|
||||||||
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages |
||||||||
சிங்கப்பூரைத் தொடர்ந்து மலேசியாவில் "Thirukkural Translations in World Languages" நூல் மிகச்சிறப்பாக வெளியிடப்பட்டது. விழாவை மலேசிய தமிழ் ஆளுமைகள் திரு.கே.ஏ.குணா , திரு.மன்னர் மன்னன் ,முனைவர் குமரன் வேலு, திரு. எஸ். பி.கருப்பையா ஆகியோர் பல அமைப்புகளை ஒருங்கிணைத்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
விழாவில் திரு.கே.ஏ.குணா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். திரு.மன்னர் மன்னன் அவர்கள் பங்கேற்றவர்களை அறிமுகம் செய்துவைத்தார்.
அறிமுகம் முடிந்ததும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட பேராசிரியர் டான்ஸ்ரீ டத்தோ.டாக்டர்.த. மாரிமுத்து அவர்கள் நூலை வெளியிட பேராசிரியர் டத்தோ.டாக்டர்.டெனிசன்ஜெயசூரியா பெற்றுக்கொண்டார். இருவரும் வாழ்த்துரை வழங்கினர். வாழ்த்துரையில், டத்தோ.டாக்டர். டெனிசன் ஜெயசூரியா, திருவள்ளுவரின் சிந்தனைகளை மக்களிடம் பரவலாக்குவது அவசியம் என்று குறிப்பிட்டார்.
பேராசிரியர் டான்சிரி(டான்ஸ்ரீ).டத்தோ டாக்டர்.த. மாரிமுத்து அவர்கள் பேசுகையில் இது ஓர் அரிய முயற்சி. இதில் ஈடுபட்டுள்ள குழுவினரை மனதாரப் பாராட்டுகிறேன். மேலும் மொழிபெயர்க்கப்படவேண்டிய பிற மொழிகளிலும் கொண்டுவருவது அவசியம் என்று குறிப்பிட்டார்.
திரு.ச.பார்த்தசாரதி நூல் குறித்தும் ,மொழிபெயர்ப்புத் தொகுப்பு பயணம் குறித்தும் , திருக்குறள் 2030 இலக்கு குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். பங்கேற்பாளர்கள் கேள்வி - பதில் பகுதி இடம்பெற்றது.
தமிழ் அமைப்புகளின் தலைவர்கள், இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்த இளையோர் , தமிழ் ஆசிரியர்கள், கல்வித்துறையை சார்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்ட விழாவாக அமைந்தது.
நிகழ்ச்சியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மேனாள் தலைவரும் அதன் அயலகத் துறைப் பொறுப்பாளருமான திரு.இராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் பலரின் வாழ்த்துரைகள் இடம்பெற்றன.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் நூல்களைப் பெற்றுக்கொண்டனர். நூல்கள் கிடைக்காத பலரை www.eStore.ValaiTamil.com இணையத்தில் பெற கேட்டுக்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரை கூறி நிறைவடைந்தது.
|
||||||||
by Swathi on 28 Apr 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|