LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-35

திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மருதீசர். 
தேவியார் - நலமுலைநாயகியம்மை. 
344 காடுடைச் சுடலை நீற்றர்
கையில்வெண்டலையர் தையல்
பாடுடைப் பூதஞ் சூழப்
பரமனார் மருத வைப்பில்
தோடுடைக் கைதை யோடு
சூழ்கிடங் கதனைச் சூழ்ந்த
ஏடுடைக் கமல வேலி
யிடைமரு திடங்கொண் டாரே.
4.035.1
சுடுகாட்டுச் சாம்பலை அணிந்து, கையில் வெள்ளிய மண்டையோட்டினை ஏந்தி, பக்கத்தில் தம்மைச் சார்ந்த பூதங்கள் சூழ மேம்பட்ட சிவபெருமான், மருதநிலத்தில், மடல்களை உடைய தாழைகளோடு சூழும் அகழியைச் சூழ்ந்து தாமரை வேலியாய் அமையும் திருவிடைமருதூரை இடமாகக் கொண்டுள்ளார்.
345 முந்தையார் முந்தி யுள்ளார்
மூவர்க்கு முதல்வ ரானார்
சந்தியார் சந்தி யுள்ளார்
தவநெறி தரித்துநின்றார்
சிந்தையார் சிந்தை யுள்ளார்
சிவநெறியனைத்து மானார்
எந்தையா ரெம்பி ரானா
ரிடைமரு திடங்கொண்டாரே.
4.035.2
எம்தந்தையாராய் எம் தலைவராய் உள்ள பெருமான் முற்பட்டவர்களுக்கும் முற்பட்டவராய், அரி அயன் அரன் என்ற மூவருக்கும் முதற் பொருளானவராய், அந்திகளிலும் அவ்வந்தித் தொழுகைகளிலும் விளங்கும் அருளுருவினராய், தவநெறியில் ஒழுகுபவர் உள்ளத்திருப்பவராய், மங்கலமான வழிகள் எல்லாமாயும் ஆகியவராய், இடைமருதை இடங்கொண்டவராவா.
346 காருடைக் கொன்றை மாலை
கதிர்மணி யரவி னோடு
நீருடைச் சடையுள் வைத்த
நீதியார் நீதி யாய
போருடை விடையொன் றேற
வல்லவர் பொன்னித் தென்பால்
ஏருடைக் கமல மோங்கு
மிடைமரு திடங்கொண் டாரே.
4.035.3
காவிரியின் தென்கரையில் அழகிய தாமரைகள் செழித்து ஓங்கும் இடைமருது என்ற தலத்தை உறைவிடமாகக் கொண்ட பெருமான் கார்காலத்தில் மலரும் மலர்களை உடைய கொன்றை மாலையை ஒளிவீசும் இரத்தினத்தைத் தலையில் உடைய பாம்பினோடு கங்கை தங்கும் சடையில் வைத்த நேர்மையராய், அறமே வடிவெடுத்ததும் போரிடும் ஆற்றலுடையதுமான காளையைச் செலுத்துவதில் வல்லவராய் உள்ளார்.
347 விண்ணினார் விண்ணின் மிக்கார்
வேதங்கள் நான்குமங்கம்
பண்ணினார் பண்ணின் மிக்க
பாடலார் பாவந்தீர்க்குங்
கண்ணினார் கண்ணின் மிக்க
நுதலினார்காமற் காய்ந்த
எண்ணினா ரெண்ணின் மிக்க
விடைமரு திடங்கொண்டாரே.
4.035.4
அடியவருடைய எண்ணத்தில் மேம்பட்ட, இடைமருதை இடங்கொண்ட பெருமானார் தேவருலகை உடையவராய், அதனினும் மேம்பட்டவராய், நான்கு வேதமும் ஆறு அங்கங்களும் உலகறியச் செய்தவராய், பண்ணில் மேம்பட்ட பாடல்களை உடையவராய், அடியவர்களுடைய பாவங்களைப் போக்கும் கருத்து உடையவராய், மேம்பட்ட நெற்றிக்கண்ணராய் மன்மதனை வெகுண்ட பெருமானாய் உள்ளார்.
348 வேதங்கள் நான்குங் கொண்டு
விண்ணவர் பரவி யேத்தப்
பூதங்கள் பாடி யாட
லுடையவன் புனித னெந்தை
பாதங்கள் பரவி நின்ற
பத்தர்க டங்கண் மேலை
ஏதங்க டீர நின்றா
ரிடைமரு திடங்கொண் டாரே.
4.035.5
நான்கு வேதங்களையும் ஒலித்துக்கொண்டு தேவர்கள் முன்நின்று போற்றிப் புகழப் பூதங்கள் பாடக் கூத்தாடுதலை உடைய தூயராகிய எம் தலைவர், தம் திருவடிகளை முன் நின்று துதித்த அடியார்களுடைய பழைய வினைகளையும் இனிவரக் கூடிய வினைகளையும் தீர்ப்பவராக இடைமருதை இடங் கொண்டுள்ளார்.
