|
||||||||||||||||||
வாசிங்டனில் பேராசிரியர் பெருமாள் முருகனோடு இலக்கிய சந்திப்பு... |
||||||||||||||||||
அக்டோபர்,7 2018, வாசிங்டன் வட்டார இலக்கிய அமைப்பின் சார்ப்பாக எழுத்தாளர் பேராசிரியர் பெருமாள் முருகனோடு இலக்கிய சந்திப்பு வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. ஞாயிறு மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரை கிட்டதட்ட 100 நபர்கள் ஒரு இலக்கிய நிகழ்விற்கு கலந்துக் கொண்டு தமிழ் இலக்கியம் சார்ந்து பல சுவையான கேள்விகளை எழுப்பி, அதற்கு பேராசிரியர் பெருமாள் முருகனும் பொறுமையாக இலக்கியத்தில் இருந்து பல எடுத்துக்காட்டுகளோடு பதில் அளித்தது மிக சிறப்பாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. பேராசிரியர் பெருமாள் முருகனுக்கு “மக்களுக்கான இலக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்ற வேண்டி கேட்டு இருந்தார்கள். பேராசிரியரும் மிக நிதானமாக சங்க இலக்கியத்தில் ஆரம்பித்து நவீன இலக்கியம் வரை எடுத்துரைத்தார் அந்த காலத்தில் “எழுத்து” என்ற இலக்கிய பத்திரிக்கை மற்றும் “வானம்பாடிகள்” - நவீன இலக்கியத்தை ஜனநாயக படுத்தியது என்றும், நவீன தமிழ் இலக்கிய சூழலை வெகுவாக மாற்றியது என்றார். சங்க காலத்தில் இலக்கியத்தில் அரசர்கள் பற்றியும், அவர்களின் மாண்பும், வீரம், போர்கால காட்சிகள் பற்றியும் பற்றி பேசப்பட்ட அதே காலத்தில் அவ்வையார் ”எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.“ என்ற பாடலில் அரசருக்கு அறிவுரை கூறுவது போல இருக்கும் பாடல்களும், அவற்றில் சில பாடல்கள் மக்களுக்கான பாடல்கள் என்றும் பகிர்ந்துக் கொண்டார். கம்பர் ஆதிக்கத்திற்கு எதிரானவர் என்றும் ஒட்டகூத்தர் ஆதிக்கத்திற்கு ஆதரவாக இருந்தாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளதாக சொன்னார் பேராசிரியர். 12 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு கம்பரின் தனிப் பாடல்களும், அவ்வையாரின் தனிப் பாடல்களும், மக்களுக்கான இலக்கியத்தை பரவலாக பேச ஆரம்பித்தன என்றும், கீரை விற்பவர், மோர் விற்பவர், பரத்தையர் பற்றி பல பாடல்கள் வர ஆரம்பித்தன என்றார். நம் தமிழ் சமூகத்தில், குறிப்பாக இலக்கிய உலகில் பிரதாப முதலியார் சரித்திரம், துப்பறியும் நாவல்கள், பாரதியின் சில நாவல்கள், மக்களுக்கான இலக்கியத்தை பேசியது என்றார். அதே சமயத்தில் அந்த காலத்தில் பெண்கள் கல்வி பயின்றால் “கள்ள புருசனுக்கு கடிதம் எழுதுவாள்” என்ற குறிப்பும், பெண்கள் கல்வி கற்றல், கைம்பெண், பால்ய விவாகம் இதன் சார்ந்து பல பாடல்களும் இருப்பாத சொன்னார் பேராசிரியர் பெருமாள் முருகன். 1940 முதல் வட்டார நாவல் திரு சண்முகசுந்தரித்தின் நாவல் என்றார். 1990 களில் தலித் இலக்கியம், பெண்ணியம் சார்ந்த மக்களுக்கான இலக்கியம் பரவலாக்கப் பட்டது என்றார். சினிமாவிற்கு முன்பே இலக்கியத்தில் மக்களுக்கான இலக்கியம் பேசப் பட்டு இருப்பதாகவும் பகிர்ந்துக் கொண்டார். பேராசிரியர் பெருமாள் முருகன் மரபு கவிதை எழுதி இருக்கிறார். சிறுகதைகளும், நாவல்களும், ஆராய்ச்சி கட்டுரைகளும், குறிப்பாக கொங்கு நாட்டு வரலாறும், கொங்கு வட்டார சொல் அகராதி பதிப்பிட்டு வெளியிட்டு இருக்கிறார். அவருடைய முழு பேச்சில் முக்கியமாக நான் கவனித்தது, பழம் பெருமை, பழம் இலக்கியத்திற்கு பெருமை இருப்பது போலவே நவீன இலக்கியத்திற்கும் முக்கிய பங்கு வேண்டும் என்றார், தமிழ் கல்வித்துறை நவீன இலக்கியத்திற்கும், இன்றைய காலகட்டத்திற்கு தேவையான தொழில் சார்ந்த தமிழுக்கு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடத்திட்டதில் மாற்றம் வெகுவாக வர வேண்டும் என்று தமிழகம் முழுக்க தற்பொழுது புத்தக திருவிழா வருவது மிகுந்த பாராட்டுக்குரிய விசயமாக சொன்னார். அந்த காலத்தில் புத்தகங்கள் வாங்குவதற்கு பெரும் நகரங்கள் செல்ல வேண்டும் எனவும், பல நாட்கள் காத்து இருக்க வேண்டும் என்பதையும் நினைவு கூர்ந்தார். பேராசிரியர் பெருமாள் முருகனின் “தமிழ் கீர்த்தனைகளை” கர்நாடக சங்கீத புரட்சி பாடகர் டி எம் கிருஷ்ணா பல மேடைகளில் பாடுவதாகவும் சொன்னார். மொத்ததில் ஞாயிறு மாலை நல்ல ஒரு இலக்கிய ஆளுமையை சந்தித்த உணர்வும், நல்ல ஒரு தமிழ் பேராசிரியரை சந்தித்த உணர்வும் இருந்தது என்றால் அது மிகையல்ல. இந்த இலக்கிய நிகழ்வை மிக சீராக ஒருங்கிணைத்த முனைவர் சங்கரபாண்டி எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார். வாசிங்டன் வட்டார இலக்கிய அமைப்பின் சார்பாக வாசிங்டன் முன்னாள் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் பிரபாகரன் பெருமாள் முருகனின் தமிழ் பணியை பாராட்டி பட்டயம் அளித்தார். இலக்கிய ஆர்வலர் மருத்துவர் சிந்தானந்தம் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காணொளிகள் (Recorded Video) https://www.youtube.com/watch?v=zQ4gUQebifE
உலகத் தமிழர்களின் நிகழ்வுகளை உடனுக்குடன் பெற வலைத்தமிழுடன் இணைந்திருங்கள் www.Facebook.com/ValaiTamil , www.YouTube.com/ValaiTamil , www.YouTube.Com/ValaiTamilTV .
|
||||||||||||||||||
by Swathi on 16 Oct 2018 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|