|
||||||||
புதுக்கவிதையில் காமத்துப்பால் - ஆசி கண்ணம்பிரத்தினம். |
||||||||
![]() புதுக்கவிதையில் காமத்துப்பால் " ஆசி கண்ணம்பிரத்தினம்.
ஆறுமுகன் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு முதல் பதிப்பு 2000 .விலை ரூபாய் 35 . மொத்த பக்கங்கள் 156.
திருக்குறள் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்று1330 குறட்பாக்கள் அடங்கியது.
அவற்றில் காமத்துப்பால் காதல் சுவை ததும்ப எழுதப்பட்ட குரல்கள் ஆண் பெண் அன்பு உறவை அழகு உறவையும் எடுத்துக்காட்டுகிறது இரண்டு வரிகளில் திருவள்ளுவர் சொன்ன கருத்துக்களை எல்லாருக்கும் புரியும் வகையில் ரசனை கவிதைகளாக வரை கவிதைகளாக மெருகூட்டி கவிஞர் ஆசி கண்ணன் வீரத்துடன் அவர்கள் தந்துள்ளார்கள் கவிதைகளில் தனது கற்பனை வளத்தையும் புகுத்து உள்ளார்கள். இக்கவிதையை காமத்துப்பால் என்ற இந்த நூலை படிக்கின்ற போது வள்ளுவரின் குறள் வரிகள் நெஞ்சில் பதியும் பண்டிதர்கள் அல்லாமல் பாமர மக்களுக்கும் அவற்றை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றும் அறநெறிகளை 1080 குறள்களையும் வலியுறுத்தி கூறிய வள்ளுவர் பெருமான் ஆண்-பெண் உறவையும் இவ்வளவு அழகு உணர்ச்சியுடன் 786 என்று வியக்கத் தோன்றும் காதல் உறவு ஒரு அருணகிரிக்கு உட்பட்டது தான் இந்த கருத்தில் நெஞ்சில் பதியும் காதல் உறவை புனிதமாகக் கடைப்பிடிக்கப்படும் போது திருமண உறவுகள் தீர்க்கமாகவும் பற்றுதல் மிக்கதாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை உறவுகள் மிக்கதாக அமைந்தால் மட்டுமே பிறன் மனை நோக்காத பெருந்தன்மை உருவாகும் பெருந்தன்மை ஒவ்வொருவர் மனதிலும் முடி கொண்டு இருந்தால் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் இல்லாமல் ஒளியும் இல்லற உறவில் ஒரு நெருக்கத்தை ஐக்கியத்தை ஒவ்வொருவரும் ஏற்படுத்திக்கொண்டால் மனைவிக்குக் கணவனும் கணவனுக்கு மனைவியும் லோகம் துரோகம் செய்யாத ஒரு தூய்மையான நிலையில் நிலமும் அத்தகு தூய்மையான நிலையை உருவாக்க வள்ளுவர் சொன்ன காதல் நெறி கடைப்பிடிக்கப்பட வேண்டும் வள்ளுவர் இந்த உலகம் வழுவாமல் வளமாக வாழ வேண்டும் என்பதற்காகவே திருக்குறளைத் தந்த அந்த திருக்குறள் கருத்துக்களை எளிய வடிவில் பரப்பும் நோக்கில் இந்த நூல் எழுதப்பட்ட இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
திருக்குறளில் 1080 குறள்களையும் அறத்திற்காகவும் பொருளுக்காகவும் ஒதுக்கிய பிறகு மீதியுள்ள 250 குறட்பாக்களை காமத்திற்காக ஒதுக்கி எழுதியிருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
கீழ்கண்ட 25 அதிகாரங்களில் காமத்துப்பாலை வள்ளுவர் வகுத்திருக்கிறார்
தகையணங்குறுத்தல் .
குறிப்பறிதல் .
புணர்ச்சி மகிழ்தல்.
நலம் புனைந்துரைத்தல் .
காதல் சிறப்புரைத்தல் .
