|
||||||||
தமிழ் சிறுவர் இலக்கியத்தை பற்றி ஆய்வுகள் குறைவாகவே உள்ளது - யார் செய்வார்கள்? |
||||||||
வருத்தமுடன் தான் இதனை பதிவு செய்ய வேண்டி இருக்கு. தமிழ் சிறுவர் இலக்கியத்தை பற்றி ஆய்வுகள் குறைவாகவே உள்ளது என நீண்டகாலமாக சொல்லிவருகின்றேன். அதே போலவே நம்முடையது நீண்ட பாரம்பரியம் உடையது, 1975ல் நானூறு சிறார் எழுத்தாளர்களின் பட்டியலை வெளியிட்டோம் அப்படி என்றால் எவ்வளவு நபர்கள் எழுதினார்கள் என பெருமைப்படுகின்றோம். ஆனால் சிறார் இலக்கியம்பற்றி ஆய்வுகளும் பதிவுகளும் மிகக்குறைவாகவே உள்ளன.
மிக முக்கியமாக மற்ற மொழிகளில் தமிழ் சிறார் இலக்கியம்பற்றிய தரவுகள் காணக்கிடைப்பதே இல்லை. ஆனால் இந்திய மொழிகளான மலையாளம், வங்காளம், மராத்தி, அசாமி, இந்தி, குஜராத்தி, கன்னடம் போன்ற மொழிகளில் சிறுவர் இலக்கியம் பற்றிய தகவல்களும் ஆய்வுகளும் ஆங்கிலத்திலேயே பரவலாக கிடைக்கின்றன. தற்காலத்தில் நிகழும் ஆய்வுகளும் ஆங்கிலத்தில் வந்துவிடுகின்றன. ஆனால் தமிழில் அப்படி இல்லை.
யார் செய்வார்கள்? நியாயமாக பல்கலைக்கழங்கள் செய்ய வேண்டும். அரசு முன்னெடுக்க வேண்டும். ம்ம்ம் பெருமூச்சு தான் மிஞ்சுகின்றது. கத்திக்கொண்டே இருப்போம் யார் காதிலாவது விழட்டும். கத்தவாவது செய்வோம்.
- விழியன்
வருத்தமுடன் தான் இதனை பதிவு செய்ய வேண்டி இருக்கு. தமிழ் சிறுவர் இலக்கியத்தை பற்றி ஆய்வுகள் குறைவாகவே உள்ளது என நீண்டகாலமாக சொல்லிவருகின்றேன். அதே போலவே நம்முடையது நீண்ட பாரம்பரியம் உடையது, 1975ல் நானூறு சிறார் எழுத்தாளர்களின் பட்டியலை வெளியிட்டோம் அப்படி என்றால் எவ்வளவு நபர்கள் எழுதினார்கள் என பெருமைப்படுகின்றோம். ஆனால் சிறார் இலக்கியம்பற்றி ஆய்வுகளும் பதிவுகளும் மிகக்குறைவாகவே உள்ளன.
|
||||||||
by Swathi on 05 Mar 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|