349 பொறியர வரையி லார்த்துப்
பூதங்கள் பலவுஞ் சூழ
முறிதரு வன்னி கொன்றை
முதிர்சடை மூழ்க வைத்து
மறிதரு கங்கை தங்க
வைத்தவ ரெத் திசையும்
எறிதரு புனல்கொள் வேலி
யிடைமரு திடங்கொண் டாரே.
4.035.6
புள்ளிகளை உடைய பாம்பினை இடையில் இறுகச் சுற்றிப் பூதங்கள் பலவும் தம்மைச் சூழ்ந்திருக்கத் தளிரை உடைய வன்னி, கொன்றை என்பனவற்றைச் செந்நிறம் மிக்க சடையில் கங்கை வெள்ளத்தில் முழுகுமாறு சூடிய பெருமான் நாற்றிசைகளிலும் அலைவீசும் நீரோடு கால்களை எல்லையாக உடைய இடைமருது இடங்கொண்டார். 
350 படரொளி சடையி னுள்ளாற்
பாய்புன லரவி னோடு
சுடரொளி மதியம் வைத்துத்
தூவொளி தோன்று மெந்தை
அடரொளி விடையொன் றேற
வல்லவ ரன்பர் தங்கள்
இடரவை கெடவு நின்றா
ரிடைமரு திடங்கொண் டாரே.
4.035.7
இடைமருது இடங்கொண்ட பெருமான் ஒளிவீசும் சடையிலே பரவும் நீரை உடைய கங்கை, பாம்பு, ஒளி வீசும் பிறை எனும் இவற்றைச் சூடித் தூய செந்நிறத்தோடு காட்சி வழங்கும் எங்கள் தலைவராய், பகைவர்களை அழிக்கும் பிரகாசமான காளையை ஏறி ஊர வல்லவராய், அன்பர்களுடைய துயரங்களைப் போக்கவல்லவருமாய் உள்ளார்.
351 கமழ்தரு சடையி னுள்ளாற்
கடும்புன லரவி னோடு
தவழ்தரு மதியம் வைத்துத்
தன்னடி பலரு மேத்த
மழுவது வலங்கை யேந்தி
மாதொரு பாக மாகி
எழில்தரு பொழில்கள் சூழ்ந்த
விடைமரு திடங்கொண் டாரே.
4.035.8
பூக்களின் நறுமணம் கமழும் சடையினுள்ளே விரைந்து ஓடும் கங்கை, பாம்பு பிறை இவற்றைச் சூடித் தம் திருவடிகளைப் பலரும் துதிக்குமாறு மழுப்படையை வலக்கையில் ஏந்திப் பார்வதிபாகராய் அழகிய சோலைகள் சூழ்ந்த இடைமருதுப் பெருமான் உள்ளார்.
352 பொன்றிகழ் கொன்றை மாலை
புதுப்புனல் வன்னி மத்தம்
மின்றிகழ் சடையில் வைத்து
மேதகத் தோன்று கின்ற
அன்றவ ரளக்க லாகா
வனலெரி யாகி நீண்டார்
இன்றுட னுலக மேத்த
விடைமரு திடங்கொண் டாரே.
4.035.9
பொன்போல ஒளிவீசும் கொன்றைப்பூமாலை கங்கை, வன்னி இலை, ஊமத்தம் எனும்இவற்றை ஒளிவீசும் சடையிற் சூடி, ஏனைய தேவர்களின் மேம்பட்டுத் தோன்றுகின்ற பிரமனும் திருமாலும் ஒரு காலத்தில் அடிமுடி காணமுடியாதபடி தீத்தம்பமாகக் காட்சி வழங்கிய பெருமான் இப்பொழுது நன்மக்கள் துதிக்குமாறு இடைமருதில் உறைகின்றார்.
353 மலையுடன் விரவி நின்று
மதியிலா வரக்க னூக்கத்
தலையுட னடர்த்து மீண்டே
தலைவனா வருள்க ணல்கிச
சிலையுடை மலையை வாங்கித்
திரிபுர மூன்று மெய்தார்
இலையுடைக் கமல வேலி
யிடைமரு திடங்கொண் டாரே.
4.035.10
கயிலைமலையை அடைந்து அறிவற்ற அரக்கனாகிய இராவணன் அம்மலையைப் பெயர்க்க முற்பட அவனைத் தலை உட்பட உடல்முழுதும் துன்புறுத்தி மீண்டும் அவன் வேண்ட அவனுக்குத் தலைவராய் இருந்து அவனுக்கு அருட்பேறுகள் பலவற்றை விரும்பி அளித்து, மலையாகிய வில்லை வளைத்து வானில் திரிகின்ற மும்மதில்களையும் எய்து அழித்த பெருமான் இலைகளோடு கூடிய தாமரைமலர்கள் ஊர் எல்லையில் பூத்துக் குலுங்கும் திருவிடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளி இருப்பவராவார்.
திருச்சிற்றம்பலம்

