LOGO

அருள்மிகு ஸ்ரீ மாடசாமி திருக்கோவில்

  கோயில்   அருள்மிகு ஸ்ரீ மாடசாமி திருக்கோவில்
  கோயில் வகை   குலதெய்வம் கோயில்கள்
  மூலவர்   மாடசாமி
  பழமை   
  முகவரி
  ஊர்   செங்கல்பட்டு
  மாவட்டம்   சென்னை [ Chennai ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

முன்னுரை: குலம் என்ற சொல்லுக்கு குடும்பம் பாரம்பரியம் என்பது பொருளாகும். ஒவ்வொரு குடும்பமும் பரம்பரை வழியாக வழிபட்டு வந்த தெய்வமே குல தெய்வம் என்று அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட தெய்வத்தை வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் வளர்ச்சியும் முன்னேற்றமும் சிறப்பாக அமையும். அதனால் குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியமானதாகும்.

குலதெய்வம் எவ்வாறு அமைகிறது?

1)குலதெய்வம் என்பது நம் முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புப் பெறுகிறது. ஒவ்வொரு குலத்திற்கும் தெய்வம் குல தெய்வமாக அமைகிறது.

2)குலதெய்வ கோவில் என்பது பிரம்மாண்டமான கோவிலாக இருக்காது. சிறிய கோயிலாக தான் இருக்கும் அதில் அமைந்திருக்கும் தெய்வம் சிலருக்கு சில இறுக்கமாகவும் கெட்டியாகவும் பானை வடிவிலும் கூடை வடிவிலும் இருக்கும் .

3)குலதெய்வத்திற்க்கு என்று கர்ண பரம்பரைக் கதைகளே இருக்கும்.

குலதெய்வத்தின் அருள்:

1)மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியது என்பார்கள். குலதெய்வம் சிறு தெய்வமாக இருந்தாலும் அதன் சக்தி மிகவும் பெரியது. எவரொருவர் குலதெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வருகிறார்களோ அவர்களுக்கு நவகிரக தினால் ஏற்படக்கூடிய தீய விளைவுகள் பெரிதான பாதிப்பை ஏற்படுத்தாது .

2)மனிதர்கள் அதிகமாக கஷ்டங்களை அனுபவிப்பதற்கு கர்மவினைகளை காரணமாக அமைகின்றது. கர்மவினைகளை நீக்கும் தன்மை குலதெய்வத்திற்கு மட்டுமே உண்டு. மிக அதிகமாக கர்ம வினை உள்ளவர்களுக்கு தனது குலதெய்வம் எது என்று தெரியாமல் போய்விடுகிறது. அதனால் அவர்களுக்கு அதன் மேல் நாட்டம் ஏற்படுவதில்லை.

குலதெய்வ வழிபாடு குறிப்புகள்:

1)குலதெய்வ வழிபாடு கிராம மக்களை வெளிப்படுத்துவதோடு அவர்களை ஒற்றுமைப்படுத்தும் செய்கிறது.

2) தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து காணும் வாய்ப்பை குலதெய்வ வழிபாடு ஏற்படுத்திக் கொடுக்கிறது.

3) மறைந்த முன்னோர் வழிபாட்டை காலக்கோடு குலதெய்வ வழிபாடாக மாறியது அவற்றில் உள்ள பெரியவர்கள் சொல்கிறார்கள் .

2) ஆனால் இன்றைய நிலையில் மனிதர்கள் அவரவர்களின் குல முன்னோர்கள் உருவாக்கி கொடுத்த வழிபாட்டை மறந்து பகுத்தறிந்து உணரும் தன்மையும் சில மனிதர்களுடைய பேராசைக்கும் அவரவர் குல வழிபாட்டையும் மறந்துவிட்டனர்.

3) ஒருவர் குல வழிபாட்டை மறந்து மட்டுமல்லாமல் அவரவர்களின் குல தெய்வங்களையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சொல்லாமலும் சென்றனர்.

