LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இராசி பலன்கள் Print Friendly and PDF

பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா?

 ஆம்.

கோள்களின் இயக்கங்கள் என்ன உணர்த்துகின்றன என்பது தான் ஜோதிடம்.  கோள்கள் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு கோளும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு எடுத்துக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக சந்திரன் இரண்டரை நாள், சனி இரண்டரை வருடம். இந்த இடமாற்ற விளைவுதான் விதிக்கப்பட்ட விதியின் விளையாட்டு.  

 

 ஜெனன ஜாதகத்தை வைத்து வர்க்கச் சக்கரங்களின் உதவியுடனும் திசாபுத்தி அந்தரங்களின் மூலம் கணிக்கப்பட்டு கூறப்படுவது தான் ஜாதகப் பலன்கள். அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நம்பகமானது. இது நம்முடைய தனிப்பட்ட ஜாதக பலன்கள் ஆகும்.

 

 இன்று பத்திரிக்கைகளிலும், வார மாத நாளிதழ்களில் வரும் ராசிபலன்கள் என்பது சந்திரனை மையப்படுத்தி கூறப்படும் ராசி பலன். சந்திரன் மனோகாரகன். மனம் அது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்கத் தேவையில்லை. அந்த மனத்திற்கு காரகர் சந்திரன். நம்முடைய எண்ணங்களின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பது தான் பொதுவான ராசி பலன். மேலும் அன்றைய நடப்பு நட்சத்திரங்களின் பங்கு மிக முக்கியம். நட்சத்திரங்கள் இருக்கும் இடம் தான் சந்திரன் இருக்கும் இடம் அதனால் நட்சத்திரமும் சந்திரனும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

 

 இவற்றை வைத்துத் தான் பொதுப் பலன்கள் எழுதப் படுகின்றன. ஒரே ராசியில் கோடி பேர்கள் இருக்கிறார்கள். ஒரு வார்த்தையில் உள்ள பலன் அணைவருக்கும் ஒன்றாக அமையுமா? என்றால் அமையும். இராசிபலன்கள் ஒரு கிரகத்தைமட்டும் வைத்து கூறப்படுவதில்லை. ஒன்பது கோள்களின் நிலையையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் பலன்கள் கூறப்படுகின்றன. தினப்பலன்கள் கூட அன்றைய தினத்தில் அந்த ராசியில் பிறந்தோரின் மனோநிலையை அது பிரதிபலிக்கும்.  மனோநிலை என்பது என்ன? கோபம், ஏக்கம், மகிழ்ச்சி, துக்கம் இது போன்ற உணர்ச்சிகள் தான். இது அன்றைய தினத்தின் வெளிப்பாடாக இருக்கும். இது ஏறக்குறைய உண்மையாக இருப்பதால் தான் இன்று அனைத்து தொடர்பு சாதனங்களிலும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.

 

 குருபெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள் போன்ற பெயர்ச்சி பலன்கள் அந்தந்த ராசிக்குரிய கோச்சார நிலையை மையமாக வைத்து பலன்கள் கூறப்படுகின்றன. அட்டமத்து சனி நல்லது செய்யாது என்று இராசியை வைத்து மட்டும் கூறுவது சிறப்பல்ல. ஜெனன ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்து திசை புத்தி அந்தரம் நடத்தும் போது அட்டமத்து சனி விபரீத இராஜயோகத்தைக் கொடுக்கலாம்.

 

சாதகருடைய பலன்கள் முழுவதுமாக இதில் அடங்குவதில்லை. கோச்சாரப் பலன்கள் முழுவதும் ஜெனன கால ஜாதகத்தை வைத்தே பார்க்கப்பட வேண்டும். அப்பொழுது தான் அது சரியான தீர்வைத் தரும். அப்படியிருக்க இதற்கு ஏன் இந்த முக்கியத்துவம்? 

 

 இது ஒரு முதலுதவி அதனால் தான் இந்த முக்கியத்துவம்.

by tmm_raj_ramesh   on 28 Oct 2013  19 Comments
Tags: ராசிபலன்   ராசி   ஜோதிடம்   ஜாதகம்   ராசிபலன்கள்   Astrology   Rasipalan  
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
31-Dec-2015 06:23:52 pavithra said : Report Abuse
sir vanakam.en rasi methunam natchatheram punarpoosam .enaku life nala padi eruguma gov job kidikuma.
 