4.035.திருவிடைமருது 

திருநேரிசை 

திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - மருதீசர். 

தேவியார் - நலமுலைநாயகியம்மை. 

344 காடுடைச் சுடலை நீற்றர்

கையில்வெண்டலையர் தையல்

பாடுடைப் பூதஞ் சூழப்

பரமனார் மருத வைப்பில்

தோடுடைக் கைதை யோடு

சூழ்கிடங் கதனைச் சூழ்ந்த

ஏடுடைக் கமல வேலி

யிடைமரு திடங்கொண் டாரே.(4.035.1)

  சுடுகாட்டுச் சாம்பலை அணிந்து, கையில் வெள்ளிய மண்டையோட்டினை ஏந்தி, பக்கத்தில் தம்மைச் சார்ந்த பூதங்கள் சூழ மேம்பட்ட சிவபெருமான், மருதநிலத்தில், மடல்களை உடைய தாழைகளோடு சூழும் அகழியைச் சூழ்ந்து தாமரை வேலியாய் அமையும் திருவிடைமருதூரை இடமாகக் கொண்டுள்ளார்.

345 முந்தையார் முந்தி யுள்ளார்

மூவர்க்கு முதல்வ ரானார்

சந்தியார் சந்தி யுள்ளார்

தவநெறி தரித்துநின்றார்

சிந்தையார் சிந்தை யுள்ளார்

சிவநெறியனைத்து மானார்

எந்தையா ரெம்பி ரானா

ரிடைமரு திடங்கொண்டாரே.(4.035.2)

  எம்தந்தையாராய் எம் தலைவராய் உள்ள பெருமான் முற்பட்டவர்களுக்கும் முற்பட்டவராய், அரி அயன் அரன் என்ற மூவருக்கும் முதற் பொருளானவராய், அந்திகளிலும் அவ்வந்தித் தொழுகைகளிலும் விளங்கும் அருளுருவினராய், தவநெறியில் ஒழுகுபவர் உள்ளத்திருப்பவராய், மங்கலமான வழிகள் எல்லாமாயும் ஆகியவராய், இடைமருதை இடங்கொண்டவராவா.

