LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அகத்திணை

கண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`

பின்வரும் குறுந்தொகைப் பாடலை நம்மில் பலபேரும் வாசித்திருப்போம். பாடலின் பொருளை எளிமையாக்கும் நோக்கில், நான் அறிந்த தமிழில் விளக்கங்களுடன் இங்கு படைத்துள்ளேன். இணைய நண்பர்கள் அனைவரும் இப்பாடலை வாசித்துச் சுவைத்து, தங்களின் கருத்துரையை இணைக்க வேண்டுகிறேன்.


பாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. குறிஞ்சித் திணை என்பது ``மலையும் மலை சார்ந்த இடமும்’’, அதாவது இயற்கை எழில், வளம் கொண்ட நிலப்பரப்பாகும். அந்நிலப்பரப்பில் நிகழும் வாழ்வியல் பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணையாகும்.

பொதுவாக குறிஞ்சித் திணையானது தனித்திருக்கும் தலைவனும் தலைவியும் அல்லது வேட்டைக்குச் செல்லும் ஒரு இளைஞனும், புனம் காத்து நிற்கும் கன்னியொருத்திக்குமிடையே நிகழும் ``புணர்தலும் புணர்தல் நிமிர்த்தமுமாகும் (கூடல்)’’. 


குறுந்தொகைப் பாடல்  எண்: 40 (நாற்பது)


ஆசிரியர் செம்புலப்பெயனீரார்

திணை - குறிஞ்சி

தலைவன் கூற்று – தலைவியிடம் தலைவன் கூறுதல்
தலைவனுக்கும் தலைவிக்குமிடையே எதிர்பாராத சந்திப்பின்பால் காதல் மலர்ந்தது. இப்படி முன்பின் தெரியாத இளைஞனுடன் கண்டதும் காதல் ஏற்பட்டதால் தலைவிக்குத் தலைவன் மேல் ஐயமேற்படுகிறது, எங்கு இவன் நம்மை விட்டுச் சென்றுவிடுவானே என்ற பயம்தான் அது. தலைவியின் முகத்தில் சட்டெனத் தோன்றிய கவலையை உணர்ந்த தலைவன், தங்கள் கண்ணெதிரே தோன்றிய செம்மண் நிலத்தோடுச் சேர்ந்த நீரை எப்படி பிரிக்க முடியாதோ அதுபோலவே நம்மிருவரையும் பிரிக்கமுடியாது என்று காதல் மிகுதியில் தலைவியிடம் கூறும் பாடல் இதோ:

``யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’.

யாய் = என்னுடைய தாய்; ஞாய் = உன்னுடைய தாய்; எந்தை = என் தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்; செம்புலம் = செம்மண் நிலம்; பெயல் = மழை;

பாடலின் பொருள்:

என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானர்கள்? எந்த உறவின் வழியாக நானும் நீயும் அறிந்துகொண்டோம்? செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே!
இப்படி செம்மண் நிலத்திலிருக்கும் நீர் போல் தலைவனும் தலைவியும் ஒன்றுபட்டிருந்தனர்.

by varun   on 10 Sep 2016  6 Comments
Tags: Kandathum Kadhal   Kadhal   கண்டதும் காதல்   காதல்           
 தொடர்புடையவை-Related Articles
தினம் வாடி துடிக்கிறேன்......! தினம் வாடி துடிக்கிறேன்......!
உன் காதல் வேண்டும் .....! உன் காதல் வேண்டும் .....!
காதலர் தினம் - கணேஷ் காதலர் தினம் - கணேஷ்
எனக்குள் நீ - கணேஷ் எனக்குள் நீ - கணேஷ்
கண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ` கண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`
பூட்டி வைத்திருக்கிறாயே....? - கவிப்புயல் இனியவன் பூட்டி வைத்திருக்கிறாயே....? - கவிப்புயல் இனியவன்
அவன் மனம் அறியுமோ? - இல.பிரகாசம் அவன் மனம் அறியுமோ? - இல.பிரகாசம்
சின்ன இன்ப வரி சின்ன வலி வரி - கவிப்புயல் இனியவன் சின்ன இன்ப வரி சின்ன வலி வரி - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
12-May-2021 03:28:44 அச்சுதன் said : Report Abuse
ஒரு தலைமுறை பசியுடன் ஏங்கிகொண்டிருக்கிறேன் தமிழ் தேனை ருசிக்க. அகத்திணை பாடல்களை பதிவிடுங்கள் தோழரே
 
05-Aug-2018 19:10:49 ராது said : Report Abuse
அருமை
 
20-Nov-2017 10:30:36 குபேந்திரன் said : Report Abuse
தெளிவான விளக்கம் மிகவும் நன்று. இன்னும் பல குறுந்தொகை காதல் பாடல்கள் மூலம் விளக்கம் அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் நன்றி...........அ. குபேந்திரன் முதுகலை தமிழ் இலக்கியம் .
 
20-Nov-2017 10:30:04 குபேந்திரன் said : Report Abuse
தெளிவான விளக்கம் மிகவும் நன்று. இன்னும் பல குறுந்தொகை காதல் பாடல்கள் மூலம் விளக்கம் அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் நன்றி...........அ. குபேந்திரன் முதுகலை தமிழ் இலக்கியம் .
 
30-Jun-2017 09:11:50 கோபிநாத் சே said : Report Abuse
அருமையான எளிதான காதல் வரிகள்
 
03-Jan-2017 19:09:45 தினேஷ் குமார்.வ said : Report Abuse
அருமையான வரிகள் மிக மிக அற்புதம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.