LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் மட்டும் Print Friendly and PDF
- கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women)

கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்களின் ஆரோக்கியம்!

உங்கள் கருப்பையில் முட்டை வளரும் காலத்திலிருந்தே உங்கள் குழந்தையின் ஊட்டச்சத்து உங்கள் கைகளில் உள்ளது. ஆகவே நீங்கள் கருவுற்றிருக்கும் போது இருக்கும் போது உங்கள் உடலின் ஊட்டச்சத்து ஒரு மிக மிக முக்கியமான பங்கை ஆற்றுகிறது. நீங்கள் உட்கொள்ளும் பொருட்களில் கவனமாக இருப்பது நல்லது. இரண்டாவது உயிர் ஒன்று உங்களுக்குள் வளர்ந்து வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கருவுற்றிருக்கும் முதல் 3 மாத காலத்தில் நம் குழந்தையை பெறப்போகிறோம் என்ற மகிழ்ச்சி இருக்கும்.

 

     அதே சமயத்தில் அடிக்கடி குமட்டலும் வந்து கஷ்டப்படுத்தும். கருவுற்றிருக்கும் பெண்கள், எதைச்சாப்பிடவேண்டும், அல்லது எதைச் சாப்பிடக் கூடாது என்பது பற்றிய தவறான தகவல்களினால், சில சமயம் ஞயசயnடியை என்ற பீதி மனநோயால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. இதனால் உணவுகளில் எவ்வளவு கொழுப்பு சத்து உள்ளது என்று கணக்கு போடுவதும், சாதாரணமாக உட்கொள்ளும் அப்பம் போன்றவற்றை சாப்பிட்டபிறகு பெரிய குற்ற உணர்வு ஏற்பட்டு இவர்கள் அல்லல் படுவதுண்டு. மற்ற நேரத்தை விட உங்கள் வாழ்க்கையில் கருவுற்று இருக்கும்போது ஊட்டச்சத்து அதிகமாக தேவைப்படுகிறது. அதற்காக உங்களுக்கு பிடிக்காத உணவை நீங்கள் சாப்பிட வேண்டிய அவசியமில்லை.

 

     ஆனாலும், கருவுற்றிருக்கும் போது சில வகையான உணவுப் பொருட்களை உட்கொள்ளக் கூடாது. இது கருவின் வளர்ச்சியை பாதிக்கும். சாப்பாட்டின் மேல் வெறுப்பு, வாசனையில் மாற்றங்கள், குமட்டல், வாந்தி, இதனால் ஏற்படும் கர்ப்பகால தொல்லைகள், `ஆடிசniபே ளுiஉமநேளள' போன்றவைகள் கருவுற்றிருக்கும் முதல் 3 மாத காலங்களில் ஏற்படும். இவை பிறவிக் குறைகளை உருவாக்கும் இயற்கை தாவரங்கள் மற்றும், பாக்டீரியவின் நச்சுத் தன்மைகளிலிருந்து பாதுகாக்கவே உடலில் ஏற்படுகின்றன.

 

     மனிதர்களின் துவக்க காலத்திலிருந்தே, அதாவது மிருகங்களை வேட்டையாடி, காட்டுத் தாவரங்களை உணவாக உட்கொண்ட காலத்திலிருந்தே நம்முள் இதுபோன்ற இயற்கையான தடுப்பு சக்தி இருந்து வருகிறது.
சில பெண்களுக்கு இந்த பிரச்னைகள் ஏற்படுவதில்லை. எந்தவிதமான நச்சுப் பொருளும், அபாயகரமான உணவும் இவர்களை ஒன்றும் செய்யாவிட்டாலும், கருவுற்றிருக்கும் முதல் 3 மாத காலத்தில் இவர்கள் அதுபோன்ற உணவை தவிர்ப்பது நல்லது.

 

     பூண்டு போன்ற காரமான மற்றும் கசப்பான உணவுகளையும், சுடப்பட்ட, வறுக்கப்பட்ட இறைச்சி உணவுகளையும், டீ, காபி போன்றவைகளையும் தவிர்ப்பது நல்லது. கீரை வகைகள் எளிதில் ஜீரணமாகாது. மாதவிடாய் இல்லாமல் போவது, சிறிய அளவில் எடை அதிகரிப்பு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் மார்பகங்களில் பொறிபொறியாக வருவது ஆகியவற்றை கருவுற்றிருக்கும் முதல் 3 மாதங்களில் கர்ப்பிணிகள் எதிர்பார்க்கலாம்.