346 காருடைக் கொன்றை மாலை

கதிர்மணி யரவி னோடு

நீருடைச் சடையுள் வைத்த

நீதியார் நீதி யாய

போருடை விடையொன் றேற

வல்லவர் பொன்னித் தென்பால்

ஏருடைக் கமல மோங்கு

மிடைமரு திடங்கொண் டாரே.(4.035.3)

  காவிரியின் தென்கரையில் அழகிய தாமரைகள் செழித்து ஓங்கும் இடைமருது என்ற தலத்தை உறைவிடமாகக் கொண்ட பெருமான் கார்காலத்தில் மலரும் மலர்களை உடைய கொன்றை மாலையை ஒளிவீசும் இரத்தினத்தைத் தலையில் உடைய பாம்பினோடு கங்கை தங்கும் சடையில் வைத்த நேர்மையராய், அறமே வடிவெடுத்ததும் போரிடும் ஆற்றலுடையதுமான காளையைச் செலுத்துவதில் வல்லவராய் உள்ளார்.

347 விண்ணினார் விண்ணின் மிக்கார்

வேதங்கள் நான்குமங்கம்

பண்ணினார் பண்ணின் மிக்க

பாடலார் பாவந்தீர்க்குங்

கண்ணினார் கண்ணின் மிக்க

நுதலினார்காமற் காய்ந்த

எண்ணினா ரெண்ணின் மிக்க

விடைமரு திடங்கொண்டாரே.(4.035.4)

  அடியவருடைய எண்ணத்தில் மேம்பட்ட, இடைமருதை இடங்கொண்ட பெருமானார் தேவருலகை உடையவராய், அதனினும் மேம்பட்டவராய், நான்கு வேதமும் ஆறு அங்கங்களும் உலகறியச் செய்தவராய், பண்ணில் மேம்பட்ட பாடல்களை உடையவராய், அடியவர்களுடைய பாவங்களைப் போக்கும் கருத்து உடையவராய், மேம்பட்ட நெற்றிக்கண்ணராய் மன்மதனை வெகுண்ட பெருமானாய் உள்ளார்.

348 வேதங்கள் நான்குங் கொண்டு

விண்ணவர் பரவி யேத்தப்

பூதங்கள் பாடி யாட

லுடையவன் புனித னெந்தை

பாதங்கள் பரவி நின்ற

பத்தர்க டங்கண் மேலை

ஏதங்க டீர நின்றா

ரிடைமரு திடங்கொண் டாரே.(4.035.5)

  நான்கு வேதங்களையும் ஒலித்துக்கொண்டு தேவர்கள் முன்நின்று போற்றிப் புகழப் பூதங்கள் பாடக் கூத்தாடுதலை உடைய தூயராகிய எம் தலைவர், தம் திருவடிகளை முன் நின்று துதித்த அடியார்களுடைய பழைய வினைகளையும் இனிவரக் கூடிய வினைகளையும் தீர்ப்பவராக இடைமருதை இடங் கொண்டுள்ளார்.

349 பொறியர வரையி லார்த்துப்

பூதங்கள் பலவுஞ் சூழ

முறிதரு வன்னி கொன்றை

முதிர்சடை மூழ்க வைத்து

மறிதரு கங்கை தங்க

வைத்தவ ரெத் திசையும்

எறிதரு புனல்கொள் வேலி

யிடைமரு திடங்கொண் டாரே.(4.035.6)

  புள்ளிகளை உடைய பாம்பினை இடையில் இறுகச் சுற்றிப் பூதங்கள் பலவும் தம்மைச் சூழ்ந்திருக்கத் தளிரை உடைய வன்னி, கொன்றை என்பனவற்றைச் செந்நிறம் மிக்க சடையில் கங்கை வெள்ளத்தில் முழுகுமாறு சூடிய பெருமான் நாற்றிசைகளிலும் அலைவீசும் நீரோடு கால்களை எல்லையாக உடைய இடைமருது இடங்கொண்டார். 

