LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

இதுதான் பாடநூற்களில் தமிழின் நிலை!

இதுதான் பாடநூற்களில் தமிழின் நிலை!
 
பாடநூலில் புணர்ச்சி:
"தொன்று தொட்டுத் தமிழ் மொழி இயல் இசை நாடகம் என்னும் மூன்று பிரிவுகளை உடைய தென்று பலருங் கூறுகின்றனர். அம்மூவகைப் பாகுபாடுகளின் இயல்பைக் குறித்துச் சிறிது ஆராய்வோம்."
இது, இன்றைய மேனிலைத்தமிழ்ப்பாடநூலின் முதற்பாடத்தின் முதற்பத்தியில், இரண்டேயிரண்டுவாக்கியங்களேயுள்ளன, அவையே இவை. பாடத்தின் பெயர் 'உயர்தனிச் செம்மொழி'. பாடத்தின் ஆசிரியர் 'பரிதிமாற்கலைஞர்'.
தமிழுலகம் மாபெருமறிஞரென்று போற்றக்கூடியவர்களுள் பரிதிமாற்கலைஞருமொருவர். அவர் தாமெழுதியபோது இப்படித்தானெழுதியிருந்தாரோ, அல்லது, இப்போது பாடநூலுக்காக இதை தொகுத்த நூலாசிரியர்களால் இவ்வாறு பதிப்பிக்கப்பட்டதோவென்பது நமக்கு தெரியாதது. நிற்க.
புணர்ச்சியைப்பொருத்தவரை , இதில் காட்டப்பட்டுள்ள புணர்ச்சியும் அதன் அமைப்பும் எவ்வாறுள்ளனவென்பதை சற்றே ஆராய்வோம்.
1) 'தொன்று தொட்டுத் தமிழ்' என்பதில்,  முதலில் ஒரு தனிமொழியும், (அதனையடுத்துள்ளசொல்லில் வலிமிகுந்துள்ளதால் அதை அதற்கடுத்துள்ளசொல்லுடன் புணர்ந்திருப்பதாய்க்கொள்ளவேண்டியிருப்பதால்) ஒரு தொடர்மொழியுமிருப்பதாய்க்கொள்வோம்.
முதற்சொல்லானது, 'தொன்மை' என்றசொல்லிலிருந்துவந்ததாயிருக்கவேண்டும். பண்புப்பெயர்ச்சொற்கள் புணர்ச்சியில் மைவிகுதிகெட்டுப்புணர்வதால், 
தொன்மை + தொட்டு = தொன் + தொட்டு
= தொற்றொட்டு 
என்றானால், 'தொன்மை' என்பதன் பொருள் வெளிப்படாதென்பதால், 'ன்' என்னும் மெய்யை கெடுக்காமல் றகரவொற்றை வரவைத்து உகரங்கொடுத்து, தொன்று + தொட்டு = தொன்றுதொட்டு' எனப்புணர்த்தியிருக்கலாமோவென என் சிற்றறிவுக்கெட்டியவரை எண்ணிப்பார்த்தேன். இதுபற்றிய சான்றோர்களுடைய கருத்தை வரவேற்கிறேன்.
இதன்வாயிலாக நான் சொல்லவரும் கருத்தென்னவென்றால், 'தொன்று' என்பது ஒரு தனிச்சொல்லாயிருக்கமுடியாதென்பதுதான். அது புணர்ந்ததால்வந்ததென்பது உண்மையாயிருப்பின், அதை தனிச்சொல்லாயெழுதியது பொருந்தாது.
'தொன்றுதொட்டு' என்பதை எவராவது 'தொன்று தொட்டு' என பிரித்துப்பேசுவாராவென்பதை எண்ணிப்பார்த்தால், அப்படி யாரும் பேசமாட்டாரென்றேதோன்றுகிறது.
2) 'தொட்டுத்தமிழ்' என்னும் தொடர்மொழியிலிருக்கும் இரண்டுசொற்களுள், நிலைமொழியாயிருப்பது ஒரு வினையெச்சம். வருமொழியோ ஒரு பெயர்!
வினையெச்சத்தின்முன் வினையும்வரலாம், பெயரும்வரலாம். வினைவந்தால், அது மற்றுமோர் எச்சமாயிருந்தாலும் முற்றாயிருந்தாலும், சொல்லவரும் பொருளைப்பொருத்து புணர்ந்தும்வரலாம், புணராமலும்வரலாம்.
ஆனால் பெயர்வரும்போது, புணர்ந்துவருவதில்லை. ஏனெனில், வினையெச்சமும் பெயரும் புணரா!
ஓர் வினைமுற்றும் பெயரும் புணருமென்பதையும், அந்த தொடர்மொழிக்கு 'வினைமுற்றுத்தொடர்' என்பது பெயரென்பதையும் நாம் கண்டிருக்கிறோம்.
ஆனால், வினையெச்சமும் பெயரும் புணர்ந்ததாக ஒரு தொடர்மொழி அமையாது!
சொல்லப்பட்டிருக்கின்ற  தொடர்மொழிகளுள், வேற்றுமைத்தொடர்களெனப்படுபவை தொகையாறும் விரியாறுமென பன்னிரண்டும், அல்வழியில் தொகாநிலையில் ஒன்பதும் தொகைநிலையில் ஐந்துமாக பதினான்கும் ஆகமொத்தம் இருபத்தாறுவகைகளுள் ஒவ்வொருதொடர்மொழிக்கும் அதற்குரிய பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்போது, வினையெச்சமும்பெயரும்புணர்ந்ததாக ஒன்றும் தரப்படவில்லையென்பதே, அப்படிப்பட்டவொரு புணர்ச்சி இல்லவேயில்லையென்பதை தெளிவாகக்காட்டுகின்றதன்றோ?
