|
|||||
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது ? ருபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் என்ன ? |
|||||
![]() ஒரு நாட்டின் நாணய மதிப்பு, பொருள்களைப் போன்றே தேவை மற்றும் சப்ளையை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் டாலருக்கான தேவை அதிகமாக இருக்கும் நிலையில், அதன் சப்ளை குறைவாக இருப்பதால் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு உயருகிறது. அதாவது, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு ரூ.62 என்றால் ஒரு அமெரிக்கா டாலரின் விலை ரூ.62 என்று பொருள்.
ருபாய் மதிப்பில் ஏற்றம் - இறக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் :
வங்கிகள், தரகர்கள், தனிநபர்கள் மற்றும் அரசுகள் கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன. இதனால் இவர்களின் தேவைப்பாட்டின் அடிப்படையை பொறுத்து கரன்சி மதிப்பில் தினந்தோறும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன.
ருபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் என்ன ?
அமெரிக்கா ரிசர்வ் வங்கி அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாதந்தோறும் 8,500 கோடி டாலர் மதிப்பிற்கு கடன் பத்திரங்களை வாங்குகிறது. இதனால் அந்த நாட்டில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. இதனால் சில அன்னிய நிதி நிறுவனங்கள் இந்த நிதியை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதலீடு செய்கின்றன.
இந்நிலையில், அமெரிக்கா பொருளாதரத்தில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளதால், அமெரிக்கா ரிசர்வ் வங்கி கடன் பத்திரங்கள் வாங்குவதை குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அன்னிய நிதி நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது முதலீட்டை விலக்க தொடங்கியுள்ளன. ஆக இந்தியாவில் இருந்து அதிக டாலர் வெளியேறுவதால் இங்கு தேவைப்பாடு அதிகரித்து டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருகிறது. நம் நாட்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக உள்ளதால் டாலர் அதிக அளவில் தேவைப்படுகிறது.
டாலர் மதிப்பு மட்டும் உயருவது ஏன்?
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் அமெரிக்காவின் பங்கு 5 சதவீதமாகத்தான் இருக்கிறது.அப்படி இருந்தாலும், சர்வதேச அளவில் பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகள் டாலரில்தான் மேற்கொள்ளபாடுவதே இதற்கு காரணம். |
|||||
by Swathi on 26 Oct 2013 0 Comments | |||||
Tags: US Dollar Indian Rupee Rupee Value Dollar Value ருபாய் மதிப்பு டாலர் மதிப்பு இந்திய ருபாய் | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|