ராமனால் பூஜிக்கப்பட்ட சுயம்பு மூர்த்தம் என்பது இத்தலத்தின் தனி சிறப்பு. அழகான மலைக்குன்றின் உச்சியில் அமைந்துள்ளது ஆலயம். வடக்கு கோபுரம் வழியாகச் சென்று வலது பக்கம் திரும்பினால் கிழக்கு நோக்கிய ஐந்துநிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. கொடிமரம், நந்தி மண்டபத்தைக் கடந்ததும் உற்சவ மண்டபம், அதை அடுத்து கருவறை மண்டபம்.
வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் நின்றிருக்க, அவர்களுக்கு சற்றுத் தள்ளி வலதுபுறம் விநாயகப் பெருமானும், இடதுபுறம் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய சுவாமி சன்னதியும் அமைந்திருக்கின்றன. கருவறை வெளி மண்டபத்தில் பவானி அம்மனும், சிவதுர்க்கையும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். |