ஆகவே, 'தொட்டுத்தமிழ்' என்பது கூடாப்புணர்ச்சி, இது ஒரு குற்றம்!
3) 'தமிழ் மொழி' இதில் இரண்டுசொற்களுள்ளன. இரண்டும் பெயர்ச்சொற்கள். இதை இதற்கு முன்னுள்ளசொற்களுடன்வைத்தால்,
'தொன்று தொட்டுத் தமிழ் மொழி' என்றாகும். இதற்கு இப்போது பொருள்கூறமுடியும். எவ்வாறென்றால், தொன்றென்பது தொன்மையைக்குறிப்பதாகவும், 'தொட்டுத்தமிழ்' என்பதும் 'தமிழ்' என்பதும் வெவ்வேறு பெயர்களாகவுங்கொண்டு,
'தொன்மைக்காலத்தில், தொட்டுத்தமிழானது மொழியாயிருந்தது'
என்னும் பொருளை இதற்கு கற்பிக்கலாம்! ஏனப்படிக்கற்பிக்கவேண்டுமென்றால், இரண்டு பெயர்கள் அடுத்தடுத்துவந்தால் இரண்டாவதுபெயரானது முதற்பெயருக்கு பயனிலையாகுமென்பது நாம் அறிந்ததேயன்றோ? 
இந்த ஒருவழியல்லாமல், 'தொன்று தொட்டுத் தமிழ் மொழி' என்பதற்கு உங்களால் வேறுபொருளெதையும் கற்பிக்கமுடிகிறதாவென்று எண்ணிப்பாருங்கள்! 
'தமிழ் மொழி' என்பது உண்மையில் புணர்த்தப்பட்டிருக்கவேண்டும்! அப்படி புணர்த்தியிருந்தால், பெயர்ச்சொற்கள் இரண்டாவதற்கு வாய்ப்புமில்லை, நாம் கற்பித்த பொருளை கற்பிக்கவுமுடியாது.
'தமிழ்மொழி' என்பது நம் தாய்மொழியின்பெயர். இதைக்கூட நாம் பிழையாயெழுதிக்கொண்டு, 'தமிழை காப்போம், வளர்ப்போம்' என்று மார்தட்டிக்கொண்டிருந்தால், தமிழ் வளர்ந்துவிடுமா? எண்ணிப்பாருங்கள்!
'தமிழாகியமொழி' என்னும் தொடர்மொழியானது, உலகிலுள்ள பற்பலமொழிகளுள் தமிழ்மொழியைமட்டும்
 சிறப்பித்துக்கூறுவதாயமைந்தது.
'மொழி' என்னும் தனிச்சொல்லானது, அனைத்துமொழிகளையுங்குறிக்கக்கூடிய ஒரு பொதுமொழி. 'தமிழ்' என்பது குறிப்பாக ஒருமொழியைமட்டுங்குறிக்கக்கூடிய ஒரு சிறப்புமொழி. இரண்டுமே பெயர்ச்சொற்களென்பதால்,
''சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னுமாயமைந்து, இரண்டுபெயர்ச்சொற்களும் ஒரேபெயராயமைவது இருபெயரொட்டுப்பண்புத்தொகை''
என்கிறது, புணர்ச்சியிலக்கணம்.
இந்த இலக்கணத்தை எட்டாம்வகுப்பிலிருந்து முதுநிலைக்கல்விவரை மீண்டுமீண்டுங்கற்றுவந்தவர்களான இந்த நூலாசிரியர்களுக்கோ அல்லது இந்த பாடத்தை தமிழகமெங்குமுள்ள அனைத்துப்பள்ளிகளிலும் கடந்த எட்டாண்டுகளாக கற்பித்துக்கொண்டிருக்கின்ற ஆசிரியர்களுக்கோ இதுவரை தெரியாமலிருக்கிறதென்பது உண்மையில் வியப்புக்குரியதாயில்லை? தெரிந்திருந்தால் இத்தனையாண்டுகளில் இதையாவதுமாற்றியிருக்கமட்டார்களாயென்ன?
''மூன்று பிரிவுகளை உடைய தென்று பலருங் கூறுகின்றனர்.''
4) இதில், 'மூன்று பிரிவுகளை' என்றுள்ளதன்றோ?
இதையே, 'மூன்றுபிரிவுகளை' என்று புணர்த்தியுமெழுதலாமென்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்தவிடத்திலே சொல்லப்படவேண்டியது என்னபொருளோ, அந்தப்பொருளுக்கு இங்கே புணர்த்தியெழுதவேண்டுமா, புணர்த்தாமலெழுதவேண்டுமா?
முதலில் அவை இரண்டுக்கும் பொருளில் என்னவேறுபாடுண்டாகுமென்பதை பார்த்துவிட்டால், எப்படியெழுதுவதென்பதை எளிதாகச்சொல்லிவிடலாம்! அன்றோ?
'மூன்றென்பதும் பிரிவென்பதும் பெயர்ச்சொற்கள், பிரிவென்பது ஐயுருபேற்றுள்ளது. இவற்றை அடுத்துவருவது ஒரு வினைமுற்றென்பதால், அதையும் சேர்த்தாலே பொருளை காணமுடியும்.