4) சிலரின் மனதில் தோன்றும் குலதெய்வ வழிபாடு அவ்வளவு முக்கியமானதா என்று? ஆம்பள வழிபாடு என்பது மற்ற வழிபாடுகளைக் காட்டிலும் மிகுந்த முக்கியத்துவம் சக்தியையும் அளிக்கக்கூடிய வழிபாடாகும். குலத்தினை காக்கக்கூடிய தெய்வத்தை வழிபடாமல் மற்ற எந்த தெய்வத்தை வெளிப்பட்டாலும் நமக்கு கிடைக்கவேண்டிய அருள்வாக்கியமும் தாமதமாக கிடைக்கும் அல்லது கிடைக்காமலேயே போகும். நமக்கு கிடைக்கும் துன்பத்தை அளிக்க கூடிய சக்தியை உடையதே வழிபாட்டை பற்றி குல தெய்வத்தையும் பற்றியும் காண்போம். குலதெய்வ வழிபாட்டில் போற்றத்தக்க சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5) குலதெய்வ வழிபாட்டின் மகிமையை நம் முன்னோர்களின் ஆத்மாவிற்கு ஆற்றல் அதிகம் என்று கருதப்படுவதால் தான் குலதெய்வ வழிபாடு முறை தோன்றியது.

6) நீர் வளம் தரும் அய்யனார் இந்நோயிலிருந்து காக்க மாரியம்மன் குல தெய்வமாக கருதும் வழக்கம் ஏற்பட்டது.

7) நோய் தீர்க்கவும் பிள்ளை வரம் கிடைக்கவும் மழை பெய்யவும் மக்கள் குலதெய்வத்தை பெரிதும் நம்புவ துண்டு.

8) குல தெய்வம் இருக்கும் இடத்தில் நிச்சயம் வேப்பமரம் அல்லது வில்வ மரம் இருக்கும்.

9) காணிக்கை அளித்தல் மொட்டை போடுதல் தீமிதித்தல் தீச்சட்டி எடுத்தல் தொட்டில் கட்டுதல் பொங்கல் வைத்தல் போன்றவை குழந்தைகளுக்காக நாம் செய்யும் நிறுவனங்கள் ஆகும்.

10) தமிழ்நாட்டில் இன்றும் 90 சதவீத குல தெய்வ வழிபாடுகளில் பலியிடுதல் நடைபெற்றது.

11) குல தெய்வங்களுக்கு இதிகாச அடிப்படை எதுவும் கிடையாது அதை வழிபடும் முறையும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு மாறுபடும்.

12) குலதெய்வ வழிபாடுகள் பூஜைகள் முறைப்படி இல்லாமல் பெரியவர்களின் அப்படியே நடக்கும்.

13) குலதெய்வ வழிபாடு சாமி ஆடுபவர்கள் அருள்வாக்கு சொல்வது உண்டு.

