்ன யானையைத் தூயநீ ராட்டெனும்அன்னம் பானெய்யினன்புடனூட்டெனும். 340
கவள நாடொறு மூட்டெனுங் காவலன்பவள மாமெனும் பண்ணவர் தம்மடிதிவளு மாமுடி சேர்த்து வணங்கியேஉவள கத்துன்னி மற்றொன்று கேட்டனன். 341
உதயணன் முனிவரை வினவுதல்
மதக்க ளிற்றின்மேன் மன்னிய வன்பெனக்குதவக் காரண மென்னெனக் கூறலும்சிதைவில் காட்சிநற் சீரொழுக் கத்தவர்மதமின் மாட்சியர் மன்னநீ கேளென்றார். 342
முனிவர் கூற்று
உள்ள நற்றவ ருற்றுரை செய்கின்றார்கள்ள விழ்பொழிற் கார்முகில் சூடியேவெள்ளி யம்மலை மேல்வட சேடியில்வள்ளலார் பொய்கை மத்திம நாட்டினுள். 343
சுகந்தி யூர்க்கிறை சொற்புகழ் மாதவன்அகந்தெ ளிந்த வயந்தன் மனைவியாம்செகந் தனிப்புகழ் சீரார்கு லாங்கனைஉகந்து பெற்றன ளோர் புகழ்க் கோமுகன். 344
காமனென்னுமக் காளைகைத் தாய்பெயர்சோமசுந்தரி யென்னுஞ் சுரிகுழல்நாம வேன்மகனன்மை விசையனும்சேம மித்திர ராகச் சிறந்தனர். 345
ஒழியாக் காதலுடன்விளை யாடியேவழுவில் போகம் வரம்பின்றித் துய்த்தலும்நழுவில் காட்சியனாமவேற் கோமுகன்ஒழிய நல்லுயி ரோங்கிநீ யாயினை. 346
விசையின் றன்னுயிர் விட்டந் தணனாய்வசையில் காம மயங்கிய மோகத்தின்இசையினாலுயிர் நீங்கியே யிங்குவந்தசையு ணாக்களி றாயின தாகுமே. 347
மித்திரன்முன்பு வீறுநற் காதலால்அத்தி மேலுனக் கன்புமுன் டானதால்வெற்றி வெண்குடை வேந்தேயிவ் வேழத்தின்ஒத்த வாயுவு மோரெழு நாளென்றார். 348
உதயணன் வருந்திக் கூறுதல்
திருந்து ஞானத்திற்றோர்ந்த முனியுரைபொருந்தக் கேட்ட புரவலன் றுக்கமாய்வருந்திச் சென்றந்த வாரணந் தன்னிடைச்சரிந்த காதலிற் றானுரை செய்கின்றான். 349
உதயணன் செயல்
வஞ்ச கத்தின் வரிந்துங் கயிற்றினால்வெஞ்செம் முள்ளினை வீரிட வூன்றியும்மிஞ்சிக் கால்விலங் கிற்சிறை செய்தனன்குஞ்ச ரம்பொறை கொள்ளுதி யென்னவே. 350
காதல் யானையைக் கையின்மெய் தீண்டியேபோத வெங்கும் புரவலன் றைவரப்போத கம்மிகப் பொற்பினிறைஞ்சலிற்காத லிற்றிண் களிற்றியல் கூறெனா. 351
உதயணன் அரண்மனை புகுதல்
யானை யாளர்க் குரைத்தெழின் மன்னவன்தேனெய் தோய்ந்த திருமொழி மாதவர்ஆன வர்பத மன்பிற் றொழுதுபோய்ச்சேனை சூழத் திருமனை சேர்ந்தனன். 352
உதயணனின் வழிபாடு
சீலமும் வளங்களுஞ் செறிந்தவேழத் தன்மையைகாலையவ்வு ழையர் வந்து கண்டுரைப்ப மன்னனும்ஆலையம் வலமதா யருகனைவ ணங்கிப்பின்பாலடிசினெய்யருந்திப் பாரரசன் செலுநாள். 353
உதயணனின் செயல்
சல்லகீணை கொண்டுடன் சமாதிவந்தே யெய்தலும்நல்லவானிற் றேவனாய் நாகமுறை செய்யக்கேட்டுச்சொல்லரிய வேந்தனுஞ் சூழ்ந்தவனி போகவும்நல்லலவென் றுணர்ந்தனனேமியனைவா வென்றனன். 354
நரவாகனனிடம் உதயணன் கூறுதல்
அவனும் வந்து தந்தையை யடியிணைவ ணங்கினான்அவனியுன தாகவா ளென்ன மன்னன் செப்பினன்தவவனிதை யாளநான் றாங்குதற்குப் போவனேஉவமமிலா ராச்சிய முற்றதெதற் கென்றனன். 355
கோமுகனுக்கு முடிசூட்டுதல்
வத்தவன்னிறைவனாக மன்னுகோ முகனுக்குவெற்றிநன்ம ணிமுடியை வீறுடனே சூட்டியேஒத்துலக மாள்கவென் றுரைபல வுரைத்தபின்சித்திரநேர் மாதரைச் செல்வனோக்கிக் கூறுவான். 356
உதயணனன் மனைவிகளிடத்து கூறலும் அவர்களின் பதில் உரையும்
