|
||||||||
தமிழர்கள் கவனத்திற்கு ஒரு திறந்த கடிதம் : தேமொழி |
||||||||
![]() தமிழர்கள் கவனத்திற்கு ஒரு திறந்த கடிதம் :
உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research -IATR) என்ற பெயரில் உலகளாவிய தமிழ் மாநாடுகள் நடத்தும் ""போட்டி மாநாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தமிழர் கடமை"".
மீண்டும் தமிழர்களைக் குழப்பும் வகையில் "உலகத் தமிழ் மாநாடு" குறித்த அறிவிப்புகள் தொடங்கியுள்ளன.
12 ஆவது உலகத் தமிழ் மாநாடு அறிவிப்பு – மொரிசியசு
இது ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) கொடுத்த அறிவிப்பு
12 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சென்னை
உலகத்தமிழ் ஆராய்ச்சிமன்றம் சார்பில், அடுத்தாண்டு மே மாதம், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 12வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மூன்று நாள் மாநாடு நடக்க உள்ளது.
***இந்த இரு பிரிவுகளில் யார் "உலகத் தமிழ் மாநாடு" என்பதை நடத்தச் சட்டப்படி உரிமை உள்ளவர்????***
'உலகத் தமிழாராய்ச்சி மன்றம்' (International Association of Tamil Research -IATR) என்ற அமைப்பின் உரிமையாளர் யார் என்பதை முதலில் தமிழர்களுக்குத் தெளிவு படுத்துங்கள்
ஏன் இந்தக் குளறுபடிகள்?
தகுதி உள்ளவர் மட்டுமே ஒன்றில் தொடங்கி 12 வரை உலகத் தமிழ் மாநாடுகள் என்ற தொடர் வரிசைக்கு உரிமை கொண்டாட முடியும் எனத் தெளிக.
உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்று அமைப்பின் பெயர் இருந்தாலும், இதுவரை நடத்தப்பட்ட மாநாடுகள் யாவும் "உலகத் தமிழ் மாநாடு" என்ற பெயரில் மட்டுமே நடத்தப்பட்டது. மாநாட்டு மலர்களும் "உலகத் தமிழ் மாநாட்டு மலர்" என்றுதான் வெளியிடப்பட்டன.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்ற பெயரில் மாநாடுகள் முன்னர் நடத்தப்படவில்லை என்பது தெளிவாகக் காட்டும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்ற பெயரில் மாநாடு நடத்துவது சரியா என்று.
இப்பொழுது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்த முற்படும் பிரிவால் "உலகத் தமிழ் மாநாடு" என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக நடத்த முடியுமா? அதற்குத் தக்க உரிமை உள்ளதா?
இல்லையெனில் இவர்கள் 12 ஆவது என்ற மாநாட்டு வரிசை எண்ணைப் பயன்படுத்தவும் தகுதி அற்றவர்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தகுதி அற்றவர்கள் வேறு பெயரில் ஒன்று அடுத்து இரண்டு என்று தொடருங்கள்.
தமிழ்நாட்டு அரசு இந்த இரு பிரிவினருக்குமே எந்த வகையிலும் மாநாட்டிற்கான ஆதரவும் நிதி உதவிகளும் செய்வது சரியல்ல.
விக்கிப்பீடியா பதிவுகளும் உலகத் தமிழ் மாநாடு என்ற தலைப்பில் மட்டுமே இருக்க வேண்டும்.
முதலில் உண்மை எது போலி எது என்பது தீர்மானிக்கப்பட வேண்டும்.
அதன் பின்னர் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தட்டும், மக்களும், அரசும், ஆய்வாளர்களும், தமிழர்களும் ஆதரிக்கட்டும்.
சென்ற முறையிலிருந்து இந்த நிலை நகைப்பிற்கு இடமாக உள்ளது.
தமிழர் நலம் நாடும்
முனைவர் தேமொழி
#IATR
|
||||||||
by Swathi on 02 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|