சென்ற வாரம் குலதெய்வத்தை கும்பிட சென்றிருந்தோம் ஆறு தலைமுறைகளுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகிலுள்ள சிறிய ஊரில் இருந்து எங்கள் முன்னோர்கள் மருதம்புத்தூர் என்ற ஊருக்கு சென்றோம். சொந்தங்கள் பலர் வந்திருந்தனர் பொங்கலுக்கு அடுத்த நாள் இரவில் அங்கிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாடசாமி திருக்கோவில் சைவப் படையிலும் வீட்டு தெய்வங்களுக்கு எங்களது வழக்கம். மருதம்புத்தூர் சென்றிருந்தபோது அங்கே எங்கள் குல தெய்வத்திற்கு பலி கொடுப்பதாக அறிந்தோம். வீரனார் துணை பாப்பாத்தி என்ற தெய்வம் என்று அங்கே அறிந்தேன். பல தலைமுறைகளுக்கு முன்பு பஞ்சத்தின் காரணமாகவோ அல்லது படையெடுப்பின் காரணமாக ஊர் தொண்டை நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கின்றனர் எங்களது முன்னோர்கள்... குலதெய்வ வழிபாடு ஏன்? நமது குலதெய்வங்கள், அவர்களது குறிப்பிட்ட நல்ல செய்கைகளுக்காகவும், குணங்களுக்காகவும் வழிப்பட்டவை. ஒவ்வொரு தெய்வத்திடமும் ஒவ்வொரு விசேஷம் இருப்பதை காணலாம். வீரனார் போன்ற தெய்வங்கள் போரில் உயிர்நீத்த தெய்வங்கள். தியாகம் புரிந்தவர்களின் தியாக குணத்தையே நாம் இது போன்ற வழிபாடுகளின மூலம் வழிபட்டு அதே குணம் நம்மிடயே அதிகரித்து நாளடைவில் கடவுளிடம் மிகவும் நெருங்கிவிடுகிறோம். “குலம் தெரியாமல் போனாலும் குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது” குலதெய்வ வழிபாடு, – கோடி தெய்வ வழிபாடு” முனீஸ்வரன் போன்ற தெய்வங்கள், தெய்வ சம்பத்து உடைய பெரியோர்கள். அவர்கள் கடவுளை நோக்கி தவம் புரிந்தவர்கள். அந்த நிலையில் இறந்தவர்கள் இது போன்ற தெய்வங்கள் வழிபடும்போது நம்மிடையேயும் கடவுளை அடைய விரும்பும் குணம் பலப்படுகிறது. இதெல்லாம் புரியாமலே கூட நாம் வழிபடுவதுண்டு – வேலைக்காக, திருமணம் வழக்கு தீர - இப்படி பலப்பல சொந்த குடும்ப நலன்களுக்காக நாம் குலதெய்வத்தை கும்பிட்டு வேண்டுகிறோம். ஆயினும் இப்படிப்பட்ட குலதெய்வ வழிபாடுகள் நம்மை கடவுளை நோக்கிய பாதையில் திரும்பும் மைல்கல்லாக இருக்கின்றன. இந்த வழிபாட்டிலிருந்து துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக நாம் எதிர்ப்பார்பில்லாத வகையில் கடவுளை வழிபடும் நிலைமை அடைகிறோம். எனவே குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் புனிதமான ஒன்று, கடவுளை நம்பிக்கையோடு பிரார்திக்க ஏதுவாக மனதை ஒருமுகப்படுத்தி செம்மையாக்குவது என்று சொல்ல வேண்டும். “ சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” “குலத்தெய்வத்தால் ஆகாத காரியமில்லை” குலத்தெய்வ கோயிலுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு ஏதேனும் திருப்பணிகளைச் செய்ய வேண்டும். கோயிலை தூய்மைப்படுத்துதல், தண்ணீர் அமைத்து கொடுப்பது, சந்ததிகள் புதுப்பிக்க உதவுதல், மரக்கன்றுகள் நடுதல், ஸ்தல விருட்சங்களை அமைத்தல் முதலான விஷயங்களை செய்யலாம். குலதெய்வக் கோயிலுக்கு எண்ணெய், திரி முதலானவற்றை வழங்கலாம். திருவிழா உத்ஸவத்தின் போது சுவாமி திருவீதியுலா வருவதற்கு வசதியாக உரிய வாகனங்களைச் செய்து கொடுக்கலாம். நம் வீட்டில் எந்த விசசேஷம் நடந்தாலும் முதலில் குலத்தெய்வத்திடம் சொல்லி வழிபடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். குலதெய்வத்துக்கு செலுத்துவதை முறையே செய்து வர வேண்டும். சாதாரணமாக கோவில்களுக்குச் செல்லும் போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள். ஆனால் குலதெய்வத்தை வழிபடச் செல்லும் போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.

