LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

ஆன்-லைன் ஓட்டுப்பதிவு இப்போதைக்கு சாத்தியமில்லை: குரேஷி

ஆன்-லைன் ஓட்டுப்பதிவு இப்போதைக்கு சாத்தியமில்லை: குரேஷி

 

     டில்லியில் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்ற, குரேஷி பேசியபோது, நம்நாடு தகவல் தொழில் நுட்பத்தில் முன்னோடியாகத் திகழ்கிறது என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், வேட்பாளர்களை ஆன்-லைனில் தேர்ந்தெடுப்பது என்பது நம்மைப் பொறுத்தவரை குழந்தைத்தனமான செயலாகத்தான் இருக்கும். பாதுகாப்பாகவும், அதேநேரத்தில், நேர்மையாகவும் வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும் என்பதே தேர்தல் கமிஷனின் முக்கிய நோக்கம். தனக்கு ஓட்டுப்போடும்படி யாரேனும் ஒருவர், வாக்காளரை துப்பாக்கி முனையில் மிரட்டும் பட்சத்தில், நம்மை மடிக்கணினி காப்பாற்றாது. இரண்டாவதாக, யாரோ ஒருவர் வந்து உங்களிடம், 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து, அவரை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்ளலாம். இதுபோன்ற செயல்களை நாம் கட்டுப்படுத்தாத வரையில், ஆன்-லைனில் ஓட்டுப்போடுவது இப்போதைக்கு சாத்தியமில்லை.

 

தேர்தல் செலவுகள்: 

 

     தேர்தல் செலவுகளை, அந்தந்த மாநிலங்களே ஏற்க வேண்டும் என்பதில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளுக்கிடையே, ஜனநாயக ரீதியில் ஒற்றுமை இருக்க வேண்டும். அதுபோல், நிதி விவகாரங்களைப் பொறுத்தவரையில் வெளிப்படையான அணுகுமுறை இருக்க வேண்டும். தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு ஒரு நல்ல ஆட்சி நீடிக்க வேண்டுமானால், அதில் வாக்காளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தால், நல்ல ஆட்சி அமைய அதுவே வழிவகுக்கும்.

 

ஓட்டளிப்பது கட்டாயமில்லை

 

     வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதை கடமையாக கருதும் பட்சத்தில், கட்டாய ஓட்டளிப்பு முறைக்கு அவசியமே இல்லை. தற்போது, 80 சதவீதம் வரை ஓட்டுகள் பதிவாகின்றன. பெண்களும் ஆர்வமாக ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஓட்டுச் சாவடிகளைக் கைப்பற்றுவது என்பது புதிய வரலாறு படைத்து வருகிறது. அரசியலில் அதிகரித்து வரும் கிரிமினல்களின் ஆதிக்கம், ஓட்டுக்குப் பணம் கொடுப்பது போன்ற விரும்பத் தகாத செயல்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. 

by Swathi   on 18 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
புரட்சியாளன் - எழுச்சியாளின் வேறுபாடுகளை உணர்ந்துகொண்டிறீர்களா? புரட்சியாளன் - எழுச்சியாளின் வேறுபாடுகளை உணர்ந்துகொண்டிறீர்களா?
தமிழக வெற்றிக் கழக 2-ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழக வெற்றிக் கழக 2-ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
போப்பாண்டவரை சந்தித்த அண்ணா போப்பாண்டவரை சந்தித்த அண்ணா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு
மக்கள் சிந்தனைப்பேரவை ஒரு முன்மாதிரி அமைப்பு -வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி மக்கள் சிந்தனைப்பேரவை ஒரு முன்மாதிரி அமைப்பு -வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.