|
||||||||
ஜெ.யி.யி-மெயின் நுழைவுத் தேர்வு (JEE Main 2019) |
||||||||
![]() ஜெ.யி.யி-மெயின் நுழைவுத் தேர்வு ஜெ.யி.யி மெயின் நுழைவுத் தேர்வு என்பது மாணவர்கள் 2) இத்தேர்வின் தரவரிசையின் அடிப்படையில், நேஷனல் இன்ஸ்ட்டிட் ஆப் டெக்னனாலஜி, இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் இன்பர்மேசன் டெக்னாலஜி, நடுவண் அரசின் நிதி உதவி பெறும் சென்ரலி பண்டட் இன்சிடியூஷன் இவற்றில் பி.இ/பி.டெக் இளநிலை படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 3) இவற்றிற்கு தேர்வின் மதிப்பெண்கள் மட்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்ற்ன. 4) ஜெ.யி.யி மெயின் மதிப்பெண்களை ஏற்றுக் கொள்ளும் மாநில கல்வி நிறுவனங்களும், ஜெ.யி.யி மெயின் மதிப்பெண்களையும், மதிப்பெண்களையும் கருத்தில் கொள்ளலாம். ஜெ.யி.யி மெயின் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு(தாள் I, தாள் II) தாள் I என்பது NIT, CFTs, IIITs மற்றும் பல மாநிலக் கல்லூரிகளில் பி.இ/பி.டெக் சேருவதற்காகும். தாள் II என்பது IIT தவிர மற்ற கல்லூரிகளில் பி.ஆர்க்/பி.ளானிங் சேருவதற்காகும். பி.இ / பி.டெக் / பி.ஆர்க் / பி.ளானிங் என்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும் . தாள் I - கணினி வழியான "ஆன்லைன்" தேர்வாகும். தாள் II - பகுதி I (கணிதம்), பகுதி II (நுண்ணறிவு தேர்வு), பகுதி III (படம் வரைதல்) என்ற மூன்று பகுதிகளை கொண்டது. பகுதி I, பகுதி II இவை கணினி வழியான ஆன்லைன் தேர்வாகும், பகுதி III என்பது பென், பேப்பர் வழியேயான ஆஃப்லைன் தேர்வாகும். தேர்வு ஆங்கிலம், ஹித்தி, குஜராத்தி என்ற மூன்று மொழிகளில் நடைபெறும். தாள் I-க்கான பாடங்கள் கணிதம், இயற்பியல், வேதியியல். "சரியான விடைத் தேர்வு" செய்யும் முறையிலான இத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 30 வினாக்கள் என்று மொத்தம் 90 வினாக்கள் இருக்கும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் என்று மொத்தம் 360 மதிப்பெண்கள் ஆகும். தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறையும், ஏதேனும் வினாக்களுக்கு விடையளிக்காவிடில், மதிப்பெண் தரப்படாது. தாள் - II: முதல் பகுதியான கணிதத்தில் M.C.Q முறையிலான 30 வினாக்கள் இருக்கும். ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் என்று மொத்தம் 120 மதிப்பெண்கள். இரண்டாம் பகுதியான நுண்ணறிவு - 50 வினாக்கள் இருக்கும். ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள் என்று மொத்தம் 200 மதிப்பெண்கள். மூன்றாம் பகுதியான - படம் வரைதல் இரண்டு வினாக்கள் உண்டு. மொத்தம் மதிப்பெண் 70. தாள் II -ல் மொத்தம் 82 வினாக்கள் இருக்கும். மொத்த மதிப்பெண்கள் 390 ஆகும். முதல் இரண்டு பகுதிகளில் சரியான விடைக்கு 4 மதிப்பெண் தரப்படும், தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறையும், விடையளிக்காத வினாவிற்கு மதிப்பெண் குறையாது. பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பை 2017 அல்லது 2018-ல் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 2019 இறுதித் தேர்வு எழுத விரும்புவோர் இத்தேர்வை எழுதலாம். 