LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இராசி பலன்கள் Print Friendly and PDF

ஜோதிடம் ஒரு அறிவியல்

ஜோதிடம் உண்மையா? பொய்யா? இதை எந்த அளவுக்கு நம்பலாம்? "ஜோதிஷ்" என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து மருவி வந்த சொல்லே ஜோதிடம் ஆகும். ஜோதிஷ் என்றால் ஒளி அல்லது வெளிச்சம் என்று பொருள். இருளில் பாதை தெரியாத ஒருவருக்கு எந்த திசையில் செல்வது என்று சரியான வழிகாட்டுவதே ஜோதிடம் ஆகும். இதை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். புயல் வரும்போது கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று சொல்வது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புக்காகவே. ஒருவேளை புயல் திசை மாறலாம் அல்லது காற்றின் வேகம் குறையலாம், புயல் வராமலும் போகலாம். நம் வாழ்க்கையில் சில விஷயங்களுக்கு நம்பிக்கை இல்லாதபோது கஷ்டம் வரும்போது  நம்பாதது  தவறு என்று உணருவோம். 


 ஒரு மருத்துவர் ஒரே விதமான நோய்க்கு மூன்று பேருக்கு ஒரே விதமான மருந்தை கொடுத்தபோது ஒருவருக்கு குணமாகிறது, மற்றொருவருக்கு இன்னும் சில நாட்கள் மருந்தும் சிகிச்சையும் தேவைப்படுகிறது. வேறொருவருக்கு குணமாகும் அறிகுறியே தெரியவில்லை  என்றால் தவறு மருத்துவருடையது அல்ல. அதனால் மருத்துவம் பொய்யாகி விடாது. ஒவ்வொருவருடைய உடல் தன்மைக்கு ஏற்றவாறு மருந்து வேலை செய்கிறது. எனவே சிலருக்கு  அடுத்தக் கட்ட சிகிச்சை சிலருக்கு தேவைப்படுகிறது. இதைப் போலவே ஒருவருடைய முன்பிறவி பாவ புண்ணியத்திற்கேற்ப (நோயாளியின் உடல் தன்மைக்கேற்றபடி)  பலன்கள் மாறுபடும். அது மட்டுமல்ல. அவருடைய முன்னோர் செய்த பாவமும் ஒரு தண்டனையாக அவரைத் தொடரும். இதையும் ஒரு உதாரணத்தோடு விளக்கலாம். அனில் அம்பானியோ, முகேஷ் அம்பானியோ பிறந்த அதே நேரத்தில் அதே ஊரில் பிறந்த வேறு யாரோ ஒருவர் அதே கிரக நிலைகள் இருந்தாலும்  இவர்களைப்போல் கோடீஸ்வராக  ஆகவில்லை. ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்வதும் அல்லது துன்பப்படுவதும்  பல தலைமுறைகளாக செய்த வினைப்பயன்களே காரணமாகும். 

 நியூட்டனின் மூன்றாவது விதி என்ன சொல்லுகிறது? ஒவ்வொரு செயலும் (வினையும்) அதற்கு இணையான சமமான எதிரான பின்விளைவை (எதிர்வினையை) ஏற்படுத்தும் என்பதே நியூட்டனின் மூன்றாவது விதி ஆகும். இதைப் போலவே ஒருவராலோ அவருடைய முன்னோர்களகாலோ செய்யப்பட்ட பாவ புண்ணியங்கள் எதிர்வினையாக இந்தப் பிறவியிலும் தொடரும். இதைத் தான் திருவள்ளுவர் மிக எளிமையாக "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்" என்று சொல்கிறார்.  ஒருவருடைய பிறந்த நேரத்தில் இருக்கும் கிரகநிலைகள் அவருடைய முன்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களை தெளிவாகக் காட்டும். அதே கிரக நிலைகள் அவருடைய வாழ்நாள் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும். 