இப்போது, 
'மூன்று பிரிவுகளை உடையது' என்பதற்கு என்னபொருளென்றுபாருங்கள்! பிரிவுகளை உடையதாயிருப்பது மூன்றென்றாகிறதன்றோ? பிரிவென்பது மூன்றிலாயுள்ளது? அது தமிழ்மொழியிலன்றோவுள்ளது?
சற்றுமுன் இருபெயரொட்டுப்பண்புத்தொகை' என்றவொன்றை பார்த்தோமன்றோ? அதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
'மூன்று' என்பது (எண்ணுப்பெயர்) சிறப்புப்பெயர், 'பிரிவு' என்பது பொதுப்பெயர்!
அப்படியானால், 'மூன்றுபிரிவு' என்பது? 'மூன்றாகியபிரிவு' என்றபொருளைத்தருவதாகிறதன்றோ?
இப்போதுசொல்லுங்கள், புணர்த்தித்தானெழுதவேண்டுமா, அல்லது, புணர்த்தாமலுமெழுதலாமாவென்பதை!
5) 'பிரிவுகளை உடையது' 
இதைப்பற்றி ஆராயுமுன்னர், உங்களிடம் ஓர் வினாதொடுக்கவிரும்புகிறேன். அதாவது,
'பிரிவுகளை உடையது' என்னுமிடத்தில், 'பிரிவுகளை கொண்டது' என்றிருந்திருக்குமானால், வலியை மிகுத்திருப்பார்களா, மிகுத்திருக்கமாட்டார்களா? மிகுத்திருப்பார்கள். அன்றோ? (ஆனாலும் புணர்த்தமாட்டர்களென்பதை சொல்லத்தேவையில்லை!) 
அப்படி மிகுத்தால், புணர்த்தியதாகப்பொருள். இரண்டாம்வேற்றுமைவருமிடங்களில், அவர்கள் வலிமிகுவதானால்மட்டுமேபுணர்த்துவார்கள். 
இதுபோன்றவிடங்களில்வரக்கூடிய உடம்படுமெய்ப்புணர்ச்சியும் இயல்புபுணர்ச்சியுங்கூட வருமென்பது அவர்களுக்கு உண்மையில் தெரியாது! தெரிந்திருந்தால் அப்படிப்பட்டவிடங்களில் எங்கேயாவது புணர்த்தியிருப்பதை காணமுடியுமே! 
ஆனால் அப்படியெல்லாம் இன்று புணர்ச்சியை காணமுடியவில்லையே? இங்கே புணர்த்துவதாயில்லையாவென்பதை மேலே படித்துப்பாருங்கள்.
இதை விரிநிலையில்வந்த ஐயுருபென எண்ணிக்கொள்வோருண்டு. அவரது எண்ணம் பிழையானது!
ஏனெனில், ஒரு தொடர்மொழியில்வரும்போதுமட்டுமே அது வெளிப்பட்டுவருகிறதென்றோ (தொகாநிலைத்தொடர் அல்லது விரிநிலைத்தொடர்) மறைந்துவருகிறதென்றோ (தொகைநிலைத்தொடர்) சொல்லமுடியும்.
இங்கே தொடர்மொழியாகாததால், 'பிரிவுகளை' என்பது ஒரு ஐயுருபேற்றதான தனிமொழியேயாகும். தனிமொழியைப்பொருத்தவரை எந்தவோருருபும் மறைந்துவரலாகாதென்பதால், வெளிப்பட்டுவந்ததென்பதை சொல்லத்தேவையில்லை.
சரி. இப்போது இதன் பொருளைப்பார்ப்போம். வேற்றுமையுருபுகள் ஒரு பெயரில் வரும்போது, பொதுவாக தனக்கு அடுத்துவரும் வினைச்சொல்லுடன் புணர்ந்தேவரும்.
புணராதுவருவதில்லையாவெனில், புணராதுவருவதென்பதும் உண்டு, அது சொல்லவரும் பொருளானது வினையை சிறப்பித்துச்சொல்லவேண்டியிருக்கும்போது!
இங்கு, 'மூன்றுபிரிவுகளை உடையது' என்று பிரிந்துள்ளதன்றோ? இது சொல்லவரும் பொருளானது, 'மூன்றுபிரிவுகள்' என்பதைவிடவும், (அவற்றை) உடையதென்பதைச்சிறப்பித்துச்சொல்வதாகும்.
இங்கு சொல்லவரும் பொருளானது, எத்தனைப்பிரிவுகளென்பதைச்சிறப்பித்துச்சொல்வதா, அல்லது, உடையதாயில்லையாவென்பதைச்சிறப்பித்துச்சொல்வதா? இவற்றை எண்ணிப்பார்த்தால்,
'மூன்றுபிரிவுகளையுடையது' என்பதுதானே சரியானபொருளைத்தருவதாயிருக்கிறது?
6) 'உடைய தென்று' 'பலருங் கூறுகின்றனர்'
இவை தொடர்மொழிகளா, இவற்றில் உள்ளவை வெவ்வேறான தனிச்சொற்களாவென்பதை உங்கள்முடிவுக்கேவிட்டுவிடுகிறேன்.
7) "அம்மூவகைப் பாகுபாடுகளின் "
'அ' என்பது சுட்டுப்பெயர். இது புணர்ச்சியின்றி வராது. 'அந்த' என்பதும் அதேபொருளைத்தருகின்றதான ஒரு சுட்டுப்பெயரே, ஆனால், தனித்தியங்கக்கூடியது. 
