|
|||||
தமிழக வெற்றிக் கழக 2-ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் |
|||||
![]()
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-ஆவது மாநில மாநாடு மதுரையில் பாரபத்தி என்ற இடத்தில் வியாழக்கிழமை (21.06.2025) நடைபெற்றது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதற்கும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற கபட நாடகத் தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறி வரும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* அவுட்சோர்சிங் முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
|
|||||
by hemavathi on 21 Aug 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|