LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF

8- ம் வகுப்பு தனித்தேர்வுக்கு டிசம்பர் 5-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

2019 -ம் ஆண்டு 8 -ம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வாக எழுத விரும்புவோர் குறிப்பிட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

2019 -ம் ஆண்டு தனித்தேர்வர்களாக எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்புவோர் நவம்பர் 26ம் தேதி முதல், டிசம்பர் 5ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக மற்ற நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களில் நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
இந்த தேர்வு எழுத 1.1.2019 அன்று பன்னிரண்டரை வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் 125, ஆன்லைன் பதிவு கட்டணம் 50 சேர்த்து 175 ஐ சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம். 

ஆன்லைன் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல்/ பதிவுத்தாள் நகல்/ பிறப்பு சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

8- ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஏற்கனவே எழுதிய தேர்வு சான்றிதழ்/ சான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்கள் அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட உறை ஒன்றை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

by Mani Bharathi   on 25 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவில் ஆசிரியர் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது இந்தியாவில் ஆசிரியர் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது
5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளைக் கட்டணமின்றி  வழங்கும் மத்திய அரசு 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளைக் கட்டணமின்றி வழங்கும் மத்திய அரசு
தமிழக மாநிலக் கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் என்னென்ன? தமிழக மாநிலக் கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
புதுச்சேரியில்  மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு
சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
6-ஆம் வகுப்பு மாணவா்களில் 47% பேருக்கு 10-ஆம் வாய்ப்பாடு தெரியவில்லை -  மத்தியக் கல்வி அமைச்சகம் 6-ஆம் வகுப்பு மாணவா்களில் 47% பேருக்கு 10-ஆம் வாய்ப்பாடு தெரியவில்லை - மத்தியக் கல்வி அமைச்சகம்
ஆராய்ச்சிப் பயிற்சிக்குச் சென்ற தமிழக மாணவர்களுக்குக் கைகொடுத்து உபசரித்த கொரியத் தமிழ்ச்சங்கம் ஆராய்ச்சிப் பயிற்சிக்குச் சென்ற தமிழக மாணவர்களுக்குக் கைகொடுத்து உபசரித்த கொரியத் தமிழ்ச்சங்கம்
12-ம் வகுப்பு முடித்தவர்கள் உதவித்தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கலாம் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் உதவித்தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கலாம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.