ஒரு சுட்டுப்பெயர் புணர்ந்துவரக்கூடியவிடத்தில், இவை இரண்டில் எந்தவொன்றையும்வைக்கலாம், ஆனால், சுட்டானது புணரவேண்டாதவிடத்தில், 'அந்த' என்பதைமட்டுந்தான்வைக்கமுடியும். 
அப்படியானால், ஓர் இடத்தில் புணர்த்தவேண்டுமா, வேண்டாமாவென்பதை சொல்லவரும் பொருளைப்பொருத்துத்தான்முடிவுசெய்யவேண்டும். அன்றோ?
இங்கேசொல்லவருவது என்னபொருளென்பதையும், அதை சொல்வதற்கு சுட்டை புணர்த்துவது தேவையாவென்பதையும் இனி பார்ப்போம்.
'அம்மூவகை' என்பது, 'அந்தமூவகை' எனச்சொல்வது. இதுவரை நாம் மூவகையெனப்பார்த்தது ஒன்றேயொன்றைத்தானா, அல்லது வேறொன்றைப்பற்றியும்பார்த்தோமா? இல்லையன்றோ?
'அந்தமூவகை' என்றதும், எந்தமூவகையெனக்கேட்டால், விடையேது? இருப்பது ஒரேயொருமூவகைதானன்றோ?
இரண்டுபொருட்களிலிருந்தோ பலவற்றிலிருந்தோ ஒன்றை சுட்டிக்காட்டும்பொழுதுமட்டுமே சுட்டை புணர்த்திப்பேசவேண்டுமென்பதும், ஒரேயொருபொருளைப்பற்றிப்பேசும்போது சுட்டை புணர்த்தாமல் தனித்துப்பேசவேண்டுமென்பதும் ஒரு பாமரனுக்குந்தெரிந்தசெய்தியே! ஆனால் எழுதப்புகுந்தோர் இந்த அடிப்படையுண்மையை மறந்துவிட்டு, சுட்டு எங்கெல்லாம்வருகிறதோ அங்கெல்லாம்புணர்த்திவிடுகின்றனர்.
சுட்டைப்பொருத்தவரை இங்கு இன்னொருசெய்தியுமுள்ளது. அதாவது, 'அந்த' 'இந்த' என்னும் சுட்டுப்பெயர்களின்முன் வல்லினம்வந்தால் வலி மிகுமென்பது விதி. விதியில் குற்றமில்லை. ஏனென்றால், புணர்ச்சியானது அமையுமிடங்களில் வலி மிகுமென்பதைத்தான் அது சொல்கிறது.
ஆனால் நாமோ, இன்று புணர்ச்சியானது அமையக்கூடாதவிடங்களிலுங்கூட, சுட்டின்முன் வல்லினமுதன்மொழியை கண்டவுடன், புணர்ச்சியின் தேவையைப்பற்றி எண்ணிப்பார்க்காமல், அதை புணர்த்திவிடுவதையே நம் வழக்கமாகக்கொண்டுவிட்டோம்!
(புணர்த்துவதெங்கே, சுட்டின் ஈற்றில் வலிமிகுத்துவிட்டு வருமொழியை தனியாகத்தானேயெழுதிக்கொண்டிருக்கிறோம்?
வல்லினமெய்யானது சொல்லுக்கு ஈற்றெழுத்தாய்நிற்பதானது எவருடையநெஞ்சிலும் உறுத்தவேயில்லையே, என்னசெய்வது?)
8) 'மூவகைப் பாகுபாடுகளின்' 
'இயல்பைக் குறித்து'
இவையும் தொடர்மொழிகளா, இவற்றில் உள்ளவை வெவ்வேறான தனிச்சொற்களாவென்பதை மீண்டும் உங்கள்முடிவுக்கேவிட்டுவிடுகிறேன்.
9) "இயல்பைக் குறித்துச் சிறிது ஆராய்வோம்"
இதில் வலிமிகுந்தவிடங்களை புணர்த்தினால்,
'இயல்பைக்குறித்துச்சிறிது ஆராய்வோம்'
எனவருமன்றோ? இதில் 'இயல்பைக்குறித்து' என்பது சரி. ஆனால், 'குறித்துச்சிறிது' என்பது சரியானபுணர்ச்சியாவென்றால், இல்லை! அது கூடாப்புணர்ச்சி!
ஏனெனில், 'குறித்து' என்பது ஒரு வினையெச்சம், 'சிறிது' என்பது பெயர்!
இரண்டேவாக்கியங்களில் புணர்ச்சியைப்பற்றி எவ்வளவுக்குப்பேசவேண்டியதாயிற்றுபார்த்தீர்களா?
இதுதான் பாடநூற்களில் இன்று புணர்ச்சியின் நிலை. கல்லூரிப்பாடநூற்களும் இதேபோலத்தானிருக்கின்றனவென்பதை சொல்லத்தேவையில்லை.
தமிழர்கையில் தமிழ் பிழைத்திருக்கும், ஆனால்  அதன் நடையும் அழகுமட்டுமன்றி, அதன் பொருளுங்கூட புணர்ச்சியால்வருபவையாதலால், அவைபிழைத்திருக்குமா?
புணர்ச்சியை போற்றாமல் தமிழை போற்றமுடியாதென்பதை தமிழறிஞர்கள் உணரும் காலம் வராமலாபோய்விடும்?
வரும்!
இதுதான் பாடநூற்களில் தமிழின் நிலை! பாடநூலில் புணர்ச்சி
                                                                         -டாக்டர் பொன்முடி வடிவேல்

