LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    மரபு-தற்சார்பு வாழ்வியல் Print Friendly and PDF

செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ?

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தொண்ணுற்று ஆறு ஊர்கள் (இப்போ 76 ஊர்கள் )உருவாகியிருக்கலாம் . ஊர் அமைக்கும் போதே பள்ளமான பகுதிகளை தேர்ந்து எடுத்து அங்கிருந்து மண் வெட்டி வீடுகளை முதல் தள உயரத்துக்கு தரையை உயரத்திற்கு அமைத்து இருக்கிறார்கள் 7/9 படிக்கட்டு இல்லாத நுழைவாயிலே கிடையாது . எல்லா வீட்டிலும் முத்தம் (முற்றம்) வழியாக மழை நீர் ஓடி உள் வடிகால் வழியாக வெளியே வந்து ஊரில் உள்ள பள்ளமான பகுதிக்கு (ஊர் அமைந்த பிறகு ஊருணியாய் மாற்றி இருக்கிறார்கள்.) ஓடிவிடும் எவ்வளவு மழை பொழிந்தாலும் தண்ணீர் கம்மாய்க்கோ ஊருணிக்கோ போய்விடும் ஊருணி நீர் மக்களுக்கு குடி நீர் .....கம்மாய் நீர் வயலுக்கு பாய்ச்ச பயன் பட்டு உள்ளது இணை கோடுகளாக தெருக்கள் தென் வடக்காகவும் கிழக்கு மேற்காகவும் சாலைகள் அமைந்துள்ளன.


முற்றத்தில் விழும் மழை நீரை பிடிக்க நெல்லவிக்கும் காசனி அண்டாகளை வேட்டியை வைத்து அண்டா வாயை கட்டி தண்ணீர் பிடித்து ஆறுமாத குடிநீராக பயன் படுத்தியுள்ளனர் . முற்றத்தில்தான் ஊறுகாய் வத்தல் உப்புக்கண்டம் இவைகளை மொற்மேன் ஜாடிகளில் வெள்ளை துணியால் வாயை கட்டி வெய்யிலில் காயவைத்துள்ளனர் .மழை நீர் சேகரிப்பு திட்டம் , சோலார் சக்தி பயன் படுத்துதல் நீராய் வீணாக்காது பயன் படுத்துதல் போன்றவை அப்போதே கிராம மக்களிடம் இருந்துள்ளது .


வெய்யில் காலத்தில் நீண்டஉள்வீட்டு நடைபாதை தரும் காற்று வாங்கி அமர்ந்து இருப்பார்கள் மழை காலத்தில் இரட்டை அறையில் உள்வீட்டீல் கதகதப்பாய் உள்ள அறையில் படுப்பர் (மின் சக்தி இல்லா காலம் ) தானியங்கள் மிகுதியாய் விளையும் போது வாங்கி சேமித்து காயவைத்து பயன் படுத்த வீட்டில் மிகுதியான அறைகள் பயன் படுத்த பெற்றுள்ளன ஒரு வீடு கட்ட மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளன .ஒரு திருமணம் நடத்த ஏழு நாட்கள் கொண்டாடியுள்ளனர் அதற்கு தகுந்தாற்போல் வீடுகள் கட்டியுள்ளனர் திரைகடல் ஓடி திரவியம் தேடியதால் உலகில் உள்ள அரும்பொருள்கள் சேகரிக்க பட்டுள்ளன . சேமிப்பு சிக்கனம் மரபணுவாய் போனதால் அவைகள் தலைமுறையாய் தலைமுறையாய் கொடுக்கபெற்றும் பாதுகாக்க பெற்றும் வந்துள்ளன
உங்கள் கொள்கை பிடிப்பு போற்றத்தக்கது .

by Swathi   on 08 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி
மாவொளி சுற்றுதல் மாவொளி சுற்றுதல்
காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 8 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.