LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் இலக்கியம் Print Friendly and PDF
- சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்

கற்றனைத் தூறும் அறிவு – தேவி நாச்சியப்பன்

கற்றனைத் தூறும் அறிவு தேவி நாச்சியப்பன்

குழந்தை இலக்கியம்:

    தேவி நாச்சியப்பன் அவர்கள் அழ வள்ளியப்பா அவர்களின் மகள் ஆவார். தான் எழுதுவது குழந்தை இலக்கியம் என்றே தெரியாமல் எழுதத் தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார். குழந்தைகளுக்காக இலக்கியம் எழுதும் போது> அதை அக்குழந்தைகள் படித்து இன்புறுவதைப் பார்ப்பது கூட ஒரு மகிழ்ச்சி என்கிறார். குழந்தை இலக்கியம் என்று கூறும் போது பெண்கள் அதில் குறைவாகக் காணப்படுகிறார்கள். ஆனால் குழந்தைகளுடன் எப்போதும் நெருங்கிப் பழகுவதும், அதிகமாக உடன் இருப்பதும் பெண்கள் தான். குழந்தை இலக்கிய பெண் எழுத்தாளர்கள் குறைவாக இருப்பது வருத்தமளிக்கிறது என்று கூறும் இவர் பெண்கள் குழந்தை இலக்கியம் எழுத அதிகம் முன்வர வேண்டும் என்கிறார்.

அழ வள்ளியப்பா:

    குழந்தை இலக்கியக் கவிஞர் அழ வள்ளியப்பா அவர்கள் ஆவார். அழ வள்ளியப்பாவின் பாடல்களில் ஒலியும் இருக்கும்> அதற்குத் தகுந்த பொருளும் இருக்கும். இவரின் மானசீக குரு ‘கவிமணி’ ஆவார். பல இடங்களில் கவிமணி அழ வள்ளியப்பாவிற்கு குருவாகத் திகழ்ந்துள்ளார். கவிமணி அவர்களின் நினைவாக ஏற்படுத்தப்பட்டதே ‘கவிமணி குழந்தைகள் சங்கம்’ ஆகும். மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை இக்கூட்டம் நடைபெறும். இதுவரை 196 கூட்டம் நடைபெற்றிருக்கிறது. குழந்தைகளின் திறமைகளை வளர்க்க இது ஒரு களமாகச் செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதற்கான ஆண்டு விழா கொண்டாடப்படும். கதை, கவிதை, கட்டுரை போன்றவை எழுதக் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, போட்டிகளும் வைக்கப்படுகின்றன. இதில் குழந்தைகள் ஆர்வமாகக் கலந்து கொள்வதால் அவர்களின் திறமை வெளிப்படுகிறது.

தேவ நாச்சியப்பன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வு:

    தேவி நாச்சியப்பன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு குழந்தை இலக்கிய பாடல்களில் உத்திகள் ஆகும். இதற்காக 450 நூல்களையும்> அதில் உள்ள 300 குழந்தைப் பாடல்களையும் எடுத்துக் கொண்டார். மேலும் குழந்தைகளுக்காக எழுதும் சிறுகதைகளுக்குச் சிறிய தொடர்கள் மற்றும் எளிமையான சொற்களே அவசியம் எனக் கூறும் இவர் பல சிறுகதை நூல்களையும் எழுதியுள்ளார். இவரின் குழந்தை இலக்கிய நூல்கள் மற்றும் குழந்தை இலக்கிய பங்களிப்பிற்காகச் சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது.

வள்ளியப்பா இலக்கிய வட்டம்:

    குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா அவர்களின் நினைவாக வள்ளியப்பா இலக்கிய வட்டம் கோவையில் தொடங்கப்பட்டது. 25 ஆண்டுகளைக் கடந்து அவ்விலக்கிய வட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு மாவட்டங்களில் இந்த இலக்கிய வட்டம் நடைபெறும். இவ்விழாவில் பல போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு வள்ளியப்பா இலக்கிய விருது> பதிப்பாளர் விருது போன்ற விருதுகள் வழங்கப்படும்.

பெண்களின் பங்கு:

    குழந்தை இலக்கியப் படைப்புகளைப் படைக்கப் பெண்கள் அதிகம் முன்வர வேண்டும். தன்னால் முடியாது என நினைக்காமல் தன்னம்பிக்கையுடன் முன்வர வேண்டும். ‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்று கூறுவார்கள். அதன்படி பெண்கள் மனது வைத்தால் எதையும் சாதிக்கலாம். குழந்தைகளுடன் அதிகம் நேரத்தைச் செலவிடுவது பெண்களே என்பதால் குழந்தைகளின் உளவியலைக் குறித்து பெண்களுக்கு அதிகம் தெரியும். எனவே பெண்கள் குழந்தை இலக்கியப் படைப்புகளை அதிகம் படைக்க வேண்டும்.

    குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குப் பெற்றோர் பதில் சொல்லிப் பழக வேண்டும். குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே பெற்றோர் வாசிப்பு பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

ar

by Lakshmi G   on 24 Aug 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கற்றனைத் தூறும் அறிவு – எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன் கற்றனைத் தூறும் அறிவு – எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன்
கற்றனைத் தூறும் அறிவு – கலையரசி பாண்டியன் கற்றனைத் தூறும் அறிவு – கலையரசி பாண்டியன்
கற்றனைத் தூறும் அறிவு – யெஸ். பாலபாரதி கற்றனைத் தூறும் அறிவு – யெஸ். பாலபாரதி
கற்றனைத் தூறும் அறிவு – ராஜேந்திரன் கற்றனைத் தூறும் அறிவு – ராஜேந்திரன்
கற்றனைத் தூறும் அறிவு – திரு. உதயசங்கர் கற்றனைத் தூறும் அறிவு – திரு. உதயசங்கர்
கற்றனைத்தூறும் அறிவு – திரு. கன்னிக்கோயில் ராஜா கற்றனைத்தூறும் அறிவு – திரு. கன்னிக்கோயில் ராஜா
குழந்தைகளைப் புகழுங்கள் குழந்தைகளைப் புகழுங்கள்
பஞ்சுமிட்டாய் பரிந்துரைக்கும் சிறார் இலக்கியம் – புத்தகப் பரிந்துரை : 2018 – 2019 பஞ்சுமிட்டாய் பரிந்துரைக்கும் சிறார் இலக்கியம் – புத்தகப் பரிந்துரை : 2018 – 2019
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.