"தொன்று தொட்டுத் தமிழ் மொழி இயல் இசை நாடகம் என்னும் மூன்று பிரிவுகளை உடைய தென்று பலருங் கூறுகின்றனர். அம்மூவகைப் பாகுபாடுகளின் இயல்பைக் குறித்துச் சிறிது ஆராய்வோம்."

இது, இன்றைய மேனிலைத்தமிழ்ப்பாடநூலின் முதற்பாடத்தின் முதற்பத்தியில், இரண்டேயிரண்டுவாக்கியங்களேயுள்ளன, அவையே இவை. பாடத்தின் பெயர் 'உயர்தனிச் செம்மொழி'. பாடத்தின் ஆசிரியர் 'பரிதிமாற்கலைஞர்'.

தமிழுலகம் மாபெருமறிஞரென்று போற்றக்கூடியவர்களுள் பரிதிமாற்கலைஞருமொருவர். அவர் தாமெழுதியபோது இப்படித்தானெழுதியிருந்தாரோ, அல்லது, இப்போது பாடநூலுக்காக இதை தொகுத்த நூலாசிரியர்களால் இவ்வாறு பதிப்பிக்கப்பட்டதோவென்பது நமக்கு தெரியாதது. நிற்க.

புணர்ச்சியைப்பொருத்தவரை , இதில் காட்டப்பட்டுள்ள புணர்ச்சியும் அதன் அமைப்பும் எவ்வாறுள்ளனவென்பதை சற்றே ஆராய்வோம்.

1) 'தொன்று தொட்டுத் தமிழ்' என்பதில்,  முதலில் ஒரு தனிமொழியும், (அதனையடுத்துள்ளசொல்லில் வலிமிகுந்துள்ளதால் அதை அதற்கடுத்துள்ளசொல்லுடன் புணர்ந்திருப்பதாய்க்கொள்ளவேண்டியிருப்பதால்) ஒரு தொடர்மொழியுமிருப்பதாய்க்கொள்வோம்.

முதற்சொல்லானது, 'தொன்மை' என்றசொல்லிலிருந்துவந்ததாயிருக்கவேண்டும். பண்புப்பெயர்ச்சொற்கள் புணர்ச்சியில் மைவிகுதிகெட்டுப்புணர்வதால், 

தொன்மை + தொட்டு = தொன் + தொட்டு= தொற்றொட்டு 

என்றானால், 'தொன்மை' என்பதன் பொருள் வெளிப்படாதென்பதால், 'ன்' என்னும் மெய்யை கெடுக்காமல் றகரவொற்றை வரவைத்து உகரங்கொடுத்து, தொன்று + தொட்டு = தொன்றுதொட்டு' எனப்புணர்த்தியிருக்கலாமோவென என் சிற்றறிவுக்கெட்டியவரை எண்ணிப்பார்த்தேன். இதுபற்றிய சான்றோர்களுடைய கருத்தை வரவேற்கிறேன்.

இதன்வாயிலாக நான் சொல்லவரும் கருத்தென்னவென்றால், 'தொன்று' என்பது ஒரு தனிச்சொல்லாயிருக்கமுடியாதென்பதுதான். அது புணர்ந்ததால்வந்ததென்பது உண்மையாயிருப்பின், அதை தனிச்சொல்லாயெழுதியது பொருந்தாது.

'தொன்றுதொட்டு' என்பதை எவராவது 'தொன்று தொட்டு' என பிரித்துப்பேசுவாராவென்பதை எண்ணிப்பார்த்தால், அப்படி யாரும் பேசமாட்டாரென்றேதோன்றுகிறது.

2) 'தொட்டுத்தமிழ்' என்னும் தொடர்மொழியிலிருக்கும் இரண்டுசொற்களுள், நிலைமொழியாயிருப்பது ஒரு வினையெச்சம். வருமொழியோ ஒரு பெயர்!

வினையெச்சத்தின்முன் வினையும்வரலாம், பெயரும்வரலாம். வினைவந்தால், அது மற்றுமோர் எச்சமாயிருந்தாலும் முற்றாயிருந்தாலும், சொல்லவரும் பொருளைப்பொருத்து புணர்ந்தும்வரலாம், புணராமலும்வரலாம்.

ஆனால் பெயர்வரும்போது, புணர்ந்துவருவதில்லை. ஏனெனில், வினையெச்சமும் பெயரும் புணரா!

ஓர் வினைமுற்றும் பெயரும் புணருமென்பதையும், அந்த தொடர்மொழிக்கு 'வினைமுற்றுத்தொடர்' என்பது பெயரென்பதையும் நாம் கண்டிருக்கிறோம்.

ஆனால், வினையெச்சமும் பெயரும் புணர்ந்ததாக ஒரு தொடர்மொழி அமையாது!

சொல்லப்பட்டிருக்கின்ற  தொடர்மொழிகளுள், வேற்றுமைத்தொடர்களெனப்படுபவை தொகையாறும் விரியாறுமென பன்னிரண்டும், அல்வழியில் தொகாநிலையில் ஒன்பதும் தொகைநிலையில் ஐந்துமாக பதினான்கும் ஆகமொத்தம் இருபத்தாறுவகைகளுள் ஒவ்வொருதொடர்மொழிக்கும் அதற்குரிய பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்போது, வினையெச்சமும்பெயரும்புணர்ந்ததாக ஒன்றும் தரப்படவில்லையென்பதே, அப்படிப்பட்டவொரு புணர்ச்சி இல்லவேயில்லையென்பதை தெளிவாகக்காட்டுகின்றதன்றோ?

