கைசுளுக்கி வர்மம் :
தோள் பட்டை வலி சரியாகும். கைகளில் உள்ள வலி நீங்கும். மேல் தாரை வலி நீங்கும்.
சிப்பி வர்மம் :
தோள் பட்டை எலும்புக்கும் சவ்வுக்கும் எண்ணை பசையை கொடுக்கும்.
நட்டெல் வர்மம் :
உடலின் ஆற்றலை தலைக்கு எடுத்து செல்லும், பஞ்ச வர்ண குகையில் உள்ள உறுப்புகளுக்கு ஆற்றலை கொடுக்கும். முதுகு எலும்பு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். கை, கால் பலம் பெறும், வாத நோய் நீங்கும்.
பூணூல் காலம் :
வாந்தி, இரத்த வாந்தி, எதிரிகளால் வரும் “நெகட்டிவ் அலைஅதிர்வை” தடுக்கும். அனைத்து விதமான நரம்பு தளர்ச்சியும் நீங்கும், குளிர் மாறும், உடல் சூடு ஏற்படும்.
வாயு காலம் :
வர்மத்தின் தலையாய வாய்வு ஆன “வியானன்” இங்கு அமர்ந்து இருக்கும், வாயு பிடிப்பை சீராக்கும். சர்கரை வியாதியை சரிசெய்யும். இடுப்பு சதை வலியை போக்கும்.
சுழியாடி வர்மம் :
தோள், கைகளுக்கு இரத்த ஓட்டம் சரியாகும், கழுத்து வலி நீங்கும், மூளை சுறு சுறுப்படையும்.
முடிச்சு வர்மம் :
கழுத்து வலி, ஆன்மீகத்தில் பயன் படும், சிவப்பு தந்திரத்தில் இதை “பொன் நெட்டி” என சொல்வார்கள். மன நோய் சரியாகும்.
நங்கணா பூட்டு :
கால்களுக்கு ஆற்றலை செலுத்தும். கால்களுக்கு இரத்த ஓட்டம் சரிப்படும்.
|