இத்தலத்தில் நவக்கிரகங்கள் தனிமண்டபத்தில் நின்ற வடிவில் உள்ளன. கிரகங்களின் மத்தியில் உள்ள சூரியன், தனது மனைவியர்களான உஷா,
பிரத்யுஷா ஆகியோருடன் இருக்கிறார். மண்டப மேற்கூரையில் 12 ராசிகள், 28 நட்சத்திரங்கள், 60 வருடங்கள், நான்கு யுகங்கள், அஷ்டதிக் பாலகர்கள்
ஆகியோர் சிற்பவடிவில் உள்ளனர். கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அவை நீங்கும். அறுபதாம் திருமணம் செய்பவர்கள் இந்த
நவக்கிரகங்கள் முன்பாக திருமணம் செய்கிறார்கள். இவ்வாறு செய்தால் ஆயுள் மேலும் நீடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.இங்குள்ள விநாயகர்
வரசித்தி விநாயகர். இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இங்குள்ள விமானம் சதுரங்க விமானம்.கச்சபேஸ்வரருக்கு முன்புறம்
சிங்க வாகனத்தின் மீது ஐந்து முக ஹேரம்ப விநாயகர் காட்சி தருகிறார். இவருக்கு அருகில் சித்தியும், புத்தியும் நின்ற கோலத்தில் உள்ளனர்.
இவ்விநாயகரை வணங்கினால் கணவன், மனைவிடையே ஒற்றுமை பெருகும் என்பது ஐதீகம். இங்கு 63 நாயன்மார் மண்டபம், தத்தாத்ரேயர், துர்க்கை,
ஆதிசங்கரர், மூலகேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.
இத்தலத்தில் நவக்கிரகங்கள் தனிமண்டபத்தில் நின்ற வடிவில் உள்ளன. கிரகங்களின் மத்தியில் உள்ள சூரியன், தனது மனைவியர்களான உஷா, பிரத்யுஷா ஆகியோருடன் இருக்கிறார். மண்டப மேற்கூரையில் 12 ராசிகள், 28 நட்சத்திரங்கள், 60 வருடங்கள், நான்கு யுகங்கள், அஷ்டதிக் பாலகர்கள் ஆகியோர் சிற்பவடிவில் உள்ளனர். கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அவை நீங்கும்.
அறுபதாம் திருமணம் செய்பவர்கள் இந்த நவக்கிரகங்கள் முன்பாக திருமணம் செய்கிறார்கள். இவ்வாறு செய்தால் ஆயுள் மேலும் நீடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இங்குள்ள விநாயகர் வரசித்தி விநாயகர். இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இங்குள்ள விமானம் சதுரங்க விமானம். கச்சபேஸ்வரருக்கு முன்புறம் சிங்க வாகனத்தின் மீது ஐந்து முக ஹேரம்ப விநாயகர் காட்சி தருகிறார்.
இவருக்கு அருகில் சித்தியும், புத்தியும் நின்ற கோலத்தில் உள்ளனர். இவ்விநாயகரை வணங்கினால் கணவன், மனைவிடையே ஒற்றுமை பெருகும் என்பது ஐதீகம். இங்கு 63 நாயன்மார் மண்டபம், தத்தாத்ரேயர், துர்க்கை, ஆதிசங்கரர், மூலகேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. |