LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-80

4.080.கோயில் - திருவிருத்தம் 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர். 
தேவியார் - சிவகாமியம்மை. 
770 பாளை யுடைக்கமு கோங்கிப்பன் மாடம்
நெருங்கியெங்கும்
வாளை யுடைப்புனல் வந்தெறி வாழ்வயற்
றில்லைதன்னுள்
ஆள வுடைக்கழற் சிற்றம் பலத்தரன்
ஆடல்கண்டாற்
பீளை யுடைக்கண்க ளாற்பின்னைப் பேய்த்தொண்டர்
காண்பதென்னே. 
4.080.1
பாளையை உடைய பாக்கு மரங்கள் உயர்ந்து வளர்ந்தமாடவீடுகள் நெருக்கமாக அமைய, வாளை மீன் குதிக்கும் தண்ணீர் அலை எறியும் வயல்களையுடைய தில்லை நகரிலே, நம்மை ஆட்கொள்ளுதலுக்காக அமைந்த திருவடிகளை உடைய சிற்றம் பலத்துப் பெருமானுடைய ஆடலைக் காணும் வாய்ப்பினைப் பெற்றால், அதன்பின் பீளை ஒழுகும் கண்களால், பிடித்ததனை விடாத பேய் போன்றஇயல்பை உடைய அடியார்கள், தம் கண்களால் காணத்தக்க மேம்பட்ட பொருள் யாதுள்ளதோ!
771 பொருவிடை யொன்றுடைப் புண்ணிய மூர்த்தி
புலியதளன்
உருவுடை யம்மலை மங்கை மணாள
னுலகுக்கெல்லாம்
திருவுடை யந்தணர் வாழ்கின்ற தில்லைச்சிற்
றம்பலவன்
றிருவடி யைக்கண்ட கண்கொண்டு மற்றினிக்
காண்பதென்னே.
4.080.2
போரிடும் காளை ஒன்றினையுடைய புண்ணிய வடிவினனாய், புலித்தோல் ஆடையனாய், அழகிய பார்வதி மணாளனாய், அந்தணர்கள் வாழ்கின்ற பதியாய் உலகத்தவருக்கெல்லாம் பேரின்பச் செல்வத்தை நல்கும் தில்லையிலுள்ள சிற்றம்பலத்துக் கூத்து நிகழ்த்தும் பெருமானுடைய திருவடிகளைக் கண்ட கண்களால், காண்பதற்குப் பிறிதொருபொருள் யாதுள்ளதோ!
772 தொடுத்த மலரொடு தூபமுஞ் சாந்துங்கொண்
டெப்பொழுதும்
அடுத்து வணங்கு மயனொடு மாலுக்குங்
காண்பரியான்
பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய தில்லைச்சிற்
றம்பலவன்
உடுத்த துகில்கண்ட கண்கொண்டு மற்றினிக்
காண்பதென்னே.
4.080.3
மாலையாகத் தொடுக்கப் பட்ட மலரொடு புகைக்கு உரியனவும் சந்தனமும் கைகளிற் கொண்டு, எப்பொழுதும் அணுகி வந்து வணங்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் தம் முயற்சியினாற் காண்பதற்கு அரியவனாய்த் திகழ்பவனாகித் திருநீறணிந்து பொன் மயமான தில்லைச் சிற்றம்பலத்து ஆடும் பெருமான் அணிந்த புலித்தோலாடையைக் கண்ட கண் கொண்டு காண்பதற்குப் பிறிது பொருள் யாதுள்ளதோ!
773 வைச்ச பொருணமக் காகுமென் றெண்ணி
நமச்சிவாய
அச்ச மொழிந்தே னணிதில்லை யம்பலத்
தாடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி யுந்தியின்
மேலசைத்த
கச்சி னழகுகண் டாற்பின்னைக் கண்கொண்டு
காண்பதென்னே.
4.080.4
நமக்குச் சேமவைப்பாக இருக்கின்ற பொருள் திருவைந்தெழுத்தே என்று விருப்புற்று நினைத்துப் பேரின்ப வாழ்வு குறைவற நடக்கும் என்று துணிந்து அச்சம் ஒழிந்தேன். அழகான தில்லை நகரிலே உள்ள சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துகின்றவனாய், அடியவர் திறத்துப் பித்தனாய், பிறப்பு அற்றவனாய் நந்தி என்ற பெயரினனாய் உள்ள பெருமானுடைய கொப்பூழின் மேல் இடுப்பைச் சுற்றிக்கட்டப்பட்ட உதரபந்தமாகிய கச்சின் அழகைக் காணப் பெற்றால் பின்னைக் காணவேண்டிய உயர்ந்த பொருள் யாதுள்ளதோ!
774 செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற்
றம்பலவன்
மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள் கண்டு
மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல
மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற வாடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு
காண்பதென்னே.
4.080.5
வயலிலே காண்கின்ற பூங்கொடியில் நீலோற்பல மலர்கள் மலரும் வளமுள்ள தில்லைப்பதியில் உறையுஞ் சிற்றம்பலவனாய்நெய்யில் நின்றெரியும் தீபச்சுடர் போன்று ஒளிவிடும் நீலமணி மிடற்றனுமாய பெருமான், கருமை நிலைபெற்ற ஒளிமிக்க கண்களை உடைய சிவகாமியம்மையார் கண்டு மகிழ்ந்து நிற்க வைத்துச் செய்வதும் என்று வந்தாய் எனும் திருக்குறிப்புப் புலப்பட நின்று இயற்றுவதுமான ஆடலைக் கண்டபின் காணத்தகும் பொருள் வேறு யாதுளதோ!
