LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் மறையோதல்

#அறன் வலியுறுத்தல் || திருக்குறள் - அதிகாரம் 4 || Aran Valiyuruththal || திருக்குறள் மறையோதல்

குறள் 31:

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

 

 
விளக்கம்:
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?
 
 

குறள் 32:

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

 

விளக்கம்:
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
 
 

குறள் 33:

ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

 

விளக்கம்:
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
 
 

குறள் 34:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

 

விளக்கம்:
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
 
 

குறள் 35:

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்

 

விளக்கம்:
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
 
 

குறள் 36:

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

 

 
விளக்கம்:
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.
 
 

குறள் 37:

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை

 

விளக்கம்:
பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
 
 

குறள் 38:

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்

 

விளக்கம்:
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
 
 

குறள் 39:

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல

 

விளக்கம்:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
 
 

குறள் 40:

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

 

விளக்கம்:
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
by Swathi   on 01 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு திருக்குறள் எழுதும் தண்டனை ஹெல்மெட் அணியாதவர்களுக்கு திருக்குறள் எழுதும் தண்டனை
உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் போட்டி உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் போட்டி
குறள் வழி  மாத இதழ்  - நவம்பர் 2023  உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - நவம்பர் 2023 உங்கள் வாசிப்பிற்கு
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய திருக்குறள் மூன்றாவது பதிப்பு சிகாகோவில் வெளியீடு ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய திருக்குறள் மூன்றாவது பதிப்பு சிகாகோவில் வெளியீடு
புதுக்கவிதையில் காமத்துப்பால் - ஆசி கண்ணம்பிரத்தினம். புதுக்கவிதையில் காமத்துப்பால் - ஆசி கண்ணம்பிரத்தினம்.
வள்ளுவரின் கோபமும் சாபமும் - கமலா கந்தசாமி வள்ளுவரின் கோபமும் சாபமும் - கமலா கந்தசாமி
திருவள்ளுவர் - ஞானவெட்டியான் என்னும் ஞானவெட்டி திருவள்ளுவர் - ஞானவெட்டியான் என்னும் ஞானவெட்டி
திருக்குறள் விளக்க நீதிக்கதைகள் -லட்சுமி அம்மாள் திருக்குறள் விளக்க நீதிக்கதைகள் -லட்சுமி அம்மாள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.