LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் (Thirukkural Translation Books)

தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் 1953ல் திருக்குறளில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்புகள் எத்தனை என்று குறிப்பிடுகிறார்?

தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம்  அவர்கள் 1953ல் எழுதிய வள்ளுவரும் குறளும் என்ற நூலில் பக்கம் 22 ல் திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்து கீழ்காணும் தகவல்களைக் குறிப்பிடுகிறார்.

எந்த மொழியினர்க்கு, எந்தச் வேறுபாடு உடையது? இராது! அவ்வளவு பெரிய உயர்ந்த கருத்துக்களைக் கொண்டவர் வள்ளுவர். திருவள்ளுவரைப்பற்றி இதுவரை சொல்லியது போதும் என்று நினைக்கிறேன். விட்டுவிடுகிறேன்.

அடுத்து திருக்குறள். பொது நோக்காகத் திருக்குற ளுக்கு ஒரு சிறப்பு உண்டு. என்ன சிறப்பு? உலகில் தோன்றிய நூல்களில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டவை மூன்று நூல்கள்தான். முதல் வரிசையில் இருப்பது பைபிள். ஏறக்குறைய 500-க்கு மேற்பட்ட மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.


அடுத்த வரிசையிலே இருப்பது இஸ்லாமிய வேதம். குரான். 200-க்கு மேற்பட்ட மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மூன்றாவது வரிசையிலே இருப்பது திருக்குறள். 80-க்கு மேற்பட்ட மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. முதல் இரண்டும் சமய நூல் என்று ஒதுக்கி வைத்துவிட்டால், உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களில் தலைமை வகித்து நிற்பது திருக்குறள் ஒன்றுதான். இந்தச் சிறப்பு சிறப்பு தமிழுக்குப் பெருமையளிப்பதாகும். இது ஒரு சிறப்பு!


அடுத்த சிறப்பு, மனிதனாய்ப் பிறந்தும் பறவையைப்போல ஆகாயத்தில் பறக்கக் கற்றுக் கொண் டிருக்கிறான். பார்க்கிறோம். இன்று செல்லக் மனிதன் வான ஊர்தியில்! மனிதன் மனிதனாய்ப் பிறந்தும் மீனைப்போல தண்ணீரில் நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறான் பார்க்கிறோம். இன்று நீர்மூழ்கிக்கப்பல் முதலியவைகளிலே மனிதன் மனிதனாய்ப் பிறந்தும், பாம்பைபோல ஊர்ந்து சுற்றுக்கொண்டிருக்கிறான். பார்க்கிறோம். இன்று வஞ்ச மனம் கொண்ட மக்களிடத்திலே! மனிதன் மனிதனாய்ப் பிறந்தும் விலங்கைப்போல் வண்டியிழுக்கக் கற்றுக்கொண்டிருக்கிறான். பார்க்கிறோம் இன்று நடுத் தெருவிலே! ஆனால், மனிதன் மனிதனாய்ப் பிறந்தும் மனிதனைப்போல வாழ்வது எப்படி?' என்பதைக் கற்றுக் கொள்ளவில்லை. அதைக் கற்றுக்கொடுப்பது திருக்குறள். இது திருக்குறளுக்கு உள்ள அடுத்த சிறப்பு.

 

-தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம்  அவர்கள் 1953ல் எழுதிய வள்ளுவரும் குறளும்

by Swathi   on 07 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாநில அளவிலான திருக்குறள் போட்டிகள்... : லட்சங்களில் பரிசை அள்ளிய ஆசிரியர்கள் மாநில அளவிலான திருக்குறள் போட்டிகள்... : லட்சங்களில் பரிசை அள்ளிய ஆசிரியர்கள்
தமிழக முதல்வர் வெளியிட்ட குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகள்! தமிழக முதல்வர் வெளியிட்ட குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகள்!
வலைத்தமிழ் பதிப்பகத்தின் இரண்டாவது திருக்குறள் நூல் -கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார் வலைத்தமிழ் பதிப்பகத்தின் இரண்டாவது திருக்குறள் நூல் -கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்
திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை
மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு, மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு,
பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்  நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது. பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார் பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார்
நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்.. நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.