LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

எண்ணங்கள் ஆயிரம்! - இல.பிரகாசம்

உன்னைச் சுற்றி ஆயிரம் எண்ணங்கள்
உனக்கு உள்ளேயும் ஆயிரம் எண்ணங்கள்

உனக்காக காத்திருப்பதாக ஒரு எண்ணம்
நான் யாருக்காக? காத்திருக்கிறேன் என்ற
கேள்வியை கேட்கும் ஒரு எண்ணம்!

பிள்ளை பருவத்தில் ஏதும்
அறியாது விளையாட்டாய் எதையும்
எடுத்துக் கொள்வது அறியாமை என்ற
ஆரம்பப் பருவ எண்ணம்!

பருவம் அடைந்த போது துடுக்காய்
துள்ளித் திரியவேண்டும் என்கிற
இளமைக் கால எண்ணம்!

பருவம் தாண்டிய திருமண வயதில்
இளங் கன்னியின் மீதுகாதல் கொள்ளத்
தூண்டும் கண்களின் எண்ணம்!

கையில் காசு எவ்வளவு
காசுதான் வாழ்க்கையென தீர்மானம் போட்டு
காலம் முழுதும் பணத்தைத் தேடிட
வாழ்வையே வட்டிக் கடையில்
அடகுவைக்கின்ற
நடுத்தர குடிமக்கலென்னும் அடிமைகள் எண்ணம்!

வாழ்க்கையில் ஒவ்வொன்றாய் இழக்கிறபோது
வாழ்வின் அர்த்தங்கள் இதுவென்று
உணர்ந்திட முற்படுவது நாற்பதைத் தாண்டிய
நரம்பினை அடக்கிடயாள முற்படுகிற
இளங்கிழட்டு  எண்ணம்!

துன்பம் என்று வருகின்ற போது
இத்துயர வாழ்வெதற்கு? என்றெண்ணம்!

பேரின்பம் என்னும்
ஆன்மீகச் சிந்தனை தேடி
அறுபது வயதில் ஆசையடங்கிய
ஆன்மீக எண்ணம்!

- இல.பிரகாசம்.

by Swathi   on 01 Apr 2016  1 Comments
Tags: Ennangal   எண்ணங்கள்   எண்ணங்கள் கவிதை              
 தொடர்புடையவை-Related Articles
துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!! - கவிப்புயல் இனியவன் துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!! - கவிப்புயல் இனியவன்
எண்ணங்கள் ஆயிரம்! - இல.பிரகாசம் எண்ணங்கள் ஆயிரம்! - இல.பிரகாசம்
கருத்துகள்
02-Apr-2016 02:03:31 பிரகாசம் said : Report Abuse
பதிவிட்டமைக்கு நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.