LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் இலக்கியம் Print Friendly and PDF
- சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்

கற்றனைத்தூறும் அறிவு – திரு. கன்னிக்கோயில் ராஜா

கற்றனைத்தூறும் அறிவு திரு. கன்னிக்கோயில் ராஜா

தாலாட்டு பாடல்களின் தொடக்கம்:

    திரு. கன்னிக்கோயில் ராஜா அவர்கள் தொடக்கத்தில் கவிதைகளையே எழுதியுள்ளார். இவரின் திருமண வாழ்வில் குழந்தை பிறந்த பிறகு குழந்தைகளுக்கான தாலாட்டு பாடல்களை எழுதத் தொடங்கியுள்ளார். ராஜா என்ற இயற்பெயர் கொண்ட இவர் கன்னிக் கோயில் என்ற தனது ஊர்ப் பெயரையும் சேர்த்து ‘கன்னிக்கோயில் ராஜா’ என மாற்றிக் கொண்டார்.

தமிழார்வத்தைத் தூண்டும் கதைகள்:

    தொடக்கத்தில் கன்னிக்கோயில் ராஜா அவர்கள் குழந்தைப் பாடல்களையே எழுதியுள்ளார். அவை அனைத்தும் ஒற்றுமையை வலியுறுத்தி அமைந்தவை. மழையை வரவேற்கின்ற பாடல்கள்> பிறந்த நாள் பாடல்கள்> நல்லொழுக்க பாடல்கள் போன்றவற்றை இயற்றியுள்ளார். வளரும் குழந்தைகளின் ஆர்வம் கதைகளின் மீது திரும்பவே கதைகளை எழுதத் தொடங்கியுள்ளார். மேலும் தன்னுடைய கதைகளின் வழி குழந்தைகளிடையே தமிழார்வத்தைத் தூண்டும் வகையில் தூய தமிழ்ப் பெயர்களைப் பயன்படுத்துகின்றார்.

நேர மேலாண்மை:

    பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அல்லும் பகலும் உழைக்கின்றனர். 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இதில் பெரும்பாலான நேரத்தை இன்றைய பெற்றோர்கள் உழைப்பதிலேயே செலவு செய்கின்றனர். எனவே தங்களுடைய குழந்தைகளுடன் செலவிட நேரம் இல்லாமல் போய்விடுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். அதற்கெனத் தனியே நேரம் ஒதுக்க வேண்டும். அன்றாடம் ஒரு மணி நேரத்தையாவது குழந்தைகளுக்குக் கட்டாயம் ஒதுக்க வேண்டும்.

பெற்றோர்கள் செய்யும் தவறு:

    குழந்தைகள் பற்றிப் பேசுகின்ற போது பெற்றோர்களைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. பெற்றோர்களின் வளர்ப்பின் படியே குழந்தைகள் வளரும். குழந்தைகளை அடித்தால் தான் திருத்த முடியும் என்ற பெற்றோர்களின் எண்ணம் தவறானது. அறிவுரையின் மூலமே குழந்தைகளைத் திருத்தலாம். பெற்றோர்கள் குழந்தைகளின் முன் சண்டையிட்டால் குழந்தைகள் அதைக் கவனித்து மறுநாள் தங்கள் பொம்மைகளிடம் தானும் கோபமாகக் காட்டிக் கொள்கின்றனர். குழந்தைகள் பெற்றோரை உட்கிரகிக்கின்றனர். எனவே பெற்றோர்கள் குழந்தைகள் முன் சண்டையிடக் கூடாது. தற்போதைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கைப்பேசிகளைக் கொடுத்துப் பழக்குகின்றனர். குழந்தைகளின் துணைவனாக கைப்பேசியை ஆக்குகின்றனர். இது பெற்றோர்கள் அறிந்தோ> அறியாமலோ செய்யும் மிகப்பெரிய தவறு ஆகும். இந்த பழக்கத்தை மாற்ற வேண்டும். குழந்தைகளுக்குக் கதை சொல்லி அவர்களின் பொழுதைக் கழிக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத் தர வேண்டும். நடை பயிலும் குழந்தைகள் கீழே விழும் போது> உடனே ஓடிச் சென்று தூக்காமல் தானாக எழ அக்குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளிடையே தன்னம்பிக்கையை வளர்க்கலாம்.

இசையின் இன்பம்:

    இசைக்கு மயங்காதவர்கள் என்று யாருமே இல்லை. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே இசை இன்பத்தைத் தருகின்றது. துயரத்தில் இருக்கும் போது ஆறுதலைத் தருகின்றது. பெண்கள் கர்ப்ப காலத்தில் வளையல்கள் அணிவது கூட> வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை வளையல்களின் ஓசையைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே.

    ஒரு கவிதை கவிதையாக மட்டும் இருக்கும் போது அது உயிர்ப்புடன் இருக்காது. அது இசையோடு இயங்கும் போதே உயிர்ப்புடன் இயங்குகிறது. எனவே தான் கன்னிக்கோயில் ராஜா அவர்களும் தன்னுடைய கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுத்து குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கிறார்.

அனைத்தும் அறிந்த குழந்தைகள்:

    குழந்தைகளுக்கு ஒன்றுமேத் தெரியாது என்கிற எண்ணம் தவறானது. குழந்தைகளின் கற்பனை உலகம் மிகப்பெரியது. அதில் குழந்தைகள் வாழ்கின்றனர். அவர்களுடைய உலகம் வேறு. அவர்கள் உலகத்தில் அனைத்திற்கும் உயிர் உண்டு. விலங்குகள்> பறவைகள் என அனைத்தும் பேசும். எனவே தான் இவர் தன்னுடைய கதைகளில் விலங்குகள் பேசுவதாகக் கதைகளை எழுதுகிறார். மேலும் இவருடைய கதைகளில் எவ்வளவு கற்பனைகள் இருந்தாலும் சிறிது உண்மை சம்பவமும் இருக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்கு பொது அறிவு மற்றும் நல்லொழுக்கத்தை வளர்க்கின்றார். கற்பனை வளத்தைக் குழந்தைகளிடையே பெருக்குகின்றார்.

by Lakshmi G   on 22 Aug 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கற்றனைத் தூறும் அறிவு – எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன் கற்றனைத் தூறும் அறிவு – எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன்
கற்றனைத் தூறும் அறிவு – கலையரசி பாண்டியன் கற்றனைத் தூறும் அறிவு – கலையரசி பாண்டியன்
கற்றனைத் தூறும் அறிவு – யெஸ். பாலபாரதி கற்றனைத் தூறும் அறிவு – யெஸ். பாலபாரதி
கற்றனைத் தூறும் அறிவு – தேவி நாச்சியப்பன் கற்றனைத் தூறும் அறிவு – தேவி நாச்சியப்பன்
கற்றனைத் தூறும் அறிவு – ராஜேந்திரன் கற்றனைத் தூறும் அறிவு – ராஜேந்திரன்
கற்றனைத் தூறும் அறிவு – திரு. உதயசங்கர் கற்றனைத் தூறும் அறிவு – திரு. உதயசங்கர்
குழந்தைகளைப் புகழுங்கள் குழந்தைகளைப் புகழுங்கள்
பஞ்சுமிட்டாய் பரிந்துரைக்கும் சிறார் இலக்கியம் – புத்தகப் பரிந்துரை : 2018 – 2019 பஞ்சுமிட்டாய் பரிந்துரைக்கும் சிறார் இலக்கியம் – புத்தகப் பரிந்துரை : 2018 – 2019
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.