775 ஊனத்தை நீக்கி யுலகறி யவென்னை
யாட்கொண்டவன்
றேனொத் தெனக்கினி யான்றில்லைச் சிற்றம்
பலவனெங்கோன்
வானத் தவருய்ய வன்னஞ்சை யுண்டகண்
டத்திலங்கும்
ஏனத் தெயிறுகண் டாற்பின்னைக் கண்கொண்டு
காண்பதென்னே.
4.080.6
அவைதிக சமயத்தைச் சார்ந்தவனாயினேன் என்ற என் குறையைப் போக்கி, அடியேனைச் சூலைநோய் அருளி ஆட்கொண்டு, அடியேனுக்குத் தேனை ஒத்து இனியனாய்த் தில்லைச் சிற்றம்பலவனாய் உள்ள எம் தலைவன், தேவர்கள் உயிர் பிழைக்கு மாறு கொடிய விடத்தை உண்டு இருத்திய கழுத்தில் அணிந்திருக்கும் மகாவராகத்தின் கொம்பின் வனப்பைக் கண்டால் பின், காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!
776 தெரித்த கணையாற் றிரிபுர மூன்றுஞ்செந்
தீயின்மூழ்க
எரித்த விறைவ னிமையவர் கோமா
னிணையடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற்
றம்பலவன்
சிரித்த முகங்கண்ட கண்கொண்டு மற்றினிக்
காண்பதென்னே.
4.080.7
ஆராய்ந்து எடுத்த அம்பாலே வானத்தில் உலவிய மதில்கள் மூன்றும் நெருப்பில் மூழ்குமாறு தீக்கு இரையாக்கிய தலைவனாய், தேவர்கள் மன்னனாய் உள்ள சிவபெருமானுடைய திருவடிகளைத் தம்முள் கொண்டு தாங்கும் மனத்தை உடைய அடியவர்கள் வாழ்கின்ற தில்லை நகரிலே சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் அப்பெருமானுடைய சிரித்த முகத்தைக் கண்ட கண்களால் இனிக் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!
777 சுற்று மமரர் சுரபதி நின்றிருப்
பாதமல்லாற்
பற்றொன் றிலோமென் றழைப்பப் பரவையுள்
நஞ்சையுண்டான்
செற்றங் கநங்கனைத் தீவிழித் தான்றில்லை
யம்பலவன்
நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக்
காண்பதென்னே.
4.080.8
சுற்றிச் சூழும் தேவர்களும், இந்திரனும் 'உன் திருவடிகளைத் தவிர எங்களுக்கு வேறு பற்றுக்கோடு இல்லை' என்று கூறி ஆலகால விடத்தை அடக்குமாறு சிவபெருமானை வேண்டியபோது அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கிக் கடலில் தோன்றிய விடத்தை உண்டவனாகி தில்லை நகரில் சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் பெருமான், மன்மதனை வெகுண்டு சாம்பலாகுமாறு விழித்த நெற்றிக்கண்ணைக் கண்ட கண்ணால் இனிக் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாது உளதோ!
778 சித்தத் தெழுந்த செழுங்கம லத்தன்ன
சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற்
றம்பலவன்
முத்தும் வயிரமு மாணிக்கம் தன்னுள்
விளங்கியதூ
மத்த மலர்கண்ட கண்கொண்டு மற்றினிக்
காண்பதென்னே.
4.080.9
உள்ளத்திலே முளைத்துச் செழித்து மலர்ந்த செழுந்தாமரை மலர்களை ஒத்த திருவடிகளை நிலையாக மனத்தில் இறுத்திய சான்றோர்கள் வாழும் தில்லையம்பதியில் உள்ள சிற்றம்பலத்தானுடைய முத்தும் வயிரமும் மாணிக்கமும் தூய மலர்களும் அணிந்த திருச்சென்னியின் மலரழகைக் கண்ட கண்களால் இனி மேம்பட்டதாகக் காண்பதற்குரிய பொருள் பிறிது யாதுள்ளதோ!
779 தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி யுன்னித்
தடவரையை
வரைக்கைக ளாலெடுத் தார்ப்ப மலைமகள்
கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்து மணிதில்லை
யம்பலவன்
நெருக்கி மிதித்த விரல்கண்ட கண்கொண்டு
காண்பதென்னே.
4.080.10
இராவணன் செருக்கு மிகுந்துத் தன் தோள் வலிமையை மிகுதியாகக் கருதிப் பெரிய கயிலைமலையைத் தன் மலைபோன்ற கைகளால் எடுத்து ஆரவாரம் செய்ய அதனைக் கண்டு பார்வதி கொழுநனாகிய தில்லைச் சிற்றம்பலவன் சிரித்து இராவணனுடைய கிரீடங்கள் அணிந்த தலைகள் பத்தினையும் நெருக்கி மிதித்த திருக்கால் விரலைக் கண்ட கண்களால் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.