LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

60 தமிழ் வருடங்களின் தமிழ்ப் பெயர்கள்!

தமிழகமும் அறுபது ஆண்டுகளும் 

தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை. எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது. தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான "அறுபது வருட வெண்பா" இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.

2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அதற்கு வடமொழிப் பெயர் ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் வைக்கப்பட்டது.  எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர். 

1 நற்றோன்றல் - பிரபவ
2 உயர்தோன்றல் - விபவ
3 வெள்ளொளி - சுக்கில
4 பேருவகை - பிரமோதூத
5 மக்கட்செல்வம் - பிரசோற்பத்தி
6 அயல்முனி - ஆங்கிரச
7 திருமுகம் - ஸ்ரீமுக
8 தோற்றம் - பவ
9 இளமை - யுவ
10 மாழை - தாது
11 ஈச்சுரம் - ஈஸ்வர
12 கூலவளம் - வெகுதான்ய
13 முன்மை - பிரமோதி
14 நேர்நிரல் - விக்ரம
15 விளைபயன் - விஜ_
16 ஓவியக்கதிர் - சித்ரபானு
17 நற்கதிர் - சுபானு
18 தாங்கெழில் - தாரண
19 நிலவரையன் - பார்த்திப
20 விரிமாண்பு - விய
21 முற்றறிவு - சர்வசித்
22 முழுநிறைவு - சர்வதாரி
23 தீர்பகை - விரோதி
24 வளமாற்றம் - விக்ருதி
25 செய்நேர்த்தி - கர
26 நற்குழவி - நந்தன
27 உயர்வாகை - விசய
28 வாகை - சய
29 காதன்மை - மன்மத
30 வெம்முகம் - துர்முகி
31 பொற்றடை - ஏவிளம்பி
32 அட்டி - விளம்பி
33 எழில்மாறல் - விகாரி
34 வீறியெழல் - சார்வரி
35 கீழறை - பிலவ
36 நற்செய்கை - சுபகிருது
37 மங்கலம் - சோபகிருது
38 பகைக்கேடு - குரோதி
39 உலகநிறைவு - விசிவாவசு
40 அருட்டோற்றம் - பராபவ
41 நச்சுப்புழை - பிலவங்க
42 பிணைவிரகு - கீலக
43 அழகு - சௌமிய
44 பொதுநிலை - சாதாரண
45 இகல்வீறு - விரோதிகிருது
46 கழிவிரக்கம் - பரிதாபி
47 நற்றலைமை - பிரமாதீச
48 பெருமகிழ்ச்சி - ஆனந்த
49 பெருமறம் - இராட்சச
50 தாமரை - நள
51 பொன்மை - பிங்கள
52 கருமைவீச்சு - காளயுத்தி
53 முன்னியமுடிதல் - சித்தார்த்தி
54 அழலி - ரௌத்ரி
55 கொடுமதி - துன்மதி
56 பேரிகை - துந்துபி
57 ஒடுங்கி - ருத்ரோத்காரி
58 செம்மை - ரக்தாட்சி
59 எதிரேற்றம் - குரோதன
60 வளங்கலன் - அட்சய