 ஒருவருடைய ஜாதகம் என்பது அவர் பிறந்தபோது ஒன்பது கிரகங்கள் இருந்த ராசிகள், ஒன்றுக்கொன்று எந்த விதமான தொடர்பில் இருக்கின்றன, பலம், பலமின்மை, மறைவிடங்கள் அல்லது அசுபமான இடங்கள் மற்றும் கிரகங்களின் பார்வைகள் போன்றவற்றுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட ஜோதிட நூல்களே இதற்கு ஆதாரங்கள்.


 ஒருவருடைய ஜாதகப்படி கிரகங்கள் நன்மையோ அல்லது தீமையோ செய்தே தீரும். மருத்துவர் கொடுத்த உரிய மருந்தும் சரியான சிகிச்சையும் ஒருவருக்கு நல்ல பலன் தரவில்லை. அதைப் போலவே சில நேரங்களில் சிலருக்கு கிரக நிலைகள் சாதகமாக இருந்த போதிலும் பூர்வ புண்ணிய பலம் இல்லையென்றால்  நல்லது நடப்பதில்லை. இதை ஒரு ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்குரிய சரியான பரிகாரங்களை செய்தால் நற்பலன் பெறலாம்.  பரிகாரம் என்றதும் நிறைய பணம் செலவு செய்து செய்வது என்று பொருள் அல்ல. இறைவனை மனதால் நினைத்து  வணங்குவது, வாயால் போற்றிப்பாடுவது,  பூஜைகள் செய்வது, இறைவனுக்கு கோயிலில் பணிவிடைகள் செய்வது, பக்தர்களுக்கு உதவுவது, கடவுளுக்கு அலங்காரம் செய்யத் தேவையான மலர்கள், துணிகள், மஞ்சள், குங்குமம் ஆகியற்றை கோயிலுக்கு வழங்குவது, பக்தர்களுக்கு பிரசாதங்கள் செய்து தருவது போன்றவைகளே மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

 நம்முடைய இறை பக்தி, நல்லொழுக்கம், பிறர்க்கு தீங்கு செய்யாமலிருத்தல், மற்றவருக்கு உதவி செய்தல் போன்றவற்றால் நமக்கு நன்மைகள் ஏற்படும். முன்பிறவி வினைப்படி தீமைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி பெரும் வல்லமையை நமக்குத் தரும். மேலும் இப்போது செய்யும் நல்ல செயல்களால் பிறகு நமக்கு நன்மை ஏற்படும்.

 எனவே ஜோதிடம் என்பது நம் முன் வினைப்பயன் சார்ந்த அறிவியல், வாழ்க்கையில் முக்கியமான நேரங்களில்  நாம் அடுத்து எடுக்க வேண்டிய நிலை என்ன? போக வேண்டிய பாதை எது? என்று வழிகாட்டும் ஒளி என்றும் சொன்னால்  மிகையாகாது.  -        ஜோதிடர் பலராமன்

 

by Swathi   on 22 Jan 2012  3 Comments
 தொடர்புடையவை-Related Articles
குரு பெயர்ச்சி இராசி பலன்கள் !! குரு பெயர்ச்சி இராசி பலன்கள் !!
அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ? அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ?
பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா? பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா?
27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் !! 27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் !!
பெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது? பெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது?
அலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்? அலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்?
பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள் பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள்
ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது ? ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது ?
கருத்துகள்
02-Sep-2019 08:45:59 k.venkatesan said : Report Abuse
நல்ல கருது
 
17-Aug-2014 02:25:33 devi kiruthika said : Report Abuse
Yanathu rasi methunam nakshatram merugasridam yanathu kanavar rasi thulam nakshatram suvathi yathikalam yapadi irukum
 
01-Feb-2012 09:54:06 loganathan said : Report Abuse
ஜோதிடம் என்பது நம் முன் வினைப்பயன் சார்ந்த அறிவியல், ok super
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.