|
||||||||||||||||||
பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளுமைகள் - அபுல்கலாம் ஆசாத் |
||||||||||||||||||
![]() அறிமுகம்: சென்னையில் பிறந்தவர். பொறியியல் துறை, மின்தூக்கித் துறை, எழுத்து என மூன்று துறைகளிலும் தன்னால் முடிந்த அளவு ஆற்றலை வெளிப்படுத்தியும், வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறார். 1980களின் தொடக்கத்தில் வளைகுடாவிற்குச் சென்று தன் இளமையின் பெரும் பகுதியை அங்குச் செலவிட்டவர். இணையத்தில் தமிழ் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கிய போது எழுதத் தொடங்கியவர். இணைய நண்பர்களால் எழுதுவதற்கு உந்தப்பட்டவர். கானாவும் வெண்பாவும்: திரு. அபுல்கலாம் ஆசாத் அவர்கள் முதன் முதலில் எழுதிய நூல் ‘கானா’ என்ற நூல் ஆகும். தமிழ் மொழியின் மரபு வடிவம் ‘வெண்பா’ ஆகும். வெண்பா எழுதுவதில் அதிக சவால்கள் உள்ளன. ஈற்றடி முச்சீராக வர வேண்டும். அதிலும் ஈற்றுச் சீரானது ஓரசைச் சீராக அமைய வேண்டும். இத்தகைய சவால்கள் கொண்ட வெண்பாவை ஹரி கிருஷ்ணன் அவர்கள் இவருக்கு அறிமுகம் செய்ய ஆர்வத்துடன் இவரும் வெண்பா எழுதத் தொடங்கினார். துபாயில் தான் பெற்ற அனுபவங்களை வைத்து ‘துபாய் வெண்பா தொண்ணூறு’ என்று 90 வெண்பாக்களை இயற்றினார். பின்பு ‘நகர் வெண்பா நானூறு’ ஆகியவற்றையும் இயற்றினார். மொழிபெயர்ப்பு: உருது மொழி பேசுபவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. சிறிது சிறிதாக உருது மொழியைக் கற்றுக் கொண்ட இவர், உருது மொழியின் சிறந்த கவிதையான ‘கஜல்’-களை படிக்கத் தொடங்கினார். மேலும் அவற்றைத் தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பும் செய்தார். உருது மொழியின்கஜல்கள்’ தமிழ் மொழியின் குறள் வெண்செந்துறை யாப்பை ஒத்து அமைந்தவை. இது தமிழும், உருதும் தெரிந்தவர்களிடம் இன்னும் சற்று அதிக வரவேற்பைப் பெற்றது. மின்தூக்கி: திரு. அபுல்கலாம் ஆசாத் அவர்கள் ‘மின் தூக்கி’ என்ற நாவலையும் இயற்றியுள்ளார். இந்நாவல் 1980களில் வளைகுடாவிற்குச் சென்ற இளைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் அனுபவித்த சிரமங்கள் அந்நாவலில் காட்டப்பட்டுள்ளன. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ச்சி பெறாத அந்த காலத்தில் பிழைப்புக்காகப் பிறநாடு சென்றவர்கள் எத்தகைய இன்னல்களை அனுபவித்திருக்கின்றனர் என்பதை அந்நாவல் எடுத்தியம்புகிறது. பழைய சவுதி, துபாய் ஆகியவற்றையும் கண்முன்னே காட்டுகின்றது. விருதுகள்: சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்றுப் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். வலைப்பூ திரட்டியான தேன்கூடு என்ற அமைப்பு நடத்திய சிறுகதைப் போட்டியிலும் சிறந்த சிறுகதைக்கான பரிசினை பெற்றார். கிழக்கு பதிப்பகம் நடத்திய ‘சென்னையர் கதைகள்’ என்ற போட்டியில் பங்கேற்று பரிசும் பெற்றார். மின் தூக்கி என்ற நாவலுக்கு ‘சிறந்த புதுமுக நாவலாசிரியர்’ என்ற விருதும் பெற்றார். எத்தனை விருதுகள் பெற்றாலும் தன் நண்பர்களிடம் பாராட்டு பெறுவதையே சிறந்த அங்கீகாரமாக நினைக்கின்றார். அயல்நாட்டுத் தமிழ் அமைப்புகள்: ஜித்தா தமிழ்ச் சங்கம், ரியாத் தமிழ்ச் சங்கம், துபாயில் அமீரக வாசகர் வட்டம் ஆகியவை வெளிநாட்டு வாழ் தமிழர்களின் தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளன. சிறப்பாகச் செயல்பட்டும் வருகின்றன. திரு. அபுல்கலாம் ஆசாத் அவர்களுக்கு நா. பார்த்தசாரதி எழுதிய ‘மணிபல்லவம்’ என்ற நாவல் மிகவும் பிடித்த நாவலாக அமைந்துள்ளது. மேலும் இவர் இணையத்தில் தொடர்ந்து எழுதி வருவதால் இவருடைய வாசகர் வட்டம் பரந்துபட்டதாகக் காணப்படுகிறது. |
||||||||||||||||||
by Lakshmi G on 30 Sep 2020 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|