 

     ஆனால், அளவுக்கதிகமான குமட்டல், வாந்தி, தலைவலி மற்று அவ்வளவு பயம் அவசியமற்றது. ஓரளவுக்கு நடுநிலையான உணவை உட்கொண்டு, ஆரோக்கியத்தை நன்றாகவே பராமரிக்கலாம். பெரிய கவலை ஒன்றும் தேவையில்லை. கருவுற்றிருக்கும் முதல் 3 மாத காலத்தில், குழந்தையின் முக்கியமான உறுப்புகளின் வளர்ச்சியும், உடல் அமைப்புகளின் உருவாக்கமும் நடைபெறுகிறது. இதனால் கருவிற்கு உங்கள் கவனம் அதிகமாக தேவைப்படுகிறது. சுத்தமான புறச்சூழல்களையும், ஊட்டச்சத்து மிக்க உணவு, நச்சுகளிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றை நீங்கள் அளித்தாலே போதுமானது.

 

     உங்களிடம் என்ன மாற்றம் ஏற்பட்டாலும், வெறும் பால் மட்டும் சாப்பிட்டாலே போதும் 100 காலோரி முதல் 200 கலோரி வரை ஏறிவிடும். ஆனால் கடைசி 6 மாத காலத்தில் குழந்தையிடம் காணப்படும் வளர்ச்சியினால், உங்களுக்கு கலோரியின் அளவு இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது. முதல் 3 மாதங்களில் கலோரி உணவு உட்கொள்ளுதல் அவ்வளவு முக்கியமானதல்ல. உடலை ஒரு நல்ல ஆரோக்கிய நிலையில் வைத்திருந்தாலே போதும்.

by Swathi   on 02 Jul 2014  9 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..? கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..?
கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !! கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !!
கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !! கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !!
குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர் குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர்
இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர் இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்?  ஹீலர் பாஸ்கர் தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு... கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு...
மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !! மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !!
கருத்துகள்
15-Mar-2020 15:38:19 Nivetha said : Report Abuse
I have missed my periods 2 days but lite white discharge and heavy back pain also its occurs what!
 
10-Oct-2019 14:47:35 Kaviya said : Report Abuse
Enaku missed period 6 days but no white discharge... It's very dry... Have chance to pregnant...
 
08-May-2017 20:46:29 M.sankaradevi said : Report Abuse
karpamagairikken ana bleeding agudhu
 
22-Jan-2017 02:03:03 Arjuna said : Report Abuse
Hi I am 2month pregnant. By mistake I take sesame seeds. Now my fear is sesame seeds affect mybaby
 
11-Jul-2016 03:15:42 vinitha said : Report Abuse
pregnancy time la chest pain varuma thottal valikuthu pls sollunga
 
13-Apr-2016 18:51:53 parveenjahir said : Report Abuse
Enaku romba mayakkam vomiting ah iruku mam ipo enaku 4months nadakutu weight loss agite iruku Mam so enaku romba bayama iruku food's pathale romba irritating ah iruku mam ithuku enna mam solution help me
 
13-Mar-2016 14:29:54 பவித்ரா prakash said : Report Abuse
Hi , naan Ippo 3 month pregnant enaku epavum en baby ninachu bayama iruku yenna en baby healthy aah endha koraum illama porakumanu bayama iruku . Adhey mari delivery na ennala thangika mudiumanu therila adhum bayama iruku mam . Enaku left buttex பின் adhigama iruku utkara kuda mudila adhu yen ? Andha pain poga enna seiya venum endha position la epavum padukanum . Enaku ippo cold pudicha en baby kum pudikuma mam . Aparam Enaku daily thalaila konjam kan mela konjam thailam thadavara pazhakam iruku idhanala en baby ku endha side effects um irukuma mam . Pls en confusion ellam clear panni vidunga mam pls pls pls .
 
09-May-2015 22:09:29 manjula Suresh said : Report Abuse
hi,I am 2 month pregnant so light ah stomach pail and black color raththa kasivu varuthu madam so plz help me...
 
25-Feb-2015 02:11:40 princy said : Report Abuse
ரொம்ப பிடிச்சுருக்கு இதுனால என்னோட பாபா நல்ல ஆரோக்கியமா பிறக்கும்.இதனையே நான் கண்டிப்பா செய்வேன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.