LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

வாழ்க தமிழ் பேசுவோர்..

வாட்ச் பக்கெட் தேங்க்ஸ் சாரியிலிருந்துத்

துவங்குகிறது தமிழிற்கான தினக்கொலை..

 

அம்மா அப்பா மாறி

மம்மி டாடியானது மட்டுமல்ல

டிவி ரேடியோ கூட வெகுவாய்

தமிழை தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது;

 

சுடுகாட்டுப் பிணத்தைக் கூட

டெட்பாடி ஆக்கும் ஆசையை

எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால்

என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க

தமிழாகித் தொலையுமோ... (?)

 

எவனோ எடுத்தெமைப்

புதைக்கும் குழிக்குள்

தமிழ்தொலைத்து தொலைத்து

விழும் மாந்தரை

எந்த மொழி மனிதரெனயெண்ணி

மீண்டும் மீண்டும் மன்னிக்குமோ?

 

பேன்ட் சூட்டும் ஃபாரின் காரும்

பேஸ்புக் பிசாவும் கூட

மாற்றத்தின் புள்ளிகளுக்குள் அடங்கிய

காலமாற்றத்தின் காட்சிகளாகிப் போகட்டும்

பெயர்ச்சொல்லாய் வாழட்டும்

மீறி மொழியைத் தொலைப்பதையோ – பாதி குறைத்து

தங்க்லிஷ் எழுதுவதையோ

நியாயமென்றுரைப்போர் நஞ்சினை –

எந்த வாளிட்டு அறுப்பது?

 

ஆங்கிலம் முக்கியம்

அரபுமொழி முக்கியம்

அந்நிய மொழிகள் முக்கியம்

அதையெலாம் அதுவாகப் பேசுவதுபோல்

தாய்மொழியும்

தமிழர்க்கு அழகில்லையா ?

 

மானம் போயின் தெருவில் பிணமான

இனத்திற்கு

தனதானமொழி தமிழது முகம் தொலைக்குமெனில்

சினமின்றி எழுதும் கவிதையும் தீதன்றோ ?

 

எனவே -

எனவே உறவுகளே..

 

அங்கமங்கமாக பிறமொழி கலந்து குழந்தைக்கு

மில்கோடு ஹாட்கப்பில் தருவோரே,

தமிழை தினம் தினம் பிளேட்டில்

ரைசோடு போட்டுக் கொல்வோரே..

 

இனி -

கொஞ்சம் கொஞ்சமாக தனை மாற்றுங்கள்

தமிழையினி யேனும்

அழகு கொஞ்சப் பேசுங்கள்;

 

மொழி நமக்கு உயிராக வேண்டாம்

மொழியாகவே இருக்கட்டும்

முழுதாகப் பேசமட்டும் முப்பொழுதும் கிடைக்கட்டும்

வாழ்க தமிழ் பேசுவோர்!!

 

ஆசிரியர் : வித்யாசாகர்

by Swathi   on 26 Dec 2013  3 Comments
Tags: Tamil Language   Tamil Speakers   Tamil Writers   தமிழ் பேசுவோர்   தமிழ்   அம்மா அப்பா   டாடி மம்மி  
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
தமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்... தமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்...
தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள் தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்
தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்) தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்! கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்!
உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன் உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
06-Jan-2014 03:42:05 k k raju said : Report Abuse
நாம் தமிழ் நலம் விரும்பிகள் என்றால் நமது பெயர்களை நாம் முதலில் புரிந்துகொள்ளும்படி தமிழ் பெயர்கள் வைக்க வேண்டும் அதாவது அதன் பொருள் நமக்கு தெரிந்திருக்கவேண்டும் ஏன் என்றால் raju என்ற சொல்லுக்கு இதுவரை விளக்கம் தெரியவில்லை ஆக ஆங்கிலம் மட்டும் கலந்து விடவில்லை 2000ஆண்டுகலு க்கு முன்பாகவே தமிழை தொலைக்க ஆரம்பித்துவிட்டோம்
 
06-Jan-2014 03:42:03 k k raju said : Report Abuse
நாம் தமிழ் நலம் விரும்பிகள் என்றால் நமது பெயர்களை நாம் முதலில் புரிந்துகொள்ளும்படி தமிழ் பெயர்கள் வைக்க வேண்டும் அதாவது அதன் பொருள் நமக்கு தெரிந்திருக்கவேண்டும் ஏன் என்றால் raju என்ற சொல்லுக்கு இதுவரை விளக்கம் தெரியவில்லை ஆக ஆங்கிலம் மட்டும் கலந்து விடவில்லை 2000ஆண்டுகலு க்கு முன்பாகவே தமிழை தொலைக்க ஆரம்பித்துவிட்டோம்
 
03-Jan-2014 09:03:18 முனைவர் ச .ரமேஷ் said : Report Abuse
அன்பு நண்பர் உங்கள் கவி மிக நன்றாக உள்ளது வாழ்த்துகள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.