|
||||||||
முதுமுனைவர் ச.சு.இராமர் இளங்கோ காலமானார் |
||||||||
![]()
முதுமுனைவர் ச.சு.இராமர் இளங்கோ (வயது 81) 19.6.2025 அன்று காலமானார்.
ராமர் இளங்கோ, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும், பல்வேறு தமிழ் இலக்கிய இதழ்களில் பங்களிப்பாளராகவும் இருந்தார்.
இவர் காலத்தில்தான் அலெக்சாண்டர் துபியான்சுகி (உருசியா), பேராசிரியர் கா.சிவத்தம்பி (இலங்கை), முனைவர் முரசு. நெடுமாறன் (மலேசியா) எனப் பன்னாட்டு ஆய்வாளர்களைப் பணியில் அமர்த்தி நிறுவனத்தை உலகத் தரத்திற்கு மாற்றிக்காட்டினார்.
தேனி மாவட்டம் ஆனைமலைப்பட்டியில் 10.09.1944 ஆம் ஆண்டு பிறந்தவர். பெற்றோர் சுருளி, வீரம்மாள். இளமைக்கல்வி இராயப்பன்பட்டியிலும், புகுமுக வகுப்பை உத்தமபாளையத்திலும் நிறைவு செய்தவர். சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக் கழகத்தின் வழியாக இளங்கலை(1965-68), முதுகலை (1968- 70), முனைவர் (1970 - 76) பட்டங்களைப் பெற்றவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல் முதலில் தமிழ் இலக்கியத்தில் ஆய்வு செய்து முதுமுனைவர் பட்டத்தை (டி.லிட்) 24.04.90 ஆம் ஆண்டில் பெற்றவர்.
பாவேந்தர் பாரதிதாசன் ஆய்வுகளில் முன்னோடியான இவர், நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள், ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். ஓய்வுபெற்ற பிறகும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சிறப்புநிலைப் பேராசிரியராகவும், பதிப்புத்துறைப் பொறுப்பாளராகவும் இருந்து திறம்படத் தமிழ்ப்பணியாற்றினார்.
இவர் எழுதிய புத்தகங்களில் "இளங்கோவின் இலக்கிய உத்திகள்" மற்றும் "இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள்" ஆகியவை குறிப்பிடத்தக்கவை. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு போற்றத்தக்கது.
அவரது மறைவு தமிழ் உலகிற்கு ஒரு பெரிய இழப்பு ஆகும்.
|
||||||||
by hemavathi on 19 Jun 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|