|
|||||
வீட்டு கிரைய பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாமே !! |
|||||
![]() வீடு வாங்கிய பின் அதற்கான பத்திரப் பதிவு வரை, எல்லா ஆவணங்களையும், கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டும். விற்பனை குறித்த பத்திரப் பதிவு முடிந்து விட்ட நிலையில், கிடைக்கும் கிரையப் பத்திரம், விற்பனை, ஒப்பந்தம் போன்ற பல்வேறு ஆவணங்களை, பாதுகாப்பாக வைப்பதில், உரிய கவனம் செலுத்த வேண்டும். பலரும், வங்கிக்கடன் மூலமே வீடு வாங்குவதால், நிலத்தின் அசல் ஆவணம், கடன் தவணை முடியும் வரை, வங்கியிடம் தான் இருக்கும். கடனுக்கான தவணைக் காலம் முடிந்தபின், அசல் ஆவணம் உங்களிடம் வந்து விடும். அப்போது அந்த ஆவணத்தை பத்திரமாக வைக்க வேண்டியது மிகவும் அவசியம். பத்திரத்திற்கும் வேண்டும் பாதுகாப்பு : இதில், கிரையபத்திரம் மட்டுமல்லாது, தாய் பத்திரம், வில்லங்க சான்று, பட்டா சிட்டா போன்ற ஆவணங்களை, மிகுந்த பாதுகாப்பாக வைக்க வேண்டும்.அப்போதும், இந்த ஆவணங்களின் அசல் பிரதிகளை, நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், இத்தகைய ஆவணங்களை, நிர்வாக காரங்களுக்காக யாரிடமாவது கொடுத்து அனுப்புதல், வெளிநபரிடம் கொடுப்பது, ஒப்பந்தம் இல்லாத அடமானமாக கொடுத்து, பணம் வாங்குவது போன்ற செயல்களை, தவிர்க்க வேண்டும். இத்தகைய சமயங்களில், உங்களுடைய சிறிய கவனக் குறைவு கூட, மற்றவர்கள் மோசடி செய்ய வழிவகுத்து விடும். கிரைய பத்திரம் தொலைந்து விட்டால் என்ன செய்வது என்பது பலருக்கும் குழப்பமாகவே உள்ளது. இது போன்ற சமயங்களில், பதற்றம் அடையாமல், அடுத்து என்ன செய்வது என்பதில், கவனம் செலுத்த வேண்டும். கிரைய பத்திரம் காணாமல் போய்விட்டது என்பது உறுதியாகி விட்ட நிலையில், அது குறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் தர வேண்டும். அடுத்து, இத்தகைய ஆவணம் தொலைந்து விட்டது என்பது குறித்து, பத்திரிகையில் விளம்பரம் வெளியிட வேண்டும். இதன் பின்னும், ஆவணம் குறித்த தகவல் தெரியாவிட்டால், அதற்கு மாற்றாக, பிரதி ஆவணம் வாங்க, சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்துடன், கிரைய பத்திரம் காணாமல் போனது குறித்து, காவல் துறையில் நீங்கள் அளித்த புகார், அந்த ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம். இதன் மூலம் எந்த விவரமும் கிடைக்கவில்லை என்பதை உறுதி படுத்தும் வகையில் நோட்டரி பப்ளிக் சான்றளித்த ஆவணம், மனையின் சர்வே எண் குறித்த விவரம், நகல் பிரதி எதுவும் இருந்தால் அது குறித்த விவரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் இதற்கு 100 ரூபாய் பொதுவான கட்டணமாகவும், பக்கத்துக்கு, 20 ரூபாய் வீதம் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படும். இந்த நடைமுறைகள் முடிந்த பின் அடுத்த சில நாட்களில், பிரதி ஆவணம் உங்களுக்கு கிடைக்கும். இவ்வாறு, பிரதி ஆவணம் வாங்கிய சில மாதங்கள் கழித்து, ஏற்கனவே காணாமல் போன, அசல் ஆவணம் கிடைத்தால், அது குறித்து சார்பதிவாளரிடம் தெரிவித்து, இரண்டில் எது இறுதியாக செல்லுபடியாகும் என்பதை, எழுத்துப் பூர்வமாக உறுதி செய்ய வேண்டும். |
|||||
by Swathi on 04 Jun 2014 4 Comments | |||||
Tags: வீட்டு பத்திரம் Property Papers Kiraya Pathiram | |||||
|
கருத்துகள் | ||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|