LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) என்றால் என்ன?

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான்கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.

 

1. PAN CARD என்றால் என்ன?

 

Permanent Account Number என்பதின் சுருக்கமே.

 

2. அதன் முக்கியதுவம் என்ன?

 

வங்கி கணக்கு தொடங்குவதற்கும்,மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தையில் முதிலீடு செய்வதற்க்கும் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.

 

3. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

 

இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

 

4. அதற்கு என்ன செலவாகும்?

 

இதற்காக ரூபாய் 94/- NRI களுக்கு ரூபாய் 744/- மட்டுமே

செலவாகும். புரோக்கர் மூலமாக ரூபாய் 250/-முதல் செலவாகும்.

 

5. PAN CARD - ன் அவசியம்:

 

1) ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.

2) வாகனம் அல்லது மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக)

3) ரூ.50,000/-க்கு மேல் வங்கியில் Fixed Deposit செய்யும் போது அவசியம்.

4) அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000 தாண்டும் போது அவசியம்.

5) ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும் போது செய்யப்படும் பிணையங்களின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது அவசியம்.

6) வங்கி கணக்கு துவங்கும் போது.

7) தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது.

8) தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்கு செலுத்தும் கட்டணம் ரூ. 25,000/- மிகும் போது அவசியம்.

9) ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிகமாக செலுத்தும் போது அவசியம்.

10) வருமான வரி ரிட்டன தாக்கல் செய்ய அவசியம்.

11) சேவை வரி மற்றும் வணிக வரிதுறையில் பதிவு சான்று பெற Pan Card கட்டயமாகும்.

12) முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும் போதுதான் பான்கார்டு அவசியமிருந்தது. ஆனால், தற்போது எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.

மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.

 

இதனால் அனைவரும் அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பான் கார்டு பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினைக்கின்றனர். சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிகமான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம் அடித்தும் வருகின்றனர்.

 

"மத்திய அரசு 2007 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக்கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கியுள்ளது.

 

மேலும், இந்தக் கார்டை வாங்கினால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமான வரி செலுத்த வேண்டியிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும் வருமான வரம்புக்குள் கொண்டு வருவதற்காகவே இந்த பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

பான் கார்டு பெறுவதற்கான நடைமுறைகள் தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.

 

பான்கார்டு பெற விரும்புவோர் வருமான வரித்துறையின் Form49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான்றிதழை இணைக்க வேண்டும்.

இந்த விண்ணப்பப் படிவத்தை http://www.utitsl.co.in/pan (or) www.tin-nsdl.com (or) www.incometaxindia.gov.in, ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம். அப்ளை செய்யப்பட்ட கார்டி-ன் Status அறிய

 

இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.

 

1. பள்ளி டிசி

 

2. பிளஸ் டூ சான்றிதழ்

 

3. கல்லூரி் சான்றிதழ்

 

4. வங்கிக் கணக்கு விவரம்

 

5. வாட்டர் பில்

 

6. ரேசன் கார்டு

 

7. வீட்டு வரி ரசீது

 

8. பாஸ்போர்ட்

 

9. வாக்காளர் அட்டை

 

10. ஓட்டுனர் உரிமம்

 

விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.

 

1. மின் கட்டண ரசீது

 

2. தொலைபேசி கட்டண ரசீது

 

3. வங்கிக் கணக்கு விவரம்

 

4. வீட்டு வாடகை ரசீது

 

5. பாஸ்போர்ட்

 

6. ரேசன் கார்டு

 

7. வாக்காளர் அடையாள அட்டை

 

8. வீட்டு வரி ரசீது

 

9. ஓட்டுனர் உரிமம்

 

10.பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்

 

விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை.

உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற என்ற இணையத்தளத்தை நாடலாம்.

 

சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.

ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான்கார்ட் உதவுகிறது.

பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் ACHPL456B என்று வைத்துக்கொள்வோம்.

முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.

C - Company

P - Person

H - HUF(Hindu Undivided Family)

F - Firm

A - Association of Persons (AOP)

T - AOP (Trust)

B - Body of Individuals (BOI)

L - Local Authority

J  - Artificial Juridical Person

G - Government

5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும். அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.

 

மத்திய வருமான வரித்துறை அலுவலகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு முன்பு வரை விநியோகிக்கப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம். எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதிய லேமினேட் கார்டை பெற வேண்டும் என விரும்பினால் மட்டும் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும் போது, ஏற்கனவே இருந்த எண்தான் ஒதுக்கப்படும். இதேபோல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது சேதமுற்றாலோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

இனி வரும் காலங்களில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. எனவே, அதை இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்

by Swathi   on 26 Aug 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
இ-சேவை மையங்களில் சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையானவை குறித்து அறிந்து கொள்ளுங்கள்! இ-சேவை மையங்களில் சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையானவை குறித்து அறிந்து கொள்ளுங்கள்!
தமிழ்நாடு இலஞ்ச ஒழிப்புத் துறை  தொடர்பு எண்கள் தமிழ்நாடு இலஞ்ச ஒழிப்புத் துறை  தொடர்பு எண்கள்
மும்பையைச் சேர்ந்த மாணவி தீட்டிய ஓவியத்தின் மூலம் டூடுள் பக்கம் உருவாக்கிய கூகுள்! மும்பையைச் சேர்ந்த மாணவி தீட்டிய ஓவியத்தின் மூலம் டூடுள் பக்கம் உருவாக்கிய கூகுள்!
விவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன? விவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன?
எந்தெந்த வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது? எந்தெந்த வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது?
ஓட்டுனருக்கு தெரிந்த நமக்கு தெரியாத விடயங்கள் ஓட்டுனருக்கு தெரிந்த நமக்கு தெரியாத விடயங்கள்
ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் எவ்வளவு தெரியுமா? ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் எவ்வளவு தெரியுமா?
சில ஊர்களின் முழுமையான மற்றும் மிக பழைய‌ பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக. சில ஊர்களின் முழுமையான மற்றும் மிக பழைய‌ பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக.
கருத்துகள்
18-Dec-2013 19:07:27 Ranjithkumar.A said : Report Abuse
Mikaum payanulla thakaval. nantri thankyou
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.