350 படரொளி சடையி னுள்ளாற்

பாய்புன லரவி னோடு

சுடரொளி மதியம் வைத்துத்

தூவொளி தோன்று மெந்தை

அடரொளி விடையொன் றேற

வல்லவ ரன்பர் தங்கள்

இடரவை கெடவு நின்றா

ரிடைமரு திடங்கொண் டாரே.(4.035.7)

  இடைமருது இடங்கொண்ட பெருமான் ஒளிவீசும் சடையிலே பரவும் நீரை உடைய கங்கை, பாம்பு, ஒளி வீசும் பிறை எனும் இவற்றைச் சூடித் தூய செந்நிறத்தோடு காட்சி வழங்கும் எங்கள் தலைவராய், பகைவர்களை அழிக்கும் பிரகாசமான காளையை ஏறி ஊர வல்லவராய், அன்பர்களுடைய துயரங்களைப் போக்கவல்லவருமாய் உள்ளார்.

351 கமழ்தரு சடையி னுள்ளாற்

கடும்புன லரவி னோடு

தவழ்தரு மதியம் வைத்துத்

தன்னடி பலரு மேத்த

மழுவது வலங்கை யேந்தி

மாதொரு பாக மாகி

எழில்தரு பொழில்கள் சூழ்ந்த

விடைமரு திடங்கொண் டாரே.(4.035.8)

  பூக்களின் நறுமணம் கமழும் சடையினுள்ளே விரைந்து ஓடும் கங்கை, பாம்பு பிறை இவற்றைச் சூடித் தம் திருவடிகளைப் பலரும் துதிக்குமாறு மழுப்படையை வலக்கையில் ஏந்திப் பார்வதிபாகராய் அழகிய சோலைகள் சூழ்ந்த இடைமருதுப் பெருமான் உள்ளார்.

352 பொன்றிகழ் கொன்றை மாலை

புதுப்புனல் வன்னி மத்தம்

மின்றிகழ் சடையில் வைத்து

மேதகத் தோன்று கின்ற

அன்றவ ரளக்க லாகா

வனலெரி யாகி நீண்டார்

இன்றுட னுலக மேத்த

விடைமரு திடங்கொண் டாரே.(4.035.9)

  பொன்போல ஒளிவீசும் கொன்றைப்பூமாலை கங்கை, வன்னி இலை, ஊமத்தம் எனும்இவற்றை ஒளிவீசும் சடையிற் சூடி, ஏனைய தேவர்களின் மேம்பட்டுத் தோன்றுகின்ற பிரமனும் திருமாலும் ஒரு காலத்தில் அடிமுடி காணமுடியாதபடி தீத்தம்பமாகக் காட்சி வழங்கிய பெருமான் இப்பொழுது நன்மக்கள் துதிக்குமாறு இடைமருதில் உறைகின்றார்.

353 மலையுடன் விரவி நின்று

மதியிலா வரக்க னூக்கத்

தலையுட னடர்த்து மீண்டே

தலைவனா வருள்க ணல்கிச

சிலையுடை மலையை வாங்கித்

திரிபுர மூன்று மெய்தார்

இலையுடைக் கமல வேலி

யிடைமரு திடங்கொண் டாரே.(4.035.10)

  கயிலைமலையை அடைந்து அறிவற்ற அரக்கனாகிய இராவணன் அம்மலையைப் பெயர்க்க முற்பட அவனைத் தலை உட்பட உடல்முழுதும் துன்புறுத்தி மீண்டும் அவன் வேண்ட அவனுக்குத் தலைவராய் இருந்து அவனுக்கு அருட்பேறுகள் பலவற்றை விரும்பி அளித்து, மலையாகிய வில்லை வளைத்து வானில் திரிகின்ற மும்மதில்களையும் எய்து அழித்த பெருமான் இலைகளோடு கூடிய தாமரைமலர்கள் ஊர் எல்லையில் பூத்துக் குலுங்கும் திருவிடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளி இருப்பவராவார்.

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 18 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.