|
||||||||
திருமண அழைப்பிதழ் - திருவளர்ச்செல்வன்/திருநிறைச்செல்வன் என்றால் என்ன பொருள்? |
||||||||
திருமண அழைப்பிதழ் - திருவளர்ச்செல்வன்/திருநிறைச்செல்வன் என்றால் என்ன பொருள்? இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு: திருமண அழைப்பிதழில் மணமக்கள் பெயருக்கு முன்னால் திருவளர்ச்செல்வன்/செல்வி என்றால் அது அந்தக் குடும்பத்தின் மூத்த மகன்/மகளின் திருமணமாகும். திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன்/ மகளுக்கு, இளைய சகோதர/சகோதரிகள் உள்ளனர். இது எங்கள் இல்லத்தின் முதல் திருமணம் ஆகும். எங்கள் இளைய குமாரன்/குமாரிக்குத் திருமண வயது நிரம்பும் போது, உங்கள் மகன்/மகளுக்கு, திருமண வயது நிரம்பி இருந்தால், வரன் கேட்டு வரலாம். என்பதைப் பெரியவர்கள் நினைவில் கொள்ள, மறைமுகமாகத் தெரிவிப்பதாகும்.
திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் இளைய மகன்/மகளின் திருமணமாகும். திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் எங்கள் இல்லத்தில் திருமணங்கள் நிறைவுற்றன, இத்திருமணமே இறுதியானதாகும், இனி எங்கள் இல்லத்தில் மணமக்கள் யாரும் இல்லை என்று பொருள்படும். |
||||||||
by Swathi on 17 May 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|