நாணுத்துறவுரைத்தல் .
அலர் அறிவுறுத்தல் .
பிரிவாற்றாமை .
படர் மெலிந்து இரங்கல் .
கண் விதுப்பழிதல் .
பசப்புறுபருவரல் .
தனிப்படர்மிகுதி .
நினைத்தவர் புலம்பல்.
கனவுநிலை உரைத்தல் .
பொழுதுகண்டிரங்கல் .
உறுப்புநலனழிதல் .
நெஞ்சோடு கிளத்தல் .
நிறையழிதல் .
அவர்வயின்விதும்பல் .
குறிப்பறிவுறுத்தல் .
புணர்ச்சிவிதும்பல்.
நெஞ்சோடு புலத்தல் .
புலவி .
புலவி நுணுக்கம் .
ஊடலுவகை
என்று 25 அதிகாரங்களை வள்ளுவர் இருக்கிறார்..
25 அதிகாரங்களில் உள்ள 250 குறட் பாக்களுக்கும் ஆசிரியர் விளக்கம் சொல்லும் வகையில் கவிதைகளாக அதுவும் புதுக்கவிதைகள் வரைந்து தள்ளி இருக்கிறார்.
அதிகாரத்துக்கு ஒன்று என்ற வகையில் 25 குறள்களை மட்டும் ஆசிரியர் சொல்லும் வண்ணம் பார்ப்போம்..
250 குறள்களுக்கான புதுக்கவிதை விளக்கங்களையும் முழுமையாக படித்து விட்டேன் . எல்லாமே தூத்துக்குடி முத்துப்போல் செந்தாமரை சித்திரம்போல் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் ,மிகவும் மனதிற்கு இனிமையாக இருந்தது . எதை எடுப்பது எதை விடுப்பது எதை பதிப்பது என்று தெரியாமல் தவித்து போனேன் . நானே தெரிவு செய்வதை காட்டிலும் தமிழறிந்த , குறள் அறிந்த ,அதிலும் காமத்துப்பால் மிகவும் விரும்புகிற ஒரு தமிழ் பண்டிதை எனது முகநூல் தோழியிடம் கேட்டேன் . நினைவாற்றல் இந்த வயதிலும் நிரம்பப் பெற்ற அவர் தெரிவு செய்து கொடுத்த பத்து குறள்களை , புதுக்கவிதை விளக்கங்களை கீழே தந்துள்ளேன் .
இந்த அணுகுமுறை எனக்கு புதுமையாக இருக்கிறது .,வேடிக்கையாகவும் இருக்கிறது ,வினோதமாகவும் இருக்கிறது . பரீட்சித்து பார்ப்போமே என்று தான் இந்த முடிவுக்கு வந்து குறளை அவர் குரல் வழியாக தெளிவு , தெரிவு செய்து பதிவு செய்திருக்கிறேன்.
1) குறிப்பறிதல்.
இருநோக்கு இவளுண்கண் உள்ளது
ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து(1091)
( மையுண்ட இவள் கண்களுக்கு இரண்டு பார்வை உண்டு .ஒரு பார்வையால் நோய் வரும். மற்றொரு பார்வையும் மருந்து தரும்)
என் இனிய காதலி
இரண்டு பார்வைகளுக்கு
சொந்தமானவன்
ஒரு பார்வை என் மீது பட்டவுடன் .
என் உள்ளத்தில் காதல் நோய் மிகும் ஆதலால் கருத்தழிந்து புலம்புவேன் அந்நோயால் நான் வருந்தியளையும்
போது
பேரழகு பெண்கள் கூட
அழகில்லாத அலிகள் போல்
தோன்றுவார்கள்
என்னவள் மட்டுமே
எழில் சிந்தும் தேவதைபோல்
பொலிவுடன் என் மனதில் நிலைத்து
நிற்பாள் .
