இந்தக் கோயில் இரண்டு லட்சம் சதுர அடியில் சலவைக்கற்களால் கட்டப்பட்டுள்ளது. தமிழக சிற்பக்கலை அமைப்பில் 1991ல் ராஜகோபுரம் கட்டப்பட்டது.
அம்பாள் அன்னபூரணி சிலை தங்கத்தால் ஆனது.கோயிலில் கல்யாணி தீர்த்தம் என்ற தெப்பக்குளம் உள்ளது. இதன் நான்கு கரைகளிலும் சிவன்
சிலைகளும், தேவர்கள் பூஜிக்கும் சிலைகளும் உள்ளன. சிவனின் தலையில் இருந்து கங்கை பூமிக்கு வருவது போன்ற சிலை கண்ணைக்கவர்கிறது.
சனி, ஞாயிறு மாலை 6.30ல் இருந்து இரவு 8.30வரை வண்ண நீரூற்று 120 அடி உயரத்துக்கு பனிலிங்க வடிவில் உயர்கிறது. நாராயண தீர்த்தம் என்ற
பெயரில் கும்ப வடிவிலான கலசக் கிணறும் உள்ளது. கடற்கரை அருகில் கோயில் இருந்தாலும், நாராயண தீர்த்தத்தில் உப்புச்சுவை குறைந்த தண்ணீர்
உள்ளது. ஆஞ்சநேயருக்கு தங்கத்தால் ஆன சந்நிதி அமைக்கப்பட்டு உள்ளது. மகாலட்சுமி, சரஸ்வதி சிலைகள் கண்ணைக் கவர்கின்றன.விஜயதசமியை
ஒட்டி மங்களூருவில் தசரா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் சுவாமி வேடமிட்டு வந்து வழிபடுவர். நவதுர்க்கை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு
ஆற்றில் கரைக்கப்படுகிறது.
இந்தக் கோயில் இரண்டு லட்சம் சதுர அடியில் சலவைக்கற்களால் கட்டப்பட்டுள்ளது. தமிழக சிற்பக்கலை அமைப்பில் 1991ல் ராஜகோபுரம் கட்டப்பட்டது. அம்பாள் அன்னபூரணி சிலை தங்கத்தால் ஆனது. கோயிலில் கல்யாணி தீர்த்தம் என்ற தெப்பக்குளம் உள்ளது. இதன் நான்கு கரைகளிலும் சிவன் சிலைகளும், தேவர்கள் பூஜிக்கும் சிலைகளும் உள்ளன. சிவனின் தலையில் இருந்து கங்கை பூமிக்கு வருவது போன்ற சிலை கண்ணைக்கவர்கிறது.
சனி, ஞாயிறு மாலை 6.30ல் இருந்து இரவு 8.30வரை வண்ண நீரூற்று 120 அடி உயரத்துக்கு பனிலிங்க வடிவில் உயர்கிறது. நாராயண தீர்த்தம் என்ற பெயரில் கும்ப வடிவிலான கலசக் கிணறும் உள்ளது. கடற்கரை அருகில் கோயில் இருந்தாலும், நாராயண தீர்த்தத்தில் உப்புச்சுவை குறைந்த தண்ணீர் உள்ளது. ஆஞ்சநேயருக்கு தங்கத்தால் ஆன சந்நிதி அமைக்கப்பட்டு உள்ளது.
மகாலட்சுமி, சரஸ்வதி சிலைகள் கண்ணைக் கவர்கின்றன. விஜயதசமியை ஒட்டி மங்களூருவில் தசரா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் சுவாமி வேடமிட்டு வந்து வழிபடுவர். நவதுர்க்கை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்படுகிறது. |