|
||||||||
முக்கிய ஆவணங்களில் முகவரியை மாற்ற வேண்டுமா ? |
||||||||
வீடு மாறினாலோ, வேலை காரணமாக ஊர் மாறினாலோ நமது ஆவணங்களிலும் முகவரியை மாற்ற வேண்டியது அவசியம். குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு, ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களில் முகவரியை மாற்றுவது எப்படி? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? குடும்ப அட்டையில் முகவரி மாற்ற : தேவையான ஆவணங்கள்: முகவரி மாறியவுடன் முதலில் மாற்ற வேண்டியது கேஸ் இணைப்பைத்தான். அதற்கு தற்போது குடியிருக்கும் வீட்டின் ஒப்பந்தந்தை அளித்து கைப்பட ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் போதும். வீட்டு ஒப்பந்தம், கேஸ் இணைப்பின் ரசீது இவற்றின் நகல்களை இணைத்து குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். எங்கே விண்ணப்பிப்பது? சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பதிவுத் தபாலிலும் அனுப்பலாம். நேரில் கொடுப்பவர்கள் கண்டிப்பாகக் கொடுத்ததற்கான அத்தாட்சி சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும். எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்? முகவரி மாற்றம் அதே ரேசன் கடையின் எல்லைக்குள் எனில் 3 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். அதே மாவட்டத்தில் வேறு ஊரில் கடை மாற்றம் செய்யவேண்டுமெனில் 7 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். மாநிலத்திற்குள் வேறு மாவட்டம் அல்லது வேறு தாலுகா முகவரி மாற்றம் 7 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். தாமதமானால் என்ன செய்ய வேண்டும்? வேண்டுமென்றே கொடுக்க மறுத்தாலோ, காலதாமதம் செய்தாலோ சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆணையாளரிடமும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடமும் புகார் செய்ய வேண்டும் அல்லது தகவல் பெறும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும் அல்லது மாநில நுகர்வோர் மையத்தைத் தொடர்பு கொள்ளவும். மாநில நுகர்வோர் மையத்தை 044 2859 2858 என்கிற எண்ணில் தொலைபேசியிலோ, consumer@tn.gov.in, schtamilnadu@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, 4-ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை – 5 என்ற முகவரியில் தபால் மூலமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்ற : தேவையான ஆவணங்கள்: குடும்ப அட்டை, பான் கார்டு, எங்கே விண்ணப்பிப்பது? வேறு வாக்காளப் பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்காக படிவம் 8 A –ஐ பயன்படுத்தவேண்டும். மாநகராட்சிப் பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், மண்டல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம். மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம். உங்களுக்கு அருகிலுள்ள மையத்தை அல்லது தாலுகா அலுவலகத்தில் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் போன்ற விவரத்தை http://elections.tn.gov.in/EPIC_CENTRE_ADDRESS.pdf என்கிற இத்தளத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளலாம். ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்ற: தேவையான ஆவணங்கள்: குடும்ப அட்டை, பான் கார்டு, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, இத்துடன் முந்தைய முகவரிக்குட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் என்.ஓ.