|
||||||||
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் மாவட்ட அளவில் புரவலர்கள், பயிற்சியாளர்கள், ஒருங்கிணையப்பாளர்களை நியமிக்கிறது |
||||||||
![]() உலகத் தமிழர்களுக்கு வணக்கம்,
தமிழில் நமக்குக் கிடைத்திருக்கும் உயர்ந்த கருத்துகளை, உலக மக்களுக்குத் தேவையான வாழ்வியல் கருத்துகளை உள்ளடக்கிய திருக்குறள் இன்னும் போதிய அளவு வாழ்வியலாக மாற்றம் உள்வாங்கப்படவில்லை எனபதை அறிவோம். பல்வேறு முயற்சிகள், பல்வேறு அமைப்புகள் , அரசு கல்வித்துறை, பரிசுகள் என்று தொடர்ந்து இதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்நிலையில் "நிற்க அதற்குத் தக" என்ற முழக்கத்துடன் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் தொடங்கப்பட்டு உலகெங்கும் உள்ள தமிழ் குழந்தைகள் 9ஆம் வகுப்பிற்குள் , மனப்பாடம் செய்யும் வாய்ப்புள்ள வயதில் அவர்களை திருக்குறளை மனனம் செய்ய வைத்துவிடவேண்டும், அது இளநிலை என்று சான்றளிக்கப்படும். 9 முதல் கல்லூரி முடிப்பதற்குள் திருக்குறளின் பொருள் உணர்ந்து முதுநிலைப் பயிற்சியை, நேர்காணல் தேர்வை முடிக்கவேண்டும். அப்படி இளநிலை , முதுநிலை படிப்புகளை முடிப்பவர்களை பட்டியலிட்டு, வரிசை எண் கொடுத்து கல்வி, வேலை, தொழில், வழிகாட்டுதல், சான்றோர் தொடர்புகள் என்று அனைத்திலும் முன்னுரிமை அளிக்கும் வகையில் தொடர்ந்து முற்றோதல் இயக்கம் உழைக்கத் திட்டமிட்டுள்ளது. பள்ளிகளில் முற்றோதல் முடிக்கும் மாணவர்கள் அரசு வழங்கும் 10000 ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழைப் பெற வழிகாட்டப்படும். இதற்காக தமிழ்நாடு முழுதும் முற்றோதல் கற்பித்து அனுபவம் உள்ள அனைவரும் ஒரு குடையின்கீழ் இணைந்துள்ளார்கள்.
மேலும், மாவட்டத்திற்கு 2000 பேருக்கு திருக்குறள் வழங்க ஹார்வார்ட் தமிழிருக்கை ஒருங்கிணைப்பாளர், புரவலர் மருத்துவர் .விஜய் ஜானகிராமன் அவர்கள் தலைமையில் இயங்கும் உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம், USA , உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்துடன் கைகோர்த்து மாவட்டத்திற்கு ஒரு ஆண்டிற்கு 2000 திருக்குறள் நூல்கள் வீதம் தமிழ்நாடு, பாண்டிச்சேரி இரண்டிற்கும் மொத்தம் 80000 திருக்குறள் நூல்களையும் , அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு திருக்குறள் நூல்களையும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளார்கள்.
இத்திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோரால் சென்னையில் தொடங்கிவைக்கப்பட்டு சென்னை அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் 3000 நூல்கள் கையளிக்கப்பட்டு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் அந்தந்த மாவட்ட அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் சென்னை வந்துள்ள மருத்துவர், வானதி பதிப்பகத்திற்கு சென்று மாவட்டங்களுக்கு அனுப்ப தயாராக உள்ள 30000 நூல்களை பார்வையிட்டார்.
தற்போதைய எங்களது தேவை :
>>ஒவ்வொரு மாவட்டத்திற்கும், திருக்குறள் முற்றோதல் பயிற்சி வழங்க ஆர்வமும் அனுபவமும் உள்ள பயிற்சியாளர்கள்.
>>உங்கள் மாவட்டத்தில் பயிற்சி வழங்கும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்க மாதம் ரூபாய் 10000 தனித்தோ, நண்பர்கள் இணைந்தோ, அமைப்பு , தொழில் வழியாகவோ வழங்கும் புரவலர்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுக்கு 100 மாணவர்களை திருக்குறள் முற்றோதல் முடித்து உருவாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அரிய முயற்சியில் கைகோர்க்க உலகத் தமிழர்களை அழைக்கிறோம்.
பேரன்புடன்,
ச.பார்த்தசாரதி, திட்ட ஒருங்கிணைப்பாளர்
சி.ராஜேந்திரன் IRS (ஓய்வு), அரசு மற்றும் பயிற்றுனர் ஒருங்கிணைப்பு
இரவி சொக்கலிங்கம் , அரசுப்பள்ளிகள் ஒருங்கிணைப்பு
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்
kural.mutrothal@gmail.com
|
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
![]() |
||||||||
by Swathi on 10 May 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|