நமது குலதெய்வத்தை வழிபடச் செல்லும் போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது. குலதெய்வம் கோவிலுக்குச் சென்றே நேர்த்திக் கடனை செலுத்திட வேண்டும். குலதெய்வங்களான அய்யனார், முனீஸ்வரன், வேடப்பர், கருப்பு, ஆத்தங்கரையன், மாடசுவாமி இந்த எல்லை தெய்வங்களை, எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது. தங்கள் குடும்பத்துக்கும் உறுப்பினர்களுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாது. வளமையான வாழ்க்கை கிடைப்பதாக மக்கள் கருதுகின்றனர். எந்தவொரு தெய்வமும் ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டங்களை தருவதாக இருந்தாலும் அவைகள் குலதெய்வத்தின் வாயிலாகவே தெய்வங்கள் அருளினை வழங்குவார்கள். நம்மை கவசம் போல குலதெய்வம் கட்டி காக்கின்றது. ஒருவர் எந்த வழிபாடு செய்தாலும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலேயே’ என்பது ஆன்றோர் வாக்கு. அதற்கேற்ப குலதெய்வத்திற்கு குறிப்பிட்ட விசேஷ பூஜைகள் செய்யும்போது தெய்வங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நாம் வேண்டுகின்ற அனைத்து வரங்களையும் மகிழ்ச்சியுடன் நமக்கு அளிக்கும். குலதெய்வத்திற்கென்று நம் முன்னோர்கள் சிறப்பு வழிபாடுகளை முறைப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். குலத்திற்கு குலம் வழிபாடு முறைகளும் சடங்குகளும் மாறுபடும். தற்காலத்தில் இளைய தலைமுறையினர் தங்களுக்கு வசதியான நாட்களில் குலதெய்வ வழிபாட்டை மாற்றி அமைத்து வருகின்றனர். இது மிகவும் தவறான செயலாகும். “குறிபிட்ட நாட்களில் குறிப்பிட்ட நட்சத்திரங்களில் அல்லது குறிப்பிட்ட நிதியின் அடிப்படையில் வருடாந்திர பூஜைகள் மற்றும் விசேஷ பூஜைகள் அவரவர்களின் பெரியவர்கள் கடைப்பிடித்து வந்த வழக்கப்படி செய்ய வேண்டும்”. குலதெய்வம் தெரியாமல் பல குடும்பங்கள் பலவிதமான இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். நமது குலம் கூட தெரியாமல் பேசலாம், ஆனால் குலதெய்வம் தெரியாமல் இருக்க கூடாது. குலதெய்வம் தெரியாமல் எந்த பூஜைகள், வழிபாடுகள், பரிகாரங்கள், மற்றும் மந்திர ஜெபங்கள் செய்தாலும் பலன் இல்லை என்பதனை கருத்தூன்றி கவனிக்க வேண்டும். எனவே எப்பாடுபட்டாவது அவரவர்கள் அவர்களது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வர வேண்டும். அர்ச்சனைக்குரிய நமாவளிகள்: “ஓம் விண்ணவர் நாயகியே போற்றி ! ஓம் வேத நாயகியே போற்றி ! ஓம் மாகாளியே போற்றி ! ஓம் சப்த மாதாவே போற்றி ! குலதெய்வ திருவிழா: “வருடத்திற்கு ஒருமுறை சொந்தங்கள் சேர்ந்து பொங்கும் பக்தியோடு பொங்கலிடும் ஓர் நாள்….. வெளி ஊரில் இருப்பவர்கள் ஒன்றாய் கலந்து மகிழும் ஓர் நாள்….. கைகுளுக்களோடு மனமும் குலுங்கி ஓராண்டு நினைவுகளை பகிரும் நேரங்கள்…..” “அங்கும் இங்கும் அலைந்து விறகு பொருக்கி அடுப்பை செய்து பச்சரிசியும் வெள்ளமும் கலந்து பொங்கலிட அடுப்பை பற்றவைக்க……” “பொங்கல் பொங்கி வழிந்து வரும் வேளையில் எங்களின் சந்தோஷமும் உச்சத்திற்கு வரும்” “எங்கள் குழந்தையை அவர்கள் கொஞ்வதும் அவர்கள் குழந்தையை நாங்கள் கொஞ்சுவதும்….” “பங்காளி பிள்ளைக்கு மொட்டையடித்து காத்து குத்தி முனீஸ்வர சாமிக்கு வடை மாலை சாத்தியம்….” “கொண்டு வந்த உணவுகளை ஒன்றாக பரிமாறி ஒற்றுமையாக சாப்பிட்டுவிட்டு கோவிலை நோக்கி நடக்கையிலே….” “பிள்ளை கேட்ட பொம்மையும் பெண்கள் கேட்ட வளையல்களும் அனைவரும் விரும்பும் நொறுக்கு தீனியும் வாங்கி கொண்டு பைகளோடு மனதையும் நிரப்பி…” “பூவழகோடு புடவையழகோடு நகையழகோடு சேர்ந்த புன்னகை சிந்தும் பெண்கள் கூட்டத்தோடு குலதெய்வ கோவிலில் உள்ளே நுழைய…..” “நின்றிருந்த பாட்டிக்கு சாமி வந்து அருள்வாக்கு சொல்லி ஆசியும் வழங்க நிறைவான மனதோடு நிம்மதியாய் வணங்கிவிட்டு” “தீ மிதிக்கும் மேடை தேடி பக்தியோடு பரவசத்தோடு நண்பர்களோடு கைக்கோர்த்து தீமிதித்து நிறைவு செய்தோம் குலதெய்வ வழிபாடு…” “இந்தாண்டு முடிந்த விழா, அடுத்தாண்டு வருவதாக வாக்கு ஆசியும் வழங்க நிறைவான மனதோடு நிம்மதியாய் வணங்கிவிட்டு” “ வருடம் முழுதும் இனிக்கின்ற இந்த நாள் இனிய நாள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வரும் இந்த திருநாள்” பெண்களின்

குலதெய்வங்கள்: பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இருப்பார்கள். அதாவது திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வமே இவர்களின் குலதெய்வமாக இருக்கும்.