சி. (No objection Certificate) ) வாங்கி இணைக்க வேண்டும். எங்கே விண்ணப்பிப்பது? ஓட்டுநர் உரிமத்தில் தனது பெயரையோ அல்லது தந்தை பெயருக்குப் பதில் கணவர் பெயரையோ, பிறந்த தேதியையோ, முகவரியையோ ஏதேனும் மாற்ற விரும்பினால் அதற்கான சான்றையும், ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பமும் எழுதிக் கொடுத்தால் போதும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு I / II அவர்களிடம் நேரில் கொடுக்க வேண்டும். கட்டணம்: கட்டணம் 315 ரூபாய்தான். வங்கிக் கணக்கில் முகவரி மாற்ற : தேவையான ஆவணங்கள்: குடும்ப அட்டை, பான் கார்டு, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது. எப்படி விண்ணப்பிப்பது? கணக்கு இருக்கும் வங்கிக்குச் சென்று வங்கிக் கிளையை மாற்றம் செய்து தரக் கோரி ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பித்தால் போதும், உங்கள் வங்கிப் புத்தகத்தில் அந்தக் கிளையின் பெயரை எழுதிக் கொடுத்துவிடுவார்கள். பின்னர் அந்தப் புத்தகத்துடன் எந்த வங்கிக் கிளைக்கு மாற்ற விரும்புகிறீர்களோ அங்கு சென்று கணக்குப் புத்தகத்தைக் கொடுத்து, தேவையான ஆவணங்களையும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஒரு வாரம் முதல் 15 நாட்களுக்குள் மாற்றம் செய்து தந்துவிடுவார்கள். ஆதார் அட்டையில் முகவரி மாற்ற : ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் ஏதுமில்லை. http://uidai.gov.in/update-your-aadhaar-data.html என்கிற இத்தளத்திற்குச் சென்று ஆன்லைன் வழியாக அப்டேட் செய்துகொள்ளலாம். தேவையான ஆவணங்களில் கையெழுத்திட்டு சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் இன்னும் நிரந்த மையம் அமையாததால் தபாலில் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரியில் அனுப்பலாம். விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: http://uidai.gov.in/images/application_form_11102012.pdf தமிழில் விண்ணப்பம் அனுப்ப : UIDAI Regional Office Khanija Bhavan, No.49, 3rd Floor, South Wing Race Course Road, Bangalore – 01080-22340862 ஆங்கிலத்தில் விண்ணப்பம் அனுப்ப: UIDAI Regional Office, 5th 7th Floor, MTNL Building, B D Somani Marg, Cuff Parade, Mumbai – 400 005 022 – 22186168 மேலும் விவரங்கள் பெற: 1800-300-1947, help@uidai.gov.in பாஸ்போர்ட்டில் முகவரி மாற்ற : எல்லா ஆவணங்களையும் மாற்றிவிட்டு இறுதியாக பாஸ்போர்ட் முகவரியை மாற்ற வேண்டும். ஏனெனில் பாஸ்போர்ட் முகவரி மாற்றத்துக்குத் தேவையான ஆவணங்கள் அதிகம். தேவையான ஆவணங்கள்: குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை. எங்கே விண்ணப்பிப்பது? அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களில் விண்ணப்பிக்கலாம் இவற்றுக்கு ஃபார்ம் 2 – ஐ பயன்படுத்த வேண்டும். (பெயர் மாற்றம், முகவரி மாற்றம், திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெயரை உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடுதல் போன்ற சிறு திருத்தங்கள் மேற்கொள்ள, பாஸ்போர்ட்டைப் புதுப்பித்துக்கொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவை இல்லை). கட்டணம்: இவற்றில் ஆர்டினரி, தட்கல் இரண்டுக்கும் 1,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆவணங்களில் முகவரியை மாற்ற விரும்புவோர் கவனத்திற்கு புதிய முகவரிக்கு ஆவணங்களை மாற்றும்போது முதலில் ஓர் ஆவணத்தில் முகவரியை மாற்றி, பின்னர் மற்ற ஆவணங்களை மாற்ற விண்ணப்பிக்க வேண்டும். முதலில் கேஸ் இணைப்பை மாற்றிவிட வேண்டும். பின்னர் அதை வைத்து குடும்ப அட்டையையும், குடும்ப அட்டையை வைத்து மற்ற ஆவணங்களையும் மாற்றிவிட்டு கடைசியாக பாஸ்போர்ட் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். |
||||||||
by Swathi on 22 May 2014 2 Comments | ||||||||
Tags: How to Change my address in Voter Id How to Change my address in Ration Card How to Change my address in Passport முக்கிய ஆவணங்களில் விலாசம் மாற்ற ரேஷன் கார்டு முகவரி மாற்றம் வாக்காளர் அடையாள அட்டை முகவரி மாற்றம் பாஸ்போர்டில் முகவரி மாற்றம் | ||||||||
|
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|