ஆகவே, 'தொட்டுத்தமிழ்' என்பது கூடாப்புணர்ச்சி, இது ஒரு குற்றம்!

3) 'தமிழ் மொழி' இதில் இரண்டுசொற்களுள்ளன. இரண்டும் பெயர்ச்சொற்கள். இதை இதற்கு முன்னுள்ளசொற்களுடன்வைத்தால்,

'தொன்று தொட்டுத் தமிழ் மொழி' என்றாகும். இதற்கு இப்போது பொருள்கூறமுடியும். எவ்வாறென்றால், தொன்றென்பது தொன்மையைக்குறிப்பதாகவும், 'தொட்டுத்தமிழ்' என்பதும் 'தமிழ்' என்பதும் வெவ்வேறு பெயர்களாகவுங்கொண்டு,

'தொன்மைக்காலத்தில், தொட்டுத்தமிழானது மொழியாயிருந்தது'

என்னும் பொருளை இதற்கு கற்பிக்கலாம்! ஏனப்படிக்கற்பிக்கவேண்டுமென்றால், இரண்டு பெயர்கள் அடுத்தடுத்துவந்தால் இரண்டாவதுபெயரானது முதற்பெயருக்கு பயனிலையாகுமென்பது நாம் அறிந்ததேயன்றோ? 

இந்த ஒருவழியல்லாமல், 'தொன்று தொட்டுத் தமிழ் மொழி' என்பதற்கு உங்களால் வேறுபொருளெதையும் கற்பிக்கமுடிகிறதாவென்று எண்ணிப்பாருங்கள்! 

'தமிழ் மொழி' என்பது உண்மையில் புணர்த்தப்பட்டிருக்கவேண்டும்! அப்படி புணர்த்தியிருந்தால், பெயர்ச்சொற்கள் இரண்டாவதற்கு வாய்ப்புமில்லை, நாம் கற்பித்த பொருளை கற்பிக்கவுமுடியாது.

'தமிழ்மொழி' என்பது நம் தாய்மொழியின்பெயர். இதைக்கூட நாம் பிழையாயெழுதிக்கொண்டு, 'தமிழை காப்போம், வளர்ப்போம்' என்று மார்தட்டிக்கொண்டிருந்தால், தமிழ் வளர்ந்துவிடுமா? எண்ணிப்பாருங்கள்!

'தமிழாகியமொழி' என்னும் தொடர்மொழியானது, உலகிலுள்ள பற்பலமொழிகளுள் தமிழ்மொழியைமட்டும் சிறப்பித்துக்கூறுவதாயமைந்தது.

'மொழி' என்னும் தனிச்சொல்லானது, அனைத்துமொழிகளையுங்குறிக்கக்கூடிய ஒரு பொதுமொழி. 'தமிழ்' என்பது குறிப்பாக ஒருமொழியைமட்டுங்குறிக்கக்கூடிய ஒரு சிறப்புமொழி. இரண்டுமே பெயர்ச்சொற்களென்பதால்,

''சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னுமாயமைந்து, இரண்டுபெயர்ச்சொற்களும் ஒரேபெயராயமைவது இருபெயரொட்டுப்பண்புத்தொகை''

என்கிறது, புணர்ச்சியிலக்கணம்.

இந்த இலக்கணத்தை எட்டாம்வகுப்பிலிருந்து முதுநிலைக்கல்விவரை மீண்டுமீண்டுங்கற்றுவந்தவர்களான இந்த நூலாசிரியர்களுக்கோ அல்லது இந்த பாடத்தை தமிழகமெங்குமுள்ள அனைத்துப்பள்ளிகளிலும் கடந்த எட்டாண்டுகளாக கற்பித்துக்கொண்டிருக்கின்ற ஆசிரியர்களுக்கோ இதுவரை தெரியாமலிருக்கிறதென்பது உண்மையில் வியப்புக்குரியதாயில்லை? தெரிந்திருந்தால் இத்தனையாண்டுகளில் இதையாவதுமாற்றியிருக்கமட்டார்களாயென்ன?

''மூன்று பிரிவுகளை உடைய தென்று பலருங் கூறுகின்றனர்.''

4) இதில், 'மூன்று பிரிவுகளை' என்றுள்ளதன்றோ?

இதையே, 'மூன்றுபிரிவுகளை' என்று புணர்த்தியுமெழுதலாமென்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்தவிடத்திலே சொல்லப்படவேண்டியது என்னபொருளோ, அந்தப்பொருளுக்கு இங்கே புணர்த்தியெழுதவேண்டுமா, புணர்த்தாமலெழுதவேண்டுமா?

முதலில் அவை இரண்டுக்கும் பொருளில் என்னவேறுபாடுண்டாகுமென்பதை பார்த்துவிட்டால், எப்படியெழுதுவதென்பதை எளிதாகச்சொல்லிவிடலாம்! அன்றோ?

'மூன்றென்பதும் பிரிவென்பதும் பெயர்ச்சொற்கள், பிரிவென்பது ஐயுருபேற்றுள்ளது. இவற்றை அடுத்துவருவது ஒரு வினைமுற்றென்பதால், அதையும் சேர்த்தாலே பொருளை காணமுடியும்.

