LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

இ.பி.கோ 377 தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சீர்திருத்த வாய்ப்பை தவறவிட்டது

இ.பி.கோ 377 தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மாறாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, இது சம்பந்தமாக பாராளுமன்றம் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

 

மனித உரிமைகளை ஆக்கிரமிக்கும் சட்டங்களிடமிருந்து குடிமக்களை காக்கும் அரிய கடமையை உச்ச நீதிமன்றத்திடம் இந்திய அரசியலமைப்பு ஒப்படைத்துள்ளது. ஆனால் இதற்கு மாறாக ஆங்கிலேய ஆட்சியில் இருந்த, தனிமனித அந்தரங்கம், சுதந்திரம், கௌரவம் ஆகியவற்றை மதிக்காத சட்டத்தை சீர்திருத்த நீதிமன்றம் தவறிவிட்டது. "வயது வந்த இரண்டு இசைவளிக்கும் நபர்களுள் ஒரு தனியறையில் நடைபெறும் எதுவும் அவர்கள் தனிப்பட்ட விவகாரம்; அதை சட்டவிரோதமாக்குவது தவறு" என்று கருத்து தெரிவித்துள்ளார் லோக் சத்தா கட்சி நிறுவனர் திரு.ஜெயப்ரகாஷ் நாராயண்.

 

"ஓரினசேர்க்கையாளர்களின் எண்ணிக்கை மிக சிறிய அளவிலேயே உள்ளது" என்ற நீதிமன்றத்தின் கூற்று கவலையளிப்பதாக உள்ளது என லோக் சத்தா கட்சி கருதுகிறது. ஒரு குடிமகனை பாதித்தாலும் அது தீய சட்டம் தான்; அதை முறைபடுத்த முனைவது நம் கடமை ஆகும்.

 

இ.பி.கோ 377 சட்டத்தை மறுபரிசீலனை செய்ய பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. 1300-கும் மேற்பட்ட காலனியாதிக்க சட்டங்கள் சுதந்திர இந்தியாவிற்கு தகுதியற்றன என்று முந்தைய சட்ட குழுக்கள் பரிந்துரை செய்துள்ளன. சில சட்டங்கள் 1839-இல் இயற்றப்பட்ட அளவு பழமையானதாகவும் அடிப்படை உரிமைகளை கேள்விகுறியாக்குவதாகவும் அமைந்துள்ளன.

 

இந்த வாய்ப்பை பயன்படுத்தி தற்போதய சட்ட குழு, காலனியாதிக்க சட்டங்களை சீரிய முறையில் மறுஆய்வு  செய்யவும், பாராளுமன்றம் நவீன காலத்திற்கேற்ப சட்ட மறுபரிசீலனை செய்யவும் சட்டதிருத்தங்கள் செய்யவும் லோக் சத்தா கட்சி வலியுறுத்துகிறது.

In IPC section 377 case Supreme Court lost an opportunity

Supreme Court has reversed the position of Delhi High Court vis-a-vis IPC sec. 377 and has iterated that it is for parliament to decide on it.

 

Indian constitution has vested Supreme Court with duty to protect citizens against laws that violate constitutional rights granted to the people. Clearly court has failed to strike down an illiberal British era law that violates right to privacy, liberty and life with dignity. "What happens between two consenting adults in the privacy of their bedroom is their own affair. It is wrong to criminalize it." iterates Lok Satta Party National President Dr Jayaprakash Narayan.

 

Lok Satta Party is very concerned at the court's observation that 'a  miniscule  fraction  of  the  country’s  population constitute [LGBT persons]'. A bad law is a concern for all of us even if only a single citizen is affected.

 

It is heartening to note that quite a few MPs are in favour of repealing IPC 377. Previous Law commissions have recommended that we remove more than 1300 colonial era laws that are not fit for a free nation. Some laws are as old as 1839 and violate many of our fundamental rights.

 

Lok Satta demands that this opportunity be used for deep introspection, that present Law Commission undertake comprehensive review of colonial laws and that parliament repeal or amend them as befits a modern liberal democracy.

by Swathi   on 14 Dec 2013  0 Comments
Tags: IPC Section 377   IPC Section   Supreme Court   இ.பி.கோ 377   வழக்கு        
 தொடர்புடையவை-Related Articles
தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்க முடியாது - உச்ச நீதி மன்றம் !! தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்க முடியாது - உச்ச நீதி மன்றம் !!
சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு !! சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு !!
வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !! வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !!
ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !! ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !!
ராஜா ராணி படத்திற்கு தடைகோரி வழக்கு !! ராஜா ராணி படத்திற்கு தடைகோரி வழக்கு !!
இ.பி.கோ 377 தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சீர்திருத்த வாய்ப்பை தவறவிட்டது இ.பி.கோ 377 தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சீர்திருத்த வாய்ப்பை தவறவிட்டது
மான நஷ்ட வழக்கு : டெல்லி முதல்வருக்கு ரூ 5 ஆயிரம் அபராதம் !! மான நஷ்ட வழக்கு : டெல்லி முதல்வருக்கு ரூ 5 ஆயிரம் அபராதம் !!
மத உணர்வை புண்படுத்தும் காட்சி : நய்யாண்டி திரைப்படத்தின் மீது வழக்கு !! மத உணர்வை புண்படுத்தும் காட்சி : நய்யாண்டி திரைப்படத்தின் மீது வழக்கு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.