தேவியீர் நீர் வேண்டியதென் றிருமனை துறந்துபின்மேவுவனற் றவமென்ன மின்னிடைய மாதரும்போவதுபொ ருளெமக்குப் புரவலனே நின்னுடன்தாவில்சீர் விழுத்தவழுந் தாங்குதுமென் றிட்டனர். 357
உதயணனுடன் தேவியரும் செல்லல்
உருமண்ணு விடபகன் யூகிநல் வயந்தகன்பொருவினா லமைச்சரும் பொற்பரசன் மாதரும்மருவுநன் மலர்ப்பொழில் வண்மைவலங் கொண்டுமிக்கருண்முனிவர் பாதத்தி லன்புடன் பணிந்தனர். 358
உதயணன் முனிவரிடம் வேண்டுதல்
நாத்தழும்ப மன்னனு நயமுறு மினிமையின்தோத்திரங்கள் கொண்டுமீத் தொடுத்தொலியின் வாழ்த்தியேஏத்தற முரைத்திட வினிமை வைத்துக் கேட்டனன்ஏத்தரிய நற்றவமு மெங்களுக் களிக்கென்றான். 359
உதயணன் முதலியோரின் தவக்கோலம்
காலமிது காட்சிதலை கண்டுணர்த்தக் கைக்கொண்டுஞாலநிகழ் ஞானமு நன்குமிகவே யுணர்த்திச்சீலமாதி யாயொழுக்கஞ் சீருடனளித்துப்பின்கோலமான குஞ்சிமுதல் வாங்கித்தவங் கொண்டனர். 360
அனைவரின் தவநிலை
அறுவகைய காயங்களை யருண்மிக்குற் றோம்பியும்பொறிகளை மனத்தடக்கிப் புண்ணியமா நோன்புகள்அறிகுறி யநசன மாற்றுதற் கரிதென மறுவறு தியானமு மதியகந் தெளிந்தவே. 361
புறத்தினும் மகத்தினும் போகத் தொடர்ப் பாடுவிட்டறத்திடை யருளினா லாயிருரை யோம்பியும்திறத்துடன் சமிதியுஞ் சிந்தையின்னடக்கமும்திறத்திறத் துணர்ந்துபின் றியானமுற்றினார்களே. 362
ஒருவகை யெழின்மன மிருவகைத் துறவுடன்மருவுகுத்தி மூன்றுமே மாற்றிநான்கு சன்னையும்பொருவிலைம் புலம்மடக்கிப் பொருந்தியவா வச்சமூவிருவகைச் செவிலியு மெழுவரையும் வைத்தனர். 363
சுத்திமீக வெட்டினோடுஞ் சூழ்ந்தயோகு வொன்பதாம்பத்துவகை யூற்றடைத்துப் பயின்றவங்கம் பத்தொன்றும்சித்தம்பனி ரெண்டுசீர்க் கிரியைபதின் மூன்றுடன்ஒத்தபங்க மீரேழு மொருங்குடன் பயின்றனர். 364
உதயணன் கேவல ஞானம் எய்துதல்
உதயண முனிவனு மோங்குமாவரைதனில்இதயமினி தாகவே யெழில்பெறநல் யோகமாய்இதமுறு தியானத்தினிருவினை யெரித்துடன்பதமினிது சித்தியெய்திப் பரமசுகத் திருந்தனன். 365
தேவியரும் அமைச்சரும் நோன்பிருந்து தேவராதல்
அமைச்சரா மநகரு மானவன்ன மாதரும்சமைத்தநோன்பு நோற்றுயர்ந்து சமாதிறன் மரணத்தின்இமைத்தலில் லமரரா நிறைந்தசோத மாதியாய்அமைத்தவச் சுதம்மள வானபாடியின்புற்றார். 366
தேவியரும் அமைச்சரும் தேவலோகத்தில் இன்புற்றிருத்தல்
பொற்புடைநன் மாதரைப் புணர்ந்துமேனி தீண்டலும்அற்புதமாய்க் காண்டலு மானவின்சொற் கேட்டலும்கற்புடைமனத்திலெண்ணிக் காணற்கரி தாகவேவிற்பனநன் மாதவர் வேண்டுசுகந் துய்த்தனர். 367
காண்டங்களின் செய்யுட் தொகை
உஞ்சை நற் காண்டந் தன்னி லுயர்கவி நூற்றீரெட்டுவிஞ்சவே யிலாவா ணத்தின் வீறுயர் முப்பதாகும்எஞ்சலின் மகத காண்ட மெழிலுடை முப்பத்தஞ்சாம்அஞ்சுடனைம்பத் தொன்றா மரியவத் தவத்திலன்றே. 368
[நூற்றீரெட்டு - நூற்றுப்பதினாறு. கடவுள் வாழ்த்து, அவையடக்கம், பயன் கூறும் செய்யுள், உள்ளிட்ட நான்கு செய்யுள் நீங்கலாக உஞ்சைக் காண்ட செய்யுட்தொகை]
நறுமலர் மாலை மார்பனரவாக காண்டந் தன்னில்அறுபது மொன்று மாகு மாகிய துறவுக் காண்டம்அறுபது மஞ்சு மாகு மன்புவைத் தோது வோர்க்குந்திறவதிற் கேட்ப வர்க்குஞ் சிவகதி யாகுமன்றே. 369

உதயண குமார காவியம் முற்றிற்று.

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.