LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்

ஓங்கி உலகளந்த தமிழர் -2:யாரோ அவர் யாரோ?

                       முனைவர்.கி.செம்பியன்   

வள்ளுவர் யார்?
ஆணா, பெண்ணா, திருநங்கையா ?
தமிழரா, ஆந்திரரா, கன்னடரா, மலையாள நாட்டவரா?
தமிழர் என்றால் சேரரா, சோழரா, பாண்டியரா?
அவருக்குத் தமிழ் தெரிந்திருந்தது!
தமிழ் தெரிந்த தமிழரா! 
அவர் என்ன என்ன படித்திருந்தார்?
தமிழைத்தவிர வேறு மொழிகள் அவருக்குத் தெரிந்திருந்தனவா?
அவருக்குத் தமிழைக் கற்பித்தவர் யார்?
அவர்தம் குரு யார்?
அவருடன் பயின்றவர் யார் யார்?
என்ன என்ன நூல்கள் படித்தார்?
அவர் படித்த நூல்கள் எங்கே?
பகலில் படித்தாரா, இரவில் படித்தாரா?
விடியற்காலையில் கற்பிக்கப்பட்டாரா, பகலிலா, இரவிலா?
வள்ளுவர் தேர்வுகள் எழுதியதுண்டா?
முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றாரா?
அவர் பயின்றது திண்ணையிலா, மரத்தடியிலா, பள்ளியிலா?
காட்டிலா, குகையிலா?
எந்த வயதிலிருந்து எந்த வயதுவரை படித்தார்?
எந்த வயதில் குறளை எழுதினார்?
வீட்டிலிருந்தா, காட்டிலிருந்தா, குகையிலிருந்தா, சிறையிலிருந்தா?
பாடி எழுதினாரா, எழுதிப் பாடினாரா?
அவரே எழுதினாரா, அவர் சொல்ல.........?
ஒருவராக எழுதினாரா, பலர் எழுத இவர் தலைமை ஏற்றாரா?
பத்துப் பத்தாக எழுதவேண்டும் என்ற எண்ணத்திற்குச் சொந்தக்காரர் யார்?
இவருடையதா, இவருக்கு முந்தியதா?
மீசை, தாடி வைத்திருந்தாரா?
உச்சிக்கொண்டை உண்டா?
மொட்டையாக இருந்தாரா?
சட்டை, வேட்டி, துண்டு அணிந்திருந்தாரா; நூலா, பட்டா?
அகத்தியனைப்போல் கட்டையா?
பாண்டியன் நெடுஞ்செழியனைப்போல் நெட்டையா?
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள் திருவள்ளுவர் எந்தப் பால்?
பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்று பாடியிருந்தாலும், அவருக்கென்று ஒரு பால் இருந்திருக்கவேண்டுமே!
சும்மா, தெரிந்துகொள்வதற்காகத்தான், வேறொன்றுமில்லை!
திருமணம் ஆனவரா, ஆகாதவரா, துறவியா?
காதலித்துத் திருமணமா, திருமணமாகிக் காதலா?
அதே பாலில் (நாற்பாலுள் எதிலே) மணமகளைத் தேர்ந்தாரா?
ஒரு துணைவிதானா?
திருமதி வாசுகி அத்தை மகளா, மாமன் மகளா?
குழந்தை உண்டா?
  
அவர் வீடு கீற்று வீடா, ஓட்டு வீடா, மச்சு வீடா, எழுநிலை மாடமா?
திருக்குறளைப் படைப்பதற்காகப் பொடிபோட்டுக் கொள்வதுண்டா?
புகையிலைச், சுருட்டு, கள், அடுநறா!
கறி, மீன் உண்பவரா? இடையில் நிறுத்திவிட்டாரா?
இவர் உண்டது பச்சை அரிசியா, புழுங்கலா?
கம்பா, கேழ்வரகா, தினையா?
இவருக்குக் கனிவகை பிடிக்குமா?
இவரது வீட்டில் பயன்படுத்தியவை மண்பாண்டாமா?
வீட்டு விளக்கில் என்ன நெய் பயன்படுத்தினார்?
காலையில் எழுந்தவுடன் என்ன உணவு உண்டிருப்பார்?
சூடாகவா, குளிர்ச்சியாகவா?
உடற்பயிற்சி செய்பவரா, தியானம்?
இவருக்கு என்ன விளையாட்டுத் தெரியும்?
சின்ன வயதில் விளையாடியிருப்பாரா?
இவருக்குக் குரல்வளம் உண்டா? நன்றாகப் பாடுவாரா?
திருக்குறளை எழுதியது ஒன்றே இவரது பணியாக இருந்திருக்க முடியுமா?
என்ன வேலையில் இருந்திருப்பார்?
அரசனாக, அமைச்சனாக, படைவீரனாக, தூதனாக, மருத்துவராக, வணிகராக, ஆசிரியராக, உழவனாக!
எதில் பயணம் செய்திருப்பார்?
சிவிகையிலா, யானையின்மீதா, குதிரையின்மீதா?
நடைப்பயணமா?
இவர் கடவுளைக் கும்பிட்டவரா?
எந்தக் கடவுளை?
முருகனையா, சிவனையா, திருமாலையா, இந்திரனையா, புத்தரையா, மகாவீரரையா?
காளியையா, மாரியையா?
தோசையை உண்ணச்சொன்னால்......................!   சுட்டவர்....................!

குழந்தை உண்டா?  அவர் வீடு கீற்று வீடா, ஓட்டு வீடா, மச்சு வீடா, எழுநிலை மாடமா?

 (தொடரும்.....)

by Swathi   on 25 Jan 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.