இங்குள்ள வீரபத்திரர், மிகவும் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். இவர் கைகளில் வில், அம்பு, கத்தி மற்றும் தண்டு வைத்திருக்கிறார். வீரபத்திரர்
கோயில்களில் சுவாமியுடன், பத்திரகாளிதான் பிரதான அம்பிகையாக இருப்பாள். ஆனால் இங்கு தாட்சாயணி இருப்பது விசேஷமான அமைப்பு. இவள்
வலது கையில் தாமரை மொட்டு வைத்தபடி நின்றிருக்கிறாள். சுவாமிக்கு வலப்புறம் தட்சன் இருக்கிறார். இம்மூவரும் தாமரை பீடத்தின் மீது
நின்றிருக்கின்றனர். திப்பு சுல்தான் பிரதிஷ்டை செய்த மரகத லிங்கம் அமைந்துள்ளது சிறப்பு.அம்பாள் பார்வதி சிவனுக்கு இடப்புறம் தனிச்சன்னதியில்
இருக்கிறாள். இருவரது சன்னதிக்கு மத்தியில் நாராயணர், தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு ஆவணி மாதத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.
இவரது திருமணத்தை சிவன், முன்னின்று நடத்தி வைப்பார். இதேபோல சிவ, பார்வதி திருமணத்தை இந்த பெருமாள் முன்னின்று நடத்தி வைக்கிறார்.
கோடை காலத்தில் சிவன், அம்பாள் இருவரும் கோயிலின் மேல் தளத்திற்குச் சென்று, விமானத்தை சுற்றி வருகின்றனர். விமானத்தின் இருபுறமும்,
இரண்டு வில்வ மரங்கள் இருப்பது சிறப்பு.
இங்குள்ள வீரபத்திரர், மிகவும் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். இவர் கைகளில் வில், அம்பு, கத்தி மற்றும் தண்டு வைத்திருக்கிறார். வீரபத்திரர் கோயில்களில் சுவாமியுடன், பத்திரகாளிதான் பிரதான அம்பிகையாக இருப்பாள். ஆனால் இங்கு தாட்சாயணி இருப்பது விசேஷமான அமைப்பு. இவள் வலது கையில் தாமரை மொட்டு வைத்தபடி நின்றிருக்கிறாள். சுவாமிக்கு வலப்புறம் தட்சன் இருக்கிறார். இம்மூவரும் தாமரை பீடத்தின் மீது நின்றிருக்கின்றனர்.
திப்பு சுல்தான் பிரதிஷ்டை செய்த மரகத லிங்கம் அமைந்துள்ளது சிறப்பு. அம்பாள் பார்வதி சிவனுக்கு இடப்புறம் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இருவரது சன்னதிக்கு மத்தியில் நாராயணர், தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு ஆவணி மாதத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. இவரது திருமணத்தை சிவன், முன்னின்று நடத்தி வைப்பார். இதேபோல சிவ, பார்வதி திருமணத்தை இந்த பெருமாள் முன்னின்று நடத்தி வைக்கிறார்.
கோடை காலத்தில் சிவன், அம்பாள் இருவரும் கோயிலின் மேல் தளத்திற்குச் சென்று, விமானத்தை சுற்றி வருகின்றனர். விமானத்தின் இருபுறமும், இரண்டு வில்வ மரங்கள் இருப்பது சிறப்பு. |