இங்கு சிவன் மேற்கு பார்த்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் பங்குனி 13 முதல் பத்துநாட்கள், மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள்
மூலவர் மீது படுகிறது.கோயில் எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. இரண்டு பிரகாரத்துடன் ஐந்து நிலை ராஜ கோபுரம். மேற்கு பார்த்த சிவன். கோயிலின் இடது
பக்கம் மகா மண்டபம், அர்த்த மண்டம் உள்ளது.இதையடுத்து கருவறையில் நான்கு யுகம் கண்ட பார்வதீஸ்வரர் அருளுகிறார். அம்மன் தெற்கு பார்த்து தனி
சன்னதியில் உள்ளார்.கோயில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், மகாலட்சுமி, லிங்கோத்பவர், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர்,
நடராஜர், சந்திரசேகரர், சமயக்குரவர்கள், நவகிரகம், பைரவர், சூரியன், சந்திரன், துர்க்கை, அறுபத்து மூவர் ஆகியோர் உள்ளனர். சனிபகவான் தனி சன்னதியில்
அருளுகிறார். இத்தல விநாயகர் சம்பந்த விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சோழநாட்டில் சரிவர மழை பெய்யாததால் பஞ்சம் ஏற்பட்டது.
மன்னன் இத்தல இறைவனிடம் வேண்டினான். இதையேற்ற சிவபெருமான், பார்வதிதேவியுடன் உழவன் வேடத்தில் வந்து, நிலங்களில் விதை தெளித்துச்
சென்றார். பயிர் சிறப்பாக விளைந்து பஞ்சம் நீங்கியது. இறைவனே விதை தெளித்து சென்றதால் இத்தலம் "திருத்தெளிசேரி' ஆனது.
இங்கு சிவன் மேற்கு பார்த்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் பங்குனி 13 முதல் பத்துநாட்கள், மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படுகிறது. கோயில் எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. இரண்டு பிரகாரத்துடன் ஐந்து நிலை ராஜ கோபுரம். மேற்கு பார்த்த சிவன். கோயிலின் இடது பக்கம் மகா மண்டபம், அர்த்த மண்டம் உள்ளது. இதையடுத்து கருவறையில் நான்கு யுகம் கண்ட பார்வதீஸ்வரர் அருளுகிறார். அம்மன் தெற்கு பார்த்து தனி சன்னதியில் உள்ளார்.
கோயில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், மகாலட்சுமி, லிங்கோத்பவர், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நடராஜர், சந்திரசேகரர், சமயக்குரவர்கள், நவகிரகம், பைரவர், சூரியன், சந்திரன், துர்க்கை, அறுபத்து மூவர் ஆகியோர் உள்ளனர். சனிபகவான் தனி சன்னதியில் அருளுகிறார். இத்தல விநாயகர் சம்பந்த விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சோழநாட்டில் சரிவர மழை பெய்யாததால் பஞ்சம் ஏற்பட்டது.
மன்னன் இத்தல இறைவனிடம் வேண்டினான். இதையேற்ற சிவபெருமான், பார்வதிதேவியுடன் உழவன் வேடத்தில் வந்து, நிலங்களில் விதை தெளித்துச் சென்றார். பயிர் சிறப்பாக விளைந்து பஞ்சம் நீங்கியது. இறைவனே விதை தெளித்து சென்றதால் இத்தலம் "திருத்தெளிசேரி' ஆனது. |