திருமணத்திற்கு பின் கணவரின் குலதெய்வமே இவர்களின் குலதெய்வமாக மாறும். திருமணத்திற்கு பின் ஒவ்வொரு பெண்ணிற்கும் கணவரின் குலதெய்வமே குலதெய்வம் ஆகும். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

அமாவாசை – குலதெய்வ வழிபாடு: அமாவாசை அன்று உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரண்டு மண் விளக்கு ஏற்றி தீப தூப வழிபாடு செய்ய வேண்டும். சரி குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் என்ன செய்யலாம் ? அதற்கும் நம் முன்னோர்கள் வழிவகை கூறியுள்ளார்கள். பங்குனி மாத பௌர்ணமி இந்த இரண்டு தினங்களிலும் உங்களது வீட்டில் குலதெய்வத்தின் திருவுருவப்படத்தை வைத்து உங்களது வீட்டு முறைப்படி எப்படி படையல் வைத்து பூஜை செய்கிறார்களோ அதுபோல பூஜை செய்ய வேண்டும். முடிந்தவரை வருடத்திற்கு ஒருமுறை என்ற கணக்கு கூட பார்க்காமல் உங்களுக்கு எப்பொழுதெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் குலதெய்வ கோவிலுக்கு கண்டிப்பாக சென்று வர வேண்டும். “ சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாரும் இல்லை புவனம் கடந்துஅன்று பொன் ஒளிமின்னும் தவனச் சடைமுடித் தாமரையானே!” என்பவர் சிவனை தவிர எந்த ஒரு தெய்வத்தையும் வழிபடுவதில்லை என்று உறுதியாக இருப்பவர்கள். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும் என்றாலும் அளவிட முடியாத சக்தி படைத்த தெய்வம் என்ற நம்பிக்கையும் உண்டு. குலதெய்வம் என்பது தங்கள் குலத்தில் தோன்றிய முன்னோர்களாகவோ அல்லது தங்கள் குடும்பம், சமூகம் அல்லது பல குடும்பங்கள் விளங்க தங்கள் உயிரையே கொடுத்து காப்பாற்றியவராகவும் இருக்கலாம். குலதெய்வம் என்று எடுத்துக்கொண்டால் எந்த ஒரு வம்சத்திலும் 13 வம்சாவளியினருக்கு மேல் வணங்கும் குலதெய்வம் இருக்க முடியாது. குறிப்பிட்ட அந்த வம்சத்தில் வழிவழியாக வந்தவர்களில் சிலருக்கு குழந்தைபேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ ஆண் வம்சம் விருத்தியடையாமலோ அல்லது வேறு ஏதும் காரணத்தினாலோ வம்சம் அழிந்து விடக்கூடாது என்று நம்பிக்கையும் உண்டு. எந்தவொரு நல்ல காரியமும் குலதெய்வத்தை வழிபட்ட பின்பே செய்வது பெரும்பாலான குடும்பங்களில் வழமையாக உள்ளது. குழந்தைக்கு முதல் மொட்டையடிப்பது குலதெய்வ கோவிலில் மட்டுமே நடக்க வேண்டும். “ஒரு நொடியில் தப்பித்தோம் என சொல்லும் அந்த ஒரு நொடி தான் குலதெய்வம்” “தெய்வம் உன்னை காக்கும் ஆனால் குலதெய்வம் - உன்னை அருகில் இருந்து கண்ணை இமைப்போல காக்கும்” குலதெய்வம்: “குலத்தை காக்க உதித்த நீ இறைவனாகினாய் ஆயிரம் முறை நிகழ்ந்தாலும் மகனென்று சிரிப்பு மாறாமல் நின்றாய் நல்லது நடக்கையில் என்னுழைப்பு என்றும் தீயது நடக்கையில் எல்லாம் நீ செய்த வேலை என்றும் சொல்லுகையில் சிறு பிள்ளையெனப் பொறுத்தாய்” “உன்னை வணங்காதகையில் எனைக் காத்து நின்ற நீ இன்று நீயே என் வாழ்வாரென்று நான் மாறிடு பின் எங்கு சென்றாய் எனைப் பேன்ற உன் பிற மகன்களையம் காக்கவோ! குலதெய்வத்தை காக்கும் பாரம்பரியமாக நடந்து வருகிறது. குலதெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வம் தான் நமக்கு எளிதில் அருளினைத் தரும். மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறுதெய்வமாகவே காணப்படும். சிறுதெய்வம் என்று அவற்றை அலட்சியம் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிட முடியாது. குலதெய்வத்தை எவர் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும். ஒருவரது வம்சாவளியில் வரும் தாத்தா பாட்டி, தாய் தந்தையர் போன்றோர்கள் குலதெய்வத்திற்கு வேண்டிய வருடாந்திர பூஜையை செய்ய தவறினாலோ, குலதெய்வ கோயிலிற்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து விட்டாலோ குலதெய்வத்தின் சாபம் நிச்சயம் ஏற்படும். இந்த சாபம் முடிந்து நமது சந்ததியினருக்கு இது தொடராமல் இருக்க சாப நிவர்த்தி செய்வது அவசியம். நம் முன்னோர்கள் எந்த முறையில் குலதெய்வத்தை வணங்கினார்களோ அதே முறைப்படி வணங்க வேண்டும். நமது தவறுக்காக குலத்தெய்வதிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டால் சாபம் தீரும். “நின்றிருந்த பாட்டிக்கு சாமி வந்து அருள்வாக்கு சொல்லி ஆசியும் வழங்க நிறைவான மனதோடு நிம்மதியாய் வணங்கிவிட்டு” பெரும்பாலும் கிராமப்புறங்கள் தான் குலதெய்வத்தை பாரம்பரியமாக வணங்குவதை தொடர்ந்து செய்து வருகிறது. எனவே நாம் ஒவ்வொருவரும் பாரம்பரியமாக இருக்கும் வழக்கத்தை மாற்றாமல் வாழ முயற்சி செய்ய வேண்டும்.

