பொதுவாக மூலஸ்தானத்தில் அந்த தலத்திற்குரிய மூலவர் மட்டுமே அருள்பாலிப்பர். ஆனால் இங்குள்ள மூலவர் கருவறையில் மகாகணபதி, ஜாபாலி
மகரிஷி, பிலி சாமுண்டி, தூமவதி, ÷க்ஷத்திர பாலகர், ரக்தேஸ்வரி ஆகியோர் காட்சி தருவது சிறப்பு.வருடந்தோறும் அக்டோபர் 17-ஆம் தேதி முதல்
ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான ஆறு மாதங்களும் குகைக்குள் சென்று வழிபட, பக்தர்களுக்கு அனுமதி உண்டு (மீதமுள்ள ஆறுமாத காலங்களில்
விஷ ஜந்துக்கள் குகைக்குள் அடைக்கலமாகி விடும் என்பதால், பக்தர்களை அனுமதிப்பது இல்லை). விஜய நகரப் பேரரசுக்கு உட்பட்ட சௌதா
மன்னர்கள், குகைக் கோயிலைப் பராமரித்தனர்; அருகில் சோமநாதீஸ்வரருக்கும் ஆலயம் எழுப்பினர். ஆலயத்தின் கிழக்கில் அம்பலாட்டுப் படவுக்
குன்று என்று சுமார் 500 அடி உயரக் குன்று உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பலருக்கு, அந்த இடம் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது. மூலவரின் திருநாமம்
சோமநாதீஸ்வரர்.
பொதுவாக மூலஸ்தானத்தில் அந்த தலத்திற்குரிய மூலவர் மட்டுமே அருள்பாலிப்பர். ஆனால் இங்குள்ள மூலவர் கருவறையில் மகாகணபதி, ஜாபாலி மகரிஷி, பிலி சாமுண்டி, தூமவதி, பாலகர், ரக்தேஸ்வரி ஆகியோர் காட்சி தருவது சிறப்பு. வருடந்தோறும் அக்டோபர் 17-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான ஆறு மாதங்களும் குகைக்குள் சென்று வழிபட, பக்தர்களுக்கு அனுமதி உண்டு விஜய நகரப் பேரரசுக்கு உட்பட்ட சௌதா மன்னர்கள், குகைக் கோயிலைப் பராமரித்தனர்.
அருகில் சோமநாதீஸ்வரருக்கும் ஆலயம் எழுப்பினர். ஆலயத்தின் கிழக்கில் அம்பலாட்டுப் படவுக் குன்று என்று சுமார் 500 அடி உயரக் குன்று உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பலருக்கு, அந்த இடம் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது. மூலவரின் திருநாமம் சோமநாதீஸ்வரர். அற்புதமான நாக தோஷ நிவர்த்தி ஸ்தலம். சக்தியும் சிவமும் காட்சி தந்த அருமையான குகையை இன்றைக்கும் தரிசிக்கலாம். குகைக்குள் சென்று வணங்கினால், கோடி புண்ணியம் என்பது ஐதீகம். |