LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- ஆங்கிலம்

தமிழ்வழிஆங்கிலம் -a ,an பயன்படுத்தும் முறையும் , செய்யும் தவறுகளும்


ஆங்கிலத்தில் எழுதும் ஆர்வம் உள்ள எல்லோரும் ஒருமையை (singularity) குறிக்கும் “A” மற்றும் “AN” எந்தெந்த இடங்களில் உபயோகிப்பது சரி-தவறு என்பதில் தடுமாறுவோம். இதை சந்திக்காதவர்கள் எவரும் இல்லை. பலருக்கும் எங்கு A உபயோகிக்க வேண்டும், எங்கு AN உபயோகிக்க வேண்டும் என்பதில் குழப்பம் இன்றுவரை உண்டு. இது ஆங்கிலத்தில் எளிதில் நாம் புரிந்துகொள்ள முடியாத வரைமுறைகளில் ஒன்று. ஆனால் அடிப்படை புரிந்துகொண்டால் சரிசெய்து கொள்ளக் கூடிய விஷயம் தான்.

பள்ளிகளில், vowels (a,e,i,o,u) எனப்படும் ஆங்கில மொழி உயிரெழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன் “an” உபயோகிக்க வேண்டும் என்று பொத்தாம்பொதுவாக சொல்லித்தரப்படும் தவறின் நீண்ட கால சங்கடம் இது.

ஆங்கிலத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறை சரிசெய்ய முதலில் தமிழின் அடிப்படை சரியாக தெரிந்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இரண்டு விஷயங்கள் அவசியம்.
1. தமிழ் மொழியின் உயிரெழுத்துகள் (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ).
2. ஆங்கில சொற்களின் சரியான உச்சரிப்பு.

ஒரு ஆங்கிலச் சொல்லின் உச்சரிப்பு “நேரடி” தமிழ் உயிரெழுத்தில் தொடங்கினால் அந்த சொல்லுக்கு முன் “ஒருமையை” குறிக்க “an” பயன்படுத்த வேண்டும். மற்றவைக்கு “a” தான் பயன்படுத்த வேண்டும்.

சில உதாரணங்கள்:
1. She is an honest lady (உச்சரிப்பு: ஆனஸ்ட் என்பதால் an).
2. He arrived an hour ago (உச்சரிப்பு: ஆஹ்ர் என்பதால் an).
3. This is not an honourable job (உச்சரிப்பு ஆஹ்னரபுள் - ஹானரபுள் இல்லை என்பதால் an தான் சரியானது).
4. He has registered to study an MBA course in marketing. (உச்சரிப்பு: எம்பிஏ - தமிழ் உயிரெழுத்து தொடக்கம் - யம்பிஏ இல்லை - அதனால் an தான் சரியானது)
5. This is a highlight from his career (உச்சரிப்பு: ஹைலைட் - அது ஐலைட் இல்லை என்பதால் a தான் சரியானது)
6. She is staying in a hotel (ஹோட்டேல் - அது ஓட்டல் இல்லை என்பதால் a தான் சரியானது).
7. France is a European country. (E என்ற vowel தொடக்கமானாலும் அதன் ஆங்கில உச்சரிப்பு யூரோப்பியன் - ஈரோப்பியன்/ஐரோப்பியன் இல்லை என்பதால் a தான் சரி)
8. He studied in a University (U என்ற vowel தொடக்கமானாலும் அதன் உச்சரிப்பு யூனிவர்சிட்டி - அதனால் a தான்).
9. There is a unit allotted for you (U என்ற vowel தொடக்கமானாலும் அதன் உச்சரிப்பு யூனிட் - அதனால் a தான்)
10. He flew in a helicopter (உச்சரிப்பு: ஹெலிகாப்டர். அது எலிகாப்டர் இல்லை என்பதால் a தான் சரி)

இதுவரையில் பலரின் பதிவுகளிலும், சிலரின் resume-cover letterகளில் கூட a/an தவறாக பயன்படுத்தப்படுவதை பார்த்துள்ளதால் இதை இன்று எழுதி பகிர்கிறேன்.
“I have a experience in....”, “I have a efficient understanding....”, “I have been receiving a hourly compensation of...” என்பவை எல்லாமும் a/an தவறாக பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்கள். இப்படி எழுதுவதால் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது தேர்வாவதற்கு முன்னாலேயே, உங்கள் ஆங்கில எழுத்து நடையால் ஏற்படும் சந்தேகத்தால், திறமையிருந்தும் நீங்கள் நிராகரிக்ப்பட வாய்ப்புகளே அதிகம். மொழியின் சில அடிப்படை விஷயங்களில் கவனமாக இருத்தல் நல்லது.

by Swathi   on 21 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி
இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது! இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது!
கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை! கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.