LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

வாக்குப்பதிவு எந்திரத்தில் 49ஓ-வை சேர்க்க அண்ணா குழு கோரிக்கை

வாக்குப்பதிவு எந்திரத்தில் 49ஓ-வை சேர்க்க அண்ணா குழு கோரிக்கை:

 

     தேர்தல் சீர்திருத்தங்களுக்கு குரல் கொடுத்துள்ள அண்ணா ஹஜாரே குழு, வாக்குப்பதிவு எந்திரங்களில் 'நிராகரிக்கும் உரிமை'யை பதிவு செய்தவற்குரிய 49ஓ-வுக்கென தனி பட்டனை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

 

     டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷியை அண்ணா ஹஜாரே, பிரசாந்த் பூஷன், அரவிந்த் கேஜரிவால், கிரண்பேடி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

 

     சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக, அண்ணா ஹஜாரே குழு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தது. 

 

     இதில் முக்கியமாக, ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் நிராகரிக்கும், 49ஓ-வில் வாக்கினைப் பதிவு செய்வதற்கு, வாக்குப் பதிவு எந்திரத்தில் தனி பட்டனைச் சேர்க்க வேண்டும் என்று அக்குழு வலியுறுத்தியது. 

 

     மேலும், தலைமைத் தேர்தல் ஆணையரைப் போன்றே மற்ற இரு தேர்தல் ஆணையர்களுக்கும் அரசியலமைப்பு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும் ஹஜாரே வலியுறுத்தினார். 

 

     தேர்தலில் நிராகரிக்கும் உரிமை என்பது மிக முக்கியமானது. தேர்தல் முறையைத் தூய்மையாக்குவதற்கு இது உறுதுணைபுரியும்," என்றார் அண்ணா ஹஜாரே. 

by Swathi   on 16 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
புரட்சியாளன் - எழுச்சியாளின் வேறுபாடுகளை உணர்ந்துகொண்டிறீர்களா? புரட்சியாளன் - எழுச்சியாளின் வேறுபாடுகளை உணர்ந்துகொண்டிறீர்களா?
தமிழக வெற்றிக் கழக 2-ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழக வெற்றிக் கழக 2-ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
போப்பாண்டவரை சந்தித்த அண்ணா போப்பாண்டவரை சந்தித்த அண்ணா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு
மக்கள் சிந்தனைப்பேரவை ஒரு முன்மாதிரி அமைப்பு -வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி மக்கள் சிந்தனைப்பேரவை ஒரு முன்மாதிரி அமைப்பு -வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.