அவள் நினைவால் நான் நோய் கொண்டு
அலையும் போது
புண்பட்ட என் உள்ளம்
அடுத்தமுறை அவளை பார்க்கும் போது
உடனே ஆறிப் போகும்
அவளின் ஒரு பார்வை காதல் நோயை
ஏற்படுத்தும்
ஒரு பார்வை காதல் நோயைத் நலமாக்கும்.
2) நலம் புனைந்துரைத்தல்.
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்.
(. அனிச்ச மலரே வாழிய உன் மென்மை !ஆயினும் கேள். நான் காதலிக்கும் இவள் உன்னை விட மென்மையானவள். )
# அழகு சிந்தும் அனிச்சம் பூவே
அல்லிப் பூவைவிட மென்மைத்தன்மை உனக்கு உண்டு .
இருப்பினும் உன்னை விடவும் மென்மையான மேனி உடையவள்
என் காதலி .
மென்மைத்தன்மைக்கு உன்னைத்தானே உலகில் உள்ளோர் அடையாளம் சொல்வார்கள் .
அதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது உன்னை விடவும் என்னவள் மெல்லியவள் அனிச்ச மலரே என்னிடம் கோபம் கொள்ளாதே .
அவளை நேரில் பார்த்தால் புரிந்து கொள்வாய்.
உனக்கும் அவளுக்கும் போட்டி வைத்தால் அவள்தான் வெற்றி பெறுவாள் .
அதனால் ஆணவம் கொள்ளாதே .
மெல்லிய கன்னம் மெல்லிய பாதம் மெல்லிய இடை மெல்லிய நடை
மெல்லிய உடை மெல்லிய குரல் அத்தனைக்கும் உரிமை பட்ட வளவள் . மெல்லிய என்ற சொல்லுக்கே
என்னவள் தான் எடுத்துக்காட்டு
அதனால் மெல்லி மலர் என்று
உன்னை யாராவது சொன்னால் தலைக்கனம் கொள்ளாதே.
3) காதல் சிறப்புரைத்தல்.
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து 1124.
(. உடலில் இருக்கும் காலம் வரை உயிர் இவள் எனக்கு ,அகன்று பிரிந்து விட்டால் அந்த உயிர் போகும் அவல நிலை வந்துவிடும் )
என் காதலி
அணிகளை அணிந்து
அழகுக்கு அழகு சேர்ப்பவள்.
அவளுடைய அழகு மேனியைத்
தழுவி கொள்ள
அந்த அலைகள்
தடையாக இருக்கின்றன.
அவளைத் தழுவி பிரியும் போது
உடலை விட்டு உயிர்
பிரிவது போல் உள்ளது.
4) காதல் சிறப்புரைத்தல்:
கண்ணுக்குள் வாழும் காதலன்:
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர் 1126.
(என் காதலர் மிக மிக நுட்பமானவர்.என் கண்களுக்குள் குடியிருப்பார் . புறம் போகார். இமைத்தாலும் அவருக்கு எதுவும் நேராது.)
என் காதலர் எப்போதும்
எனது கண்களுக்குள் இருக்கிறார் .
ஒரு நொடிப் பொழுது கூட
அவர் அங்கிருந்து
நகர்ந்து செல்வதில்லை.
என் கண்களுக்குள்
அவர் இருப்பதால்
நான்
கண்மூடி திறப்பதற்கு
மிகவும் வருந்துகிறேன்
ஆனால்..
அவர் வருந்த மாட்டார்.
5) கனவு நிலை உரைத்தல்.
கனவில் ஒரு செயல் நினைவில் ஒரு செயல்:
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி
விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.1218.
(. உறங்கும்போது என் கனவில் வந்து தோளைத் தழுவி கிடப்பார் .விழிப்பு வந்ததோ இல்லையோ ஓடிப்போய் என் நெஞ்சுக்குள் ஒளிந்து கொள்வார். )
என் காதலர்
நான் தூங்கும்போது
என் தோளில் ஒட்டி உறவாடுகிறார்.