2016 அல்லது அதற்கு முன் தேர்ச்சி பெற்றவர்களோ அல்லது 2020-ல் எழுதவிரும்புவோர்களா இத்தேர்வை எழுத இயலாது. இத்தேர்வை எழுத வயது வரம்பு இல்லை. தாள் I எழுத XII அல்லது அதற்கு சம்மான படிப்பில் 5 பாடங்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவற்றில் கணிதம், இயற்பியல் கட்டாயப் படங்களாவும், வேதியியல், உயிர் தொழில் நுட்பம், உயிரியல், வெக்கேஷனல் தொழில் நுட்ப படிப்புகள் இவற்றில் ஏதோ ஒன்றில் எழுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாள் II எழுத, கணிதம் உள்ள ஏதேனும் ஒரு குழுவை XII -வில் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இம்முறை ஜெ.யி.யி-மெயின் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைப்பெறும். முதல் தேர்வு 06.1.2019 (ஞாயிறு) முதல் 20.1.2019 (ஞாயிறு) வரை நடைப்பெறும். இரண்டாம் தேர்வு 6.04.2019 (ஞாயிறு) முதல் 20.04.2019 (ஞாயிறு) வரை நடைப்பெறும். மாணவர்கள் ஏதேனும் ஒரு தேர்வையோ அல்லது இரண்டில் ஒன்றையோ எழுதலாம். இரண்டு தேர்வு எழுதும் போது இரண்டில் அதிக மதிப்பெண்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். தேர்வுகள் முற்பகல், பிற்பகல் என்று இரு வேளையில் ஏதேனும் ஒன்று தரப்படும். முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 12.30 வரையிலும், பின் பிற்பகல் 12.30 முதல் பிற்பகல் 5.30 வரையிலும் நடைப்பெறும். விண்ணப்பிக்க விரும்புவோர்கள்: https://nta.ac.in அல்லது https://jeemain.nic.in இணையதளத்தின் வழியே விண்ணப்பிக்க வேண்டும். ஜனவரில் நடைப்பெறும் முதல் தேர்வு 1.09.2019 முதல் 30.9.2019 இருக்கும். ஏப்ரலில் நடைப்பெறும் இரண்டாம் தேர்வு 2.08.2019 முதல் 7.03.2019 வரையிலும் நடைப்பெறும். நுழைவுச் சீட்டு முதல் தேர்விற்கு 17.12.2018 அன்று பதிவிறக்கம் செய்யலாம். இத்தேர்விற்கான முடிவுகள் 31.01.2019 அன்று கிடைக்கும். இரண்டாம் தேர்விற்கான முடிவுகள் 30.04.2019 அன்று வெளியிடப்படும். தாள் I அல்லது தாள் II விண்ணப்பிக்க: பொது, பிற்படுத்தப்பட்டுடோர் (நான் கிரீமி லேயர்) இந்தியாவின் மாணவர்கள் ஆண்கள் ரூ.500, பெண்கள் ரூ.250 செலுத்த வேண்டும். அயல்நாட்டினராயின் ஆண்கள் ரூ.2000, பெண்கள் ரூ.1000 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் இந்தியாவின் ஆண்கள் ரூ.250 பெண்கள் ரூ.250 செலுத்த வேண்டும். அயல்நாட்டினராயின் இருவரும் ரூ.1000 செலுத்த வேண்டும். தாள் I, தாள் II இரண்டிற்கும் விண்ணப்பிக்க : பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் (நான் கிரீமி லேயர்) இந்தியாவின் மாணவர்கள் ஆண்கள் ரூ.900, பெண்கள் ரூ.450 செலுத்த வேண்டும். அயல்நாட்டினராயின் முறையே, ரூ. 3000 ரூ. 1500 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மூன்றாம் பாலினத்தவர்கள், இந்தியர்கள் ஆண்கள், பெண்கள் ரூ.450, அயல்நாட்டினராயின் ரூ.1500 செலுத்த வேண்டும். கட்டணத்தை கிரெடிட் கார்டு ,டெபிட்கார்டு, நெட்பே, ஈ சலான் வழி செலுத்தலாம். |
||||||||
by Swathi on 29 Sep 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|