14-Sep-2015 11:18:13 seethalakshmi said : Report Abuse
Pls tell me good job and future life.
 
14-Sep-2015 08:23:50 sucila e said : Thank you
Vannakkam sir ,18021982 2.45am pls tell me about marriage.
 
14-May-2015 22:38:08 anand said : Report Abuse
ஜாதகத்தை நம்பமாட்டாங்களாம் காசு இருக்கு கடவுள் இருக்கு இதை மட்டும் ஏன் ....?
 
14-May-2015 22:34:21 godhavari said : Report Abuse
இதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை
 
27-Mar-2015 04:27:06 சூர்யா said : Report Abuse
ஜாதகம் எல்லாம் பொய்யானது உழைப்பு உயர் ந்தது.
 
25-Feb-2015 22:14:33 manogaran said : Report Abuse
நன் கடக ரசி இபோதும் கஷ்டமா இருக்கிறது நன் என செய்வது.
 
25-Feb-2015 22:10:28 SUMATHI said : Report Abuse
நன் மேசம்ரசி எபொல்லுதும் பணம் கஷ்டமா இருக்கிறது இர்தருகு நன் என்ன செய்ய வேண்டும் .
 
28-Dec-2014 10:33:46 ர.ayyappan said : Report Abuse
நான் கடகம் ராசி எனக்கு காதல் ஒத்து வராத
 
18-Dec-2014 00:24:20 parthipban.p said : Report Abuse
என் பெயர் பார்த்திபன் பிறந்த தேதி 24/12/1992 எனக்கு என்ன ராசி நட்சத்திரம் வரும்
 
30-Jul-2014 01:21:58 அ.ரவி said : Report Abuse
எனக்கு ஜாதகம் எதுவும் இல்லை பெயரை வைத்து ஜாதகம் நட்சத்திரம் ராசிபலன் தெரிஞ்சுக்கலாமா
 
28-Jun-2014 01:59:52 jansirani said : Report Abuse
நன் ஒருவரை விரும்புகிறேன் விட்டிலும் சம்மதம் தான் அனால் எங்கள் இருவரின் ஜாதகமும் சரி இல்லை திருமணம் செய்தல் இருவரின் உயிருக்கும் ஆபத்து இல்லை என்றால் இருவரும் பிரிந்து விடுவோம் என்று சொல்கிறார்கள் நன் என்ன செய்வது ஜாதகத்தை நம்பலாமா வேண்டாமா
 
15-Jun-2014 08:59:28 ramesh said : Report Abuse
mohana search naadi jothidar.U can get ur entire details from Naadi jothidam
 
20-May-2014 20:25:13 saiboudine said : Report Abuse
என்னுடைய பிறந்த தேதி 21/09/1981 எனக்கு என்ன ராசி என்று சொல்ல முடியுமா ? நன்றி !
 
03-Mar-2014 12:36:04 gnanamuthu said : Report Abuse
ரசி கன்னி rasi
 
12-Feb-2014 05:11:34 mohana said : Report Abuse
எனக்கு ஜாதகம் இல்லை அதானல் நிறைய வரன் தட்டி போய்டுச்சு. நான் திருமணம் செய்வதற்கு என்னா செய்ய வேண்டும்.
 
12-Feb-2014 05:11:33 mohana said : Report Abuse
எனக்கு ஜாதகம் இல்லை அதானல் நிறைய வரன் தட்டி போய்டுச்சு. நான் திருமணம் செய்வதற்கு என்னா செய்ய வேண்டும்.
 
12-Feb-2014 05:11:16 mohana said : Thank you
எனக்கு ஜாதகம் இல்லை அதானல் நிறைய வரன் தட்டி போய்டுச்சு. நான் திருமணம் செய்வதற்கு என்னா செய்ய வேண்டும்.
 
05-Feb-2014 21:26:31 ்Elango said : Report Abuse
நான் மகர ராசி நேயர் இபொது நான் மீகுண்ட சோதநை காலமாக உளது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.