காத்தவராயனைத் தேடுதல், அவனை விசாரித்தல், பின் கழுவேற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் கூத்தாகவும் வழிபாடாகவும் நிகழ்த்தப்படுதல் கழுவேற்ற விழாக் கூத்து எனப்படும். இதனை ‘கழுவேற்ற பாரி வேட்டை விழா’ என்றும் அழைப்பர். இக்கூத்து திருச்சி மாவட்டத்தில் காத்தவராயன் வழிபாட்டிடங்களில் நிகழ்த்தப்படுகிறது. ஊர்க்காவல் அலுவலராக சேப்பிள்ளையிடம் காத்தவராயன் வளர்வதும் ஆரியமாலாவை மணம்புரிவதும், பின்னர் காத்தவராயனைக் கைது செய்து கழுவில் ஏற்றும் போது மன்னர் அவரை விடுவிப்பதும், காமாட்சியம்மனின் கட்டளைப்படி கழுவில்ஏறுவதுமாக நிகழ்ச்சி சுவையாக நடத்தப்படும்.
|