எங்கள் குலதெய்வம்: “இந்துவாக பிறந்தோம் இந்துவாக வாழ்வோம்” எங்கள் குலதெய்வமான “அருள்மிகு ஸ்ரீ மாடசுவாமி” திருக்கோவிலில் வருஷாபிஷேகத்துக்கு நன்கொடை மற்றும் பொருளுதவி கொடுத்த அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். திருவிழாவிற்கு வரி கொடுத்த வரிதாரர்கள் மற்றும் பெண்வரி கொடுத்த பெண்வரிதாரர்கள் என்றும் கோவிலில் உள்ளன. பிரதி மாதம் கடைசி வெள்ளி அன்று பூஜை நடைபெறும். வருஷாபிஷேகம் மற்றும் திருவிழாவிற்கு வரி அடிக்கட்டை நோட்டீஸ் அடித்து கோயில் நிர்வாகத்தில் கலந்து கொள்வார்கள். வெளியூர் வரிதாரர்களுக்கு கோவிலில் நடக்கும் விபரங்களை தெரிவிப்பதற்கு தங்கள் முகவரியை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பது.

பௌர்ணமி வழிபாடு: மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதை விட பௌர்ணமி தினத்தன்று விரதமிருந்து வழிபடுவதுதான் 100 சதவீத பலனை பெற்று வரும.; பொதுவாக ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் பங்குனி மாத பௌர்ணமி குடும்ப ஒற்றுமையை வளர்க்கிறது. ஆகவே, பௌர்ணமி அன்று குலதெய்வத்தை தேடிச் சென்று வழிபட வேண்டியது மிக மிக அவசியமாகும். பலருக்கும் குலதெய்வம் காடு,மலை, வயல்வெளிகளில் சாலை வசதி இல்லாத இடம் என்றே இருக்கும். ஆனால் குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியம். வருடத்திற்கு இரண்டு முறையாவது அவரவர்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது நல்லது.

முடிவுரை: “நல்லதே நினைப்போம். நல்லது நடக்கும் கடமை செய். பலனை எதிர்பாராதே அனைத்து உயிர்களிடம் அன்பு செலுத்துவோம். தன்னால் இயன்றதை பிறர்க்கு சேவை செய்வோம். இதுவே குலதெய்வ வழிபாடு ஆகும். “இந்துவாக பிறந்தோம் இந்துவாக வாழ்வோம்”

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் வடதிருமுல்லைவாயில் , சென்னை
    அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் மயிலாப்பூர் , சென்னை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் பாரிமுனை, பாரிஸ் , சென்னை
    அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சவுகார்பேட்டை , சென்னை
    அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில் திருவல்லிக்கேணி , சென்னை
    அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் மாடம்பாக்கம் , சென்னை

TEMPLES

    பட்டினத்தார் கோயில்     அய்யனார் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    ராகவேந்திரர் கோயில்     வீரபத்திரர் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     ஐயப்பன் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     அறுபடைவீடு
    சாஸ்தா கோயில்     விநாயகர் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     மற்ற கோயில்கள்
    காரைக்காலம்மையார் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    பாபாஜி கோயில்     சேக்கிழார் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     நவக்கிரக கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்