LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சமுத்திரக்கனி நடிக்கும் பெட்டிக்கடை இன்று விடுமுறை !!

இன்று வாங்க நினைக்கிற பொருளை இருந்த இடத்திலிருந்து விரல்நுனி அசைவில் ஆன்லைனில் வாங்க முடிகிறது.  ஒரு காலத்தில் கடைகளைப் பார்ப்பதே அரிது.

அந்தக் காலத்தில் இருபது ஊருக்கு ஒரு இடத்தில்தான் ஒரு பெட்டிக்கடையே இருக்கும். அது அன்று பிரபலமானதாக முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும். அப்படி ஒரு பெட்டிக்கடையை மையப்படுத்தி சுழலும் கதைதான் 'பெட்டிக்கடை இன்றுவிடுமுறை'. இப்படத்தில் காதல், கலகலப்பு நகைச்சுவை எல்லாம் இருக்கும்.

நெல்லை வட்டாரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை இது.

புதுமுக இயக்குநர் இ கார்வண்ணன். இயக்குகிறார். லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் அவரே தயாரிக்கிறார்.

''இது இன்றைய இளைஞர்களின் அப்பாக்களின் காதல் கதை என்று கூறலாம். அக்கால கட்டத்தின் அசல்தன்மையுடன்  மண்ணின் மணம் மாறாத யதார்த்த பதிவாக இது இருக்கும். படத்தில் வரும் கில்லி விளையாட்டு இரண்டு ஊர்ப்பகை வருமளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.'' என்கிறார் இயக்குநர்.

நாயகனாக 'மொசக்குட்டி' வீரா நடிக்க,  நாயகி உள்பட பலரும் புதுமுகங்களே. முக்கிய வேடத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்க,  ஆர்.சுந்தர் ராஜன், செந்தி ஆகியோரும் நடிக்கிறார்கள்.ஒளிப்பதிவு அருள். இசை மரிய மனோகர். பிரபல எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி வசனம் எழுதுகிறார். நெல்லைப் பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களில் படக்குழு பயணிக்கவுள்ளது.

வரும் 19ல் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்கவுள்ளார்கள்.

by Swathi   on 28 Jan 2015  0 Comments
Tags: Mosakutty Veera   Veera   Pettikadai Indru Vidumurai   சமுத்திரக்கனி   பெட்டிக்கடை இன்று விடுமுறை        
 தொடர்புடையவை-Related Articles
சமுத்திரக்கனி நடிக்கும் பெட்டிக்கடை இன்று விடுமுறை !! சமுத்திரக்கனி நடிக்கும் பெட்டிக்கடை இன்று விடுமுறை !!
மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி !! மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி !!
சமுத்திரக்கனியின் கிட்ணா ஒரு பிரபலமான இலக்கியத்தின் கதை !! சமுத்திரக்கனியின் கிட்ணா ஒரு பிரபலமான இலக்கியத்தின் கதை !!
ஜீவன் இயக்கும் மொசக்குட்டி !! ஜீவன் இயக்கும் மொசக்குட்டி !!
நிமிர்ந்து நில் படத்தை தொடர்ந்து இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு படம் எடுக்கப் போகிறாராம் சமுத்திரக்கனி !! நிமிர்ந்து நில் படத்தை தொடர்ந்து இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு படம் எடுக்கப் போகிறாராம் சமுத்திரக்கனி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.