LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் மட்டும் Print Friendly and PDF

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் !

பெரும்பாலான இந்திய கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்ட சத்து பற்றாக்குறை பெரும்பாலும் உள்ளது.இதனை கருத்தில் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் தேவையான சத்துக்களை அளிக்கும் உணவுப்பொருள்கள் எவை? அவையளிக்கும் சத்துக்கள் என்ன? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன? என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மூலம் தெரிந்து கொள்ளுங்களேன்.!

 

ஊட்டச்சத்துக்கள் பலன்கள் ஊட்டச்சத்து அடங்கிய பொருட்கள்
புரதச்சத்து கருவில் குழந்தை உருவாவதற்கான திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கர்ப்பப்பை வலுவாக இருப்பதற்கும் நச்சுக்கொடி உருவாவதற்கும் புரதச்சத்து அவசியம். பச்சைக் காய்கறிகள், பால், பால் பொருள்கள், இறைச்சி, மீன், பருப்பு வகைகள், கடலை, தானியங்கள்.
இரும்புச்சத்து பிரசவ காலத்தில் ரத்த சோகை வராமல் தடுக்கிறது. குழந்தை பிறந்தவுடன் பயன்படுத்திக் கொள்ள வசதியாக தாய்க்குக் கிடைக்கும் இரும்புச்சத்தை கருவில் உள்ள குழந்தை தனது கல்லீரலில் சேமித்து வைத்துக் கொள்கிறது. கீரைகள், சுண்டைக்காய், பாகற்காய், வெல்லம், எள், பேரீச்சம்பழம், முட்டை, இறைச்சி, தானிய வகைகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டைவகைகள்.
கார்போஹைட்ரேட் கர்ப்பக் காலத்தில் இயல்பைவிட அதிகக் கலோரிகள் தேவை என்பதால் கார்போஹைட்ரேட் சத்து தேவை. எனினும் மாவுச் சத்து அதிகமானால் உடல் பருமன் ஏற்படும். பால், தேன், உருளைக் கிழங்கு, பழங்கள், மாவுப் பொருள்.
கால்ஷியம் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கும் கரு குழந்தைக்கு பற்கள் உருவாவதற்கும் கால்சியம் மிகவும் அவசியம். பால் மற்றும் பால் பொருட்கள், முட்டை, கிழங்கு வகைகள், பழங்கள், மாவுப் பொருள்.
வைட்டமின் சமச்சீர் உணவின் அடிப்படையில் வைட்டமின்கள் உடலில் சேர்வதற்கு கொழுப்புச் சத்து அவசியம். ஆனால் அதிகக் கொழுப்புச் சத்து உடல் பருமனை ஏற்படுத்தும். வெண்ணெய், நெய், எண்ணெய், ஆட்டிறைச்சி, கோழி, முட்டை, முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகள்.
வைட்டமின்-A தோல், கண்கள், எலும்புகள் உள்பட உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திற்குத் இச்சத்து தேவை. பால், வெண்ணெய், முட்டை, கேரட், பப்பாளி, மாம்பழம், கீரைகள், மீன்.
வைட்டமின்-B மலச்சிக்கல், நரம்புத்தளர்ச்சி, பிரிவுகள், தோல் நோய்கள் வராமல், வைட்டமின்- ஏ சத்துக்கள் தடுக்கின்றன. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு வைட்டமின் - பி சத்து தேவையாயுள்ளது. பால், முட்டை, நல்லெண்ணெய், கைக்குத்தல் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், இறைச்சி.
வைட்டமின்-C கருவில் வளரும் குழந்தையின் தோல், எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின்-சி உதவுகிறது. நச்சுக்கொடி வலுவடையும் இரும்புச்சத்தை உட்கிரகிக்கவும் வைட்டமின்-சி உதவுகிறது. எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யாப் பழம், ஆரஞ்சு, தக்காளி, பருப்பு வகைகள், முருங்கைக்காய், முள்ளங்கி, உருளைக் கிழங்கு, கொத்தமல்லி (இவற்றை அதிக நேரம் சமைக்கும் நிலையில் வைட்டமின் சத்துக்கள் போய்விடும் என்பதை மறந்து விடக்கூடாது).
வைட்டமின்-D கால்சியச்சத்தை உட்கிரகிக்க வைட்டமின்-டி உதவுகிறது. எலும்பு வளர்ச்சிக்கும் உறுதிக்கும் கால்சியச்சத்து தேவை. சூரிய ஒளி, வெண்ணெய், பாலாடைக்கட்டி, முட்டை, மீன், ஈரல்.
வைட்டமின்-E சீரானசத்து ஓட்டத்திற்கு வைட்டமின்-ஈ உதவுகிறது. கோதுமை, ஆப்பிள், கேரட், முட்டைக்கோஸ், கீரைகள், முட்டையின் மஞ்சள் கரு.
வைட்டமின்-K ரத்தம் உறையும் தன்மையைக் கொடுக்கிறது. பச்சைக் காய்கறிகள், முட்டை தானிய வகைகள், உருளைக்கிழங்கு.
by Swathi   on 13 Dec 2012  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..? கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..?
கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !! கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !!
கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !! கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !!
குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர் குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர்
இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர் இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்?  ஹீலர் பாஸ்கர் தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு... கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு...
மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !! மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.