1 நற்றோன்றல் - பிரபவ

2 உயர்தோன்றல் - விபவ

3 வெள்ளொளி - சுக்கில

4 பேருவகை - பிரமோதூத

5 மக்கட்செல்வம் - பிரசோற்பத்தி

6 அயல்முனி - ஆங்கிரச

7 திருமுகம் - ஸ்ரீமுக

8 தோற்றம் - பவ

9 இளமை - யுவ

10 மாழை - தாது

11 ஈச்சுரம் - ஈஸ்வர

12 கூலவளம் - வெகுதான்ய

13 முன்மை - பிரமோதி

14 நேர்நிரல் - விக்ரம

15 விளைபயன் - விஜ_

16 ஓவியக்கதிர் - சித்ரபானு

17 நற்கதிர் - சுபானு

18 தாங்கெழில் - தாரண

19 நிலவரையன் - பார்த்திப

20 விரிமாண்பு - விய

21 முற்றறிவு - சர்வசித்

22 முழுநிறைவு - சர்வதாரி

23 தீர்பகை - விரோதி

24 வளமாற்றம் - விக்ருதி

25 செய்நேர்த்தி - கர

26 நற்குழவி - நந்தன

27 உயர்வாகை - விசய

28 வாகை - சய

29 காதன்மை - மன்மத

30 வெம்முகம் - துர்முகி

31 பொற்றடை - ஏவிளம்பி

32 அட்டி - விளம்பி

33 எழில்மாறல் - விகாரி

34 வீறியெழல் - சார்வரி

35 கீழறை - பிலவ

36 நற்செய்கை - சுபகிருது

37 மங்கலம் - சோபகிருது

38 பகைக்கேடு - குரோதி

39 உலகநிறைவு - விசிவாவசு

40 அருட்டோற்றம் - பராபவ

41 நச்சுப்புழை - பிலவங்க

42 பிணைவிரகு - கீலக

43 அழகு - சௌமிய

44 பொதுநிலை - சாதாரண

45 இகல்வீறு - விரோதிகிருது

46 கழிவிரக்கம் - பரிதாபி

47 நற்றலைமை - பிரமாதீச

48 பெருமகிழ்ச்சி - ஆனந்த

49 பெருமறம் - இராட்சச

50 தாமரை - நள

51 பொன்மை - பிங்கள

52 கருமைவீச்சு - காளயுத்தி

53 முன்னியமுடிதல் - சித்தார்த்தி

54 அழலி - ரௌத்ரி

55 கொடுமதி - துன்மதி

56 பேரிகை - துந்துபி

57 ஒடுங்கி - ருத்ரோத்காரி

58 செம்மை - ரக்தாட்சி

59 எதிரேற்றம் - குரோதன

60 வளங்கலன் - அட்சய

by Swathi   on 01 Apr 2017  6 Comments
Tags: 60 Tamil Years   தமிழ் வருடங்கள்   தமிழ்ப் பெயர்கள்   60 தமிழ் வருடங்கள்           
 தொடர்புடையவை-Related Articles
60 தமிழ் வருடங்களின் தமிழ்ப் பெயர்கள்! 60 தமிழ் வருடங்களின் தமிழ்ப் பெயர்கள்!
கருத்துகள்
25-Jun-2020 05:30:13 Manimegalai said : Report Abuse
ஐயா 60 தமிழ் வருடத்தின் ராஜாவை பற்றி குறிப்பிடுங்கள் நன்றி
 
05-Jun-2019 17:39:35 சோதிடப்புலவர் said : Report Abuse
குறுமதியர் வழியில் ஒரு கோமாளியின் சிந்தனை!
 
14-Apr-2019 07:29:33 J.Viola said : Report Abuse
ஒவ்வொரு 60 ஆண்டுகளும் எக்த்தனை மாதங்களை உள்ளடக்கியது? மீண்டும் மீண்டும் இந்த சுழற்சியில் தான் ஆண்டுகள் வருமா?
 
14-Jul-2017 11:43:58 தஞ்சை கோ.கண்ணன் said : Report Abuse
சமற்கிருத இடைச் செருகலுக்கு தமிழ்ப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்போர் தமிழையும், ஏனையோர் அவர் விரும்பியவாறு ....... நாயக்கர் காலத்தே கோவிந்த தீட்சிதர் தெலுங்கு மொழிக்கென அமைச்சராவார். நாயக்கர் காலத்தே அமைத்த கும்ப கோணம் வேத பாடசாலைக்கு இன்றும் "ராஜா வேத பாடசாலை" என்றே அழைக்கப் படுகிறது. திருவாரூர் சியாமா சாத்திரியைத் தூக்கிப் பிடித்த கோவிந்த தீட்சிதர் நல்ல பல பணிகளைப் பண்ணியது அறிந்தோர் அறிவர். தமிழ் தெலுன்கானதும், பழனி தமிழ் ஓதிய பண்டாரங்கள் விரட்டப்பட்டு சிவாசாரியார் அட்டோத்திரம் நாயக்க மன்னனுக்காக ஓதத் தொடங்கியது பழனி செப்புப் பட்டயம் உரைக்கும். எல்லாமே தலைகீழ். கி.பி. 1311- க்குப் பிறகு தமிழனுக்கு அரசியல் அனைத்துமே தமிழரல்லாதோர் ஆதிக்கமே உங்கள் வினாவிற்கு காரணி.
 
19-Apr-2017 03:25:58 சதீஸ்.போ said : Report Abuse
அய்யா இதற்க்கு ஆதாரம் உள்ளதா???
 
05-Apr-2017 14:33:02 சந்திரமௌலி said : Report Abuse
ஐயா வணக்கம் . மேற்கண்டவைக்கு ஆதாரம் உண்டா?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.