இப்போது, 

'மூன்று பிரிவுகளை உடையது' என்பதற்கு என்னபொருளென்றுபாருங்கள்! பிரிவுகளை உடையதாயிருப்பது மூன்றென்றாகிறதன்றோ? பிரிவென்பது மூன்றிலாயுள்ளது? அது தமிழ்மொழியிலன்றோவுள்ளது?

சற்றுமுன் இருபெயரொட்டுப்பண்புத்தொகை' என்றவொன்றை பார்த்தோமன்றோ? அதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

'மூன்று' என்பது (எண்ணுப்பெயர்) சிறப்புப்பெயர், 'பிரிவு' என்பது பொதுப்பெயர்!அப்படியானால், 'மூன்றுபிரிவு' என்பது? 'மூன்றாகியபிரிவு' என்றபொருளைத்தருவதாகிறதன்றோ?

இப்போதுசொல்லுங்கள், புணர்த்தித்தானெழுதவேண்டுமா, அல்லது, புணர்த்தாமலுமெழுதலாமாவென்பதை!

5) 'பிரிவுகளை உடையது' 

இதைப்பற்றி ஆராயுமுன்னர், உங்களிடம் ஓர் வினாதொடுக்கவிரும்புகிறேன். அதாவது,

'பிரிவுகளை உடையது' என்னுமிடத்தில், 'பிரிவுகளை கொண்டது' என்றிருந்திருக்குமானால், வலியை மிகுத்திருப்பார்களா, மிகுத்திருக்கமாட்டார்களா? மிகுத்திருப்பார்கள். அன்றோ? (ஆனாலும் புணர்த்தமாட்டர்களென்பதை சொல்லத்தேவையில்லை!) 

அப்படி மிகுத்தால், புணர்த்தியதாகப்பொருள். இரண்டாம்வேற்றுமைவருமிடங்களில், அவர்கள் வலிமிகுவதானால்மட்டுமேபுணர்த்துவார்கள். 

இதுபோன்றவிடங்களில்வரக்கூடிய உடம்படுமெய்ப்புணர்ச்சியும் இயல்புபுணர்ச்சியுங்கூட வருமென்பது அவர்களுக்கு உண்மையில் தெரியாது! தெரிந்திருந்தால் அப்படிப்பட்டவிடங்களில் எங்கேயாவது புணர்த்தியிருப்பதை காணமுடியுமே! 

ஆனால் அப்படியெல்லாம் இன்று புணர்ச்சியை காணமுடியவில்லையே? இங்கே புணர்த்துவதாயில்லையாவென்பதை மேலே படித்துப்பாருங்கள்.

இதை விரிநிலையில்வந்த ஐயுருபென எண்ணிக்கொள்வோருண்டு. அவரது எண்ணம் பிழையானது!

ஏனெனில், ஒரு தொடர்மொழியில்வரும்போதுமட்டுமே அது வெளிப்பட்டுவருகிறதென்றோ (தொகாநிலைத்தொடர் அல்லது விரிநிலைத்தொடர்) மறைந்துவருகிறதென்றோ (தொகைநிலைத்தொடர்) சொல்லமுடியும்.

இங்கே தொடர்மொழியாகாததால், 'பிரிவுகளை' என்பது ஒரு ஐயுருபேற்றதான தனிமொழியேயாகும். தனிமொழியைப்பொருத்தவரை எந்தவோருருபும் மறைந்துவரலாகாதென்பதால், வெளிப்பட்டுவந்ததென்பதை சொல்லத்தேவையில்லை.

சரி. இப்போது இதன் பொருளைப்பார்ப்போம். வேற்றுமையுருபுகள் ஒரு பெயரில் வரும்போது, பொதுவாக தனக்கு அடுத்துவரும் வினைச்சொல்லுடன் புணர்ந்தேவரும்.

புணராதுவருவதில்லையாவெனில், புணராதுவருவதென்பதும் உண்டு, அது சொல்லவரும் பொருளானது வினையை சிறப்பித்துச்சொல்லவேண்டியிருக்கும்போது!

இங்கு, 'மூன்றுபிரிவுகளை உடையது' என்று பிரிந்துள்ளதன்றோ? இது சொல்லவரும் பொருளானது, 'மூன்றுபிரிவுகள்' என்பதைவிடவும், (அவற்றை) உடையதென்பதைச்சிறப்பித்துச்சொல்வதாகும்.

இங்கு சொல்லவரும் பொருளானது, எத்தனைப்பிரிவுகளென்பதைச்சிறப்பித்துச்சொல்வதா, அல்லது, உடையதாயில்லையாவென்பதைச்சிறப்பித்துச்சொல்வதா? இவற்றை எண்ணிப்பார்த்தால்,

'மூன்றுபிரிவுகளையுடையது' என்பதுதானே சரியானபொருளைத்தருவதாயிருக்கிறது?

6) 'உடைய தென்று' 'பலருங் கூறுகின்றனர்'

இவை தொடர்மொழிகளா, இவற்றில் உள்ளவை வெவ்வேறான தனிச்சொற்களாவென்பதை உங்கள்முடிவுக்கேவிட்டுவிடுகிறேன்.

7) "அம்மூவகைப் பாகுபாடுகளின் "

'அ' என்பது சுட்டுப்பெயர். இது புணர்ச்சியின்றி வராது. 'அந்த' என்பதும் அதேபொருளைத்தருகின்றதான ஒரு சுட்டுப்பெயரே, ஆனால், தனித்தியங்கக்கூடியது. 

