LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் விளையாட்டு - kids Game Print Friendly and PDF

விளையாட்டின் வரைவிலக்கணம்

விளையாட்டு என்பதற்கு பழங்கால புலவர்களோ அல்லது அறிஞர்களோ எவ்வித வரையறைகளையும் வகுத்துதரவில்லை ஆனால் உவகை என்னும் மெய்ப்பாடு தோன்றுவதற்குரிய நான்கு வகை களங்களைக் கூறுமிடத்தில் தொல்காப்பியர் விளையாட்டையும் ஒன்றாக குறிப்பிடுகிறார். இதிலிருந்து மனமகிழ்ச்சி தரக்கூடிய ஒரு செயலே விளையாட்டு என்னும் வரைவிலக்கணத்தைப் பெறலாம். மேலும் நகை என்னும் தமிழ்ச் சொல்லும் இதற்கு இணையான திரிவு வடிவங்களைக் கொண்ட மற்ற மொழிச் சொற்களும் (Cognate Word) ஆடு அல்லது விளையாடு என்னும் பொருளில் ஆளப்படுவதால் விளையாட்டு என்பது ஒருவருக்கு இன்பமூட்டும் செயற்பாடு என்பது உறுதியாகிறது.

இருப்பினும் தற்போது எல்லா பொழுதுபோக்கு ஆட்டங்களையும் (Play) விளையாட்டுகளாக (Games) எடுத்துக்கொள்வதில்லை. எனவே நாம் ஒரு செயலை விளையாட்டாக கருத வேண்டும்மென்றால் ஐந்து அம்சங்களை மானிடவியலாளர் ஒட்டார் பெய்ன் வரையறுத்துள்ளார் .

1. அமைப்புடைய ஆட்டமாக இருக்க வேண்டும் (Organized play)

2. போட்டியை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் (Competition)

3. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களோ குழுக்களோ

(Two or more sides)

4. வெற்றியை நிர்ணயிக்கும் விதியை கொண்டிருக்க வேண்டும்

(Criteria for determining winner)

5. பலராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க விதியை உள்ளடக்கி இருக்க வேண்டும் (Agreed Rules)

நன்றி : தமிழக நாட்டுப்புற விளையாட்டுகள் மேம்பாட்டுக் கழகம்

by Swathi   on 24 Jan 2015  0 Comments
Tags: Vilaiyattu   Tamilarkal Vilaiyattu   விளையாட்டு   தமிழர்கள் விளையாட்டு   விளையாட்டின் வரைவிலக்கணம்        
 தொடர்புடையவை-Related Articles
விளையாட்டு கலை விளையாட்டு கலை
தட்டாங்கல் விளையாட்டு தட்டாங்கல் விளையாட்டு
பூசணிக்காய் விளையாட்டு பூசணிக்காய் விளையாட்டு
தாயம் விளையாட்டு தாயம் விளையாட்டு
விளையாட்டின் வரைவிலக்கணம் விளையாட்டின் வரைவிலக்கணம்
பல்லாங்குழி விளையாட்டு பல்லாங்குழி விளையாட்டு
மஞ்சள் நீர் தெளித்தல் மஞ்சள் நீர் தெளித்தல்
சில்லு விளையாட்டு சில்லு விளையாட்டு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.