நான் விழித்துக் கொண்டாதும்
என்னிடம் எதுவும் சொல்லாமல்
ஓடி விடுகிறார் .
அவர் எங்கே சென்றிருப்பார்
என்று நினைக்கும்போது
என் நெஞ்சுக்குள் தான் மறைந்திருக்கிறார்.
6) புணர்ச்சி விதும்புதல்:
பிரிந்து சென்றால் குற்றவாளி:
காணுங்கால் காணேன் தவறாய
காணாக்கால்
காணேன் தவறல் லவை 1286.
காதலர் என்னோடு அன்போடு பேசி ஆசையோடு தழுவிக் கொள்ளும் போது அவர் செய்த தவறுகள் தெரிவதில்லை . அவர் விட்டு பிரிந்து சென்று விட்டால்
அவர் என்னை தழுவி
எனக்கு எத்தனையோ இன்பம் தந்து நன்மைகள் செய்திருந்தாலும்
அந்த நன்மைகள் மறந்துவிடுகின்றன. பிரிந்து சென்று விட்டாரே என்றுதவறுதான் பெரிதாக தெரிகிறது
7) புலவி நுணுக்கம் :
பிறர் விரும்பிய ஆண்மை:
பெண்ணியலார் எல்லோரும் கண்ணின்
பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு(1311)
(இவள் சொல்லுகிறாள் :எல்லாப் பெண்களும் உன் அழகை தங்களுக்கும் பொது என்று கண்ணால் பருகுவர் .அதனால் நீ ஒரு பரத்தன் .போ போ உன் மார்பைப் நான் தழுவிக் கொள்ள மாட்டேன்)
காதலர் என்னை பிரிந்து சென்றார்
அவர் என்னை பிரிந்து சென்றதும்
அவரது அழகை பல பெண்கள்
கண்களால் மொய்த்து உண்கிறார்கள் அவரது பரந்த மார்பு
பல பெண்களுக்கு விருந்தாகிவிட்டது . இனி அவர் என்னைத் தேடி வருவார் என்னை மார்போடு அணைத்துக் கொள்வார்
ஆனால் நான் அவரது மார்பில் தழுவி இன்பம் துய்ல்க மாட்டேன் .
பிற பெண்களால் எச்சில் செய்யப்பட்ட அவரது மார்பு எனக்கு அமுதம் போன்றதாகாது
அவர் ஏன் என்னை பிரிந்து செல்ல வேண்டும்
எப்போதும் என் அருகிலேயே இருந்தால் வேறு பெண்கள் அவரைப் பார்த்து ரசித்து எச்சில் படுத்த மாட்டார்கள் அல்லவா?
இப்பிறவியில் மட்டுமா:
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள் (1315)
( இந்த பிறவியில் உன்னை பிரியமாட்டேன் என்று அன்பால் மொழிந்தேன் .என்ன நினைத்தாளோ ? இவள் கண்களில் கண்ணீர் நிறைந்தது .அடுத்த பிறவி பற்றி நினைத்துக் கொண்டாளோ? ).
என் காதலியிடம்
நாமிருவரும் இப்பிறவியில் பிரியவே மாட்டோம்
என்று உறுதி அளித்தேன் .
இணைந்தே என்றும் இன்புற்று வாழ்வோம் என்று ஊக்கமளித்தேன்.
ஆனால் அவள் கண்களில் நீர் நிறைந்து நின்றது .
அப்படி என்றால் அ
டுத்த பிறவியில் பிரிந்து விடுவோமா என்று கலங்கினாள் .
எல்லாப் பிறவியிலும்
இணைந்தே வாழவேண்டும்
என்று நம்பியிருந்த அவளை
எனது சொற்கள் சுட்டு விட்டன
அதனால் அவரது கண்கள் குளம் ஆகிவிட்டன.
####
மலைத்தேன் ஐ நாமே சுவைக்கலாம் ஊட்டி விட இன்பம் அதிகரிக்கலாம்..
|
||||||||
![]() |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 31 Oct 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|