ஒரு சுட்டுப்பெயர் புணர்ந்துவரக்கூடியவிடத்தில், இவை இரண்டில் எந்தவொன்றையும்வைக்கலாம், ஆனால், சுட்டானது புணரவேண்டாதவிடத்தில், 'அந்த' என்பதைமட்டுந்தான்வைக்கமுடியும். 

அப்படியானால், ஓர் இடத்தில் புணர்த்தவேண்டுமா, வேண்டாமாவென்பதை சொல்லவரும் பொருளைப்பொருத்துத்தான்முடிவுசெய்யவேண்டும். அன்றோ?

இங்கேசொல்லவருவது என்னபொருளென்பதையும், அதை சொல்வதற்கு சுட்டை புணர்த்துவது தேவையாவென்பதையும் இனி பார்ப்போம்.

'அம்மூவகை' என்பது, 'அந்தமூவகை' எனச்சொல்வது. இதுவரை நாம் மூவகையெனப்பார்த்தது ஒன்றேயொன்றைத்தானா, அல்லது வேறொன்றைப்பற்றியும்பார்த்தோமா? இல்லையன்றோ?

'அந்தமூவகை' என்றதும், எந்தமூவகையெனக்கேட்டால், விடையேது? இருப்பது ஒரேயொருமூவகைதானன்றோ?

இரண்டுபொருட்களிலிருந்தோ பலவற்றிலிருந்தோ ஒன்றை சுட்டிக்காட்டும்பொழுதுமட்டுமே சுட்டை புணர்த்திப்பேசவேண்டுமென்பதும், ஒரேயொருபொருளைப்பற்றிப்பேசும்போது சுட்டை புணர்த்தாமல் தனித்துப்பேசவேண்டுமென்பதும் ஒரு பாமரனுக்குந்தெரிந்தசெய்தியே! ஆனால் எழுதப்புகுந்தோர் இந்த அடிப்படையுண்மையை மறந்துவிட்டு, சுட்டு எங்கெல்லாம்வருகிறதோ அங்கெல்லாம்புணர்த்திவிடுகின்றனர்.

சுட்டைப்பொருத்தவரை இங்கு இன்னொருசெய்தியுமுள்ளது. அதாவது, 'அந்த' 'இந்த' என்னும் சுட்டுப்பெயர்களின்முன் வல்லினம்வந்தால் வலி மிகுமென்பது விதி. விதியில் குற்றமில்லை. ஏனென்றால், புணர்ச்சியானது அமையுமிடங்களில் வலி மிகுமென்பதைத்தான் அது சொல்கிறது.

ஆனால் நாமோ, இன்று புணர்ச்சியானது அமையக்கூடாதவிடங்களிலுங்கூட, சுட்டின்முன் வல்லினமுதன்மொழியை கண்டவுடன், புணர்ச்சியின் தேவையைப்பற்றி எண்ணிப்பார்க்காமல், அதை புணர்த்திவிடுவதையே நம் வழக்கமாகக்கொண்டுவிட்டோம்!

(புணர்த்துவதெங்கே, சுட்டின் ஈற்றில் வலிமிகுத்துவிட்டு வருமொழியை தனியாகத்தானேயெழுதிக்கொண்டிருக்கிறோம்?

வல்லினமெய்யானது சொல்லுக்கு ஈற்றெழுத்தாய்நிற்பதானது எவருடையநெஞ்சிலும் உறுத்தவேயில்லையே, என்னசெய்வது?)

8) 'மூவகைப் பாகுபாடுகளின்' 'இயல்பைக் குறித்து'

இவையும் தொடர்மொழிகளா, இவற்றில் உள்ளவை வெவ்வேறான தனிச்சொற்களாவென்பதை மீண்டும் உங்கள்முடிவுக்கேவிட்டுவிடுகிறேன்.

9) "இயல்பைக் குறித்துச் சிறிது ஆராய்வோம்"

இதில் வலிமிகுந்தவிடங்களை புணர்த்தினால்,

'இயல்பைக்குறித்துச்சிறிது ஆராய்வோம்'

எனவருமன்றோ? இதில் 'இயல்பைக்குறித்து' என்பது சரி. ஆனால், 'குறித்துச்சிறிது' என்பது சரியானபுணர்ச்சியாவென்றால், இல்லை! அது கூடாப்புணர்ச்சி!

ஏனெனில், 'குறித்து' என்பது ஒரு வினையெச்சம், 'சிறிது' என்பது பெயர்!

இரண்டேவாக்கியங்களில் புணர்ச்சியைப்பற்றி எவ்வளவுக்குப்பேசவேண்டியதாயிற்றுபார்த்தீர்களா?

இதுதான் பாடநூற்களில் இன்று புணர்ச்சியின் நிலை. கல்லூரிப்பாடநூற்களும் இதேபோலத்தானிருக்கின்றனவென்பதை சொல்லத்தேவையில்லை.

தமிழர்கையில் தமிழ் பிழைத்திருக்கும், ஆனால்  அதன் நடையும் அழகுமட்டுமன்றி, அதன் பொருளுங்கூட புணர்ச்சியால்வருபவையாதலால், அவைபிழைத்திருக்குமா?

புணர்ச்சியை போற்றாமல் தமிழை போற்றமுடியாதென்பதை தமிழறிஞர்கள் உணரும் காலம் வராமலாபோய்விடும்?

வரும்!
by Swathi   on 31 Mar 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.