இங்குள்ள மூலவர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிப்பதும், பொங்கலன்று சொர்க்கவாசல் கடப்பதும் தலத்தின் சிறப்பு. இங்குள்ள ஐந்து
சிவலாயங்களுக்கும் ஒரேநாளில் சென்று வழிபடுவது சிறப்பாகும். கார்த்திகை மாத சோமவாரங்களில் இங்கு சென்று வரலாம். ஐந்து சோமவாரங்கள்
வரும் ஆண்டுகளில், கடைசி சோமவாரத்தன்று விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இணைந்து வருமானால், அந்த ஆண்டில் சப்தாஹ
உற்ஸவம் என்னும் ஏழுநாள் விழா நடக்கும். வைத்தியநாதர் புற்றில் இருந்து சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியவர் என்பதால் அபிஷேகம் கிடையாது.
கவசம் மட்டுமே சாத்தப்படுகிறது. ஐந்துதலை நாகத்தை தலையில் ஆபரணமாகச் சூடியிருக்கிறார். லிங்க பாணத்தில் சிவனின் முகம் உள்ளது. இவரை
தரிசித்து தீர்த்தம் அருந்தினால் நோய்கள் தீரும். இங்குள்ள புற்றில் இருந்து மிருத்திகா என்னும் புற்றுமண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கட்டி,
கொப்பளத்திற்கு மருந்தாக பக்தர்கள் இட்டுக் கொள்கின்றனர். நெற்றியில் பூசிக் கொள்வதும் உண்டு.
இங்குள்ள மூலவர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிப்பதும், பொங்கலன்று சொர்க்கவாசல் கடப்பதும் தலத்தின் சிறப்பு. இங்குள்ள ஐந்து சிவலாயங்களுக்கும் ஒரேநாளில் சென்று வழிபடுவது சிறப்பாகும். கார்த்திகை மாத சோமவாரங்களில் இங்கு சென்று வரலாம். ஐந்து சோமவாரங்கள் வரும் ஆண்டுகளில், கடைசி சோமவாரத்தன்று விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இணைந்து வருமானால், அந்த ஆண்டில் சப்தாஹ உற்ஸவம் என்னும் ஏழுநாள் விழா நடக்கும்.
வைத்தியநாதர் புற்றில் இருந்து சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. கவசம் மட்டுமே சாத்தப்படுகிறது. ஐந்துதலை நாகத்தை தலையில் ஆபரணமாகச் சூடியிருக்கிறார். லிங்க பாணத்தில் சிவனின் முகம் உள்ளது. இவரை தரிசித்து தீர்த்தம் அருந்தினால் நோய்கள் தீரும். இங்குள்ள புற்றில் இருந்து மிருத்திகா என்னும் புற்றுமண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கட்டி, கொப்பளத்திற்கு மருந்தாக பக்தர்கள் இட்டுக் கொள்கின்றனர். |